Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கை 3வது இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே நேற்றைய தினம் முக்கிய வீரர்களை விளையாடாமல் பண்ணி, வெற்றி பெறுவதற்கு போராடாமல் வேண்டுமென்று தோற்றார்கள். காரணம் அரை இறுதியில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்வதை விட நியுசிலாந்தை எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றபடியினால்த்தான்.

இறுதியில் அவுஸ்ரேலியா இலங்கை அணிகள் மோதும். :lol:

ரொம் மூடியும் இலங்கை அணி வீரர்களும் தங்களுடைய வீடுகளில் இருந்து தொலைக்காட்சியில் தான் இறுதி ஆட்டம் பார்ப்பார்கள். :D

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரை இறுதியில் இலங்கை அணி நிச்சயம் தோற்கும் அதற்க்கு ரம்புக்கவெல்ல புலிகளைக் குற்றம் சாட்டுவார்.

இறுதிப்போட்டியில் தென் ஆபிரிக்காவும் நியூஸிலாந்தும் மோதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கை -அயர்லாந்து, நாளை மேற்கிந்தியாதீவு - பங்காளதேச அணி போட்டிகள் இனி முக்கியம் பெறாவிட்டாலும் யாழ்கள போட்டியில் முக்கியம் வகிக்கிறது. பேர்முடா அணி தான் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் குறைந்த ஒட்டத்தைப் பெற்றது. அயர்லாந்து இன்றைய போட்டியில் குறைவான ஒட்டங்கள் பெற்றால் சில யாழ்கள உறுப்பினர்கள் புள்ளிகள் பெறுவார்கள்.

பொதுவாக இலங்கை அணி பலம் குறைந்த அணிகளை குறைந்த ஒட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்யும் வழக்கம் இருக்கிறது. ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டியில் முதல் மூன்று குறைவான ஒட்டங்களை இலங்கை அணிக்கு எதிராகவே பெறப்பட்டன.

சுப்பர் 8 க்கு தகுதி வாய்ப்பை இழந்த போது நடைபெற்ற முக்கியமற்ற போட்டியான பாகிஸ்தான் சிம்பாவே போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அடித்த ஒட்டம் தான் இதுவரை நடைபெற்ற போட்டியில் ஒரு போட்டியிலடித்த ஆகக்கூடிய ஒட்டமாக இருக்கிறது. சிலவேளை வேகமாக ஒட்டங்களை பெறக்கூடிய ஜெயசூரியா அல்லது மேற்கிந்தியா அணி கிறிஸ் கையில் இதனை முறியடிக்கக்கூடும்.

இதுவரை நடைபெற்ற போட்டியில், இந்தியா அணி, பேர்முடாவுக்கு எதிராகப் பெற்ற ஒட்டமே ஒரு அணி பெற்ற அதி கூடிய ஒட்டமாக இருக்கிறது.

இதுவும் முறியடிக்கப்படலாம்.

அரை இறுதி ஆட்டத்துக்கான நான்கு அணிகளும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் யாழ் கள போட்டியின் தர வரிசை பட்டியல்.

...

8) மாப்பிள்ளை 30.5 புள்ளிகள்

...

யார் இது ? :lol:

யார் இது ? :lol:

அதுதானே யார் அது மாப்பிள்ளை :angry:

  • தொடங்கியவர்

யார் இது ? :lol:

அதுதானே யார் அது மாப்பிள்ளை :angry:

நான் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி!

மாப்பிளை எனும் சொல்லில் 'ள்' தவறி உள்ளது, எனவே மாப்பிள்ளை என்பதுதான் சரி, அதைவிட யாழ் களத்தை வாசிப்பவர்கள் (புதியவர்கள், விருந்தினர்கள்) நமது பெயர்களைப் பார்த்துவிட்டு, நம்மை - யாழ் களத்தை - கோமாளிகள் கூட்டம் என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவும் எனது பெயரை மாற்ற வேண்டி வந்தது... நன்றி! :lol:

இவர் தான் அவர். :lol:

Edited by யாழ்வினோ

அவுஸ்திரேலியா வெல்லப்பட முடியாததொரு அணியென்பது வெறும் மாயையே

வெல்லப்பட முடியாத அணி அவுஸ்திரேலியா என்பது ஒரு மாயையே என்கிறார் இலங்கை அணியின் முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்க.

தரமான எதிரணி நெருக்கடி கொடுத்தால் அவுஸ்திரேலிய அணி நொறுங்கி விடும் என ரணதுங்க கூறியதை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் சிட்னி மோர்னிங் ஹரோல்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறமை தற்போதைய இலங்கை அணிக்குள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1996 இல் இலங்கை சாதித்ததை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டுமென கப்டன் மஹேல ஜயவர்தனவுக்கு ரணதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர்கள் களத்தில் மிகக் கடுமையாக விளையாடுவார்கள். அதேபோல் எதிரணியும் விளையாடினால் நொருங்கி விடுவார்கள். 1996 உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் அதுதான் நடந்தது என்றார்.

களத்தில் வசைபாடுவதிலும் அவுஸ்திரேலியர்கள் தேர்ந்தவர்கள். அவர்கள் கத்தும் போது நாம் திரும்பவும் கத்தினால் பதற்றமடைந்து விடுவார்கள்.

இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியேறிவிட்ட நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு நெருக்குதல் கொடுக்கும் அணி இல்லாமல் போய்விட்டது. அதனால் தான் இலங்கை அந்த நெருக்குதலை அவுஸ்திரேலியாவுக்கு கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

ரணதுங்கவின் இந்தக் கருத்தை இலங்கை அணியின் பயிற்சியாளர் ரொம் மூடியும் எதிரொலித்துள்ளார்.

தினக்குரல்

Ireland 45/3 (17.2 ov)

Sri Lanka

அயர்லாந்து 18 ஓவர் முடிவில் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கடுக்கள்

துடுப்பெடுத்தடுபவர்கள் ஓ மூளை சகோதரர்கள்

அயர்லாந்து அணியினர் 20 ஓவரில் 7 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள்

கண்ணுகளா என்னும் ஒரு 28 ஓட்டம் எடுங்கப்பா ஆளூக்கு 1 சாக்லட் தாரேன்

அயர்லாந்து அணியினர் 20 ஓவரில் 7 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள்

கண்ணுகளா என்னும் ஒரு 28 ஓட்டம் எடுங்கப்பா ஆளூக்கு 1 சாக்லட் தாரேன்

எனக்கு தெறியும் ஏன் சொக்லட் கொடுக்கிறீர் என்று,

:lol:

Ireland 49/8 (20.1 ov)

Sri Lanka

எனக்கு தெறியும் ஏன் சொக்லட் கொடுக்கிறீர் என்று,

:lol:

Ireland 49/8 (20.1 ov)

Sri Lanka

அடப்பாவி அதுக்குள்ள ஒருத்தன் போய்ட்டான

ஏன் சொல்லுங்கள் பாக்கலாம்........? சரியா சொன்ன சொக்கா உமக்கு

அடப்பாவி அதுக்குள்ள ஒருத்தன் போய்ட்டான

ஏன் சொல்லுங்கள் பாக்கலாம்........? சரியா சொன்ன சொக்கா உமக்கு

பிகோஸ் யாழ்கள போட்டியில் குறையரன் அடிக்கும் நாடு தாங்கள் பெர்முடா போட்டீங்கள் அது தானே

:lol:

பிகோஸ் யாழ்கள போட்டியில் குறையரன் அடிக்கும் நாடு தாங்கள் பெர்முடா போட்டீங்கள் அது தானே

:lol:

:lol: அடடா சரியா சொல்லிட்ட அந்த லூசளூகு கொடுக்க வச்ச 11சாக்லட்டும் உமக்குத்தான் டேக் இட் :lol:

:lol: அடடா சரியா சொல்லிட்ட அந்த லூசளூகு கொடுக்க வச்ச 11சாக்லட்டும் உமக்குத்தான் டேக் இட் :lol:

த ங் கி யூ தலை யார் அந்த லூசுகள்

:P

Ireland 54/9 (22.5 ov)

Sri Lanka

அட்ப்பாவிகளா 54/9 எனக்கு ஆப்பா :angry:

அட்ப்பாவிகளா 54/9 எனக்கு ஆப்பா :angry:

தலை இப்ப 63/9

:P

Ireland 71/9 (26.3 ov)

Sri Lanka

Ireland 77 (27.4 ov)

Sri Lanka

தலை ஆப்பு வைச்சுட்டாங்கள்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இலங்கை -அயர்லாந்து, நாளை மேற்கிந்தியாதீவு - பங்காளதேச அணி போட்டிகள் இனி முக்கியம் பெறாவிட்டாலும் யாழ்கள போட்டியில் முக்கியம் வகிக்கிறது. பேர்முடா அணி தான் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் குறைந்த ஒட்டத்தைப் பெற்றது. அயர்லாந்து இன்றைய போட்டியில் குறைவான ஒட்டங்கள் பெற்றால் சில யாழ்கள உறுப்பினர்கள் புள்ளிகள் பெறுவார்கள்.

பொதுவாக இலங்கை அணி பலம் குறைந்த அணிகளை குறைந்த ஒட்டங்களில் ஆட்டமிழக்கச் செய்யும் வழக்கம் இருக்கிறது. ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டியில் முதல் மூன்று குறைவான ஒட்டங்களை இலங்கை அணிக்கு எதிராகவே பெறப்பட்டன.

நேற்று நான் கூறியது சரியாகிவிட்டது. நானும் பேர்முடாவை நினைத்துத்தான் பதில் அளித்திருந்தேன். அதுக்கும் இப்ப ஆப்பாகிவிட்டது.

http://content-aus.cricinfo.com/wc2007/con...ory/291297.html

  • கருத்துக்கள உறவுகள்

வாசகன், சின்னக்குட்டி, ராதைக்கு இதனால் பயன் பெறவாய்ப்பு இருக்கிறது. இன்னும் போட்டி முடிவடைய வில்லை. சிலவேளை பெரிய அணிகளும் 77 ஒட்டங்களுக்கு குறைவாக ஆட்டமிழந்தால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு யுனிடீமில விளையாடி கை உடைச்சது மறந்துட்டிங்களா?

;)

  • தொடங்கியவர்

அயர்லாந்து அணியினர் 20 ஓவரில் 7 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள்

கண்ணுகளா என்னும் ஒரு 28 ஓட்டம் எடுங்கப்பா ஆளூக்கு 1 சாக்லட் தாரேன்

நேற்று நான் கூறியது சரியாகிவிட்டது. நானும் பேர்முடாவை நினைத்துத்தான் பதில் அளித்திருந்தேன். அதுக்கும் இப்ப ஆப்பாகிவிட்டது.

http://content-aus.cricinfo.com/wc2007/con...ory/291297.html

ஆஹா!! போட்டியாளர்கள் எல்லோரும் ரொம்ப ரென்ஷனில் இருக்கிறார்கள் போல இருக்கு. :unsure:

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் பல பயிற்சியாளர்களின் வாழ்க்கை தடம் மாறலாம்.

தனவந்தர்களின் ஆட்டமான கிரிக்கெட் போட்டி, வீரர்களுக்கு மட்டுமன்றி, பயிற்சியாளருக்கும் பணத்தை கொட்டுகிறது. அணியின் வெற்றியில் பயிற்சியாளருக்கும் முக்கிய பங்கிருப்பதால், அவர்களும் பலவித பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.

அணி வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், தோல்வியடைந்தால் பழிப்பதும் கிரிக்கெட்டில் நடக்கும் வாடிக்கையான சம்பவங்கள். தற்போது உலகக் கிண்ணப் போட்டி நடந்து வரும் நிலையிலேயே, பல பயிற்சியாளர்களின் தலைவிதி மாறிவிட்டது. சில பயிற்சியாளர்களின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆக, உலகக் கிண்ணப் போட்டிக்கு பின், அவர்களின் வாழ்க்கை தடம் மாறப்போகிறது.

அது பற்றிய தொகுப்பு வருமாறு:

கிரேக் சப்பல்: இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சப்பல், உலகக் கிண்ணப் போட்டியில், அணியின் மோசமான தோல்வியையடுத்து இராஜிநாமா செய்துவிட்டார். அடுத்து என்ன? என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் சொந்த நாடான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அக்கடமியின் தலைமை பயிற்சியாளராகலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய அணிக்கு இப்போதைக்கு தனியாக பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு ரவி சாஸ்திரி அணி முகாமையாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பொப் வூல்மர்: இந்த உலகக் கிண்ணப் போட்டியில் மிகப்பெரிய இழப்பு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மரின் மரணம். உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர், தென்னாபிரிக்காவில் குடும்பத்தினருடன் குடியிருக்க திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவரது வாழ்க்கையே முடிந்து விட்டது. அணிக்கு புதிய பயிற்சியாளரை பாகிஸ்தான் தேடிக்கொண்டிருக்கிறது.

ஜோன் புச்சனன்: இவர் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக புகழப்படுகிறார். உலகக் கிண்ணத்துடன் இவர் விலகுகிறார். அடுத்து அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக ரிம் நீல்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வற்மோர்: பங்களாதேஷ் அணியை முதல் முறையாக `சுப்ப-8' சுற்றுக்குள் நுழைய வைத்த பெருமைக்குரியவர் இவர். ஆனால், சப்பல் இராஜிநாமா செய்ததும் இந்திய அணியின் பயிற்சியாளராக வரவிரும்புவதாக வெளிப்படையாக சொன்னார். ஒப்பந்தம் மே மாதம் வரை நீடிக்கும் நிலையில், அவரது பேட்டி பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை கோபமடையச் செய்தது. பிரச்சினை ஓய்ந்தது மாதிரி தெரிந்தாலும், உள்ளுக்குள் இன்னும் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

டங்கன் பிளட்சர்: 2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரை வென்றதில் இவரது பங்கு முக்கியமானது. ஆனால், இப்போது இங்கிலாந்து அணி தொடர்ந்து மோசமாக ஆடி வருவதால் இவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறாததால் இவரது பதவிக்கு வேட்டு வைக்கப்படலாம்.

-Thinakkural-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.