Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரரின் இனவாதப் போக்கை சாதுரியமாக கையாண்டார் மனோ – அமைச்சர் திகாம்பரம்

Featured Replies

ஞான­சா­ரரின் இன­வாதப் போக்கை சாது­ரி­ய­மாக கையாண்டார் மனோ

 

– அமைச்சர் திகாம்­பரம்
இன­வாதம் என்­பது இலங்கை நாட்­டுக்கு புதி­தல்ல. காலத்­திற்கு காலம் வெவ்­வேறு வடி­வங்­களில் அது இடம்­பெற்றே வந்­துள்­ளது. அண்­மைய ஆண்­டு­களில் அதனை முன்­னெ­டுத்துச் செல்லும் குழு­வாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் எனும் பிக்கு தலை­மை­யி­லான குழு­வினர் இயங்­கு­கின்­றனர். இது தனியே அவர் தலை­மை­யி­லான குழு­வி­னரின் வேலை மாத்­திரம் கிடை­யாது. இதற்குப் பின்னால் ஓர் அர­சியல் நிகழ்ச்சி நிரலும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களும் கூட இருக்­கின்­றார்கள். அத்­த­கைய அர­சியல்

நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞான­சா­ர­தேரர் தம்மைச் சந்­திக்க வந்த வேளை அர­சி­யல்­வாதி என்­கின்ற அடிப்­ப­டையில் சாணக்­கி­ய­மா­கவும் சாது­ரி­ய­மா­கவும் தமிழ் முற்­பேோக்­கு­கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் அதனை கையாண்­டமை பாராட்­டுக்­கு­ரி­யது என மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அமைச்­சரும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வ­ரு­மான பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

பொது­ப­ல­சேனா இயக்­கத்தின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அமைச்சர் மனோ கணே­சனின் அமைச்­சுக்கு சென்று நடந்­து­கொண்ட விதம் குறித்து பல்­வேறு கருத்­துக்கள் ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அமைச்சர் திகாம்­பரம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

இலங்­கையில் இன­வா­திகள், மத­வா­திகள் எல்லாத் தரப்­பிலும் உள்­ளனர். குறிப்­பாக பௌத்தம் எனும் போர்­வையில் இலங்கை பௌத்த நாடு எனும் ஆதிக்க சிந்­த­னையில் பல பிக்­குமார் இதற்கு முன்னர் இந்த நாட்டில் செயற்­பட்­டுள்­ளனர். முன்னாள் பிர­தமர் எஸ்.டபிள்யூ.ஆர். டி.பண்­டா­ர­நா­யக்­கவைக் கொலை செய்­ததே ஒரு பௌத்த பிக்கு என்­பதை நாம் மறந்­து­வி­ட­மு­டி­யாது. அதைப்­போல கடந்த ஆட்­சியில் தங்­க­ளது கருத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த பௌத்த துறவி ஒரு­வரை அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் தனது அமைச்சில் மறைத்து வைத்­துள்ளார் எனக் கூறி பொது­ப­ல­சேனா மற்றும் ராவண பலய அமைப்­பினர் அவ­ரது அமைச்­சுக்குள் புகுந்து செய்த அத்து மீறல்­க­ளையும் நாம் மறந்­து­விட முடி­யாது.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணியில் இன­வாத கண்­ணோட்­டத்­தோடும் இன­வாத அர­சியல் சக்­தி­களின் பின்­பு­லத்­தோடும் அமைச்­சுக்கு வந்து சண்­டித்­தனம் காட்­டலாம் என நினைத்து வந்த கல­கொட அத்தே ஞான­சார தேரரை அம­ர­வைத்து அவ­ரது இன­வா­தத்தை கக்­க­வைத்து அவற்­றுக்கு பொருத்­த­மாக பதி­லு­ரைத்து சாணக்­கி­ய­மாக நடந்­து­கொண்ட அமைச்சர் மனோ­க­ணே­சனின் நட­வ­டிக்­கை­களைப் பாராட்ட வேண்டும்.

அர­சியல் தலைமை எனும்­போது எந்­த­வொரு விட­யத்­தையும் பக்­கு­வத்­துடன் கையா­ள­வேண்டும். ஞான­சார தேர­ருடன் அமைச்சர் மனோ கணேசன் மல்­லுக்­கட்­டி­யி­ருக்க வேண்டும் என்­பதைப் போலவும் சில ஊட­கங்கள் கருத்­து­களைப் பகிர்ந்­தி­ருக்­கின்­றன. ஆனால் பக்­குவம் என்­பது எதி­ரியின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வது அல்ல. அதனை சாது­ரி­ய­மாக எதிர்­கொள்­வது. அத­னையே அமைச்சர் அவர் செய்­துள்ளார். அவர் மகா­வம்­சத்தின் வர­லாற்று விட­யங்­களைத் தொட்­டுக்­காட்டி விளக்­கி­ய­போது மகா­வம்­சத்­தையே பிழை­யென ஞான­சார தேரர் சொல்­லி­யதன் மூலம் தனது இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அவர் எந்த உத்­தி­யையும் கையாள்வார் என்பது வெளிப்படுகிறது. நாம் தான் அவரைக் கவனமாக கையாள வேண்டும். சிங்கள பௌத்த இனவாதியான ஞானசார தேரர் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக பிரபாகரனை நல்லவர் என சொல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விடயங்கள் பொதுபலசேனாவின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவனவாக உள்ளன.   

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-05-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.