Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதாவாரா ஞானசாரர்?

Featured Replies

கைதாவாரா ஞானசாரர்?

 

நல்­லாட்­சியின் இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் ­செ­ய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அசா­தா­ரண நட­வ­டிக்­கை­களை கட்­ட­விழ்த்­துள்ளார். எனினும் இது­வ­ரையில் அவர் கைது­ செய்­யப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும் அவரை கைது­ செய்­வ­தற்கு நான்கு பொலிஸ் குழுக்கள் அமர்த்­தப்­பட்­டுள்­ளன. ஆகவே இன­வா­த­மாக வீர­வ­சனம் பேசிய ஞான­சார தேரர் தற்­போது தலை­ம­றை­வாகி பதுங்­கி­யுள்ளார்.

இலங்கை சுதந்­திர நாடு என்­பதால் இங்கு சகல மக்­களும் தமது சமய கலா­சார அடையா­ளங்­க­ளுடன் வாழ்­வ­தற்­கான உரித்­துக் ­கொண்­டுள்­ளார்கள். அவ்­வு­ரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக உறு­தி­ செய்­யப்­பட்­டுள்­ளது. ஆன­போ­திலும் அச்­ சு­தந்­திரம் பல பொழு­து­களில் பறிக்­கப்­பட்­டுள்­ளன. அதன் பிர­தி­ப­ல­னாக நாட்டில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் அசா­தா­ரண சம்­ப­வங்கள் நடந்­தே­றி­யுள்­ளன.

மேலும் இது ­போன்ற பல்­வேறு கார­ணங்­களை ஏது­வா­க­ கொண்டு ஆரம்­ப­மான யுத்தம் மூன்று தசாப்­தங்கள் மூண்­ட­துடன் அதனால் நாடு பாரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­ வ­ரப்­பட்ட பின்னர் நாட்டில் அமை­தியை நிலை­கொள்ளச் செய்­யலாம் என மக்கள் கரு­தினர்.

ஆன­ போ­திலும் அவ்­வெ­திர்­பார்ப்பு நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஏ­னெனில் யுத்­தத்தின் பின்னர் நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் ஆரம்­பிக்­கப்பட்­ட­துடன் அதனை பெளத்த குரு­மார்கள் சிலர் முன்­னின்று வழி­ந­டத்­தினர். மேலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் பொது­பல சேனா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வேலைத்­திட்­டங்­களை கடு­மையான முறையில் முன்­னெ­டுத்து சென்­றது.

மேலும் கடந்த ஆட்­சியில் அவ்­வ­மைப்பு சுதந்­தி­ர­மாக தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­துடன் நாட்டின் சட்டம் ஒழுங்கு என்­ப­வற்றுக்கு எவ்­வித மதிப்பும் வழங்­க­வில்லை. அவ்­வாட்சி காலத்தில் அளுத்­கம கல­வரம் உள்­ள­டங்­க­லாக அதி­க­ள­வான வன்­முறை சம்­ப­வங்­களை அவ்­வ­மைப்பு முஸ்­லிம்­கள்­ மீது கட்­ட­விழ்த்­து­ கொண்­டி­ருந்­தது. மேலும் தாம் முன்­னெ­டுக்கும் அசா­தா­ரண நட­வ­டிக்­கைகள் தொடர்பில் முன்­ன­றி­வித்தல் விடுத்­துக்­ கொண்டு செய்யும் வகையில் அவ்­வ­மைப்பு பலம் பெற்­றி­ருந்­தது. நாச­காரச் செயற்­பா­டு­களை முன்­ன­றி­வித்தல் வழங்கி தைரிய­மாக முன்­னெ­டுத்த போதும் அவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

பொது­பல சேனா அமைப்பின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள்

ஆட்­சி­ மாற்­றத்தின் பின்னர் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டு­களை காண­மு­டி­யா­தி­ருந்­தது. எனினும் இரண்­டரை வரு­டங்­களின் பின்னர் மீண்டும் அவ்­வ­மைப்பு தலை­தூக்­கி­யுள்­ளது. இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் சிலை வைப்பு விவ­கா­ரத்தின் பின்னர் அவ்­வ­மைப்பு தனது மத­வாத செயற்­பா­டு­களை கட்­ட­வி­ழ்க்க ஆரம்­பித்­துள்­ளது. அந்த வகையில் குறு­கிய காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ள­வான அசம்­பா­வி­தங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவை வரு­மாறு,

16.04.2017: 

தென் மாகா­ணத்­தி­லுள்ள கொட­பிட்­டிய, போர்வை நகரில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான 4 கடைகள் மீது அதி­காலை வேளையில் பெற்றோல் குண்டு தாக்­குதல்.

17.04.2017 : 

காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்தில் அமைந்­துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் உடைப்பு.

20.04.2017 :

அம்­பாறை, இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி ­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் பௌத்த விஹா­ரையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்ப பணி­களை பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுப்பு.

25.04.2017 : 

மாயக்­கல்லி மலை­ய­டி­ வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான காணியில் விஹாரை நிர்­மா­ணிக்கும் பணி­களை பொதுபல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்து பார்­வை­யிடல். அத்­துடன் அம்­பாறை மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­டமை.

08.05.2017 :

இலங்கை கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் எனவும் அக­திகள் எனும் போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிப்­ப­தா­கவும் கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்­தமை

14.05.2017 : 

பொல­ன­றுவை, ஓனே­கம பகு­திக்கு விஜயம் செய்த பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­துடன் கால்­நடை கொட்­டில்­க­ளுக்கும் சேதம் ஏற்­ப­டுத்­தினார். அத்­துடன் 'அல்லாஹ்'வை அவ­ம­திக்கும் வகையில் ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டமை.

15.05.2017 :

தோப்பூர் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டு­ வரும் குடி­யி­ருப்பு காணியில் பௌத்த பிக்­குகள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து வேலி­களை உடைத்­தெ­றிந்­தமை.

15.05.2017 :

பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது அதி­காலை 3 மணி­ய­ளவில் பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

16.05.2017 : 

கொழும்பு, வெல்­லம்­பிட்டி, கொஹி­ல­வத்தை அல் இப்­ரா­ஹீ­மிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது அதி­காலை 1.45 மணி­ய­ளவில் சுமார் 8 பேர் அடங்­கிய குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யமை.

16.05.2017 :

பொதுபல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றி ஞான­சார தேரர், மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ராக வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை முன்­வைத்­தமை.

16.05.2017 : 

செல்­வ­நகர், நீணாக்­கேணி பிர­தே­சத்­திற்குள் கூரிய ஆயு­தங்கள் மற்றும் தடி­க­ளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்­பட்ட கும்பல் அப் பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களின் வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை. அதில் சிலர் காய­ம­டைந்­த­துடன் 16 வீடுகள் சேத­ம­டைந்­தன. அன்­றி­ரவு அக் கிராம முஸ்­லிம்கள் அச்சம் கார­ண­மாக அங்­கி­ருந்து வெளி­யேறி பள்­ளி­வா­ச­லிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தமை.

17.05.2017 : 

பாணந்­துறை, எலு­வில பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான பேக்­கரி ஒன்றும் தொலைத்­தொ­டர்பு நிலையம் என்­ப­வற்றின் மீது பெற்றோல் குண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

18.05.2017 : 

வென்­னப்­பு­வவில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை 2 மணி­ய­ளவில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

21.05.2017

குரு­ணாகல் மல்­ல­வப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சல்­ மீது அதி­காலை வேளையில் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் பெற்றோல் குண்டு தாக்குதல்.

மேலும் அன்­றைய தினம் அதி­காலை வேளையில் காலி பெந்­தோட்டை எல்­பிட்டி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

22.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவின்ன சந்­தியில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை வேளையில் தீக்­கிரை.

23.05.2017

இரத்­தி­ன­புரி கஹ­வத்தை நக­ரி­லுள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் மற்றும் தமிழ் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் என்­பன அதி­காலை வேளையில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

24.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாவின்ன நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்தகரின் மருந்தகத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்.

அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டதா?

மேற்­கு­றிப்­பி­ட்ட அசம்­பா­வி­தங்கள் அண்­மைக்­கா­ல­மாக நடந்­தே­றி­ய ­போதும் அதற்­கெ­தி­ராக அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ளது. நாட்டில் அமை­தியை மீண்டும் சீர்­கு­லைக்க விளையும் பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­ அத்தே ஞான­சார தேரரை கைது ­செய்­வ­தற்கு அர­சாங்கம் தாமதம் காட்­டு­கி­றது. அத­னை­யிட்டு மக்கள் மத்­தியில் ஆட்­சி­யா­ளர்கள் மீது நம்­பிக்­கை­யீனம் அதி­க­ரித்து வரு­கி­றது.

மேலும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்­சிகள் மற்றும் ஏனைய கட்­சி­களும் அர­சாங்கம் மீது மிகுந்த விமர்­ச­ன­ங்­களை முன்­வைத்­துள்­ள­துடன் உரிய நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ள­தாக குற்றம் சாட்டி வரு­கின்­றன. சிவில் சமூக அமைப்­பு­களும் இது விட­யத்­தில் அர­சாங்­கத்தின் அச­மந்தப் போக்­கினை கடு­மை­யாக விமர்­சித்­துள்­ளன.

மேலும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­டோர் நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். எனினும் இது­வ­ரையில் அவ்­வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட­வில்லை.

பொது­பல சேனா­விற்கு அர­சாங்­கத்தின் மறை­முக ஒத்­து­ழைப்பு உள்­ளதா?

நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெறும் அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் என அர­சாங்கம் குறிப்­பிட்ட போதிலும் இது­வ­ரையில் நட­வ­டிக்கை இல்லை. ஆகவே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற அதே செயற்­பா­டுகள் தற்­போதும் தொடர்ந்­து ­கொண்­டி­ருக்­கி­றது. எனவே நல்­லாட்சி அர­சாங்கம் பொது­பல சேனா அமைப்­புக்கு மறை­மு­க­மாக ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றதா என்­கின்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

மேலும் ஞான­சார தேரரின் கைது விட­யத்தில் சில அமைச்­சர்கள் சட்ட நுணுக்­கங்­களை பயன்­ப­டுத்தி அவரை பாதுகாக்க முனை­வ­தா­கவும் புத்­தி­ஜீ­விகள் குற்­றம்­சாட்­டு­கின்­றனர். அத்­துடன் அம்­பாறை மாவட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையில் சிலை­வைப்பு விவ­கா­ரங்­களின் பின்­ன­ணியில் செயற்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் அமைச்­சர்கள் சிலர் பொது­பல சேனா அமைப்­புக்கு மறை­மு­க­மான ஒத்­தாசை வழங்­கு­வ­தா­கவும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.

இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முடி­வு­கட்ட வேண்டும்

இவ்­வா­றாக நாட்டில் இடம்­பெறும் இன­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு உட­ன­டி­யாக முடிவு கட்­டப்­பட வேண்டும். அல்­லாது அச்­செ­யற்­பா­டுகள் தொடர்ந்தால் நாடு பின்­னோக்­கிய நகர்­வு­களை மீண்டும் சந்­திக்க வேண்­டிய அபாயம் உள்­ளது.

அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், “முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நாட்டில் கட்­ட­விழ்க்­கப்பட்­டுள்ள அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கு அர­சாங்கம் உட­ன­டி­யாக முடி­வு­கட்ட வேண்டும். அல்­லாது போனால் இளை­ஞர்கள் பொறுமை இழந்து அவ்­வா­றான அட்­ட­கா­சத்­திற்கு முடிவு கட்­டு­கின்ற நிலை­வ­ரங்­க­ளுக்கு தூண்­டப்­ப­டு­கின்ற மிக அபா­ய­க­ர­மான சூழல் உள்­ளது.

மேலும் இவ்­ வி­வ­காரம் தொடர்பில் சில அதி­கா­ரி­களும் ஒரு சில மதத்­தை­சார்ந்­த­வர்­களும் தங்­க­ளுக்கு ஏற்ற வகையில் வியாக்­கி­யானம் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ்­வி­யாக்­கி­யா­னத்தை நம்பி நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய பொலிஸார் அச­மந்­தப்­போக்­கினைக் கடைப்­பி­டிக்­கின்­றனர். அதனால் நாட்டில் அமைதி சீர்­கு­லைந்து செல்­வ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ளார்.

அசா­தா­ரண சம்­ப­வங்­களை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள்

நாட்டில் தொல்­பொருள் பிர­தேசம் மற் றும் காட­ழிப்பு உள்­ளிட்ட விவ­கா­ரங்­களை முதன்­மைப்­ப­டுத்­தி­கொண்டு முஸ்­லி­ம­்க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் பாரா­ளு­மன்றில் தெரி­வுக்­குழு அமைத்து நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இவ்­வி­வ­கா­ரங்­க­ளினால் ஆத்­தி­ர­ம­டைந்­துள்ள முஸ்­லிம்­களை அமைதி காக்­கு­மாறு அகில இலங்கை ஜம்­மிய்­யதுல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. இதே­வேளை அசம்­பா­வி­தங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த புதன் கிழமை கிழக்கு மாகா­ணத்­திலும் வியா­ழக்­கி­ழமை ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்கள் ஹர்த்தால் அனுஷ்­டிப்­ப­தற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக அது கைவி­டப்­பட்­டது.

முஸ்லிம் எம்.பி.க்களின் சந்­திப்பு

குறித்த அரா­ஜக நட­வ­டிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் கடந்த 20 ஆம் திகதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர். அதன்­போது கடந்த காலங்­களை போன்று நல்­லாட்­சி­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அடா­வ­டித்­த­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. இவ்­வாறு தொடர்ந்து சென்றால் அனைத்து உறுப்­பி­னர்­களும் தீர்க்­க­மான முடி­வுக்கு வரு­வ­தற்கும் இணக்கம் காணப்­பட்­டது.

மேலும் எதிர் ­நோக்கும் புனித ரமழான் மாதத்தில் முஸ்­லிம்கள் இடையூறின்றி தமது வணக்க வழி­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான வச­திகள் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஞான­சார தேரரை கைது ­செய்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள்

பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை கைது­செய்­வ­தற்­கான சில நட­வ­டிக்­கை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இவ் ­வா­ரத்தின் ஆரம்­பத்தில் அவரை கைது செய்ய பொலிஸார் குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குருணாகல் தம்­புள்ளை வீதியில் தோர­யாய எனும் இடத்­திற்கு சென்­றி­ருந்­தனர். எனினும் அதன் போது பொலி­ஸாரின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யதன் விளை­வாக அவரை கைது செய்ய முடி­ய­வில்லை. அத்­துடன் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு அவ­ருக்கு அழைப்பு விடுத்தும் அவர் ஆஜ­ரா­க­வில்லை.

எனினும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்ய பாதாள உலக குழு­வி­னரை கட்­டுப்­ப­டுத்த ஏற்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவின் 4 குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சர் பிரி­யந்த லிய­ன­கேவின் கீழ் குறித்த நான்கு பொலிஸ் குழுக்­களும் நேற்­று­ முன்­தினம் முதல் ஞான­சா­ர­ தே­ரரை கைதும் செய்யும் நட­வ­டிக்­கையில் இறங்­கி­யுள்­ளன.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை, இனம் மதங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தும் வகையில் தொடர்ச்­சி­யாக கருத்­துக்­களை வெளி­யிட்­டமை, நீதி­மன்றை அவ­ம­தித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்­வதை தடுக்கும் வகையில் அவ­ரது கட­வுச்­சீட்டை பொலிஸார் முடக்­கி­யுள்­ளனர். நேற்று முன்­தினம் கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் இது தொடர்பில் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்பு பிரி­வினர் அறிக்கை தாக்கல் செய்து ஞான­சார தேரரின் கட­வுச்­சீட்டை முடக்­கு­வ­தற்­கான உத்­த­ரவைப் பெற்­றுக் ­கொண்­டனர்.

இந் நிலையில் இன மத வாதத்தை தூண்­டு­வோரை பார­பட்­ச­மின்றி கைது செய்ய அமைச்­ச­ரவைத் தீர்­மானம் ஊடாக பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்ட நிலையில் ஞான­சார தேரரை கைது செய்ய நட­வ­டிக்­கை­யெ­டுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இந்­நி­லையில் ஞான­சார தேரரை கைது செய்ய பொலிஸார் பல இடங்­களில் தேடுதல் நடத்­தி­யுள்­ள­போதும் அவரை கண்­ட­றிய முடி­ய­வில்லை. இதே­வேளை ஞான­சா­ரரை கைது செய்து சிறைச்­சா­லைக்குள் அவரை கொலை­ செய்­வ­தற்­கான திட்டம் உள்­ளது. எனவே அவர் தற்­போ­தைக்கு தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­னகே தெரி­வித்துள்ளார்.

இருந்­த­ போ­திலும் நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­காற்­றிய படைப்­பி­ரிவு மற்றும் புல­னாய்­வுத்­துறை என்­பன கட­மையில் உள்­ளன. ஆகவே ஞான­சார தேரரை தேடிக்­கண்டு பிடித்து அவரை கைது செய்­வ­தென்­பது கடி­ன­மான விட­ய­மல்ல.

மேலும் அவரைக் கைது­செய்­வ­தற்கு விசேட ஏற்­பா­டு­களை வகுக்க வேண்­டிய அவ­சி­யமும் இல்லை. ஏனெனில் அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் நடை­மு­றையில் உள்ள சாதா­ரண சட்ட ஏற்­பா­டு­களின் பிர­காரம் அவரை கைது செய்­தி­ருக்­கலாம். எனினும் அர­சாங்கம் அது தொடர்பில் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க தவ­றி­யுள்­ளது. அதனால்தான் தற்­போது விசேட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டுள்­ளது.

ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டால் பதற்றம் ஏற்­ப­டுமா?

பொது­பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் கைது­செய்­யப்­பட்டால் நாட்டில் பதற்றம் ஏற்­படும் என சிலர் தெரி­விக்­கின்­றனர். ஏனெனில் அவ்­வா­றான மாயையை அவ்­வ­மைப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேலும் ஞானசார தேரர் தனது கைது தொடர்பில் கருத்து தெரிவித்த போது “தன்னைக் கைது செய்தால் நாட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும்” என்ற வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால், அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் எவ்வித பதற்றமான சூழ்நிலையும் நாட்டில் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் பொதுபல சேனா அமைப்பு தொடர்பிலும் அவ்வமைப்பின் இனவாதச் செயற்பாடுகள் தொடர்பிலும் சிங்கள மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அவ்வமைப்பின் செயற்பாடுகளை சிங்கள மக்களில் அதிகளவானோர் கடுமையாக விமர்சிக்கின்றனர். மேலும் பல சிங்கள பொது அமைப்புகளும் பொதுபல சேனாவிற்கு எதிரான கொள்கையில் உள்ளன.

எனினும் பொதுபல சேனாவுடன் இனவாத நோக்கம் கொண்ட சிறிய கூட்டம் ஒன்றே உள்ளது. அவ்வமைப்பின் செல்வாக்கு இனவாத சிந்தனை கொண்ட சிறிய கூட்டத்துடன் மாத்திரம் சுருங்கியுள்ளது. ஆகவே ஞானசார தேரரின் கைதின் பிரதிபலனாக நாட்டில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை.

தீர்வு

இனவாத நோக்கம் கொண்டு செயற்படும் பொதுபல சேனா அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நடவடிக்கையில் அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மேலும் இதுபோன்ற இனவாத நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ளவர்கள், அவ்வமைப்புகளுக்கான நிதிக் கட்டமைப்பு என்பது பற்றி மிகுந்த கவனம் செலுத்தி நடவடிக்கை வேண்டும்.

ஏனெனில் இவ்வாறான இனவாத செயற்பாடுகளினால் தான் நாடு கடந்த காலங்களில் மோசமான நிகழ்வுகளை எதிர் கொண்டது. ஆகவே கடந்த கால அனுபவங்களை கருத்திற் கொண்டு இது குறித்த உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு மாத்திர மன்றி சமூகத்திற்கும் உள்ளது.எம்.சி.நஜி­முதீன்

எம்.சி.நஜி­முதீன்

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.