Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது

-பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர்.

எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்பாணம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய ரீதியில் 40 வீதம் திறமை அடிப்படையிலும், 60 வீதம் மாவட்ட கோட்டா அடிப்படையிலும் மருத்துவத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் இம்முறை, முதல் 480 நிலைகளுக்குள் வந்த மாணவர்கள் திறமை அடிப்படையில் மருத்துவத்துறைக்கு உள்வாங்கப்படுவர். இதன்படி யாழ். மாவட்டத்தில் 24 ஆவது நிலையிலுள்ள மாணவன் பெற்ற தேசிய நிலை 473 ஆகும்.

இதேவேளை, மாவட்ட கோட்டா அடிப்படையில் இவ்வளவு காலமும் 540 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த இடங்கள் 30 ஆகும்.

ஆனால், இம்முறை 720 மாணவர்கள் தெரிவு செய்யப்படும் போது யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டியது 40 இடங்களாகும். ஆனால், கிடைத்ததோ வழமைபோல் 30 இடங்களேயாகும்.

ஆகவே, யாழ்ப்பாணத்துக்கு கிடைக்க வேண்டிய ஆகக்குறைந்த மருத்துவத்துறைக்கான இடங்கள் திறமையடிப்படையில் 24, மாவட்ட கோட்டா அடிப்படையில் 40 என மொத்தம் 64 ஆக இருக்க வேண்டும். ஆனால், கிடைத்திருப்பதோ திறமையடிப்படையில் 19 உம், கோட்டா அடிப்படையில் 30 உம் என 49 இடங்கள் மட்டுமே.

எனவே கிடைக்காமல் செய்யப்பட்டுள்ள மேலும் 15 இடங்களையும் பெறுவதற்கு பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விமான்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினக்குரல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளியில் கிளிநொச்சிக்கு அநீதி என முறைப்பாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அதிக வெட்டுப்புள்ளி விதிக்கப்படுவது குறித்து கிளிநொச்சி மாவட்ட பெற்றோர்கள் அங்குள்ள கல்விப்பணிப்பாளரிடம் முறையிட்டிருக்கின்றனர்.

இந்த வெட்டுப்புள்ளி சிறுவர் உரிமையை மீறும் செயற்பாடு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் கல்வி வலய அலுவலகத்தின் முன்பாக ஒன்று திரண்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது எனத் தெரிவித்ததோடு புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கல்விப்பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதற்குப் பதிலளித்த கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கல்வி அமைச்சிடம் 5ஆம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி எப்படித் தீர்மானிக்கப்படுகின்றது எனத் தாம் கேட்டனர் எனவும் ஆனால் தமக்கு அதற்குரிய பதில் தரப்படவில்லை என்றும் தெரிவித்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி மூலம் ஆண்டுதோறும் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாகவும் கவலை வெளியிட்டார்.

2005இல் வெட்டுப்புள்ளி மூலம் 51 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்றும் 2006இல் அது 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியதுடன் முன்னரைவிட ஆண்டுக்கு ஆண்டு குறைக்கப்பட்டு இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இன்னமும் குறைக்கப்படும் என்றே தெரிவதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

2005இல் 100க்கும் அதிகமான புள்ளிகளை 152 மாணவர்கள் பெற்றனர். 2006ஆம் ஆண்டில் 526 மாணவர்கள் பெற்றுள்ளனர். இதனைவிட சித்திப்புள்ளியான 80ற்கும் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் எண்ணிக்கை 800ஆகும். கல்வி இங்கு வளர்ந்திருக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது.

வளர்ச்சியடைந்த மாவட்டத்துக்கு 125 புள்ளி வெட்டுப்புள்ளியாக்கப்பட்டு

சிங்கிள புத்திஜீவிகள் திரைமறைவில் தமிழருக்கு எதிராகச் செய்யும் பல சதித்திட்டங்களில் இதுவும் ஒன்று! இதற்கெல்லாம் சுதந்திர தமிழீழம் ஒன்றே தீர்வாக அமைய முடியும்! சிங்கிளவர்களிடம் அழுது புலம்புவதில் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி பொன் சிவகுமாரன் இலங்கையரசுக்கு எதிராக மாணவர்பேரவையைத் ஸ்தாபித்தது கூட இப்படியான அநீதியால் தானே. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஏதோ ஒரு வழியில் தமிழன் மீதான கல்வி அடக்குமுறையைச் சிங்கள தேசம் கடுமையாக்கித் தான் வருகின்றது. இப்போது கூட யாழ்பாணத்தில் பிள்ளைகளுக்கு பள்ளி செல்ல அப்பியாசப் புத்தகமோ, எழுதுகோல்களோ கிடைப்பதில்லை. சில பாடசாலைகளில் எல்லாப் பாடத்துக்கும் என்று 20பக்க அப்பியாசப் புத்தகம் கொடுத்தார்களாம்.

20 பக்கப் புத்தகத்தில், எத்தனை பாடங்களை எழுதுறது? இதற்கு ஒரு தீர்வு காணவிட்டால், எம் மாணவச் செல்வங்களின் கல்வியும், அதன் மீதான ஆர்வமும் மங்கிப் போகும்.

எமது போராட்டத்தின் ஆரம்பமே இந்த படிப்பினால் தானே வந்தது..ஆசியாவின் முதல் வைத்தியராக வந்த ஈழத்தமிழனின் நிலை, இப்படி போகிறதே!Many of the first Asian and non-white doctors and engineers in Malaya and Singapore were of Sri Lankan Tamil descent. The world's first Asian surgeon was Dr. S.S.Thiruchelvam, a Malayan of Ceylonese Tamil origin.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.