Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ந்தது காபூல் ; 80 பேர் பலி

Featured Replies

அதிர்ந்தது காபூல் ; 80 பேர் பலி
 

image_c332b6beb7.jpg

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இராஜதந்திர அலுவலகங்களுக்கான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரக் ஒன்றைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத் தானே வெடிக்க வைத்து, இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த பல மாதங்களில், காபூலில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அதிர்ந்தது-காபூல்---80-பேர்-பலி/50-197704

  • தொடங்கியவர்

காபூலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்

 
 
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்படத்தின் காப்புரிமைREUTERS Image captionகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள்.

குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு காரணமாக, அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சிதறின.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளன.

எங்கு நடந்தது தாக்குதல்?

காபூல் குண்டுவெடிப்பு

உள்ளூர் நேரப்படி, காலை 8.25 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. ஏராளமான கார்கள் தீயில் கருகிவிட்டன.

ஜெர்மன் தூதரகத்தை ஒட்டி இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால். இலக்கு யார் என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

அங்கு அதிபர் மாளிகை, மற்றும் இந்திய, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.

லாரியிலோ அல்லது தண்ணீர் டாங்கிலோ குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், அவ்வளவு பாதுகாப்பு மிக்க பகுதியில் எப்படி தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கேள்வி எழக்கூடும். 10 அடி உயரத்துக்கு, குண்டுவெடிப்பைத் தாங்கும் சக்தி வாய்ந்த சுவர்கள் அமைக்கப்பட்ட அந்தப் பகுதி தலைநகரில் மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் யார்?

பதற்றத்துடன் உறவினர்கள்படத்தின் காப்புரிமைEPA Image captionபதற்றத்துடன் உறவினர்கள்

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

`இன்னும் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் சடலங்களையும் கொண்டுவந்தவாறு இருக்கிறார்கள்' என போலீஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் கவூஸி தெரிவித்தார்.

இந்திய தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

சமீபத்தில் ராணுவப்பள்ளி மீது நடந்த தாக்குதலில் ஏராளமான படையினர் பலி Image captionசமீபத்தில் ராணுவப்பள்ளி மீது நடந்த தாக்குதலில் ஏராளமான படையினர் பலி

பிரான்ஸ் தூதரகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் சிலர் ஒரு மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் டோலோ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.

இந்த மாதத் துவக்கத்தில், அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்து சென்றபோது, நேடோ படையணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

மஜால்-இ ஷெரீப் என்ற வடக்கு நகரில் ராணுவ பயிற்சி வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

http://www.bbc.com/tamil/global-40103252

  • தொடங்கியவர்

`குண்டுச் சத்தம் என் இதயத்தைப் பிழிந்ததைப் போல் இருந்தது'

 
 

ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டுவெடித்தபோது அதை நேரில் பார்த்த ஒருவர், தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

காபூல்படத்தின் காப்புரிமைEMPICS

பெயரை வெளியிட விரும்பாவிட்டாலும், அதிர்ச்சி கலந்த அந்த அனுபவத்தை அவர் முழுமையாகப் பகிர்ந்து கொண்டார். இதோ:

"காபூலில் 17, வஸிர் முகமது அக்பர்கான் சாலையில் ஓர் அமைச்சகம் உள்ளது. காலை 8.22 மணிக்கு அங்கு நான் இருந்தேன். ஜெர்மன் தூதரகத்துக்கு மிக அருகில் இருக்கிறது. 8.32 மணிக்கு குண்டு வெடித்தது.

குண்டு வெடித்த அந்த நொடியில், யாரோ என் இதயத்தைப் பிழிந்து, பிறகு விட்டுவிடுவதைப் போல் இருந்தது. அந்த நேரத்தில், என் காதுகள் செவிடானதைப் போல் இருந்தது.

கட்டடம் அதிர்ந்தது. அதையடுத்து, மிகப்பெரிய வெடிச்சத்தம் கேட்டது. தொடர்ந்து பெரும் புகை வெளியானது.

இது மிகவும் குறுகலான, நெரிசல் மிகுந்த சந்து.

குண்டு வெடித்தபோது, அருகில் உள்ள கட்டடத்தில் இருந்தேன். உடனடியாக அனைவரும் அவரசமாக கீழ் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

உறவுகளைத் தேடும் உறவினர்கள்படத்தின் காப்புரிமைEPA Image captionஉறவுகளைத் தேடும் உறவினர்கள்

ரமலான் மாதத்தில் மக்கள் பசியோடும் இருந்தார்கள். இதைப் பார்த்து பயந்துவிட்டார்கள்.

மூன்று பேரின் சடலங்களை நான் பார்த்தேன். அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களா அல்லது இலக்கானவர்களா எனத் தெரியவில்லை. ரத்தம் சிதறி ரணகளமாகக் காட்சியளித்த அந்தக் கோரக் காட்சிகளைப் பார்த்தேன்.

நிலைமை மிக மோசமாக இருக்கிறது. பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

குண்டு வெடித்த இடத்துக்கு அருகாமையில்தான் இந்தியத் தூதரகமும் இருக்கிறது.

ஒருவர் தற்கொலை குண்டுதாரியாக மாற முடிவு செய்யும்போது, பாதுகாப்புப் படையினரால் என்ன செய்ய முடியும்?

பல பேர், குரானை படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

புகை மூட்டம்

எனது அலுவலக காரில், ஐ.நா (UN) முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும், எல்லா சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தப்படுகிறது.

எல்லாம குழப்பமாக இருக்கிறது. ரமலான் மாதத்தில் இத்தகைய தாக்குதல் நடப்பது கவலையாக இருக்கிறது.

மூன்று பாதுகாவலர்களுடன், குண்டு துளைக்காத கார் என எனக்கு முழுப்பாதுகாப்பு உள்ளது. ஆனால், சாதாரண மக்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினம். சடலங்களைப் பார்ப்பது எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது".

http://www.bbc.com/tamil/global-40104369

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.