Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன.

Featured Replies

இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன.

 

IMG_8909.jpg

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான  தீர்மானிக்கப்பட்ட அளவை விட  மேலதிகமாக சட்டவிரோதமாக  விதைக்கப்பட்ட  நெற்பயிர்கள் இன்று 01-06-2017  அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன.

இரணைமடுகுளத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டுக்கு 890 ஏக்கர் சிறுபோக  நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு  இரணைமடு குளத்திள் கீழ் உள்ள 22 கமக்கார அமைப்புகளுக்கும் வயல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் தீர்மானிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக 280 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இரணைமடுகுளத்தில் பத்து அடிக்கு குறைவான நீர் இருப்பதன் காரணமாக தீர்மானிக்கப்பட்ட பரப்பளவு விதைப்பை தவிர மேலதிக விதைப்பை தொடரவிட்டால் அனுமதிக்கப்பட்ட பயிர்களுக்கும் தொடர்ச்சியாக நீர் வழங்க முடியாத நிலையில் குறித்த பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவும் இன்றைய தினம் சட்டவிரோத பயிர்ச்செய்கையான 280 ஏக்கரில் உரிமைகோரப்படாத 47 ஏக்கர்  முதற்கட்டமாக  அழிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்கள் அதிகாரிகள், கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொலீஸார் ஆகியோர்  இரணைமடுகுளத்தின் கீழாக 22 கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் சட்டவிரோ பயிர்ச்செய்கை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கிளிநொச்சி பிராந்திய நீர்ப்;பாசனத் திணைக்கள  பிரதி பணிப்பாளர் என்.சுதகாரன், கிளிநொச்சி கமநல சேவைகள் உதவி ஆணையாளர் வே.ஆயகுலன், பெரும்பாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் காணப்பட்டனர்

IMG_8895.jpgIMG_8901.jpgIMG_8909-1.jpgIMG_8913.jpgIMG_8918.jpg

 
 

https://globaltamilnews.net/archives/28641

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்படும் நெற்செய்கை

 


கிளிநொச்சியில் விவசாயிகள் கண்முன்னே பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்படும் நெற்செய்கை
 

கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் நீர்பாசனம் மூலம் செய்கை பண்ணப்பட்ட மேலதிக நெற்செய்கையை அழிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

280 ஏக்கர் நெற் செய்கையை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் பாரிய நீர்பாசனத் திட்டமான இரணைமடு குளத்தின் மூலம் 850 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள
இம்முறை அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக 280 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தமையினால், அதனை அழிப்பதற்கு கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் தமது ஜீவனோபாயத்திற்காக மேற்கொண்ட நெற்செய்கை பச்சைப்பசேல் என அடர்த்தியாக வளர்ந்துள்ள நிலையில், அவற்றை அழிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

280 ஏக்கர் வயல் நிலத்தில் 47 ஏக்கர் பயிர் செய்கை விவசாயிகளின் கண்முன்னே இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு கமநல சேவை திணைக்களம் மற்றும் நீர்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

பயிர் செய்கை மேற்கொள்வதற்கு முன்னரே அதனைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

 

http://newsfirst.lk/tamil/2017/06/கிளிநொச்சியில்-விவசாயிக/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.