Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்

Featured Replies

ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை அரசியல் பிரமுகர் தடுக்கின்றார்

 

ganasara-thero.jpg
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதனை, அரசியல் பிரமுகர் ஒருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஞானசார தேரரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் கடந்த வாரம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்த காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன, மத வன்முறையை தூண்டும் வகையில் செயற்படுவதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், ஞானசார தேரர் கைதாவதனை உயர் அரசியல்வாதியொருவர் தடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/archives/28778

  • தொடங்கியவர்

ஞானசாரரின் கைதை தடுக்கிறார் விஜயதாச

அசாத் சாலி பகிரங்கக் குற்றச்சாட்டு

 
ஞானசாரரின் கைதை தடுக்கிறார் விஜயதாச
 

ஞான­சார தேர­ரைக் கைது செய்­ய­வி­டா­மல் அழுத்­தம் கொடுக்­கும் அந்த பிர­ப­லம் வேறு யாரும் அல்­லர் நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்­ச­வே­தான்.

இவ்­வாறு கொழும்பு மாந­கர சபை­யின் முன்­னாள் பிரதி முதல்­வர் அசாத் சாலி தெரி­வித்­துள்­ளார்.

நேற்­று­முன்­தி­னம் மாலை 7 நாடு­க­ளின் தூது­வர்­க­ளும் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளும் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ச­லுக்கு பய­ண­மொன்றை­மேற்கொண்டிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அசாத் சாலி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அணியினரே ஞானசார தேரரின் பின்னால் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருந்து அவர்களை இயக்குகின்றனர். ஆனால் இப்போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே ஞானசார தேரரைக் கைது செய்யவிடாமல் பாதுகாத்து வருகின்றார்.

அரச தலைவருடனான சந்திப்புகளுக்கும் ஞானசார தேரரை அழைத்து செல்வது அமைச்சர் விஜயதாச ராஜபக்சவே. கடந்த ஆட்சியின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத அடக்குமுறைகள் காரணமாகவே நாட்டின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

தற்போதைய மைத்திரி-ரணில் அரசும் முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளது. சிங்கள இனவாதிகளுக்கு மீண்டும் களமைத்துக் கொடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது-என்றார்.

http://uthayandaily.com/story/5008.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.