Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவுகூருவதுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாதவாறு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும். : ஜனாதிபதி

Featured Replies

குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவுகூருவதுடன், மீண்டும் அவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாதவாறு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும். : ஜனாதிபதி

Published by RasmilaD on 2017-06-03 08:52:23

 

பூமியை குருதியால் தோய்த்த மூன்று தசாப்த கால குரூரமான போரின் கசப்பான அனுபவங்களை நினைவு கூருவது போன்றே மீண்டும் அவ்வாறான அனர்த்தம் நாட்டில் ஏற்படாதவாறு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்தார். 

18881754_10155168309266327_5842257045740

எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் அவ்வாறான துர்ப்பாக்கிய காலத்தின் இருளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு, அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய சமாதானமான நாட்டைக் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

நேற்று அரந்தலாவ சர்வதேச பௌத்த நிலையத்தில் நடைபெற்ற அரந்தலாவ பிக்குகள் படுகொலையின் 30 ஆண்டு நிறைவையொட்டி வண. நேஹொட இந்தசார தேரர் உள்ளிட்ட தேரர்களின் நினைவாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

18882271_10155168291631327_1443342427786

அனைத்து இன, மத மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி, நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுடன் இணைய வேண்டியது அனைவரதும் பொறுப்பாகுமென தெரிவித்த ஜனாதிபதி, பிற்போக்குவாதம் மற்றும் அதிகார ஆசையை முடிவுறுத்தி தாய்நாட்டின் எதிர்காலத்துக்காக சகோதரத்துவத்துடன் அணிதிரள வேண்டியது அனைவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள காலத்தின் பணியாகும் எனவும் தெரிவித்தார். 

புலிப் பயங்கரவாதிகள் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற கொலைகளின் துரதிர்ஸ்டமான இந்த சம்பவத்தில் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1987 ஜூன் 02 ஆம் திகதி அம்பாறை வித்யானந்த பிரிவெனாவைச் சேர்ந்த வண. நேஹொட இந்தசார தேரர் உள்ளிட்ட 31 தேரர்களும், நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மூவரும் பயங்கரவாதிகளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். 

வண. நேஹொட இந்தசார தேரரின் மத, சமூக செயற்பாடுகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தார். 

பின்னர் கொலை செய்யப்பட்ட தேரர்களை நினைவுகூர்ந்து நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், விகாரையின் சூரிய மின்கல கட்டமைப்பையும் திறந்து வைத்தார். 

http://www.virakesari.lk/article/20571

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.