Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் மாணவர்கள் பகிஷ்கரிப்பு தமிழ்ப்பாடசாலைகள் ஸ்தம்பிதம் நீதிவழங்கக்கோரி ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது

Featured Replies

திருமலையில் மாணவர்கள் பகிஷ்கரிப்பு

02-b0d8ba0ddf27f97bb6c631422caea1dbef3aeefa.jpg

 

தமிழ்ப்பாடசாலைகள் ஸ்தம்பிதம் நீதிவழங்கக்கோரி ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது

(மூதூர்,சேனையூர்,திருமலை மேல­திக நிரு­பர்கள்)

மூதூர் பெரியவெளியில் பாட­சாலை மாண­வி­க­ளான சிறு­மிகள் மூவர், துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்குக் கண்­டனம் தெரி­வித்து, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் உள்ள அனைத்துத் தமிழ் பாட­சா­லை­க­ளிலும் மாண­வர்கள் நேற்று வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­துடன் ஆசி­ரி­யர்கள் பாட­சா­லைக்கு வருகை தரா­ததால் பாட­சா­லைகள் இயங்­காது ஸ்தம்­பி­த­மா­கின. இந்தப் பகிஷ்­க­ரிப்­பிற்­கான அழைப்­பினை கிழக்கு மாகாண தமிழர் ஆசி­ரியர் சங்கம் விடுத்­தி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் திரு­கோ­ண­மலை கல்வி வலயம், மூதூர் வலயம் ,குச்­ச­வெளி கோட்டம், தம்­ப­ல­காமம் கோட்டம், ஈச்­சி­லம்­பற்று கோட்டம் உட்­பட மாவட்­டத்தில் உள்ள அனைத்து வல­யங்­களில் உள்ள தமிழ் பாட­சா­லைகள் நேற்று இயங்க வில்லை. 

இதே­வேளை, கிண்­ணியா வலயக் கல்வி அலு­வ­லகப் பிரி­வுக்­குட்­பட்ட ஆலங்­கேணி விநா­யகர் மகா வித்­தி­யா­லயம், ஈச்­சந்­தீவு விபு­லா­னந்தா வித்­தி­யா­லயம் , சுங்கான் குழி கலை­மகள் வித்­தி­யா­லயம், உப்­பாறு றோமன் கத்­தோ­லிக்க கலவன் வித்­தி­யா­லயம் ஆகிய நான்கு தமிழ் பாட­சா­லை­களும் இயங்­க­வில்லை.

அத்­துடன், நக­ரத்தில் உள்ள தேசிய பாட­சா­லை­க­ளான ஸ்ரீ கோணேஸ்­வரா இந்துக் கல்­லாரி ,ஸ்ரீ சண்­முகா இந்து மகளீர் கல்­லூரி ,புனித சூசை­யப்பர் கல்­லூரி, புனித மரியாள் கல்­லூரி உட்­பட பல கல்­லூ­ரிகள் பகிஷ்­க­ரிப்பு கார­ண­மாக இயங்­க­வில்லை .

இதே­வேளை மூதுார் மல்­லி­கைத்­தீவு சந்­தியில் பல உள்ளுார் அமைப்­பு­களின் ஏற்­பாட்டில் கண்­டன ஆர்­பாட்­டமும் நேற்றுக் காலையில் இருந்து நண்­பகல் 12.00மணி­வரை நடை­பெற்­றது.

இதன்­போது பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் ஸ்தலத்­திற்கு வரு­கை­தந்து தாம் எடுத்து வரும் சட்ட நட­வ­டிக்கைள் பற்றி தெளிவு படுத்­தி­ய­துடன் குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினர். இந்­நி­லையில் நண்­ப­க­லுடன் பொது­மக்­க­ளின்­போ­ராட்­டம்­கை­வி­டப்­பட்­டது. இப்­போ­ராட்­டத்தில் மூதுார் தெற்கில் உள்ள பெரு­ம­ள­வான கிராம இளை­ஞர்கள், பொது மக்கள் , குரு­மார்கள் என பெருந்­தொ­கை­யானோர் கலந்­து­கொண்­டனர்.

இந்தப் போராட்­டத்தில் கலந்­து­கொண்­ட­வர்கள் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும். உண்­மை­யான நீதி உரிய வகையில் நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். இந்த துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்­தினால் பாட­சாலை மாண­விகள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இது எமது போராட்டமல்ல. அனைத்து சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்குமான போராட்டமாகும். எமது போராட்டத்தை இனவாதமாக கருதாமல் மனிதாபிமான நோக்கோடு அனுகவேண்டுமென கோருகின்றோம் என்று வலியுறுத்தினர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.