Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு தூதுவர்களுடனான முஸ்லிம் சிவில் சமூகத்தின் சந்திப்பு

Featured Replies

வெளி­நாட்டு தூது­வர்­க­ளு­ட­னான முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் சந்­திப்பு

 

நாட்டில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான இன­வாத செயற்­பாடுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில் இத்­த­கைய இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து ஏழு நாடு­களின் தூது­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான பொது­ப­ல­சேனா அமைப்­பி­னரின் செயற்­பா­டுகள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தன. பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மீதும் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வந்­தன.

முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்லாம் மதத்­தினை நிந்­த­னை­செய்யும் வகை­யிலும் பொது­ப­ல­சே­னாவின் பொது­ச்செ­ய­லாளர் கல­கொட அத்­தே ­ஞா­ன­சார தேரர் செயற்­பட்டு வந்தார். நீதி­மன்ற தடை உத்­த­ர­வு­களை கிழித்­தெ­றிந்த நிலையில் பொலி­ஸாரின் கட­மைக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் அவ­ரது செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன. இதனால் பொது­ப­ல­சேனா அமைப்­பி­ன­ரது இன­வாத செயற்­பாட்­டிற்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யி­ருந்­தது. அமைச்­ச­ர­வையில் தமிழ், முஸ்லிம் அமைச்­சர்கள் பொது­ப­ல­சே­னாவின் பொது­ச்செ­ய­லாளர் ஞான­சார தேரரின் செயற்­பாட்டை கடு­மை­யாக கண்­டித்­த­துடன் அவ­ரது செயற்­பாட்­டிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர். இத­னை­ய­டுத்து இத்­த­கைய இன­வாத செயற்­பா­டு­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­கு­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நா­யக்கவுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தனர்.

இந்­த­நி­லை­யில்தான் கல­கொட அத்தே ஞான­சா­ர­தே­ரரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் இது­வரை அவர் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் அர­சி­யல்­கட்­சி­களின் தலை­வர்கள், வெளி­நாட்டு தூது­வர்­க­ளையும் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் தொடர்ச்­சி­யாக சந்­தித்­தி­ருந்­தனர். இந்தப் பின்­ன­ணி­யி­லேயே இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக ஏழு ­நா­டு­களின் தூது­வர்கள் கூட்­டாக கண்­டனம் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

கொழும்பு தெவட்­டகஹா பள்­ளி­வா­சலில் வெளி­நாட்டு தூது­வர்கள் முஸ்லிம் சிவில் அமைப்பு பிர­தி­நி­தி­க­ளையும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் நேற்று முன்­தினம் சந்­தித்து பேசி­யி­ருந்­தனர். ஐரோப்­பிய ஒன்­றியம், அவுஸ்­திரேலியா, கனடா, நெதர்­லாந்து, நோர்வே, தென்­னா­பி­ரிக்கா, சுவி­ட்சர்­லாந்து ஆகிய ஏழு நாடு­களின் தூது­வர்­களே இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். இவர்கள் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்று வந்த இன­வாத செயற்­பாடுகள் தொடர்பில் விரி­வாக ஆராய்ந்­துள்­ளனர். முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர். கடந்த இரு­வா­ரங்­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக 21 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இவற்­றுக்­கான ஆதா­ரங்­களை சமர்ப்­பித்த முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­திகள் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பி­லான காணொ­ளி­களையும் காண்­பித்­துள்­ளனர்.

இந்த சந்­திப்­பினை அடுத்து நடத்­தப்­பட்ட ஊட­க­வி­யலாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இலங்­கைக்­கான தூதுவர் நாட்டின் வளர்ச்­சிக்கு சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். இன­வா­தத்தை தூண்­டு­வது ஐக்­கி­யத்­திற்கும் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இந்­நி­லையில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்கள் கவ­லை­ய­ளிக்­கின்­றன. இந்த விட­யத்தில் பொலிஸார் உடன் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­ட­வேண்டும். முஸ்­லிம்­களை பகைத்­துக்­கொண்டு இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வதில் பார­பட்சம் காண்­பிக்­கப்­ப­டக்­கூடாது. அது ஜன­நா­ய­கத்­திற்­கு­ரி­ய­தல்ல. இன­மு­ரண்­பா­டுகள் தொடர்பில் மூவின மக்­க­ளுக்கும் நல்ல அனு­பவம் உள்­ளது. எனவே இந்த விட­யத்தில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

முஸ்லிம் மக்கள் மீதான இன­வாத செயற்­பாடுகள் தொடர்பில் ஏனைய தூது­வர்­களும் தமது கண்­ட­னத்தை தெரி­வித்­துள்­ளனர். இதன்­படி முன்­னைய ஆட்­சியில் நடந்­ததைப் போன்று நல்­லாட்­சி­யிலும் இன­வாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது நல்­ல­தல்ல. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­ட­வேண்டும். இன­வாத செயற்­பா­டுகள் உடன் நிறுத்­தப்­ப­டு­வ­துடன் இன­ வா­தத்தை தூண்டும் வகை­யி­லான கருத்­துக்கள் பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும், சிறு­பான்­மை­யின மக்­களை அடக்கி ஒடுக்­கக்­கூ­டாது. தமிழ் பேசும் மக்­க­ளுக்கு இந்த ஆட்­சியில் அநீதி இழைக்­கப்­ப­டக்­கூ­டாது. எனவே, இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் தூது­வர்கள் இந்த சந்­திப்பில் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட ரீதியில் இன­வாத செயற்­பா­டுகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன. தம்­புள்ளை பள்­ளி­வாசல் முதல் கிராண்ட்பாஸ் பள்­ளி­வாசல் வரை தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஹலால் சான்­றிதழ் விவ­காரம் பூதா­க­ர­மாக்­கப்­பட்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. அளுத்­கம, தர்க்­கா­நகர் பகு­தி­களில் திட்­ட­மிட்ட வகையில் முஸ்­லிம்கள் மீது வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. இதனால் பெரு­ம­ளவு சொத்­தி­ழப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. தொடர்ச்­சி­யாக முஸ்லிம் மக்கள் மீதான இத்­தகைய வன்­மு­றைகள் திட்­ட­மிட்­ட­வ­கையில் இடம்­பெற்­ற­மை­யினால் அன்­றைய அர­சாங்­கத்தின் மீது முஸ்லிம் மக்கள் பெரும் வெறுப்­ப­டைந்­தி­ருந்­தனர். இதனால் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் வாக்­கு­களும் பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு மாறி­யி­ருந்­தது. இதே­போன்றே யுத்­தத்­தின்­போதும் அதன் பின்­னரும் இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளினால் வெறுப்­ப­டைந்த தமிழ் மக்­களும் அந்த அர­சுக்கு எதி­ராக தமது தீர்ப்பை வழங்­கி­யி­ருந்­தனர்.

இவ்­வா­றான நிலை­யில்தான் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து சிறு­பான்மை மக்கள் மீதான திட்­ட­மிட்ட வன்­மு­றைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தன. பொது­ப­ல­சே­னாவின் பொது­ச்செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­தேரர் உட்­பட பௌத்த சிங்­கள இன­வா­திகள் தமது செயற்­பாடு­களை மேற்­கொள்ள முடி­யாது அடங்­கி­யி­ருந்­தனர். ஆனால், அண்­மைக்­கா­ல­மாக இத்­த­கைய இன­வா­தி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளாக அவை மாறி­வ­ரு­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் தமது உரி­மைகள் நிலை­நாட்­டப்­படும் என்றும் தமக்­கான பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படு­மென்றும் நம்­பி­யி­ருந்த சிறு­பான்­மை­யி­னரின் நம்­பிக்கை தகர்த்­தெ­றி­யப்­பட்­டது. அண்­மைக்­கா­ல­மாக பொது­ப­ல­சே­னாவின் பொது­ச்செ­ய­லாளர் கல­கொட ஞான­சார தேரர் உட்­பட பௌத்த இன­வாத அமைப்­புக்­களின் தலை­வர்கள் பகி­ரங்­க­மா­கவே சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். கல­கொட அத்தே ஞான­சார தேரரை குரு­ணா­கலில் பொலிஸார் கைது செய்ய முயன்­ற­போது அவர் பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரா­கவே பகி­ரங்­க­மாக தகாத வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்தி பேசி­யி­ருந்தார். இதே­போன்றே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­லாத்தை நிந்­தனை செய்யும் வகை­யிலும் அவரும் அவ­ரது குழு­வி­ன­ரதும் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருந்­தன.

இவர்­களின் செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்­கா­மை­யினால் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளையும் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் சந்­தித்து தமது சமூ­கத்தின் மீதான வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு கோரும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. கடந்த ஒரு­வா­ரத்­திற்கும் மேலா­கவே இத்­த­கைய முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன் ஒரு கட்டமாகவே நேற்றுமுன்தினம் கொழும்பில் ஏழு நாடுகளின் தூதுவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து முஸ்லிம் சிவில் சமூகத்தினர் தம்மீதான வன்முறைகள் தொடர்பில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கடந்தவாரம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அதனை அமெரிக்கத் தூதுவர் அத்துல் கெசாப் உடனடியாகவே கண்டித் திருந்தார். இவ்வாறான இனவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் கோரியிருந்தார். தற்போது ஏழு முக்கியநாடுகளின் தூதுவர்கள் முஸ்லிம் மக்கள் மீதான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர். உண்மையிலேயே இந்த செயற்பாடு வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

சிறுபான்மையின மக்கள் மீதான இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கமானது உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் வெளிநாட்டு தூதுவர்கள் இந்த செயற்பாட்டில் தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. எனவே எதிர்காலத்திலாவது அரசாங்கம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முளையிலேயே முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-03#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.