Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொகுசுவாகன நிதியை முன்னாள் போராளிகளிற்கு கொடுங்கள் ஒரு வருடத்தில் மீளத் தருகின்றேன் – தம்பிராசா கோரிக்கை

in செய்திகள், பிரதான செய்திகள் June 9, 2017

 

Vakeesam-News-1.jpg
மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் வரியற்ற சொகுசுவாகன இறக்குமதிக்காக வைத்திருக்கின்ற பணம் முழுவதையும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதர மேம்பாட்டிற்கு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அவர்கள் இந்த நற்காரியத்தில் ஈடுபடவேண்டும் என தமித்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஒடுக்குமுறைகளிற்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி தம்பிராசா இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் வடக்கு மாகாணத்தில் 16 அயிரத்து 800 முன்னாள் போராளிகள் இருப்பதாகவும் அவர்களில் 1300 பேருக்கு மட்டுமே உதவ முடிந்ததாகவும் என்னிடம் அமைச்சர் டெனீஸ்வரன் கூறியிருந்தார். அவர்களிற்கு 50 ஆயிரம் ரூபா உதவித் தொகையே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் பொருளாதார வசதிகளற்றிருக்கும் ஏனைய முன்னாள் போராளிகளிற்கு உதவ மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.ஊடக அமைய த்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் ச ந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறுகையிலேயே மேற்கண்டவாறு க ருத்து கூறியுள்ளார். இச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் இன்று அநாதரவாக சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாக இன்று காணப்படுகின்றார்கள். அவர்களது நல் வாழ்க்கைக்கு யாரும் இன்று உதவி செய்யவில்லை. நாம் உதவி செய்வதாக கூறியவர்கள் ஒரு சிலருக்கு சில உதவிகளை செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டு அத்தோடு நிறுத்தி விட்டார்கள். குறிப்பாக போராளிகளின் வேதனைகளை அறிந்த அனந்தி சசிதரனும் போராளியாக இருந்த சிவாஜிலிங்கமும் கூட அப் போராளிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இவர்களை விட அனைத்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுமே போராளிகளது வாழ்க்கைக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் மாத்திரம் பொலிஸ் பாதுகாப்புடன் சென்று வருகின்றார்கள். இவ்வாறான நிலையிலேயே நான் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒர் கோரிக்கையை வைக்கின்றேன். அதாவது மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் தமக்கு கிடைக்கின்ற வாகன கொள்வனவிற்கான பணத்தை போராளிகள் காப்பகத்திற்கு வழங்க வேண்டும் என நான் கோரிக்கைவிடுகின்றேன்.

அவ்வாறு நீங்கள் அப் பணத்தை வழங்கினால் நீங்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை நான் ஒரு வருடத்தில் இலங்கையின் அனைத்து தமிழ்ரகளிடமும் வீடு வீடாக சென்று சேர்த்து அப் பணத்தை திருப்பி தருவேன். ஏனேனில் போராளிகள் மிகவும் துன்பப்பட்டுள்ளார்கள்.அவர்களது நல்வாழ்க்கைகாக நீங்கள் இதனை செய்ய வேண்டும்.

மேலும் வடக்கு மாகாண சபையானது உருவாக்கப்பட் போது அதற்கு முதலமைச்சராக சி.வி.விக்கிணேஸ்வரனை மக்கள் வரலாறு காணாத வெற்றியுடன் முதலமைச்சராக்கினார்கள். காரணம் மக்கள் அவர்களது தலைவன் தமிழ் தேசிய கூட்டமைப்பை அடையாளம் காட்டியதாலும் அவ் தமிழ் தேசிய கூட்டமைப்பால் சி.வி.விக்கிணேஸ்வரன் முதலமைச்சராக அடையாளப்படுத்தப்பட்டதாலுமேயே. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களது பிரச்சனைகள் தொடர்பில் அவர்களுக்கு பதிலழிக்க வேண்டியஇ பேச வேண்டியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும்இ முதலமைச்சருமேயாகும்.

இவர்கள் தவிர வேறு யாரும் வீணாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இவ்வாறான நிலையில் முதலமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கும் உரித்தான கௌரவத்தை பாதுகாப்பதாக இருந்தால் வடக்கு அமைச்சர் மீதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுடனேயே அவர்கள் தமது பதவியை விலகியிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அமைச்சர்கள் பதவி விலகாது எப்படி விசாரனை குழு சுயமாக சுதந்திரமாக விசாரனை செய்திருக்க முடியும். சரி தற்போது அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரனை அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளது. இனியாவது அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். அத்துடன் எனைய அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த உறுப்பினர்கள் விசாரனை குழிவில் சாட்சியமளிக்க செல்லாத நிலையில் அவர்கள் மீதான செயற்பாடு சந்தேகஙௌகளை எழுப்பியுள்ளது.

அதாவது இவர்கள் தாம் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்காமையானது இவர்கள் யாரிடமாவது கையூட்டு பெற்றுக்கொண்டு சாட்சியமளிக்காது விட்டார்களா இல்லை பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்களா என்ற சந்தேகம எழுந்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி விட்டு சாட்சியமளிக்க செலல்லாத வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும். என தெரிவித்தார்.

 

http://www.vakeesam.com/சொகுசுவாகன-நிதியை-முன்னா.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.