Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு

Featured Replies

ஞானசாரருக்கு பிடியாணை பிறப்பிக்க மறுப்பு
 

 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிடிப்பித்து உத்தரவிடுமாறு,  விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதியரசர்கள் குழாம், நேற்று (12) நிராகரித்தது. தேரருக்கு எதிரான வழக்கு, நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய, தேவிகா தென்னகோன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

இதன்போது, தேரர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த, சட்டத்தரணி திரந்த வலலியத்த, தனது சேவை பெறுநருக்கு (ஞானசார தேரருக்கு) உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதால், அவரால் மன்றில் ஆஜராகமுடியாது என, மன்றுக்கு அறிவித்தார்.  

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றத்துக்குள் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று, ஞானசார தேரர் திட்டியிருந்தார். 

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குள் வைத்து, ஞானசார தேரர் நடந்துகொண்ட முறை, நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையுமா என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கருத்தை, ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க கோரியிருந்தார். 

அத்தோடு, ஞானசார தேரர் மீதான குற்றச்சாட்டு, நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமாயின், அவர் மீதான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், நீதவான் கோரியிருந்தார். 

கடந்த இரு அமர்வுகளுக்கும் ஆஜராகாமையால், ஞானசார தேரருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவால் கோரப்பட்டது. 

அந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதியரசர்கள் குழாம், மனு மீதான விசாரணைக்கான தினங்களாக, ஜூலை மாதம் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளை நியமித்து உத்தரவிட்டது. 

கடந்த அமர்வின் போது, ஞானசார தேரர், சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அவரது சட்டத்தரணி மனோகர டி சில்வா, மருத்துவ அறிக்கையையும் மன்றில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசாரருக்கு-பிடியாணை-பிறப்பிக்க-மறுப்பு/175-198494

  • தொடங்கியவர்

ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்கு உத்­த­ர­வி­டவும்

p18-d6becf8d65311b79741ac5d26b6f277cf7b3bb4b.jpg

 

பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் மேன் முறை­யீட்டு மன்றில்  வாதம்; அடுத்த தவ­ணைக்கு ஆஜ­ரா­கா­விடின் பிடி­யாணை  
(எம்.எப்.எம்.பஸீர்)

நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்றும் அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை.

இந் நிலையில் தொடர்ச்­சி­யாக நீதி­மன் றில் மூன்று தவ­ணைகள் ஆஜ­ரா­காத ஞான­சார தேரரைக் கைது செய்ய  பிடி­யாணை பிறப்­பிக்க வேண்டும் என மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் நீதி­மன்றில் வாதங்­களை முன் வைத்தார். 

எனினும் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வர­லி­யத்த, ஞான­சார தேர­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருப்­ப­தா­லேயே நீதி­மன்றில் ஆஜ­ரா­க­வில்லை எனவும் இது தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் கூட முறை­யிட்­டுள்­ள­தா­கவும் அது குறித்த விசா­ர­ணைகள் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தொடர்­பி­லான தடுப்புப் பிரி­வினர் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

 எனினும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வர­லி­யத்­தவின் வாதங்­களை நிரா­க­ரித்த மேன் முறை­யீட்டு நீதி­மன்றம், அது தனி­யான விடயம் எனவும் அத­னையும் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­கையும் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் தெரி­வித்­த­துடன் அடுத்த தவ­ணையின் போது ஞான­சார தேரர் கண்­டிப்­பாக மன்றில் பிர­சன்­ன­மாக வேண்டும் என உத்­த­ர­விட்­டது.

அத்­துடன் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கில் ஞான­சார தேரர் ஆஜ­ரா­னலும் ஆஜ­ரா­க­விட்­டாலும் அதனை தொடர்ச்­சி­யாக சிறப்பு நீதி­ப­திகள் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுக்­கவும் திகதி குறித்­தது. அதன்­படி ஞான­சார தேர­ருக்கு எதி­ரான வழக்கு எதிர்­வரும் ஜூலை 18,19,20 ஆம் திக­தி­களில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் நீதி­ப­தி­க­ளான ஏ.டி.பி. தெஹி­தெ­னிய, மற்றும் தேவிகா லிவேரா டி தென்­னகோன் ஆகிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழு அறி­வித்­தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு நீதி­மன்­றத்தில் நடந்த போது, ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்­றுக்குள் அத்து மீறி நடந்­து­கொண்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இதன் போது நீதி­மன்ற வளா­கத்தில் வைத்து பிரகித் எக்­ன­லி­கொ­டவின் மனை­வியை அச்­சு­றுத்­தி­ய­தாக ஞான­சார தேரர் மீது பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இத­னை­விட அன்­றைய தினம் பெரும் தொகை­யான பிக்­கு­க­ளுடன் ஞான­சார தேரர் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் உள் நுழைந்து நீதிவான் ரங்க திசா­நா­யக்­கவை நோக்கி விரல் நீட்டி இரா­ணு­வத்­தி­னரை பழி தீர்க்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார். அரசின் பிரதி சொலி­சிற்றர் ஜென­ர­லுக்கு எதி­ரா­கவும் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

 இதனால் அன்­றைய தினம் முழு­வதும் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டன. இத­னை­ய­டுத்து நீதி­மன்றை அவ­ம­தித்­தமை, அரச அதி­கா­ரியின் கட­மைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­யமை மற்றும் குறித்த வழக்கின் சாட்­சி­யா­ள­ரான சந்­தியா எக்­னெ­லி­கொ­ட­வுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை ஆகிய குற்றச் சாட்­டுக்­களின் கீழ் அவரை கைது செய்­யு­மாறு ஹோமா­கம நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

ஞான­சார தேரர், 2016 ஜன­வரி 26 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர் மீது குறித்த மூன்று குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் தனித்­த­னி­யாக வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது.

இதில் நீதி­மன்றை அவ­ம­தித்­தமை தொடர்­பி­லான வழக்கு அப்­போ­தைய ஹோமா­கம நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு மேல­திக நீதி­வா­னு­மா­கிய ரங்க திசா­நா­யக்­க­வினால் விசா­ர­ணைக்­காக மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதன் போது வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வதை தவிர்க்க மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் ஞான­சார தேரர் சார்பில் அடிப்­படை ஆட்­சே­ப­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் நீதி­மன்றம் அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தது. . அதன்­படி வழக்கு நேற்று மூன்­றா­வது முறை­யாக விசா­ர­ணைக்கு வந்­தது.

ஞான­சார தேரர் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வர­லி­யத்த, சஷிகா மிதுன ஆரச்சி ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய பிர­சன்­ன­மானார். வழக்கு ஆரம்­ப­மான போது, ஞான­சார தேரர் சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி முதலில் கருத்­துக்­களை முன்­வைத்தார்.

' கனம் நீதிவான் அவர்­களே, சந்­தேக நப­ரான ஞான­சார தேரர் இன்று மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. அவ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் இருக்­கின்­றது. அத­னா­லேயே ஆஜ­ரா­க­வில்லை. நீதி­மன்­றங்­க­ளிலும் அங்கு செல்லும் வழி­யிலும் பல உயிர்கள் இவ்­வாறு அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில் காவு­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

உயிர் அச்­சு­றுத்தல் குறித்து பொலிஸ் மா அதி­ப­ருக்கு முறை­யி­டப்­பட்­டுள்­ள­துடன், அது குறித்த விசா­ர­ணை­களை திட்­ட­மிட்ட குற்­றங்­களைத் தடுக்கும் பிரிவு முன்­னெ­டுத்­துள்­ளது. கொழும்பு நான்காம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் அந்த வழக்கு நிலு­வையில் உள்­ளது. எனவே அந்த விசா­ரணை நிறை­வ­டையும் வரை ஞான­சார தேரர் மன்றில் ஆஜ­ரா­வதில் சிக்கல் உள்­ளது' என்றார்.

இதன் போது குறுக்­கிட்ட நீதி­பதி தெஹி­தெ­னிய, உங்கள் வாதம் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. அந்த விடயம் வேறு. இந்த விடயம் வேறு. அது தொடர்பில் தனி­யான விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது. எனவே இரண்­டையும் ஒன்­றாக பார்க்க முடி­யாது. எனவே அந்­தனை சாட்­டாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. என்றார்.

இதனை ஆமோ­தித்த அரசின் பிரதி சொலி­சிர்ரர் ஜெனரல் ரொஹந்த அபே­சூ­ரிய,

' கனம் நீதி­பதி அவர்­களே, ஞான­சார தேரர் மூன்று தவ­ணை­களில் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. முதலில் சுக­மில்லை என்­றனர். பின்னர் எங்கோ உள்ள பெயர் தெரி­யாத தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றின் அறிக்­கையை சமர்ப்­பித்து சிகிச்சைப் பெறு­வ­தாக கூறினர். இப்­போது உயிர் அச்­சு­றுத்தல் என்­கின்­றனர். எனவே பிடி­யாணைப் பிறப்­பிக்க வேண்டும்.' என கோரினார்.

இத­னை­ய­டுத்து நீதி­பதி தெஹி­தெ­னிய, ஞான­சார தேரரைக் கைது செய்ய இன்று ( நேற்று) பிடியாணை பிறப்பிப்பதை தவிர்ப்பதாகவும் எனினும் அடுத்த தவணையில் அவர் கண்டிப்பாக மன்றில் ஆஜராகவேண்டும் எனவும் இல்லையேல் பிடியாணைப் பிறப்பிக்கபப்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஞானசார தேரர் வந்தாலும் வராவிட்டாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்ய இரு தரப்பினருடனும் கலந்துரையாடி திகதியையும் குறித்தார். அதன்படி நீதிமன்ற வமதிப்பு வழக்கு எதிர்வரும் ஜூலை 18,19,20 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

அடுத்த தவணை வழக்கு எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.