Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் நெருக்கமாகும் கனடா ? இனி என்ன

Untitled-1.jpg

 

இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம்  இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

செஸ்கட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த கொன்சவேற்றிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis இலங்கை விவகாரம் தொடர்பில் லிபரல் கட்சியினர் வழங்கிய தேர்தல் கால வாக்குறுதிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் இந்த இரண்டு வருட காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நடைமுறைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் நிலையான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவுதல் ஆகிய முக்கிய அம்சங்களை தேர்தல் வாக்குறுதிகளாக லிபரல் கட்சி அறிவித்திருந்தது.

லிபரல் அரசாங்கம் பதவி ஏற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இலங்கை விகாகரம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதி மொழிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அதை நோக்கிய நகர்வுகளையும் கனேடிய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் MP Garnett Genuis சுட்டிக்காட்டியிருந்தார்.

தமது அரசாங்கமும்; தானும்; இலங்கை விவகாரம் தொடர்பில அதிகம் அக்கறை கொண்டுள்ளதாகவும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகாரிகளும் இலங்கை விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Cyristia Freeland பதிலளித்திருந்தார்.

எனினும் கனேடிய அரசாங்கம் இலங்கை தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் குறிப்பிடக் கூடிய அளவில் எந்த ஒரு நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என்பதையே அமைச்சரின் பதில் தெளிவு படுத்தியுள்ளதாக Garnett Genuis குறிப்பிட்டார்.

உண்மையில் இலங்கை விவகாரம் குறித்து கனேடிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை என்ற கேள்வி எழும் போது சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் இல்லை என்ற பதில் தான் தவிர்க்க முடியாமல் எம்முன் வருகின்றது.

இதற்கு பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும் தமிழர் தரப்பினால் இந்த விடயம் குறித்து போதுமான அளுத்தம் கனேடிய அரசாங்க தரப்பினை நோக்கி முன்வைக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையினையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் கனடாவில் வாழும் புலம்பெயர் சமூகம் ஒன்று பட்ட நிலையில் ஒரே குரலில் பேசிவந்தது. தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகள் அரசியல் அபிலாசைகள் என மாறுபட்ட கருத்துக்கள் அற்ற சூழல் அன்று நிலவியது.

ஆனால் 2009 ற்கு பின்னரான நிலமைகள் அவ்வாறானதாக இல்லை. தமிழ் மக்களைப் பொறுத்தரவரையில் ஒரே குரலில் பேசுவதற்கான சந்தர்ப்பம் தற்போது தொலைந்து போயுள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.

தாயகத்தில் வாழும் தமிழ் மக்களின் தேவைகள் குறித்தும் அரசியல் தீர்வுகள் குறித்தும் புலம்பெயர் சமூகத்திடம் வெவ்வேறான பார்வைகள் உள்ளன.

அவற்றில் மிக முக்கியமானதாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வில் இயல்பு நிலையை தோற்றுவித்தல் என்பது அமைந்திருந்தது. அரசியலுக்கு அப்பால் மனிதநேய சிந்தனையுடன் பல தனிநபர்களும்; குழுக்களும், ஊர்சங்கங்கள் பழைய மாணவர் சங்கங்கள் போன்றனவும் தம்மால் இயன்ற அளவில் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனாலும் தாயகத்தை நோக்கிய இந்த உதவிகளை ஒருங்கிணைப்பதற்கோ அல்லது ஒழுங்கமைப்பதற்கோ எம்மிடம் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமலேயே இருக்கின்றது என்பது இந்த விடயத்தின் ஏமாற்றமளிக்கும் மறுபக்கம்.

சுனாமி பேரவலத்தின் பின்னரான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட பொறிமுறை போன்ற ஒன்று யுத்தத்தின் பின்னரான சூழலில் தயாகத்திலும் புலம் பெயர் தேசத்திலும் உருவாக்கப்படவில்லை.

இதனால் தான் யுத்தம் நிறைவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகள் அவற்றை  எதிர் கொள்ளும் பொறிமுறைகள் குறித்த தெளிவான பார்வையற்ற சமூகமாக தமிழர் சமூகம் தோல்வி அடைந்துள்ளது.

யுத்தத்தினால் உயிரிழந்தவர்கள், அங்கவீனமாக்கப்பட்டவர்கள், ஏதிலிகளாக்கப்பட்டவர்கள், பற்றிய முழுமையான புள்ளி விபரங்கள் எங்களிடம் இதுவரை இல்லை. அதனை உருவாக்குவதற்கான முயற்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இது போன்ற பல அடிப்படைவிடயங்களை கூட இன்னமும் ஒரு சமூகமாக நாம் சரியான முறையில் அணுகவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மறுபுறம் இந்த அடிப்படைகள் கூட பூர்த்தி செய்யப்படாத நிலையில் இதனை கடந்து வடக்கு கிழக்கில் வாழ்வாதார அபிவிருத்திகளை நோக்கி புலம்பெயர் சமூகத்தை கொண்டு செலுத்தும் செயல்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசியல் தீர்வு விடயத்திலும் தமிழ் மக்களிடம் ஒருமித்த கருத்து நிலைப்பாடுகள் எவையும் இல்லை. தேர்தல் வாக்குறுதிகளாக தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு தருவதை பெற்றுக் கொள்ளும் நிலையை அடைந்துள்ளது. இதனை களயதார்த்தம் என்றும் இலங்கை அரசாங்கம் தருவதை பெற்றுக் கொள்வதை தவிர வேறு மார்க்கம் ஏதும் இல்லை என்றும் அது நியாயப்படுத்தகின்றது.

அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அவை தான் என்பதை தெளிவு படுத்தும்  வகையில்  புலம்பெயர் சமூகமும் தாயகத்தில் வாழும் மக்களும் ஒருமித்து ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் தீர்வு திட்டம் எதாவது எம்மிடம் இருக்கின்றதா என்றால் இல்லை என்ற பதிலே துரதிஸ்டவசமாக வருகின்றது.

இலங்கை தொடர்பில் கனடாவின் ஆளும் லிபரல் அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கனேடிய பாராளுமன்றத்தில் கடந்த மாதம்  இறுதியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கிய தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரகடனத்தைகூட எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள தீர்வாக முன்வைப்பதற்கு நாம் இதுவரை எந்த முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை.

குறைந்த பட்சம் தமிழ் மக்கள் எல்லோரம் விரும்பும் அரசியல் தீர்வு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் தரப்புகள் அனைததையும் அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான திட்டங்களும் கூட மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் மக்களுக்கு தேவையான அசியல் தீர்வு குறித்தும் எம்மிடம் தெளிவான பார்வை இல்லை தமிழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் திடட வரைவுகள் எம்மிடம் இல்லை.

இந்த பின்னணிகளுக்கு காரணம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைமைகளும் அமைப்புகளும் வெளிப்படையான உரையாடல்களையும் கருத்தமர்வுகளையும் நடத்த தவறுவதும் மக்களின் கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் மதிப்பளிக்காமல் எதேச்சதிகார போக்கில் இயங்குவதுமேயாகும்.

இதேவேளை தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள். யுத்தக் குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கரிசனையை திசை திருப்புவதற்கு தேவையான அழுத்தங்கள் போதுமான அளவில் இப்போது பிரயோகிக்கப்படுவதில்லை என்ற உண்மையினையும் மறு புறமாக நாம் உணர வேண்டும்.

2009ன் பின்னர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  ஏற்பட்டிருந்த வினைத்திறன் மிக்க செயல்பாடுகளின் வீச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை குறைந்து சென்றதையே இந்த 8 ஆண்டுகளில் நாம் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து உரத்து குரல்  எழுப்பி சர்வதேச விசாரணையை கோரியவர்கள் இலங்கையின் தற்போதையை ஆட்சியாளர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான பின்னணிகளுடன் கனடா மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை கடந்த காலங்களில்  முன்னெடுத்த ஏனைய நாடுகளும் கூட தமிழ் மக்களின் விவாகரங்களுக்கு தமது நிகழ்சி நிரலில் முன்னுரிமை அளிக்காத நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகின்றது.

கனடாவில் இரு பிரதான கட்சிகளுக்கும் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள்.

கடந்த கால தேர்தல்களில் பிரதான கட்சிகளுடன் தங்களை அடையாளப்படுத்தி வெளிப்படையாகவே அமைப்புகள் செயல்பட்டன.

கனடாவில் வாழும் புலம்பெயர் சமூகங்களில் கவனிப்பை பெற்றுக் கொண்டுள்ள சமூகங்களில் ஒன்றாக தமிழர் சமூகம் மாறியிருக்கின்றது.

இதனை உணர்ந்து கொண்ட பிரதான கட்சிகளும் தமது தேர்தல் பரப்புரைகளில் தமிழ் மக்கள் தொடர்பான தமது கரிசனைகளையும் வெளிப்படுத்தி வந்துள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சியமைத்த ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான அரசும் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் அவற்றிற்கான குறித்தும் பொறுப்புக் கூறல் குறித்தும் அக்கறை செலுத்துவதாகவும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வினை பெறுவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிப்பதாகவும் அறிவித்திருந்தது. அது குறித்த தமது அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்த திட்ட வரைவு ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு லிபரல் அரசில் ஒரு தமிழ் பாராள மன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் இடம் பெற்றிருந்தமையும் ,பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன்  லிபரல் கட்சி தலைவராக வருமுன்னரே  , கனடிய  தமிழ் காங்கிரஸ் லிபரல் கட்சியுடனும் ,ஜஸ்டின் ரூடோவுடனும்   நீண்ட காலம் மிக நெருக்கமான உறவுமுறையை பேணியதும் அதற்கு வலுசேர்த்தது

ஆனால் இதுவரை அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நகர்வுகள் ஏன் ஏடுக்கப்படவில்லை என்று தமிழர் சமூகம் லிபரல் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பவில்லை.கேள்வி எழுப்பக்கூடிய தகுதி நிலையையும் இப்பொது இழந்து கொண்டு போகின்றன .

கனடாவில் வாழும் தமிழர் சமூகத்தை தாமே பிரதிநிதித்துவம் செய்வதாக அரசியல் அரங்கில் காட்டிக்கொண்டு  தங்களை தீவிர  லிபரல் தொண்டர்களாக நீண்ட  காலமாக காட்டி வந்த கனேடிய தமிழர் பேரவை ஏன் இந்த விடயம் குறித்து இதுவரை மௌனம் காக்கின்றது என்பது முக்கியமான கேள்வி.

இதற்கான பதிலை இரண்டு விதமாக நாம் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தோடு இணக்கமான போக்கினை நோக்கில் கனேடிய தமிழர் பேரவை கனேடிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கமால் விலகியிருக்கின்றது என்பது ஒருவகையான புரிதல். இதன் மூலமாக இலங்கை அரசாங்கத்திடம் நல்ல பிள்ளை என்ற பெயரை பெற்று கொள்வது மற்றும் இந்த ஆண்டில் இலங்கை அரசாங்கம் முன்வைக்கும் அல்லது தமிழர் மீது திணிக்கக் காத்திருக்கும் அதிகாரங்கள் ஏதுமற்ற அரசியல் தீர்வின் பங்காளிகளாக தங்களை பிரகடனம் செய்வது ஆகிய நன்மைகளை இதன் மூலம் கனேடிய தமிழர் பேரவை அடைய முடியும்.

இதேவேளை  தமது குறுகிய அரசியல் இலாபங்களுக்காக மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு எதிராக செயல்பட்டமை காரணமாக லிபரல் கட்சியுடனான உறவினை கனேடிய தமிழர் பேரவை தொலைத்துவிட்டடிருக்கலாம் என்பதும் இதன் காரணமாக லிபரல் அரசாங்கத்துடன் தமிழ் மக்கள் சார்பில் பேசுவதற்கான வாய்பினை அது இழந்து விட்டிருக்கின்றது என்பது இன்னுமொரு விதமான புரிதல். இதனுடாக லிபரல் பாராளமன்ற உறுப்பினருக்கும் , கட்சிக்கு நெருக்கமான தமிழ் ஆதரவாளர்களுக்கும் நெருக்கத்தை கொடுத்திருக்கலாம்

கேள்விகளுக்கு அப்பாலான அமைப்பாக விமர்சனங்களை எதிர்கொள்ள விரும்பாத ஒரு அமைப்பாக கனேடிய தமிழர் பேரவை மாறியிருப்பது ஒட்டுமொத்த தமிழர் நலன்களுக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் எழுகின்றது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக் கூறலை மறந்து அல்லது மறைத்து அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் மீது திணிப்பதன் மூலம் தப்பிப் பிழைக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.

சர்வதேச சமூகத்தின் வெளிவிவகார கொள்கை முன்னெடுப்புகள் தொடர்பான நிகழ்சி நிரலில் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு புலம்பெயர் சமூகமாக நாம் என்ன செய்ய போகின்றோம் என்பதே இன்றுள்ள மிகப் பெரும் கேள்வி.

புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் கனடாவில் தான் வாழ்கின்றனர் எனவே தான் சர்வதேச அரங்கில் புலம் பெயர் தமிழ் மக்களின் குரலாக கனடா இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கின்றது. பெருமளவான புலம்பெயர் தமிழ் மக்களை கொண்டுள்ள ஒரு நாடு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுள்ள அரசாங்கம் எமக்காக குரல் கொடுக்க தவறினால் வேறு யார் எமக்காக குரல் கொடுக்க முன்வருவார்கள் என்ற கேள்வியினை நாம் எழுப்ப வேண்டும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நோக்கிய நகர்வில் கனடா தனக்கு ஆதரவான நாடுகளை பட்டியலிட்டு அவற்றுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் மீது இன அழிப்பினை மேற்கொண்ட ஒரு நாடு. தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணையை நிராகரிக்கின்ற ஒரு நாடு. எவ்வாறு கனடாவின் நட்பு நாடாக மாற முடியும் ? அல்லது அவ்வாறான ஒரு நாட்டுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி பாதுகாப்பு சபையின் உறுப்புரிமை பெறுவது நியாயமானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டும்?

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

 

ரமணன் சந்திரசேகரமூர்த்தி

http://ekuruvi.com/61347-2-june-2017-ramanan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.