Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு

Featured Replies

எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு

வெளியிட்டால் அவர்கள் பதவியிலிருக்கமாட்டார்கள் என டெனீஸ்வரன் எச்சரிக்கை

 
எமது தலைவர்கள் குறித்தும் பல ஆதாரங்கள் கைவசமுண்டு
  •  

“எங்­க­ளு­டைய தலை­வர்­கள் தொடர்­பாக, அவர்­கள் என்ன செய்­தார்­கள் என்­பது தொடர்­பாக பல ஆதா­ரங்­கள் உள்­ளன. சந்­தர்ப்­பம் வரு­மாக இருந்­தால் அவற்றை நான் ஆதா­ரங்­க­ளு­டன் வெளி­யி­டு­வேன். அதற்­குப் பின்­னர் அவர்­கள் பத­வி­க­ளில் இருக்க முடி­யாது” இவ்­வாறு வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நடுநிலை தவறிவிட்டார் விக்கி

இந்த விசாரணைக் குழு கொடுத்த அறிக்கையை சரியாக முதலமைச்சர் பின்பற்றவில்லை என்பதுதான் தற்போது இருக்கின்ற பிரச்சினை. நீதியரசராக இருந்து கொண்டு நீதியைச் சரியாக வழங்காமல் உள்ளார் என்பதுதான் அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. அவர் நடுநிலையில் இருந்து தவறிவிட்டார்.

இந்தப் பிரச்சனைகளை மக்கள் சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னால் அரசியல் இலாமபம் தேடும் பலர் உள்ளனர். முதலமைச்சராக இருக்கலாம் யாராக இருக்காலாம் யார் பிழை செய்தாலும் அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அப்பால் பல பிரச்சினைகள் எழுமனால், எங்களுடைய தலைவர்கள் எவ்வாறு இருக்கின்றார்கள் என்பதை தெளிவாக ஆதாரங்களோடு கூறுவதற்கு தயாராக உள்ளேன். அந்த ஆதாரங்கள் வெளிவருமாக இருந்தால் அவர்கள் ஒருவரும் தங்களுடைய பதவிகளில் இருக்க முடியாது.

மக்களுடைய உயிர்த் தியாகங்களுக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்தால் நாங்கள் இந்தக் கட்சி அரசியலைவிட்டு எல்லோரும் ஒரே விடயங்களுக்கு வர வேண்டும். இல்லை என்றால் அனைவரும் துரோகம் செய்பவர்களாகவே கருதப்படுவோம். முதலமைச்சரால் நியமித்த விசாரணைக் குழு சரியான முறையில் ஆய்வுகளை செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். அவற்றை அலசி ஆய்வு செய்து முடிவுக்கு வந்துள்ளார்கள். எனவே இந்த முடிவை முற்றுமுழுதாக நான் ஏற்று கொள்வேன்.

முதல்வர் கேட்டிருந்தால் பதவி விலகியிருப்பேன்

விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு முதல்வருக்கு உண்டு. அதிலிருந்து மீறுவாரானால் அவர் முதலமைச்சருக்கு அப்பால் சிறந்த நீதியரசராகக் கருதப்படமாட்டார்.

இந்த அமைச்சு பொறுப்பை யாருக்காவது கொடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக எனக்கு தெரிவித்திருந்தால் நானே அந்த அமைச்சு பதவியைக் கொடுத்திருப்பேன். தம்பி என்றுதான் கூறுவார். அவர் கேட்டிருந்தால் நான் அதை கொடுத்திருப்பேன். பதவி மோகம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கூடவே இருந்து முதுகில் குத்துபவர்களாகவே உள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மாகாண சபையில் எனக்கு முன்னால் இருப்பவர். அவர் என் முதுகில் குத்தியிருக்கின்றார். பொறுப்பான மாகாண சபை உறுப்பினர் ஒரு அமைச்சரான என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடுகளைச் செய்தார்.

அந்த முறைப்பாடுகளுக்கு விசாரணைக் குழு அவரைப் பல முறை அழைத்தது. எனினும் அவர் விசாரணைக்குழு முன் சென்று சாட்சியமளிக்கவோ, ஆதாரங்களை முன்வைக்கவோ இல்லை.

ஒருமுறை அவர் ஜெனிவாவில் நின்றதாக பொய் கூறியிருக்கின்றார். ஆனால் அவர் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் எனக்கு அருகில் நின்றார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. ஒரு முறைப்பாட்டை நாங்கள் கொடுக்கின்றோம் என்றால் தெருவில் செல்கின்ற நபர்கள் கூறுகின்றர் என்று கொடுக்கக் கூடாது. நம்பகத்தன்மை வேண்டும். அதை உறுதிப்படுத்தவும் வேண்டும். அதற்கு அவர் பின்னிக்கக் கூடாடு.

அனந்தி மீது கடும் சாடல்

இன்று நான் முதலமைச்சரை கேட்கின்றேன், “என்மீது களங்கம் ஏற்படுத்துவதற்காகச் செயற்பட்ட இந்த அனந்தி சசிதரன் மீது நீங்கள் எடுக்க போகும் நடவடிக்கை என்ன? என்மீது வீண்பழி சுமத்தியிருக்கின்றார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் சமூகம் அழிக்கவில்லை என்றால் அது பெரிய குற்றம்.

ஒரு சாட்சி தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு சமுகமளிக்கவில்லை. மௌனம் சாதிக்கின்றார் என்றால் அதற்கு என்ன அர்த்தம். இதற்குப் பின்னால் என்ன நடந்திருக்கின்றது. அமைச்சு பதவி அவருக்கு வேண்டும் என்பதற்காக அவர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கலாமா?”

மாவீரர் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்ற போது அவர்களை வாழவைப்பதைவிட்டு பலர் அவர்களால் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். புலம்பெயர் தமிழ்ர்களுடைய நிதிஉதவிகளைப் பெற்று அவர்கள் வாழ்ந்தார்கள்.

அப்படி இருக்கும் போது, நான் மகிந்த ராஜபக்சவினுடைய ஆட்சி காலத்திலும் மாவீர்களுக்காக நிதியை ஒதுக்கி உதவித் திட்டங்களை முன்னெடுத்தேன். இதற்காக எத்தனையோ மில்லியன் ரூபாவை கேட்டிருந்தேன். ஆனால் அவர்கள் அதைத் தரவில்லை.

என்னுடைய அமைச்சுக்கு, எத்தனையோ விடயங்களுக்கு வந்த நிதியை மாவீரர் குடும்பங்களுக்காக ஒதுக்கி அவர்களுக்கு உதவினேன். மாவீரர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கி மோசடி செய்தாக அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறானவர் கடந்த காலங்களில் எமது இனம் சார்ந்த விடயங்களுக்கு எவ்வாறு போராடியிருப்பார் என்பது ஒரு கேளிக்கையான விடயம் – என்றார்.

http://uthayandaily.com/story/7060.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.