Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது : சம்பிக்க

Featured Replies

வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது : சம்பிக்க

 

 

(ஆர்.யசி)

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும்  வடக்கில் தைரியமாக வாழ முடியும் ஆகவே வடக்கை தமிழர்கள் உரிமை கூற முடியாது என ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

champika_ranawaka.jpg

சிங்கள பௌத்த இனவாதத்தை கட்டுப்படுத்த முன்னர் வடக்கில் தமிழர்களின் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஜாதிக ஹெல உறுமைய அமைப்பின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/21035

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். – சம்பிக்க!

 
தமிழ் அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். – சம்பிக்க!
 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானவார தேரருக்கு எதிராக மட்டுமன்றி, இனவாதத்தை தூண்டிவருகின்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் பாரபட்சமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மேல்மாகாண அபிவிருத்தி மெகா பொலிஸ் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு குடியேறியிருந்த சிங்களக் குடும்பங்களை வெளியுறும்படி அச்சுறுத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் இது தொடர்பில் வினா எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்தார்.

ஞானசார தேரர் குரோதப் பேச்சுக்களை பேசிவருவாரெனில், அதேபோன்ற கருத்துக்களை வெளியிடும் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் சைட்டம் பல்கலைக்கழகத்தின் சமீரவுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் போல மறைந்துபோய்விடும். இவ்வாறான சந்தர்ப்பங்களால்தான் பொய்ப் பரப்புரைக்கான இடங்கள் இந்த நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

நாவற்குழி பகுதியிலிருந்து சிங்கள மக்களை வெளியேறும்படி கூறியிருந்தாலும் அவர்கள் வெளியேறவில்லை. யாழ்ப்பாணத்தில் காலம்காலமாக வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களே நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ளனர். அவ்வாறான அச்சுறுத்தல் விடுத்திருப்பது கீழ்த்தரமான போக்கைக் எடுத்துக்காட்டுகிறது. கொழும்பில் இருந்து அரசியல் செய்துவருகின்ற நிலையில் ஏனைய பிரிவினருக்கு எதிராக இனவாதம் வகையில் பேசுவது அவர்களின் கீழ்த்தரமான நடத்தையாகும்.

நான் தனிப்பட்ட வகையில் தெரிந்துவைத்துள்ளேன். அவர்கள் அங்கு இவ்வாறு நடந்துகொள்வதால் அவர்களை மக்கள் புறக்கணிக்கின்றனர் என்பதே உண்மை. தமிழ் மொழியில் இடம்பெறுகின்ற விடயங்களை சரியான வகையில் அறிக்கையிடுவது இடம்பெறுவதில்லை. எனவேதான் இதனை சந்தர்ப்பமாக சிலர் பயன்படுத்திக்கொள்கின்றனர். எனவே இவர்களுக்கு எதிராக பாகுபாடு பாராமல் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

பொலிஸாரால் குழுக்கள் அமைத்து கடந்த 3 வாரங்களாக தேடப்பட்டுவரும் ஞானசார தேரரை தாம் மறைத்து வைத்திருப்பதாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க செய்தியாளர் சந்திப்பின்போது அடியோடு மறுத்தார்.

மகிந்த ராஜபக்ச குழுவினர் எமக்கு எதிராக ஊடகங்கள் மூலமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். பொதுபல சேனா அமைப்பை நடத்துவது நான் ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பதும் நானே என்ற பொய்யான பரப்புரைகளை அவர்கள் செய்து வருகின்றனர். இந்தப் பரப்புரைகளை பல்வேறு ஊடகங்களும் முன்னெடுத்துள்ளன. மகிந்த ராஜபக்சவைச் சார்ந்த குழுக்களும், கோத்தபாயவை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள குழுவினரும் இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். – என்றார்.

http://uthayandaily.com/story/7385.html

வடக்கு மட்டுமல்ல முழு இலங்கையும் தமிழர்களுக்கே சொந்தமானது!

சிங்கள-பௌத்த வந்தேறுகுடிகள் எந்த உரிமையையும் கோரமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.