Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரர் நாளை ஆஜராவார் : மாகல்கந்தே சுதந்த தேரர் கூறுகிறார்

Featured Replies

 

bodupalasana-38bebe91acb43c1f28f099f317f927f2fdaabd06.jpg

 

பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் இப்­போது சுக­மாக இருக்­கிறார். அவர் நாளை 22 ஆம் திகதி உயர்­நீ­தி­மன்றில் ஆஜ­ரா­க­வுள்ளார். மேலும் உயர்­நீ­தி­மன்றில் தான் ஆஜ­ரா­­வ­தற்கு தனக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென பொலிஸ்மா அதி­ப­ரிடம் வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கிறார் என்று சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார்.  

அவ­ரது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால் பாது­காப்பு வழங்­கப்­பட்­டாலே நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­யு­மென்றும் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

நேற்று மதியம் ராஜ­கி­ரி­யி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்  ஞான­சார தேரர் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு தன்னைக் கைது செய்ய முயல்­வ­தா­கவும் அதனைத் தடுக்­கு­மாறும் கோரி உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­தி­ருந்தார். அந்த மனு மீதான விசா­ர­ணைக்கே 22 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ரா­க­வுள்ளார்.  

நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைக்க தயா­ராக இருக்­கிறார் . நீதி மன்­றத்தின் எந்த உத்­த­ர­வி­னையும் ஏற்­றுக்­கொள்வார். ஞான­சார தேரரின் உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளதால் பாது­காப்பு பிரி­வினர் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்­கு­வார்கள் என்று நாம் எதிர்­பார்க்­கிறோம்.

 ஞான­சார தேரரின் உயி­ருக்கு ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் தொடர்­பாக நாம் பொலிஸ் மா அதி­ப­ருக்கும் உளவுப் பிரி­வி­ன­ருக்கும் முறைப்­பா­டு­களைச் செய்­தி­ருந்தோம். எமது முறைப்­பா­டுகள் தொடர்­பான விசா­ர­ணைகள் மே 28 ஆம் திகதி முதல் ஆரம்­ப­மா­கின. அந்த விசா­ர­ணை­களின் படி ஞான­சார தேர­ருக்கு பொலிஸார் பாது­காப்பு வழங்க வேண்டும். நீதி­மன்றில் அவர் ஆஜ­ரா­கும்­போது அவ­ரது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்டால் நாட்டில் பாரிய விளை­வுகள் ஏற்­படும். கல­வ­ரங்கள் உரு­வாகும். இவற்­றினைத் தடுப்­ப­தற்கு பொலிஸார் அவ­ருக்கு பாது­காப்பு வழங்­கு­வார்கள் என எதிர்­பார்க்­கிறோம்.

நீதி­மன்ற தீர்ப்பில் எமக்கு நம்­பிக்கை உள்­ளது. பௌத்த மதத்­தையும், பௌத்த நாட்­டையும் காப்­பாற்­று­வ­தற்கு அவர் சிறை செல்­லவும் தயா­ராக இருக்­கிறார். அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் சட்­டத்­த­ர­ணியே ஞான­சார தேர­ருக்­காக ஆஜ­ரா­கி­யி­ருக்­கிறார். அதனால் ஞான­சார தேரரை மஹிந்­தவே ஒளித்து வைத்­தி­ருக்­கலாம் என்­கி­றார்கள். அவர் ஓர் சட்­டத்­த­ரணி என்­ற­வ­கையில் எவ­ருக்­கா­கவும் வாதி­டலாம்.

ஞான­சார தேரரை ஒளித்து வைத்­தி­ருப்­ப­தாகக் கூறு­ப­வர்கள் அவரைப் பார்ப்­ப­தற்கு நீதி­மன்­றுக்கு வரலாம். எமக்கு கிடைத்­துள்ள தக­வல்­க­ளின்­படி ஞான­சார தேரரை நீதி­மன்­றுக்கு அழைத்துச் செல்லும் போது, அல்­லது சிறைக்குள் வைத்து கொலை செய்­வ­தற்கு திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது. அவ­ரது உயிர் இந்­நாட்டு மக்­க­ளுக்கும், குரு­மார்­க­ளுக்கும் பெறு­ம­தி­யா­க­வுள்­ளது. ஒரு சில­ருக்கு அவ­ரது உயிர் தேவை­யாக இருக்­கலாம். அவரைப் பாது­காப்­பதே எமது இலக்­காகும்.

அண்­மைக்­கா­ல­மாக இடம் பெற்ற சம்­ப­வங்கள் கார­ண­மாக நாம் இவ்­வாறு சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது. சந்­தேக நபர்கள் சிறைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­போது 2 சிறைக்­கா­வ­லர்கள் மற்றும் 5 சந்­தேக நபர்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

சிங்­கள பௌத்­தர்கள் சிலரும், சிங்­கள அர­சியல் தலை­வர்­களும் , மாற்று மத அர­சி­யல்­த­லை­வர்­களும் ஞான­சார தேரரை மோச­மான வார்த்­தை­களால் தாக்­கு­கி­றார்கள். இது தொடர்பில் நாம் கவ­லைப்­ப­டு­கிறோம். அவர் சமூ­கத்­துக்கு என்ன தவறு செய்தார்?

இடது சாரி­கள இணைந்த கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும் ஞான­சார தேரரை தாக்­கு­கி­றார்கள். 2020 ஆம் ஆண்டில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டுவார் என்­றெண்ணி அதை எதிர்க்கும் வகையில் முன்னாள் ஜனா­தி­பதி திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கிறார் என்று கூறு­கி­றன்­றனர்.

ஞான­சார தேரர் 2020 இல் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டுவார் 

2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஞான­சா­ர­தேரர் போட்­டி­யி­டுவார். வயோ­தி­பர்­க­ளான திஸ்ஸ விதா­ரண, வாசு­தேவ நாண­யக்­கார போன்றோர் ஞானசாரதேரர் ஒரு தரப்புடன் உடன்படிக்கை செய்து கொண்டே பிரச்சினைகளை உருவாக்கிறார் என்று கூறுகிறார்கள். எமக்கு எந்த அரசியல் தரப்புடனும் சம்பந்தமில்லை. உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இல்லை என்றாலும் ஞானசார தேரர் 2020 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். பௌத்தத்தையும், நாட்டையும் காப்பாற்ற பாதுகாக்க முன்வந்துள்ள ஞானசார தேரரை நாட்டு மக்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.