Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர்

Featured Replies

வடமாகாண அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது : வடமாகாண ஆளுநர்

வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்தார்.

unnamed__10__copy.JPG

வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுக்களை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள் ஆளுநர் அலுவலகத்தில் இன்று  மாலை இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருட போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில் இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மகிழ்சியை தருகின்றது.

நாடகத்தில் ஒருபாகம் தற்போது நிறைவடைந்துள்ளது. பல விவாதங்கள் கலந்துரையாடல்களுக்கு பிறகு இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. 

வடமாகாண சபையின் காலம் முடிவடைந்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செய்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21115

3 hours ago, நவீனன் said:

unnamed__10__copy.JPG

இதில் கழுத்துப்பட்டி அணிதிருப்பவர் தான் பிரச்சினைக்குரிய ராசையா நிமலன் கார்த்திகேயன்!

  • தொடங்கியவர்
‘வடமாகாண சபைப் பிரச்சினை கிரிக்கட் போன்றது’
 

image_58ca5e73be.jpgஎஸ்.நிதர்ஷன்

வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்தது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (21) மாலை இடம்பெற்றன.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில், “30 வருடகால போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில், இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மகிழ்சியைத் தருகின்றது. அரசியல் நாடகத்தில் ஒருபாகம் தற்போது நிறைவடைந்துள்ளது.

“பல விவாதங்கள் கலந்துரையாடல்களுக்கு பிறகு இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் காலம் முடிவடைந்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செய்படவேண்டும்” என, தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடமாகாண-சபைப்-பிரச்சினை-கிரிக்கட்-போன்றது/71-199136

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.