Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும் தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

நாமாக நம்மை மாற்றிக் கொண்டாலே எமக்கு விமோசனம் கிடைக்கும்

00016-f591c6f81673e1bf83fa45fbb921cfbd3a492d54.jpg

தமிழ் மக்களை இறைவன் காப்பாற்றுவார் என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

புரு­ஷோத்­தமன்

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல வருட கால­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊ­றி­விட்டோம். நாமாக நம்மை மாற்­றிக்­கொண்டால் தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் தெரி­வித்தார். தமிழ் மக்­களை இறைவன் காப்­பாற்­றுவான் இது உறுதி என் றும் அவர் தெரி­வித்­துள் ளார்.

வட­மா­காண சபை நெருக்­கடி முடி­வுக்கு வந்த நிலையில் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய மின்­னஞ்சல் ஊடான பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவ­ரு­ட­னான செவ்வி வரு­மாறு

01. வட­மா­கா­ண­ச­பையின் குறித்த அமைச்­சர்கள் மீதான ஊழல் விவ­காரம் ப+தாக­ர­மாகும் முன்னர் அதனை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றிந்­தி­ருக்­கலாம் என்று நீங்கள் கரு­த­வில்­லையா?

அமைச்­சர்கள் மீது குற்­றங்கள் இருந்தால் அவற்றை எனக்கு நேர­டி­யாகத் தெரி­யப்­ப­டுத்தும் படியும் அவற்றை நான் விசா­ரித்து அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் கூறி­யி­ருந்தேன். ஆனால் எமது உறுப்­பி­னர்கள் தமது குற்­றச்­சாட்­டுக்கள் பத்­தி­ரி­கை­களில் வர வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தனர். அவர்­களைப் பேச விட அவைத்­த­லைவர் உறு­து­ணை­யாக இருந்தார். அவ்­வா­றாயின் நான் எவ்­வாறு முளையில் கிள்ளி எறிய முடியும்? 

02. உங்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­மைக்கு உண்­மை­யி­லேயே இதுதான் கார­ண­மென்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா? 

என்னை வெளி­யேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்­க­னவே சில­ரி­டத்தில் ஆழப் பதிந்­தி­ருக்­கின்­றது. அதற்­கான தரு­ணத்தைப் பார்த்­தி­ருந்­தார்கள். 

03. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது இவ்­வா­றா­னதோர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லைக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும் என்று தாங்கள் கரு­தி­ய­துண்டா? இவ்­வி­வ­காரம் தொடர்பில் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­சனை, நிலைமை மோச­ம­டைய வழி­வ­குத்­தது என்று கரு­து­கி­றீர்­களா? 

மக்கள் பலந்தான் என்னைக் காப்­பாற்­றி­யது. அத்­துடன் 21 பேர் கையெ­ழுத்­திட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் கூறப்­பட்­டி­ருந்தும் அவ்­வாறு 21 பேரின் கையொப்­பங்­களும் கிடைக்­க­வில்லை என்று அறி­கின்றேன். அத்­துடன் வேறு கட்­சி­களைச் சேர்ந்த சிங்­கள, முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்றே விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்ற முடியும் என்ற நிலை வந்­த­வுடன் அவர்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­மை­யையும் கருத்­துக்­கெ­டுக்க வேண்டும். இதில் எனக்­கென்ன ஆலோ­சனை தேவை­யாக இருந்­தது? 

தமி­ழ­ர­சுக்­கட்சி தனது நிலைப்­பாட்டில் தளர்வுப் போக்கைக் கடைப்­பி­டித்­ததாக் கூறப்­ப­டு­கின்­றதே? அது குறித்த உங்கள் கருத்து என்ன? 

நான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 2013ம் ஆண்­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் ஒழுகத் தொடங்­கிய காலந் தொடக்கம் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்­துள்­ளதை அவ­தா­னித்­தி­ருக்­கின்றேன். எனவே எப்­ப­வா­வது ஏதா­வது நடை­பெ­றக்­கூடும் என்று எதிர்­பார்த்­தி­ருந்தேன். பதவி மீது மோகம் எதுவும் இல்­லா­ததால் எத்­த­ரு­ணத்­திலும் வீடு செல்ல நான் ஆயத்­த­மாக இருந்தேன். இப்­பொ­ழுதும்

இருக்­கின்றேன்.

05. வட­மா­கா­ண­ச­பையில் ஏற்­பட்ட நெருக்­கடி, சர்­வ­தேச ரீதியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மன்றி அதன் ஒற்­று­மைக்கும் பங்­க­மாக அமைந்து விட்­டது என்ற கருத்து நில­வு­வது தொடர்பில் நீங்கள் கூற­வி­ளை­வது என்ன?

இந்த நெருக்­கடி மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­விட்­டது. அவர்கள் என்ன எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை எடுத்­துக்­காட்ட உத­வி­யுள்­ளது. ஒற்­று­மைக்குப் பங்கம் என்­ப­திலும் பார்க்க ஒற்­று­மைக்கு வித்­திட்­டு­விட்­டது என்றே கூற வேண்டும். பிழை­யான எண்­ணங்­களில் வாழ்ந்து வந்த பல­ருக்கு மக்கள் உண்­மையை உணர்த்தி விட்­டார்கள். எனவே ஒற்­று­மையை நாட வேண்­டிய ஒரு சூழலை மக்கள் அமைத்துக் கொடுத்­துள்­ளார்கள்.

06. இந்த விட­யத்தில் இந்­த­ள­வு­தூரம் எத்­த­ரப்பும் தீவிரம் காட்­டி­யி­ருக்கத் தேவை­யில்லை என்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பிழைகள் நடப்­பதைப் பார்த்து மக்கள் கொதித்­தெ­ழு­வதைத் தீவிர செயல் என்று நீங்கள் கணிக்­கின்­றீர்­களா? 

07. வட­மா­கா­ண­சபைத் தலை­வரின் செயற்­பாடு தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன? 

விளங்க வேண்டும். தலை­வரின் செயற்­பாடு அவ்­வாறு அமை­ய­வில்லை என்­பதே எனது கருத்து. ஆனால் அதற்­காக அவரைப் பதவி நீக்க வேண்டும் என்­று­கூ­ற­வில்லை.

08. தமிழ் மக்­களின் நலன்­க­ருதி வட­மா­கா­ண­ச­பையின் நெருக்­க­டிக்குச் சம­ரச தீர்வு காணப்­பட்­டமை மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­ய­மா­கவே தமிழ் மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஒரு சிலர் தாங்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இதனை மீண்டும் குழப்­பி­ய­டிக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­லா­மல்­லவா? அது தொடர்பில் உங்கள் பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருக்கும்?

நாய் வாலை நிமிர்த்த முடி­யாது.

09. தாங்கள் புதி­தாக விசா­ர­ணைக்­குழு வேண்­டு­மென்று நிய­மித்து குறித்த இரு அமைச்­சர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வுள்­ள­தாகத் தெர­வித்­துள்­ளீர்கள். புதிய விசா­ர­ணைக்­குழு எப்­போது ஆரம்­பிக்­கப்­படும்? காணாமல் போன கோவைகள் மீட்க ஏதேனும் வழிகள் உண்டா? அது தொடர்­பிலும் விசா­ரக்­கப்­ப­டுமா?

புதிய விசா­ர­ணைக்­குழு சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. கோவைகள் பற்றி உத்­தி­யோக ப+ர்வமாக எனக்குத் தகவல் கிடைக்­க­வில்லை. அதன் பின்­னரே தீர்­மானம் எடுக்­கலாம்.

10. விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு எதி­ராக நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யுள்­ளாரே? 

அவர் நீதி­மன்றம் செல்­வாரோ இல்­லையோ விசா­ரணை முடி­வுகள் மீதான மீளாய்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 

11. ஊழல் முறை­கே­டுகள் அற்ற முன் மாதி­ரி­யான சபை­யாக வட­மா­கா­ண­சபை இருக்கும் என்ற தமிழ் மக்கள் மத்­தியில் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றா­னதோர் துன்­ப­க­ர­மான நிலைமை ஏற்­பட்­டமை உங்கள் தூய்­மை­யான செயற்­பா­டு­க­ளுக்குப் பாரிய சவால் எனக் கரு­த­வில்­லையா? 

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல­வ­ரு­ட­கா­ல­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊறி­விட்டோம். நாமாக நம்மை மாற்றிக் கொண்­டால்த்தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது.

12. ஊழல் பேர்­வ­ழி­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்­சி­க­ளுமே கூறு­கின்­றன. எனினும் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது குறித்த கட்­சி­களின் போக்கில் மாற்றம் காணப்­ப­டு­கின்­றதே. இது மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யாக நோக்­கப்­ப­ட­லாமா? 

மக்கள் தான் அடுத்த தேர்­தலில் அதற்குப் பதில் அளிப்­பார்கள்.

13. வட­மா­கா­ண­ச­பையில் எதிர்­கா­லத்தில் மீண்டும் ஓர் கொந்­த­ளிப்பு ஏற்­ப­டா­தி­ருக்க எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளீர்கள்?

கொந்­த­ளிப்பு வந்த பின்னர் பார்க்­கலாம் என்றே இருக்­கின்றேன். முன்­ந­ட­வ­டிக்­கை­களில் இறங்க நான் விருப்­பப்­ப­ட­வில்லை.

14. தமிழ் மக்­க­ளுக்குப் புதிய தலை­மைத்­துவம் தேவை என்று குர­லெ­ழுப்பப் படு­கின்­றதே அதில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா? இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

இருக்குந் தலை­மைத்­து­வத்தைத் தடம் மாறாமல் பார்த்துக் கொள்­வோ­மாக!

15. நீதித்­து­றையில் சேவை­யாற்­றிய உங்­க­ளுக்கு அர­சியல் துறையில் சந்­தித்த இந்த சவால் எவ்­வா­றான மன­நி­லையை தோற்­று­வித்­தது? 

புதிய அனு­ப­வந்தான். சில உறுப்­பி­னர்­களின் குணங்கள் என்னை பிர­மிக்கச் செய்­தன. இப்­ப­டியும் இருக்­கின்­றார்­களா என மலைக்க வைத்­தது. பரி­தா­ப­மாக இருந்­தது. 

16. தற்­போது ஏற்­பட்­டுள்ள சம­ரசம் கார­ண­மாக தமிழ் மக்கள் சற்று நிம்­மதி கொண்­டுள்­ளனர். உண்­மை­யி­லேயே உங்கள் நிலைப்­பாடு என்ன? இது காலத்தின் கட்­டாயம் என்று கரு­து­கின்­றீர்­களா?

அர­சியல் பலம் கட்­சி­க­ளிடம் இருந்து மக்­க­ளிடம் சென்­று­விட்­ட­தாக உணர்­கின்றேன். கட்­சிகள் மக்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய கட்­டாயம் எழுந்­துள்­ளது.

17. மீண்டும் மாகா­ண­சபை அமர்­வுகள் இடம்­பெறும் போது குறித்த நெருக்­க­டியின் பிர­தி­ப­லிப்­புக்கள் இருக்­கு­மென்று தாங்கள் கரு­த­வில்­லையா? அவ்­வா­றாயின் அதற்கு எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்­றீர்கள்?

இதற்கு ஏற்­க­னவே பதில் அளித்­து­விட்டேன். 

18. ஒரு சில சக்­திகள் தங்கள் அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய முத­ல­மைச்­சரைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு முத­ல­மைச்சர் சிக்கி விட்டார் என்று கூறப்­ப­டு­கின்­றதே? இதில் உண்­மை­யுள்­ளதா?

எவ்­வாறு சிலர் தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய என்னைப் பகடைக் காயாக்கப் பார்த்­தார்­களோ, தமது பொறிக்குள் என்னை சிக்க வைக்கப் பார்த்­தார்­களோ அவர்­களே இவ்­வா­றான கருத்­துக்­களை மற்­ற­வர்கள் மீதாக வைத்­துள்­ளனர். நான் எதிலும் சிக்கி விட­வில்லை.

19. முத­ல­மைச்­சரை நாமே கொண்­டு­வந்தோம். அவர் கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராசா கூறி­யுள்­ளாரே அது குறித்த உங்கள் கருத்து என்ன? 

நான் ஒரு பொது அபேட்சகர்.

20. ஒரு சாரார் வடமாகாண சபை வினைத்திறம் மிக்க ஒன்றாக செயற்படவில்லை. இறுதியில் இழுபறிகளும் சச்சரவுகளுமே எஞ்சிவிட்டன என்று மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனரே? இது குறித்து நீங்கள் என்ற கூற விரும்புகின்றீர்கள்? 

வினைத்திறத்தை மற்றவர் கூறுவதை வைத்துக் கணித்தலாகாது. எவை எவை செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்த பின்னர் நீங்களே முடிவுக்கு வரவேண்டும்.

21. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கான நகர்வுகளில் இவ்வாறான சம்பவங்கள் ஓர் பாரிய பின்னடைவை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே இது குறித்த உங்கள் அபிப்பிராயம்? 

மாறாக தமிழ் மக்களின் உண்மை நிலையும் அவர்களின் அரசியல் கருத்துக்களும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன. 

22. இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்குக் கூறும் செய்தி என்ன?

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-25#page-1

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

எல்லோரும் இந்த வசனத்தை தான் சொல்லியினம் அப்ப அடுத்த முறை தமிழ்மக்கள் வாக்கு சீட்டுக்களை ஊண்டியலில் போடட்டும்.:10_wink:

மக்கள் பலந்தான் என்னைக் காப்பாற்றியது - வடக்கு முதலமைச்சர்!

மக்கள் பலந்தான் என்னைக் காப்பாற்றியது – வடக்கு முதலமைச்சர்!

அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையானது, மக்களை முன்னிலைப்படுத்தியதுடன், ஒற்றுமைக்கும் வித்திட்டுள்ளது என்றே கூறவேண்டும். பிழையான எண்ணங்களில் வாழ்ந்த பலருக்கு மக்கள் உண்மையை உணர்த்திவிட்டார்கள். எனவே ஒற்றுமையை நாடவேண்டிய சூழல் ஒன்றை மக்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

01. வட­மா­கா­ண­ச­பையின் குறித்த அமைச்­சர்கள் மீதான ஊழல் விவ­காரம் பூதாகாரமாகும் முன்னர் அதனை முளை­யி­லேயே கிள்­ளி­யெ­றிந்­தி­ருக்­கலாம் என்று நீங்கள் கரு­த­வில்­லையா?

அமைச்­சர்கள் மீது குற்­றங்கள் இருந்தால் அவற்றை எனக்கு நேர­டி­யாகத் தெரி­யப்­ப­டுத்தும் படியும் அவற்றை நான் விசா­ரித்து அறிந்து உரிய நட­வ­டிக்கை எடுப்பேன் என்றும் கூறி­யி­ருந்தேன். ஆனால் எமது உறுப்­பி­னர்கள் தமது குற்­றச்­சாட்­டுக்கள் பத்­தி­ரி­கை­களில் வர வேண்டும் என்­ப­தி­லேயே குறி­யாக இருந்­தனர். அவர்­களைப் பேச விட அவைத்­த­லைவர் உறு­து­ணை­யாக இருந்தார். அவ்­வா­றாயின் நான் எவ்­வாறு முளையில் கிள்ளி எறிய முடியும்?

02. உங்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­ட­மைக்கு உண்­மை­யி­லேயே இதுதான் கார­ண­மென்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

என்னை வெளி­யேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்­க­னவே சில­ரி­டத்தில் ஆழப் பதிந்­தி­ருக்­கின்­றது. அதற்­கான தரு­ணத்தைப் பார்த்­தி­ருந்­தார்கள்.

03. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது இவ்­வா­றா­னதோர் நெருக்­க­டி­யான சூழ்­நி­லைக்கு முகம் கொடுக்க வேண்­டி­யி­ருக்கும் என்று தாங்கள் கரு­தி­ய­துண்டா? இவ்­வி­வ­காரம் தொடர்பில் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஆலோ­சனை, நிலைமை மோச­ம­டைய வழி­வ­குத்­தது என்று கரு­து­கி­றீர்­களா?

மக்கள் பலந்தான் என்னைக் காப்­பாற்­றி­யது. அத்­துடன் 21 பேர் கையெ­ழுத்­திட்­ட­தாகப் பத்­தி­ரி­கை­களில் கூறப்­பட்­டி­ருந்தும் அவ்­வாறு 21 பேரின் கையொப்­பங்­களும் கிடைக்­க­வில்லை என்று அறி­கின்றேன். அத்­துடன் வேறு கட்­சி­களைச் சேர்ந்த சிங்­கள, முஸ்லிம் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்றே விக்­னேஸ்­வ­ரனை வெளி­யேற்ற முடியும் என்ற நிலை வந்­த­வுடன் அவர்­க­ளி­டையே முரண்­பா­டுகள் ஏற்­பட்­ட­மை­யையும் கருத்­துக்­கெ­டுக்க வேண்டும். இதில் எனக்­கென்ன ஆலோ­சனை தேவை­யாக இருந்­தது?

தமி­ழ­ர­சுக்­கட்சி தனது நிலைப்­பாட்டில் தளர்வுப் போக்கைக் கடைப்­பி­டித்­ததாக் கூறப்­ப­டு­கின்­றதே? அது குறித்த உங்கள் கருத்து என்ன?

நான் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 2013ம் ஆண்­டைய தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­ப­டையில் ஒழுகத் தொடங்­கிய காலந் தொடக்கம் என் மீதான கோபம் சிலர் இடத்தில் வளர்ந்து வந்­துள்­ளதை அவ­தா­னித்­தி­ருக்­கின்றேன். எனவே எப்­ப­வா­வது ஏதா­வது நடை­பெ­றக்­கூடும் என்று எதிர்­பார்த்­தி­ருந்தேன். பதவி மீது மோகம் எதுவும் இல்­லா­ததால் எத்­த­ரு­ணத்­திலும் வீடு செல்ல நான் ஆயத்­த­மாக இருந்தேன். இப்­பொ­ழுதும் இருக்­கின்றேன்.

05. வட­மா­கா­ண­ச­பையில் ஏற்­பட்ட நெருக்­கடி, சர்­வ­தேச ரீதியில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது மாத்­தி­ர­மன்றி அதன் ஒற்­று­மைக்கும் பங்­க­மாக அமைந்து விட்­டது என்ற கருத்து நில­வு­வது தொடர்பில் நீங்கள் கூற­வி­ளை­வது என்ன?

இந்த நெருக்­கடி மக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­விட்­டது. அவர்கள் என்ன எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பதை எடுத்­துக்­காட்ட உத­வி­யுள்­ளது. ஒற்­று­மைக்குப் பங்கம் என்­ப­திலும் பார்க்க ஒற்­று­மைக்கு வித்­திட்­டு­விட்­டது என்றே கூற வேண்டும். பிழை­யான எண்­ணங்­களில் வாழ்ந்து வந்த பல­ருக்கு மக்கள் உண்­மையை உணர்த்தி விட்­டார்கள். எனவே ஒற்­று­மையை நாட வேண்­டிய ஒரு சூழலை மக்கள் அமைத்துக் கொடுத்­துள்­ளார்கள்.

06. இந்த விட­யத்தில் இந்­த­ள­வு­தூரம் எத்­த­ரப்பும் தீவிரம் காட்­டி­யி­ருக்கத் தேவை­யில்லை என்று நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பிழைகள் நடப்­பதைப் பார்த்து மக்கள் கொதித்­தெ­ழு­வதைத் தீவிர செயல் என்று நீங்கள் கணிக்­கின்­றீர்­களா?

07. வட­மா­கா­ண­சபைத் தலை­வரின் செயற்­பாடு தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன. அது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

விளங்க வேண்டும். தலை­வரின் செயற்­பாடு அவ்­வாறு அமை­ய­வில்லை என்­பதே எனது கருத்து. ஆனால் அதற்­காக அவரைப் பதவி நீக்க வேண்டும் என்­று­கூ­ற­வில்லை.

08. தமிழ் மக்­களின் நலன்­க­ருதி வட­மா­கா­ண­ச­பையின் நெருக்­க­டிக்குச் சம­ரச தீர்வு காணப்­பட்­டமை மிகவும் வர­வேற்­கத்­தக்க விட­ய­மா­கவே தமிழ் மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஒரு சிலர் தாங்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இதனை மீண்டும் குழப்­பி­ய­டிக்கும் முயற்­சியில் ஈடு­ப­ட­லா­மல்­லவா? அது தொடர்பில் உங்கள் பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருக்கும்?

நாய் வாலை நிமிர்த்த முடி­யாது.

09. தாங்கள் புதி­தாக விசா­ர­ணைக்­குழு வேண்­டு­மென்று நிய­மித்து குறித்த இரு அமைச்­சர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­த­வுள்­ள­தாகத் தெர­வித்­துள்­ளீர்கள். புதிய விசா­ர­ணைக்­குழு எப்­போது ஆரம்­பிக்­கப்­படும்? காணாமல் போன கோவைகள் மீட்க ஏதேனும் வழிகள் உண்டா? அது தொடர்­பிலும் விசா­ரிக்­கப்­ப­டுமா?

புதிய விசா­ர­ணைக்­குழு சம்­பந்­த­மான நட­வ­டிக்­கைகள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. கோவைகள் பற்றி உத்­தி­யோக ப+ர்வமாக எனக்குத் தகவல் கிடைக்­க­வில்லை. அதன் பின்­னரே தீர்­மானம் எடுக்­கலாம்.

10. விசா­ர­ணைக்­கு­ழு­விற்கு எதி­ராக நீதி­மன்றம் செல்வேன் என முன்னாள் அமைச்சர் ஐங்­க­ர­நேசன் கூறி­யுள்­ளாரே?

அவர் நீதி­மன்றம் செல்­வாரோ இல்­லையோ விசா­ரணை முடி­வுகள் மீதான மீளாய்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

11. ஊழல் முறை­கே­டுகள் அற்ற முன் மாதி­ரி­யான சபை­யாக வட­மா­கா­ண­சபை இருக்கும் என்ற தமிழ் மக்கள் மத்­தியில் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் இவ்­வா­றா­னதோர் துன்­ப­க­ர­மான நிலைமை ஏற்­பட்­டமை உங்கள் தூய்­மை­யான செயற்­பா­டு­க­ளுக்குப் பாரிய சவால் எனக் கரு­த­வில்­லையா?

தமிழ் மக்­க­ளா­கிய நாங்கள் பல­வ­ரு­ட­கா­ல­மாக சில தவ­றான நட­வ­டிக்­கை­களில் ஊறி­விட்டோம். நாமாக நம்மை மாற்றிக் கொண்­டால்த்தான் எமக்கு விமோ­சனம். ஆனால் சுய­நலம் அதற்கு இடைஞ்­ச­லாக இருந்து வரு­கின்­றது.

12. ஊழல் பேர்­வ­ழி­களை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்­சி­க­ளுமே கூறு­கின்­றன. எனினும் அதற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கும் போது குறித்த கட்­சி­களின் போக்கில் மாற்றம் காணப்­ப­டு­கின்­றதே. இது மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யாக நோக்­கப்­ப­ட­லாமா?

மக்கள் தான் அடுத்த தேர்­தலில் அதற்குப் பதில் அளிப்­பார்கள்.

13. வட­மா­கா­ண­ச­பையில் எதிர்­கா­லத்தில் மீண்டும் ஓர் கொந்­த­ளிப்பு ஏற்­ப­டா­தி­ருக்க எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்­ளீர்கள்?

கொந்­த­ளிப்பு வந்த பின்னர் பார்க்­கலாம் என்றே இருக்­கின்றேன். முன்­ந­ட­வ­டிக்­கை­களில் இறங்க நான் விருப்­பப்­ப­ட­வில்லை.

14. தமிழ் மக்­க­ளுக்குப் புதிய தலை­மைத்­துவம் தேவை என்று குர­லெ­ழுப்பப் படு­கின்­றதே அதில் நீங்கள் உடன்­ப­டு­கின்­றீர்­களா? இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

இருக்குந் தலை­மைத்­து­வத்தைத் தடம் மாறாமல் பார்த்துக் கொள்­வோ­மாக!

15. நீதித்­து­றையில் சேவை­யாற்­றிய உங்­க­ளுக்கு அர­சியல் துறையில் சந்­தித்த இந்த சவால் எவ்­வா­றான மன­நி­லையை தோற்­று­வித்­தது?

புதிய அனு­ப­வந்தான். சில உறுப்­பி­னர்­களின் குணங்கள் என்னை பிர­மிக்கச் செய்­தன. இப்­ப­டியும் இருக்­கின்­றார்­களா என மலைக்க வைத்­தது. பரி­தா­ப­மாக இருந்­தது.

16. தற்­போது ஏற்­பட்­டுள்ள சம­ரசம் கார­ண­மாக தமிழ் மக்கள் சற்று நிம்­மதி கொண்­டுள்­ளனர். உண்­மை­யி­லேயே உங்கள் நிலைப்­பாடு என்ன? இது காலத்தின் கட்­டாயம் என்று கரு­து­கின்­றீர்­களா?

அர­சியல் பலம் கட்­சி­க­ளிடம் இருந்து மக்­க­ளிடம் சென்­று­விட்­ட­தாக உணர்­கின்றேன். கட்­சிகள் மக்­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய கட்­டாயம் எழுந்­துள்­ளது.

17. மீண்டும் மாகா­ண­சபை அமர்­வுகள் இடம்­பெறும் போது குறித்த நெருக்­க­டியின் பிர­தி­ப­லிப்­புக்கள் இருக்­கு­மென்று தாங்கள் கரு­த­வில்­லையா? அவ்­வா­றாயின் அதற்கு எவ்­வாறு முகம் கொடுக்கப் போகின்­றீர்கள்?

இதற்கு ஏற்­க­னவே பதில் அளித்­து­விட்டேன்.

18. ஒரு சில சக்­திகள் தங்கள் அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய முத­ல­மைச்­சரைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்கள். அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு முத­ல­மைச்சர் சிக்கி விட்டார் என்று கூறப்­ப­டு­கின்­றதே? இதில் உண்­மை­யுள்­ளதா?

எவ்­வாறு சிலர் தமது அர­சியல் அபி­லா­ஷை­களைப் ப+ர்த்தி செய்ய என்னைப் பகடைக் காயாக்கப் பார்த்­தார்­களோ, தமது பொறிக்குள் என்னை சிக்க வைக்கப் பார்த்­தார்­களோ அவர்­களே இவ்­வா­றான கருத்­துக்­களை மற்­ற­வர்கள் மீதாக வைத்­துள்­ளனர். நான் எதிலும் சிக்கி விட­வில்லை.

19. முத­ல­மைச்­சரை நாமே கொண்­டு­வந்தோம். அவர் கட்­சிக்கு விசு­வா­ச­மாக இருக்க வேண்டும் என்று தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராசா கூறி­யுள்­ளாரே அது குறித்த உங்கள் கருத்து என்ன?

நான் ஒரு பொது அபேட்சகர்.

20. ஒரு சாரார் வடமாகாண சபை வினைத்திறம் மிக்க ஒன்றாக செயற்படவில்லை. இறுதியில் இழுபறிகளும் சச்சரவுகளுமே எஞ்சிவிட்டன என்று மிகுந்த விசனம் தெரிவிக்கின்றனரே? இது குறித்து நீங்கள் என்ற கூற விரும்புகின்றீர்கள்?

வினைத்திறத்தை மற்றவர் கூறுவதை வைத்துக் கணித்தலாகாது. எவை எவை செய்யப்பட்டுள்ளன. எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பவற்றை அறிந்த பின்னர் நீங்களே முடிவுக்கு வரவேண்டும்.

21. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கான நகர்வுகளில் இவ்வாறான சம்பவங்கள் ஓர் பாரிய பின்னடைவை தோற்றுவித்துள்ளதாகக் கூறப்படுகின்றதே இது குறித்த உங்கள் அபிப்பிராயம்?

மாறாக தமிழ் மக்களின் உண்மை நிலையும் அவர்களின் அரசியல் கருத்துக்களும் பகிரங்கப் படுத்தப்பட்டுள்ளன.

22. இறுதியாக நீங்கள் தமிழ் மக்களுக்குக் கூறும் செய்தி என்ன?

இறைவன் தமிழரைக் காப்பாற்றுவான். இது திண்ணம்.

http://thuliyam.com/?p=71955

  • தொடங்கியவர்

புத்தர்(ன்) தான்  காப்பற்றவேண்டும்.:rolleyes:

On 25.6.2017 at 7:58 AM, putthan said:

எல்லோரும் இந்த வசனத்தை தான் சொல்லியினம் அப்ப அடுத்த முறை தமிழ்மக்கள் வாக்கு சீட்டுக்களை ஊண்டியலில் போடட்டும்.:10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.