Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலமின்றி பிறர்நலம் பேணுவதிலேயே மனிதனது விடுதலை தங்கியுள்ளது :நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Featured Replies

சுய­ந­ல­மின்றி பிறர்­நலம் பேணு­வ­திலேயே  மனி­த­னது விடு­தலை தங்­கி­யுள்­ளது :நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் ஜனா­தி­பதி

 

 

அடுத்­த­வர்­க­ளது கஷ்­டங்­களைப் புரிந்­து­கொள்­வ­து டன் தமக்­குத்தாம் நேர்­மை ­யாக இருப்­ப­தனால் மனி தம் வளம்­பெறும் என்­பதை ரமழான் நோன்பு எமக்கு நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஈதுல்­பிதர் நோன் புப் பெரு­நாளைக் கொண்­டாடும் முஸ்லிம் மக்­க­ளுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

maithripala_sirisena.jpg

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,   

பௌதீக வளங்கள் மீது அளவு கடந்த பேரா­சையைக் கொண்­டுள்ள நவீன மனிதன் திருப்­தி­யற்ற பய­ணத்­தையே மேற்­கொண்­டுள்ளான். மக்கள் மத்­தியில் பிள­வு­களைத் தோற்­று­வித்து, அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி, நம்­பிக்­கை­யீ­னத்தை பரப்­பவே அழிவை உண்­டாக்கும் இந்த இருப்பு கார­ண­மாக உள்­ளது.  

உல­கெங்­கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த பக்­தி­யுடன் அனுஷ்­டிக்கும் ரமழான் மாதத்தில் கடை­பி­டித்­து­வரும் பரஸ்­பர கௌரவம், சமத்­துவம், ஈகை மற்றும் ஏழை­க­ளுக்கு உத­வுதல் போன்ற பண்­புகள் மனி­த­னது விடு­தலை சுய­ந­லத்­தி­லன்றி பிறர் நலம் பேணு­வ­தி­லேயே தங்­கி­யுள்­ளது என்­ப­தையே வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

அந்த வகையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெரு­நாளின் மூலம் முழு மனித சமூ­கத்­திற்கும் விடுக்­கப்­படும் முக்­கிய செய்தி பிர­பஞ்ச சமத்­துவம் என்­ப­தாகும். சமய, ஆன்­மீக மற்றும் சமூக பெறு­மா­னங்­களின் அடிப்­ப­டையில் எல்­லா­வற்­றிலும் சமத்­து­வத்தைப் பேணு­வதே அதன் மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் அடுத்­த­வர்­க­ளது கஷ்­டங்­களைப் புரிந்­து­கொள்­வ­துடன், தமக்குத் தாம் நேர்­மை­யாக இருப்­ப­தனால் மனிதம் வளம்­பெறும் என்­பதை ரமழான் நோன்பு எமக்கு நினை­வு­ப­டுத்­து­கி­றது.  

சமய எல்­லை­களைக் கடந்து பொது மானி­டத்தை இலக்­காகக் கொண்ட இத்தகைய வளமான தொலைநோக்குடைய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

http://www.virakesari.lk/article/21224

  • தொடங்கியவர்
‘நாட்டின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டுவோம்’
 

image_8d808b0708.jpg“ரமழான் பெருநாள் கொண்டாட்டத்தின் போது, எமது தேசத்தின் நல்லுறவுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒன்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோமாக” என்று, ரமழான் பெருநாளுக்கான வாழ்த்துச் செய்தியில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.   

அந்த வாழ்த்துச் செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,   

“இலங்கை வாழ் அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும், எனது இதயங்கனிந்த ரமழான் பெருநாள் வாழ்த்துகள். புனித ரமழான் மாதத்தின் நிறைவை, நினைவு கூரும் முகமாக, இந்த நாளை நாம் கொண்டாடுகின்றபோது, இப்பண்டிகையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சகோதரத்துவ உணர்வோடு நாம் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, இல்லாதவர்கள் மேல் காட்டும் கரிசனையையும் எமது சிந்தையில் கொள்வோமாக.  
இந்த ரமழான் பண்டிகையானது, எமது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை, மேலும் வலுவாக்குவதாக அமைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாட்டின்-ஒற்றுமையை-உலகுக்கு-எடுத்துக்காட்டுவோம்/175-199320

 

 

நோன்புபெருநாள் வாழ்த்துகள்

image_c4881b315e.jpg“உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், சகோதரத்துவம், சமத்துவம், சகவாழ்வு ஆகிய உயரிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, நோன்புப் பெருநாளை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றனர்” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

அந்த வாழ்த்துச் செய்தியில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,  

“இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு மிகவும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு மாதம் முழுவதும் உணவின்றி நோன்பு நோற்று, ரமழானைக் கழிக்கும் முஸ்லிம்கள் தமது சகோதர மக்களின் துன்பதுயரங்கள், தேவைகளை உணர்வுபூர்வமாக அணுகி, உதவிகள் வழங்கப்படவேண்டிய மக்களுக்கு தியாக உணர்வுடன் உதவியளித்து சகோதரத்துவம், சகவாழ்வைக் கட்டியெழுப்ப ரமழான் மாதத்தில் விசேட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.  

அவ்வாறே, இந்த நோன்பு காலத்தில் தனிப்பட்ட ரீதியிலும் சமூகரீதியாகவும் வளர்த்துக் கொள்ளும் உடல், உள அமைதித்தன்மை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பவற்றை மிகவும் சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்திக் கொள்வது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும்.   

அந்த எதிர்பார்ப்பை யதார்த்தமாக மாற்றிக்கொள்வதற்கு இந்த நோன்புகாலத்தில் உடல் மற்றும் உளரீதியாக நாம் வளர்த்துக்கொள்ளும் பெறுமானங்களை வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பத்திலும் பேணிக் கொள்ளவேண்டும்.  
இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து சகோதர முஸ்லிம்களுக்கும் சமாதானம், நல்லிணக்கம் மிகுந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

http://www.tamilmirror.lk/செய்திகள்/நோன்புபெருநாள்-வாழ்த்துகள்/175-199318

 

‘ஈகைத் திருநாள் வாழ்த்துகள்’
 

image_21418a0dd3.jpg“ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இலங்கை முஸ்லிம்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து க்கொள்கின்றேன்” என்று, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது நோன்புபெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

அச்செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,   

“நோன்புக்கும் புன்னிய காரியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ரமழான் மாதத்தின் முடிவை இந்தத் திருநாள் கொண்டிருகின்றது. இந்த நோன்பு மாதம் ஆன்மீக விருத்திக்கு வாய்ப்பு அளிப்பதுடன், சுயகட்டுப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் உண்டாக்கும் மனோவலிமையையும் தருகின்றது. 

நோன்பானது தொழுகைக்கான மனநிலையை உண்டாக்குகின்றது முன்னைய வருடங்கள் போலவே, ரமழான் நோன்பை நிறைவு செய்யும் முஸ்லிம்களுடன் இணைந்துகொள்வது எனது பாக்கியம் ஆகும். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் சகல இலங்கை முஸ்லிம்களுக்கும் நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஈகைத்-திருநாள்-வாழ்த்துகள்/175-199319

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.