Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

ஜன்னல் சீட்டில் சர்தார்ஜி

புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.

அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.

விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.

விமானி சொன்னது இதுதான்:

"நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன."

------------------

சர்தார்ஜியும் சரித்திரமும்

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.

நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். "கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?"

அதற்கு சர்தார்ஜி, "மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?" என்றாரே பார்க்கலாம்.

--------------

சர்தார்ஜியும் சீன நண்பரும்

சர்தார்ஜி ஒரு முறை அவருடைய சீன நண்பரைப் பார்த்து நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார். சீன நண்பர் சர்தார்ஜியிடம் "சிங் சங் சும் சாம் சிங்" என்று சொல்லி இறந்துவிட்டார். சர்தார்ஜிக்கு சீன மொழி தெரியாது என்பதால், சீன நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார். நண்பர் சொன்ன இரகசியத்தின் அர்த்தம் தெரிந்தவுடன் சர்தார்ஜி அதிர்ச்சி அடைந்தார். அதன் அர்த்தம் இது தான்.

"டேய் சனியனே, ஆக்ஸிஜன் குழாயிலிருந்து உன் காலை எடு"

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

அது ஜெராக்ஸ் காபி.

அப்படி என்றால் என்ன தலைவரே

  • தொடங்கியவர்

ஜெராக்ஸ் காபி என்றால் PHOTO COPY :blink:

ஜெராக்ஸ் காபி என்றால் PHOTO COPY :blink:

நன்றி தலைவரே

:D

அது ஜெராக்ஸ் காபி.

அப்படி என்றால் என்ன தலைவரே

ஜெராக்ஸ் காபி என்றால் PHOTO COPY :blink:

நன்றி தலைவரே

:D

xerox copy. போட்டோ கொப்பியைக் கண்டுபிடித்த நிருவனம் xerox.

நல்ல தலைவனும் சிஷ்யனும். உங்கள் ரோதனை தாங்கலைப்பா !

  • தொடங்கியவர்

xerox copy. போட்டோ கொப்பியைக் கண்டுபிடித்த நிருவனம் xerox.

நல்ல தலைவனும் சிஷ்யனும். உங்கள் ரோதனை தாங்கலைப்பா !

அவர் என்னிடம் கேட்ட கேள்வி ஜொரெக்ஸ் கொப்பி என்றால் என்னவென்று, கொம்பனு பயெரெல்லாம் கேட்டாவ..........? நீ பேரசிரியர் ஆகணுமென்றால் அதற்கு நிறைய வழி இருக்கின்றது

அவர் என்னிடம் கேட்ட கேள்வி ஜொரெக்ஸ் கொப்பி என்றால் என்னவென்று, கொம்பனு பயெரெல்லாம் கேட்டாவ..........? நீ பேரசிரியர் ஆகணுமென்றால் அதற்கு நிறைய வழி இருக்கின்றது

அது தானே கேட்ட கேள்விக்கு தான் விடை கூற வேண்டும் அதை விட்டுவிட்டு ஓவரா பில்டப் காட்டகூடாது சரியோ

:angry:

நல்ல நகைச்சவைகள் நன்றி வானனவில்ல்

  • தொடங்கியவர்

மாடி பஸ்சில் சர்தார்ஜிகள்

சென்னைக்கு வந்த சாண்டா சிங்கும் பாண்டா சிங்கும் மாடி பஸ்சில் ஏறினார்கள். சாண்டா சிங் கீழ்த்தளத்தில் இருக்க, பாண்டா சிங் மேல் தளத்தில் இருந்தான். அரைமணி நேரம் கழித்து மேலே சென்ற சாண்டா சிங் தனது நண்பன் முகம் வெளிறி, மிகவும் பயந்திருப்பதைக் கண்டான்.

‘ஏய் பாண்ட! என்ன ஆச்சு? ஏன் பயந்து போயிருக்கே? நான் கீழ்த்தளத்தில் ஜாலியாக மாடி பஸ் பயணத்தை ரசித்தேன்’

‘நீ ஏன் ரசிக்க மாட்டே! கீழ்த்தளத்தில் டிரைவர் இருக்கார். ஆனா இங்கே டிரைவர் இல்லாம வண்டி எங்கேயாவது போய் முட்டிக்கிடுமோன்னு பயந்து போயிருக்கேன்’

பிஸா கடையில் சர்தார்ஜி

சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.

பிரமிடுகளில் சர்தார்ஜி

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், “இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்”. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் “நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்” என்று. :unsure: :P



  • தொடங்கியவர்

சர்தார்ஜியும், சாவியும்

சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார். என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். “இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்” அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார். டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார். மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். ‘என்னது மூணு மாசமா?, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?” என்று டாக்டர் கோபமாகக் கேட்டார். இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.

இராணுவத்தில் சர்தார்ஜி

இராணுவத்தில் சேருவோருக்கு இரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட சர்தார்ஜி, ஒரு நாள் இராணுவத்தில் சேர்ந்தான். இராணுவத்தில் பணிபுரிவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த பனிப் பிரதேசங்களில் இரவுக் காவல் புரியும் போதும், மற்ற கடினமான பயிற்சிகளின் போதுமே தான் உணர்ந்ததாக முகாமில் இருந்த மற்றொரு இராணுவ நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தாரன். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு பொருத்தமான அளவை விட குறைவான அளவுள்ள ஷூ கொடுக்கப் பட்டிருப்பதால், அதனை காலில் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் சொன்னான்.

உனக்கு பொருத்தமான ஷுவை மேலதிகாரியிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என கேட்ட நண்பரிடம், சர்தார்ஜி சொன்னானாம். “இந்த இராணுவ முகாமில் சேர்ந்த பின்னர், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் என்றால், அது தினமும் இந்த ஷூவை கழட்டி வைக்கும் நேரம் மட்டும்தான். சரியான அளவுள்ள ஷூவைப் பெற்று அந்த மகிழ்ச்சியையும் இழக்கச் சொல்கிறாயா?”

சர்தார்ஜிகளும் நீதிபதியும்

ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.

கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

சர்தாஜி ஜோக்ஸ் என்றால் ரொம்ப சிரிக்கணும் போல இருக்கு. தொடர்ந்து பதியுங்கள் சிரிக்கலாம் :rolleyes: :P :rolleyes:

  • தொடங்கியவர்

அமெரிக்காவின் மிக முக்கிய சாலையொன்றில் காரைச் செலுத்திக்கொண்டிருந்தார࠯? நம் சர்தார்ஜி.வளைவு,நெளிவுகள௠?,முந்துதல்,பிந்துதல்,வேகம ் எல்லாமே விதிப்படிதான் செய்தார்.இருந்தாலும் தன்னை போக்குவரத்துக் காவலர்கள் பின் தொடர்வதை பக்கவாட்டில் உள்ள கண்ணாடியில் பார்த்தார்.நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் காவலர்கள் இவரின் காரை வழி மறித்தனர்.

காரில் இருந்து இறங்கி வந்து சர்தார்ஜியின் கையைக்குலுக்கி"இவ்வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம்.நாங்கள் சிறந்த வாகன ஓட்டுனர்களைக் கண்டறிந்து பாராட்டுப்பத்திரமும் பணமுடிப்பும் வழங்கிக் கௌளரவிப்போம்.நெடுநேரமாக உங்களைப் பின் தொடர்ந்ததில் நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுனர் என முடிவு செய்தோம்"

உடனே சர்தார்ஜி சொன்னார்,"அப்படியா மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பா கிடைக்கும் பணத்தில் முதலில் லைசென்ஸ் எடுத்துவிடுவேன்"

சர்தார்ஜியின் மனைவிக்கு கோபம் வந்து கத்தினார்"அவர் சொல்றதை நம்பாதீங்க...அவர் ஏதோ குடிச்சிட்டு உளறுகிறார்!"

காரில் தூங்கிய சர்தார்ஜியின் காது கேளாத அம்மா களேபரங்களைக் கேட்டு கண்விழித்து சொன்னார்"ஏண்டா நான் அப்பவே சொன்னேனே கேட்டியா...திருட்டுக் காரை எடுத்து வரவேண்டாம் இங்கெல்லாமுன்னு!!!

--------------------------------------------------------------------------------------------------------------

உதவி..!உதவி..!கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது..

எங்கும் அழுகுரல்கள்.. ஓடினர்..அழுதனர்.. பலர் இறைவனைத் தொழுதனர்..

நம் சர்தார்ஜிக்குப் பக்கத்தில் நின்றிருந்த இத்தாலியர் கேட்டார்,

“இங்கிருந்து நிலம் எவ்வளவு தொலைவு?”

“இரண்டு மைல்கள்”-சர்தார்ஜி பதில் அளித்தார்.

“ப்பூ..வெறும் இரண்டு மைல்தானா? இதுக்குப் போய் ஏன் இந்த முட்டாள்கள் அழுது புலம்புகின்றனர்? எனக்கு நீச்சலில் நல்ல அனுபவம் உண்டு” சொல்லிக் கொண்டே கடலுக்குள் குதித்தார் இத்தாலியர்!

குதித்த இத்தாலியர் தண்ணீரின் மட்டத்திற்கு வந்ததும் கேட்டார், "எந்தப் பக்கமா நீந்தனும்?”

“அப்படியே கீழ் நோக்கி”-சர்தார்ஜி அசால்ட்டாகப் பதிலளித்தார்!

  • தொடங்கியவர்

ஒருமுறை மனமுடைந்த சர்தார்ஜி தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்தார். அதற்காக ஒயின் பாட்டில், சிக்கன்65 பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு தண்டவாளம் நோக்கிப் புறப்பட்டார்.வழியில் இடைமறித்த அவரின் நண்பர் கேட்டார்,

“எங்க போறீங்க?”

“தற்கொலைசெய்துகொள்வதற்க࠯??”

“அதுக்கு ஒயின், சிக்கன்லாம் எதுக்கு?”

“உங்களுக்கு தெரியாதா? நம்ம ஊரில் சரியான நேரத்துக்கு ரயில் வரதில்ல...எனக்கு பசிதாங்காது. பசில உயிரே போயிடும்!”

---------------------------------------------------------

சர்தார்ஜி புது மாருதி ஒன்றை வாங்கினார். அதனை எடுத்துக் கொண்டு அமிர்தசரசில் இருந்து ஜலந்தருக்கு தனது நண்பனைக் காணச் சென்றார். சிலமணி நேரங்களிலேயே நண்பரின் வீட்டை அடைந்த சர்தார் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி சில நாட்கள் ஊரினைச் சுற்றிப்பார்த்தார். வீட்டுக்கு திரும்புவதாக முடிவெடுத்த சர்தார் தன் அம்மாவுக்கு தொலைபேசி செய்து இன்னும் சில மணிநேரங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறினார்.சிலமணிநேரங்கள் என்று சொன்ன சர்தார் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் தாய் பதறினார். மூன்றாவது நாள் வீடு திரும்பிய சர்தாரைக் கட்டிக்கொண்டு அழுத அவரின் அம்மா,”என்னடா ஆச்சு? ஏன் காலதாமதம்?”

மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!” :unsure:

  • தொடங்கியவர்

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!

அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.

அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்.

"அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.

உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.

அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்ப ை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.

-------------------------------

ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.

  • தொடங்கியவர்

கணிணி வேலை பார்த்த இரு சர்தார்ஜிக்கள் தங்கள் கணிணியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தனர். ஒரு சர்தார்ஜி, "என் வன் தட்டு 80 GB அதனால் கஷ்டப்பட்டு தூக்கி வருகிறேன். உன்னுடையது 40GB தானே. ஏன் கஷ்டப்படுகிறாய்?" என்றார். இன்னொருவர்,"உன்னுடையதில் மீதி இடம் நிறைய இருக்கும். எனது வன் தட்டு நிறைந்து விட்டது."

_________________

ஒரு சர்தார்ஜி சாலையின் நடுவே வெள்ளைக் கோடுகள் வரையும் வேலையிலிருந்தார். முதல் நாள் 6 கி.மீ. இரண்டாம் நாள் 3 கி.மீ. மூன்றாம் நாள் 1 கி.மீ. தூரம் வரைய முடிந்தது அவரால். ஏன் என்று கேட்டதற்கு, "நான் என்ன செய்வேன்? ஒவ்வொரு முறையும் பெயிண்ட் டின்னில் போய் பிரஷ்ஷை முக்க வேண்டாமா?" என்றார்.

-----------------------------------------------

சர்தார்ஜி டூ வீலரில் ஒரு லாரியைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதேதோ சைகை செய்து கொண்டே போனார்.

அவரின்ன் வினோதமான ஆக்சனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, "ஏன்... இப்படி செய்கிறீர்கள்?" என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், "பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்" என்று எழுதியிருந்தது

  • தொடங்கியவர்

"நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!" என்றார் நண்பர்.

"அப்படின்னா, என்னையும் சில வருடங்களுக்கு நீ தேடாதே..." என்றார் சர்தார்ஜி.

"ஏன்?" என்றார் நண்பர்.

"நான்... மெகா சீரியல் பார்க்கப் போகிறேன்" என்றார் சர்தார்ஜி!

---------------------------------------------------------------------- ----------

சர்தார்ஜி வாரப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப் பத்திரிகையின் காம்ப்ளிமெண்ட்ரி காப்பியும், சன்மானமும் அவருக்கு வருவதுண்டு. ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப் போனார் சர்தார்ஜி. "ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை எனக்கு அனுப்பவில்லை?" எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் சர்தார்ஜி.

_________________

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

"அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது" என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, "அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்..." என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, "என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?" என்றார் கோபமாக!

  • தொடங்கியவர்

"மச்சான்..டேய்..நீ சிரிச்சா ரஜினி!...பேசினா வைரமுத்து!!...ஆடுனா பிரபுதேவா!!!...பாடுனா ஜேசுதாஸ்!!!!..படுத்தா உசிலைமணி :!: வெயிட்டைக் குறைடா மாப்ளே :!: :!: "

=======================

"மச்சான்!நீ அகநானூறைக் கரைச்சுக் குடிச்சவன்தான்..ஒப்புக்க஠?ேன்..நீ புறநானூறைப் படிச்சு கிழிச்சவன்தான்...ஒப்புக்க࠮?ேன்!ஆனா என்னோட பணம் முழுசா நானூறை முழுங்கி ஏப்பம் விடுட்டியேடா...நீ நல்லா இருப்பியா?"

==============================

"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்...துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்...துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்...துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

============================

"நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!"

===================

"நேத்து உன்னைப் பாக்க உன் ரூமுக்கு வந்தேன்.நல்ல வெயில்நேரம்...ஃபேன்கூட இல்லாத ரூமில் குப்புறப்படுத்து தூங்கிட்டிருந்தே..சரி சரி...புரியுது!எருமையால மல்லாக்கப் படுக்கமுடியாதே!!"

=========================

"அன்புக் காதலா...என்னைவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டாலும்,..என்னைச் சந்திக்கவே வரலைன்னாலும்,..போன்கூட பன்னலைன்னாலும்,..எத்தனை வருசமானாலும் சரி...மறக்கமுடியுமா உன்னை???நான் முதன்முதலில் பார்த்த குரங்கு நீதானே?!"

====================================

"அன்பே...நான் சூரியன்...நீ நிலா! நிலா சூரியன்கிட்டேயிருந்து வெளிச்சத்தை வாங்கும்.நீ என்கிட்டயிருந்து பணம் வாங்குவே!...ஆனா ரெண்டு பேருமே திருப்பித் தரமாட்டீங்க!"

============================================

"அன்பான உன் ஆலோசனைக்கு மிக்க நன்றி!அது சரி..முடிஞ்சவன் சாதிக்கிறான்...முடியாதவன் போதிக்கிறான்!"

  • தொடங்கியவர்

"காலைல பசியே

எடுக்கலைடா செல்லம்...

உன்னோட நெனைப்பு

தான்டா...

மத்தியான சாப்பாடு சுத்தமா

இறங்கலைப்பா..! உன்

நெனைப்புதான்...

ராத்திரி முழுக்கத் தூக்கமே

வரலைப்பா..! காரணம்

உன் நெனைப்பில்லே...

அகோரப்பசி."

********************************************************************** ************************

"மாமூல்னா கப்பம்

மதியவெயிலோ வெப்பம்

மகாபலிபுரத்திலே சிற்பம்

ஆத்துலே மிதக்கும் தெப்பம்

இளமைக்கு காயகல்பம்

எலேய்... நீ அக்மார்க் அல்பம்!"

********************************************************************** ************************

‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்...

நீ என்னோட பழகுற மாதிரியே

என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்...

அவனைப் பழிவாங்க வேறே வழியே

தெரியலைடா, அறுவை மன்னா!"

********************************************************************** ************************

"அளவு குறைஞ்சா ரேஷன்

ஆடை குறைஞ்சா பேஷன்

எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய்

உன்னையும் படைச்சானே... ஈசன்"

********************************************************************** ************************

"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா

சாதிக்காததை நீ சாதிச்சுட்டே.

பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி

இதுவரை முப்பத்தஞ்சு சவரன்

தங்கம் வாங்கியிருக்கியே!"

********************************************************************** ************************

"இந்த மெஸேஜை நீ அழிச்சா, என்னைக் காதலிக்கிறேனு அர்த்தம்!

ஸ்டோர் பண்ணினா என்னை விரும்பறேனு அர்த்தம்!

கண்டுக்கவே இல்லைனா மிஸ்பண்றேனு அர்த்தம்!

என்ன பண்ணப் போறே?!"

********************************************************************** ************************

*என் உடைந்த வளையல் துண்டுகளையும்,

வாடிய கூந்தல் பூக்களையும்,

குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும்

நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன்.

இத்தனை நாட்களாக

என்னிடம் மறைத்துவிட்டாயே,

என்னுடன் படித்துக்கொண்டே,

பார்ட் டைமாகக் குப்பை

பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************

*நண்பா... நீ புத்திசாலிடா!

ஒரே கல்லுல ரெண்டு

மாங்கா அடிச்சுட்டியேடா...

ஊர்ல கடன்காரங்க தொல்லையில

இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு,

உன் காதலிக்கு வாழ்வு

கொடுத்த மாதிரியும் ஆச்சு!

நீ நாளைக்கு அவகூட

ஓடப்போறதைச் சொல்றேண்டா...

************************************************************

*கஜினி முகமது பதினேழு முறை

படையெடுத்ததால இந்தியாவே

காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர்

கடையில பதினெட்டு முறை

வடை எடுத்ததால, என்னோட

பர்ஸே காலியாயிடுச்சுடா!

************************************************************

*அறிவுக்கொழுந்தே...

உனக்கெல்லாம் எவண்டா

செல்போன் வாங்கிக் கொடுத்தான்?

உடனடியாக மீண்டும் சார்ஜ்

செய்யவும்Õனு போன்ல வாய்ஸ்

கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன்

வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?!

************************************************************

‘‘ஒடி வர்ற...

நிக்கற...

நெளியிற...

புன்னகை பூக்கற...

இத்தனை நவரசம் காட்றியேடா

சிங்கிள் டீக்கு!

*************************************************************

*புது செல்லு...

புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!

அடிக்கடி நம்பர் மாத்தி,

இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!

************************************************************

*பங்காளி...

நீ உன் மனைவியை

'நின்னா குத்துவிளக்கு...

உட்கார்ந்தா நெய்விளக்கு...

அசைஞ்சா அகல்விளக்கு...

அண்ணாந்தா காமாட்சி விளக்கு...

பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே...

ஏன் சொல்ல மாட்டே?

உன் மாமனார், நீ கேட்டதெல்லாம்

கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே!

************************************************************

‘‘டியர்,

என்னை உன்னுடைய

உதடுகளை முத்தமிட விடு...

உன்னுடைய

பற்களைத் தொட விடு...

உன்னுடைய

நாக்கைச் சுவைக்க விடு...

நான்தாண்டா உன் நண்பன்

டூத் பேஸ்ட்!”

************************************************************

வானவில் நல்ல SMS வெடிதான்.

எப்பிடி தமிழ்ல அனுப்பிறது என்று சொல்லுவிங்களா :rolleyes:

  • தொடங்கியவர்

நீர் இருக்கும் நாட்டில் உமது மொபைல்சேவை வழங்கினருடன் தொடர்பு கொள்ளுங்கள், அவர்கள் மூலம் உதவி பெறலாம்

  • தொடங்கியவர்

சர்தார் அவர் மனைவியுடன் காபிஷாப் சென்று 2 கோப்பைகள் வாங்கினார். சர்தார் வேகவேகமாக அருந்தி முடித்தார்.

மனைவி: ஏன் இப்படி செய்கிறீர்கள்?

சர்தார்: ஏனென்றால் சூடான காபி (hot coffee) 5 ரூபாய், குளிர் காபி (Cold coffee) 10 ரூபாய்!!!

  • தொடங்கியவர்

சிவாஜி - எங்கள் தங்கராஜா

ரஜினி - ராஜாதிராஜா

கமல் - வசூல்ராஜா

தனுஷ் - மன்மதராஜா

நான் - SMS ராஜா

நீ - புள்ளிராஜா....... :rolleyes::D

===================

நான்கு குரங்குகள் மரத்தில் அமர்ந்துள்ளன.

முதல் குரங்கு கண்களை மூடிக்கொண்டுள்ளது.

இரண்டாவது குரங்கு வாயை மூடிக்கொண்டுள்ளது.

மூன்றாவது காதுகளை பொத்திகொண்டுள்ளது

நான்காவது கணனியில்ல் இந்த செய்தியை படித்துக்கொண்டுள்ளது

------------------------------

விமானம் இராக்கெட்டைப் பார்த்து,

நண்பா எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது.

இராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ..........

----------------------------------

கணணி மிகவும் கவர்ச்சியாக உள்ளது ஏன்?

???

ஏனென்றால் அதற்கு ஹார்டு"வேர்" உண்டு, சா·ப்ட்"வேர்" உண்டு ஆனால் ..... அண்டர்"வேர்" இல்லையே!!!!!!

Edited by வானவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசித்துச் சிரித்தேன்..நல்ல சிரிப்பு வெடிகள் வானவில்!!.

  • கருத்துக்கள உறவுகள்

வானவில் சார்!

" துன்டில் சுருக்குப் போட்டால் தொங்கப் போறேன்னு அர்த்தமா"? எஃ. எம். எஃ நல்லாயிருக்கு.

:):unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.