• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
வானவில்

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Recommended Posts

நுனாவிலன் உங்கள் நகைச்சுவை எல்லாம் அட்டகாசம், நன்றி உங்கள் நகைச்சுவைகளுக்கு :unsure:joke128.jpg

Share this post


Link to post
Share on other sites

சைட் அடி ஆனால் காதலிக்காத,

காதலி ஆனால் வாழ்வை தவறவிடாத,

வருத்தப்படு ஆனால் எதிகாலத்தை வீணடிக்காத,

யோசி ஆனால் நேரத்தை வீணாகாதே.

உனக்கு அதெல்லாம் வேணாம்.

ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு

Share this post


Link to post
Share on other sites

நீ செய்த பாவங்கள் விலக இந்த மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லு.

' வானவில்" ரொம்ப நல்லவன்.

இதில் உன்பேரு போட்டு நாலு பேருக்கு அனுப்பி மேலும் பாவங்கள் செய்யாத.

நண்பா

ஒரு பொண்ணு போட்டோவுல

தேவதைமாதிரி இருந்தாலும்

நெகடிவ்ல

பிசாசு மாதிரிதான் இருப்பா

Share this post


Link to post
Share on other sites

சைட் அடி ஆனால் காதலிக்காத,

காதலி ஆனால் வாழ்வை தவறவிடாத,

வருத்தப்படு ஆனால் எதிகாலத்தை வீணடிக்காத,

யோசி ஆனால் நேரத்தை வீணாகாதே.

உனக்கு அதெல்லாம் வேணாம்.

ஒழுங்கா சாப்பிட்டு தூங்கு

வான்வில் அண்ணா அந்த மாதிரி இருக்கு எப்படி இப்படி எல்லாம்!! :unsure:

Share this post


Link to post
Share on other sites

ஏன் அந்தப் பையனைப் போட்டு அடிக்கிறீங்க?

படிச்சதெல்லாம் மறந்துடுச்சுன்னு சொல்றான்.... அதான் அடிக்கிறேன்.

விடுங்க அவனை... அவன் பக்கத்து வீட்டுப் பையன். இதோ இவன்தான் நம்ம பையன்.

Share this post


Link to post
Share on other sites

மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.

மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

Share this post


Link to post
Share on other sites

மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

Share this post


Link to post
Share on other sites

ஏன் அந்தப் பையனைப் போட்டு அடிக்கிறீங்க?

படிச்சதெல்லாம் மறந்துடுச்சுன்னு சொல்றான்.... அதான் அடிக்கிறேன்.

விடுங்க அவனை... அவன் பக்கத்து வீட்டுப் பையன். இதோ இவன்தான் நம்ம பையன்.

மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.

ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலையடா.

ஹாஹா... பகிடி சூப்பரப்பு... அந்த யூரின் பாஸ்பண்ணீய பையன் நீங்கள்தானே? :mellow:

Share this post


Link to post
Share on other sites

கலைஞன்: என் தலையில எறும்பு ஏறிட்டுது

வானவில்: மண்டைக்குள்ள தான் எதுவுமே ஏறல. வெளிய ஆச்சும் எறும்பு ஏறட்டும் :rolleyes:

----

மாப்பி நான் அவன் இல்லை .....

Share this post


Link to post
Share on other sites

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

பாக்கி : ஏன் சார் ஜோக் எழுதறேன்று சொல்றீங்க. ஆனா ஒரு ஜோக்குக்கு கூட சிரிப்பே வரலயே?

ரமனன் : பிறர் சிரிக்கும் படியான காரியத்தை செய்யாதன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

வேலு : உங்க இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர் : நான் என் கடையில் சாப்பிடவே மாட்டேன் அதுதான்.

பட்டைய கிளப்பும் பாக்கி : "நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"

பேட்டை மாமா : "குறுக்கு விசாரணை பண்றாராம்".

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?

வேலு : "ஓட்டல் ஓனர் வீட்ல பொண்ணு பார்க்கப் போனது தப்பாப்போச்சு"

ரமனன் : "ஏன்?"

வேலு : "பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னதும், சாப்பிட்ட பஜ்ஜி, சொஜ்ஜி, காபிக்கெல்லாம் காசு வாங்கிட்டாரு."

வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .

கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

வேலு : என் சொந்த ஊரு மதுரை. இப்பதான் திருச்சி வர்றேன். என் பேரு 'அங்கு ராஜ்'

பாக்கி : இங்கு என்ன பேர் வச்சிருக்கீங்க?

Share this post


Link to post
Share on other sites

எல்லோருடைய நகைச்சுவையும் அசத்தலாக இருக்கிறது. வாழ்த்துகள். :o:wub::lol:

Share this post


Link to post
Share on other sites

இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.

முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!'' :lol:

Share this post


Link to post
Share on other sites

சிக்கன் சிரிப்பு

ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ?

சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க !

கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ?

கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா?

கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

நோயாளி: டாக்டர், சிக்கன் லெக் சாப்டதுலேர்ந்து, கலுத்தெல்லாம் நீண்டு ஒரு கொக்கரக்கோவா வருது டாக்டர்.

டாக்டர்: நீங்க வெட்னரி டாக்டரைதான் பார்க்கனும், பயப்படத்தேவையில்லை, தொடைய சுத்தி சுத்தி தொன்னூறு ஊசி போடுவாங்க

-------------------------------------------------------------------------------------------------------------------------------

முனியான்டி விலாஸ் ஓனர்: எதுக்கு என்னை அரஸ்ட் பண்ணுரிங்க சார் ?

போலிஸ்: ஏன்யா, சிக்கன பார்த்து ஊரே ஓடிக்கிட்டு இருக்கு, நீ என்ன தெனாவட்டா, இங்கு சிக்கன் சிக்ஸிடி பைவ் கிடைக்கும்னு போர்ட மாட்டிவைச்சிருப்ப !

------------------------------------------------------------------------------------------------------------

மந்திரி: எங்கள் தலைவர், ஒரு லட்சம் கோழிகளை அழித்து சிக்கன நடவடிக்கை எடுத்திருக்கிறார், தலைவர் வாழ்க.

உதவியாளர் மெதுவாக: தலைவா சொதப்பிட்டியே, அது சிக்கன நடவடிக்கை இல்ல தலைவா, சிக்கன் மீது நடவடிக்கை !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கோழி 1: ஏன்டா, ரொம்ம சந்தோசமா கூவுர ?

கோழி 2: நம்ப கண்ணு முன்னேடியே, நம்ம ளுங்கள அறுப்பாங்கல்ல, இனி கொஞ்ச நாள், புள்ள குட்டியோட சந்தோசமா இருக்கலாம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------

பாரி: ஏன்டா, கோழி வருத்துன்னு கோட்வேர்ட்ல சொன்ன ஜொள்ளுவடிய நிப்பானே, நம்ம சுந்தர் ஏன்டா, அவுங்க அப்பனா பாத்தாப்பல ஓடுறான் ?

மாரி: முன்னடி, கோழின்னு பிகருங்களைத்தான் சொல்லுவோம், இப்ப கோர்டு வேர்டு, பேர்ட் வோர்டா மாறிடுச்சி, அதான் புளு வந்துடுமே பயந்து ஓடுறான்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

வாத்தியார்: பசங்களா, 'கூறை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் ...' எங்க பழமொழியை முடிங்க பார்க்கலாம்..

சுட்டி பையன்: சார், கோழிய புடிச்சா உடனே வைகுண்டம் தானாம், எங்க அப்பா சொன்னாரு !

-------------------------------------------------------------------------------------------------------------------------

கமலா: விமலா, என்ன ஒங்க மாமியாரு, திடீர்னு போய்டாங்களா, எப்படி ?

விமலா: இதான் சரியான சமயம்னு, சிக்கன் வருவல் செஞ்சிபோட்டேன், அவுங்க சை சையா சாப்பிட்டு போய்டாங்க!

-------------------------------------------------------------------------------------------------------------------------------

புறா: எறும்பு நண்பா, எப்படி நீ வேடனை கடிக்காமல், என்னை காப்பாற்றினாய் ?

எறும்பு: உனக்கு பறவை காய்சல் இருக்குன்னு சொன்னேன், அதான் தலை தெறிக்க ஓடிட்டான்.

Edited by nunavilan

Share this post


Link to post
Share on other sites

பழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?

விழுந்தது பலாப்பழம் ஆச்சே

ஏண்டா மெதுவா லெட்டர் எழுதுற?

எங்க அப்பாவுக்கு வேகமாக படிக்க வராது, அதான்.

உங்க வீட்டுல மொத்தமா எத்தனை பேரு?

எங்க வீட்டுல மொத்தமா யாருமே இல்லைங்க எல்லோரும் ஒல்லி தான்.

நகை கடைக்காரனுக்கு பிடித்த சோப்?

பொன் வண்டு.

ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணு பாட்டி.

பார்த்து மெதுவா ஓடிப்போ, வேகமாக ஓடி கைய, கால ஓடிச்சுக்கிடாதே.

டேய் நாளைக்கு பெண் பார்க்க போறேன். கண்டிப்பா நீ வரனும்?

ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.

நீங்கள் எப்போதும் என்னசோப் உபேயகிக்கிறீங்க?

நான் எப்போதும் சோப் உபேயாகிப்பதில்லை குளிக்கும் போது மட்டும் தான்.

அந்த ஆள் புத்தகத்்தை தின்கிறார் ஏன்?

அவருக்கு அறிவு பசி அதிகமாயிடுச்சு.

கி.பி. 5000ல் உலகம் எப்படியிருக்கும்?

உருண்டையாகத்தான்...

Share this post


Link to post
Share on other sites

வாயால நாய் னு சொல்ல முடியும் ஆனால்

நாயால வாய் னு சொல்ல முடியுமா??? யோசிங்கப்பா யோசிங்க...

ரயில் எவ்வளவு தான் வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசில தான் போகும் இது தான்பா உலகம்...

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்,

ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமாங்க???

செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது

ஆனா மனுஷனுக்கு கால் இல்லனா பாலன்ஸ் பண்ண முடியாது

பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கேயே தாங்க இருக்கும்,

ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்ட் அங்கேயே நிக்குமா??

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this