Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

விற்க வீடு இருந்தா தானே............ :P

  • Replies 764
  • Views 74.2k
  • Created
  • Last Reply

ஹீஹீ நல்லா இருக்கு எஸ் எம் எஸ் எல்லாம்.

  • தொடங்கியவர்

ப்ளஸ்- டூ-வில் நீங்க எந்த குரூப் எடுத்து படிக்க விருப்பப் படறீங்க ?

ஏ குரூப்பையும், பி குரூப்பையும் கூட்டணியா சேர்த்து வச்சிப் படிக்கலாம்னு இருக்கேன் சார்*

இராமு... நான் கொடுத்த பிரம்படி எப்படியிருந்தது ?

பாவம்... உங்க வீட்டுக்காரர் எப்படித்தான் வீட்டில் சமாளிக்கிறhரோ ?

இந்த ஆளுக்கு பூலோகத்தில கணக்கு முடிஞ்சு போச்சே... ஏன் கொண்டு வரலை ?

சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஓட்டுப்போட வசதியாக 3 மாதம் உயிர் நீடிப்பு தந்துள்ளேன் பிரபு *

அந்த பைனான்ஸ் கம்பெனியில போட்ட பணத்தைத்திருப்பிக் கொடுத்துடுவாங்க *

அப்படியா ?

ஆமா * 15,000 ரூபா போட்டேன்... 00051ரூபா கொடுத்துட்டாங்க *

ஏண்டா, மாலதி பின்னால் சுத்தறீயாமே... உண்மையா ?

நான் சுத்தலையே... நடந்துதான் போறேன்*

ரெண்டு முறை மொய் எழுதுறீங்களே ஏன் ?

பந்தியில் நான்கு முறை சாப்பிட்டுட்டேன். அதனாலதான் *

யோவ் * எதுக்குய்யா மூட்டை துhக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?

நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து * நிறைய ஃபைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு *

சரத்குமாரை வச்சி மெகா சீரியல் தயார் செஞ்சா, என்ன பெயர் வைப்பாங்க தெரியுமா ?

சித்தப்பா *

ஞாபக மறதியால என் வாழ்க்கையே போயிடுச்சு *

என் மனைவி காணாமப் போனதை கம்ப்ளெயின்ட் பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஞாபக மறதில கம்ப்ளெயின்ட் பண்ணிட்டேன் *

உன்கிட்டே கோவிச்சிக்கிட்டு உன்னை எரிக்கிற மாதிரி பார்த்திட்டுப் போறது யாருடி *

மை லவ்வர் சூரியன் *

ஏண்டா பாக்கெட் சாராயத்தை உடைச்சி, பானையிலே ஊத்தறீங்க ?

இன்னியோட பாக்கெட் சாராயம் ஒழிக்கப்படும்னு தலைவர் பேப்பர்லே நியூஸ் குடுத்துட்டாராம் *

சர்க்கஸ் கூண்டுலேருந்து ஒரு புலி தப்பிச்சு ஓடிடுச்சாமே...?

அப்ப விடுதலைப்புலின்னு சொல்லுங்க...*

தலைவருக்கு புத்தி கெட்டுப் போச்சுன்னு எப்படிச் சொல்றீங்க *

சின்ன வீடு பிரிஞ்சு போனதுக்கு எதிர்க்கட்சி சதின்னு அறிக்கை விட்டிருக்காரே *

நாம மோசம் போயிட்டோமா ? என்னய்யாb சால்றே ?

கூட்டணிக் கட்சிகளுக்குச் சீட்டு கொடுத்தது போக, பாக்கி நமக்கு ரெண்டு இடம்தான் இருக்கு *

தலைவர் மாதிரியே குளோனிங்-லே ஒருத்தரைப் தயார் பண்ணணுமா...

ஏன் ?

பூகம்பப் பகுதியைப் பார்வையிடப் போக பயமா இருக்காம் *

மசாலா கதை இருக்கா...? சொல்லுங்க *

இஞ்சி வியாபாரி மகளை பூண்டு வியாபாரி மகன் காதலிக்கிறhன்...*

கலைச்சேவை செய்ய துபாய் போன நடிகை குசலா எங்கே ?

கலைச்சே ஆகணும்-னு ஆஸ்பத்திரி போயிருக்கா*

நாங்க ஓட்டுப் போட்டு உங்களை ஜெயிக்க வச்சா என்ன பண்ணுவீங்க ?

என்னோட ஓட்டு வீட்டை பங்களாவா மாத்திடுவேன்*

கலைச்சேவை செய்ய துபாய் போன நடிகை குசலா எங்கே ?

கலைச்சே ஆகணும்-னு ஆஸ்பத்திரி போயிருக்கா

என்னத்தை கலைக்க வான்வில் அண்ணா............. :P

  • தொடங்கியவர்

என்னத்தை கலைக்க வான்வில் அண்ணா............. :P

யாருக்கு தெரியும்? :lol:

என்னத்தை கலைக்க வான்வில் அண்ணா............. :P

இலையான் கலைக்க :P

யாருக்கு தெரியும்? :lol:

நாளைக்கு டீச்சரிட்ட கேட்போம் டவுட்டை வான்வில்.......... :lol:

இலையான் கலைக்க :P

இலையான் கலைகிறது என்றா அவ்வளவு கஷ்டமா.............அதற்காக வைத்தியசாலிக்கு எல்லாம் போக வேண்டுமா......... :lol:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

இலையான் கலைக்க :P

மோட்டின் ஸ்பிறே அடிச்சா சரியாகிடும் :lol:

மோட்டின் ஸ்பிறே அடிச்சா சரியாகிடும் :lol:

சின்ன பிள்ளைகள் இது எல்லாம் பாவிக்ககூடாது.......... :lol:

என்னமோ எல்லாம் பேசுறீங்க..

நிலா அக்கா என்னமோ எல்லாம் இல்லை இலையான் பற்றி கதைகிறோம்..... :P

  • தொடங்கியவர்

சிங்கத்தைப் பிடிச்சிக் கொல்றது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை நண்பர்களே. நம்பாளுங்க என்ன செய்றாங்கன்னு பாருங்களேன்.

ரஜினிகாந்த் :

சிங்கத்தின் முன்னால் நின்று கர்ஜிக்கிறார். “ஏ…ஏ…நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…தெரியுமில்ல பாஷா….ம்ம்ம்ம்மாணிக் பாஷா”. சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட, பயந்துபோன சிங்கம் அவர் எப்போ வருவாரோ, எப்படி வருவாரோ என்ற பயத்தில் இருந்தே செத்துப்போனது. ஆனால் கடைசிவரை தலைவர் வரவேயில்லை என்பது வேறுவிஷயம்.

மணிரத்னம் :

சிங்கத்தை ஒரு இருட்டறையில் தள்ளுகிறார். அது வெளியே செல்ல முயற்சிக்கிறது. உடனே ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகிறார். அந்த வெளிச்சத்தில் மெல்ல சிங்கத்தின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் முணுமுணுக்கிறார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். டார்ச்சர் தாங்காத சிங்கம் தற்கொலை செய்து கொள்கிறது.

சாப்ட்வேர் எஞ்சினியர் :

ஒரு பூனையைப் பிடித்துக்கொண்டு வருகிறார். ப்ளாக்பாக்ஸ் டெஸ்டிங்க், ஒயிட் பாக்ஸ் டெஸ்டிங், யூனிட் டெஸ்டிங், சிஸ்டம் டெஸ்டிங் என எல்லா வகை டெஸ்டிங்கும் பண்ணிப்பார்க்கிறார். கடைசியில் தான் பிடித்துக்கொண்டுவந்தது சிங்கம்தான் என அடித்துக் கூறுகிறார். அதற்கு முன்னூத்தி சொச்சம் பக்கங்கள் உள்ள உதவிக் கையேட்டையும் கொடுக்கிறார். அது சிங்கமல்ல என ஒருவர் கம்ப்ளைண்ட் செய்ய, நம்மவர் கூலாக சொல்கிறார். “அப்படியா! அடுத்த வெர்சனில் அதை சிங்கமாக மாற்றிவிடுவோம். உங்களுக்கு ப்ரீ அப்கிரேட் செய்துதருகிறோம்”

இந்தியப்போலிஸ் :

இவர் ஒரு விலங்கைப் பிடித்துவிடுவார். அதை உருட்டி, மிரட்டி, கொன்னுடுவேன் என டார்ச்சர் செய்து, முட்டியைப் பெயர்த்தெடுத்துவிடுவார். குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடக்கும் அந்த விலங்கு இறுதியில் தான் சிங்கம் தான் என ஒத்துக்கொண்டுவிடும். வேறுவழி :-)

விஜயகாந்த் :

சிங்கத்தை உட்கார வைத்துக்கொண்டு அடுக்குகிறார் : தமிழ்நாட்டுல பதிமூணு ‘ஜூ’ இருக்கு. அதுல ஏழு கவர்மெண்டு. ஆறு தனியார். முன்னூத்தி இருபத்தெட்டு குகைங்க அதுல இருக்கு. அதுல எழுநூறு சிங்கங்கள் இருக்கு. 1996ல இருந்தது ஆயிரத்து முன்னூறு சிங்கங்கள். இப்போ 2006ல இருக்கறது…..அவர் பேசி முடிக்கவில்லை, சிங்கம் நாண்டுக்கிட்டு சாகிறது.

மேனகா காந்தி :

ஆபத்திலிருக்கும் சிங்கத்தைக் காப்பாற்றி தன் வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவார். அதோடு நில்லாமல் அதற்குப் பசியெடுக்கும் போது வேளாவேளைக்கு காய்கறிகளும் பழங்களும் கொடுத்து அதைக்கொல்லாமல் கொல்லுவார்.

ரவிசாஸ்திரி :

சிங்கத்தைக் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுவார். அது பவுலிங் போட இவர் பேட்டிங் செய்வார். சுமார் இருநூறு பந்துகள் போட்டபின் ஒரு ரன் எடுத்துவிடுவார். சிங்கம் இவர் காலடியில் சரண்டர் ஆகிவிடும்.

ஜார்ஜ்புஷ் :

ஒரு கிழட்டுச் சிங்கத்தைக் கொன்றுவிடுகிறார். எல்லோரையும் கடிச்சிக் குதறிக்கிட்டு இருந்த சிங்கத்தைக் கொன்னுட்டேன் என எக்காளமிடுகிறார். இறந்துபோன சிங்கத்தை டெஸ்ட் செய்கிற டாக்டர்கள், அதற்குப் பிறவியிலேயே பல் கிடையாது என அறிவிக்கின்றனர்.

வான்வில் அண்ணா சிங்க ஜோக் சூப்பர்............

ரஜினிகாந்த் :

சிங்கத்தின் முன்னால் நின்று கர்ஜிக்கிறார். “ஏ…ஏ…நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்…தெரியுமில்ல பாஷா….ம்ம்ம்ம்மாணிக் பாஷா”. சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட, பயந்துபோன சிங்கம் அவர் எப்போ வருவாரோ, எப்படி வருவாரோ என்ற பயத்தில் இருந்தே செத்துப்போனது. ஆனால் கடைசிவரை தலைவர் வரவேயில்லை என்பது வேறுவிஷயம்.

ஹீஹீ கூல்

காதலன் ;_ காதலியே நீ சுவீட் ஆக 3 வார்த்தை சொல்லு. அவ்வார்த்தையில் நான் சொர்க்கத்துக்கு போவது போல இருக்கணும்.

காதலி ;- தூக்கு போட்டு செத்துடு.

காதலன்;- :lol:

  • தொடங்கியவர்

வேலைக்கான நேர்காணலில்...உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!

இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

வான்வில் அண்ணா உங்க அவதார் மாறி போச்சு ஏன்?

  • தொடங்கியவர்

ஹீ ஹீ முன்னைய அவத்தருக்கு மாறிட்டேன்

ஆமாம் இப்ப தான் மொண்டசூரியிற்கு வாற மாதிரி இருக்கு........... :P

  • தொடங்கியவர்

பையன்: அப்பா! ஸ்கூல்ல இந்த குமார் தொல்ல தாங்க முடியலப்பா.எப்ப பாரு என்ன அடிச்சுகிட்டே இருக்கான்.

அப்பா: நீ இத உங்க வாத்தியார்கிட்ட சொல்ல வேண்டியதுதானடா.

பையன்: அட போப்பா! எங்க வாத்தியார் பேரு தான் குமார்.

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: டேய் ராஜா! உலகத்த முதல்ல கப்பல்ல சுத்திவந்தது யாரு சொல்லு.

ராஜா: சார்! வெட்டித்தனமா ஊர் சுத்தரவனுங்கள பத்தி நாம ஏன் சார் பேசனும்.

-----------------------------------------------------------------------------

ஆசிரியர்: மாணவர்களே! மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு ரயில் 90கிமீ வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.திருச்சியில் இருந்து மதுரை நோக்கி ஒரு ரயில் 110கிமீ வந்து கொண்டு இருக்கிறது.இரண்டும் ஒன்றை ஒன்று கடக்கும்போது என் வயதென்ன?

மாணவன்: சார்! 54 சார்.

ஆசிரியர்: சபாஷ்! எப்படிடா கரெக்டா சொன்ன?

மாணவன்: எங்க மாமா ஒருத்தர் இருக்கார் சார்.அவர் ஒரு அரைலூசு.அவருக்கு வயசு 27.

:lol :): :huh::lol:

நிலா அக்கா இப்ப சிரித்தனீங்களா........ :P :P

நிலா அக்கா இப்ப சிரித்தனீங்களா........ :P :P

நகைச்சுவை பகுதிக்குள் வந்து அழவா முடியும்? :angry: :P

நகைச்சுவை பகுதிக்குள் வந்து அழவா முடியும்? :angry: :P

சிரிக்க தான் வேண்டும் என்று இல்லை அழவும் செய்யலாமே............ :P :P

சிரிக்க தான் வேண்டும் என்று இல்லை அழவும் செய்யலாமே............ :P :P

அப்போ அழக்கூடியவாறு நகைச்சுவை போடுங்க கண்டிப்பாக அழுவேன். அதுசரி உங்க பக்கத்துவீட்டு பாட்டி எபப்டி இருக்கிறாங்க? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.