Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயற்றிறனற்ற வடக்குமாகாண சபை இனியாவது எழுச்சி பெறுமா

Featured Replies

செயற்றிறனற்ற வடக்குமாகாண சபை இனியாவது எழுச்சி பெறுமா

போர் முடி­வுக்கு வந்­த­தன் பின்­னர், வடக்கு மாகாண சபை தமிழ் மக்­க­ளி­டம் திணிக்­கப்பட்­ட­போது, அது உச்ச அதி­கா­ரம் பெற்­றி­ராத ஒன்று என்று தலை­வர்­கள் பல­ரும் தமி­ழர்­க­ளின் தலை­யில் திணிக்­கப்­பட்ட அதைக் கொண்டு சில மேலா­திக்க விட­யங்­க­ ளைச் செய்ய முடி­யா­தா­யி­னும் பல விட­யங்­களை நிறை­வேற்ற­ இய­லும்.

ஏனைய மாகா­ண­ச­பை­கள், எத்­த­னையோ அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை தத்­த­மது மாகா­ணங்­க­ளில் ஏற்­ப­டுத்தி இளை­ஞர் யுவ­தி­க­ளுக்கு வேலை வாய்ப்­புக்­களை வழங்கி அவர்­களை முன்­னேற் றப்­பா­தை­யில் இட்டு செல்­கின்­ற­ன.

வடக்கு மீது பல தரப்­புக்­க­ளும் கரி­சனை

இத்­த­கைய நிலை­யில் போரி­னால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாகா­ண­மாக வடக்கு இருப்­ப­தால், பன்­னாட்­டின் கரி­ச­னை­யும், இலங்­கை­யின் கவ­ன­மும், நிதி­யும் அதி­க­மா­கவே வடக்­குக்கு கிடைக்­கப் பெற்­றது.

அதைக்­கொண்டு வடக்கு மாகாண சபை, வடக்கு மாகா­ணத்­தில் என்ன அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­தி­னார்­கள். ஒதுக்­கப்­பட்ட நிதி முற்­றி­லும் செலவு செய்­யப்­ப­டா­மல், அவற்­றில் ஒரு பகுதி வருடாவரு­டம் திறை­சே­ ரிக்­குத் திரும்­பிப்­போ­னதை எவ­ரும் மறந்­து­விட முடி­யாது.

மக்­க­ளைத் திருப்­திப்­ப­ டுத்த நிதி எது­வும் திரும்­ப­வில்லை என்று ‘விடு­கை’க் கதை­கள் கூறி­யது ஒரு­பு­ற­மி­ருக்க, தொடர்ந்­தும் எம் முன் னா­லி­ருக்­கும் இனப் பி­ரச்­சினை சம்­மந்­த­மா­கப் பேசிக் கொண்­டி­ருப்­ப­தற்­குச் சமாந்­த­ர­மாக, எமது வடக்­கின் பொரு­ ளா­தார அபி­வி­ருத்தி சம்­பந்­த­மாக தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்க வேண்டியது அவசியம்.

வெறு­மனே இனப்­பி­ரச்­சினை சம்­மந்­த­மான பிரே­ர­ணை­ களை மட்­டும் நிறை­வேற்­றிக் கொண்­டி­ருக்­காது, அத­னு­டன் இணைந்த அபி­வி­ருத்­தி­யை­யும் நாட்­டில் ஏற்­ப­டுத்­தியே­ ஆக வேண்­டும்.

அந்த வகை­யில் வடக்கு மாகா­ண­சபை இது­வரை கால­மும் சாதித்­தது என்ன? என்ற கேள்வி, எல்­லோர் மன­தி­லும் எழ வேண்­டிய ஒன்றே.
எத்­தனை தொழிற்­சா­லை­கள் இங்கு ஆரம்­பிக்­க­பப்­பட்­டன?
எத்­தனை பேருக்கு வேலை­வாய்ப்­புக்­கள் வழங்­கப்­பட்­டன?

விவ­சாய முன்­னேற்­றம் என்ன ஏற்­ப­டுத்­தப்­பட்­டது?
கால்­நடை அபி­வி­ருத்தி என்ன நிலை­யில் உள்­ளது?
கட்­டு­மான அபி­வி­ருத்­தி­யின் நிலை­யென்ன? உப்­ப­ளங்­கள், சீமெந்­துத் தொழிற்­சா­லை­கள் , விமா­னத் தளங்­கள் ஏன் இன்­னும் உருப்­பெ­ற­வில்லை?

இறக்­கு­ம­திக்­குள் மட்­டும் சிக்கி சின்­னா­பின்­ன­மா­கிக்­கொண்­டி­ருக்­கும் எமது தமிழ் மக்­களை ஏன் ஏற்­று­மதி குறித்­துச் சிந்­திக்க வைக்­கும் விதத்­தில் செயற்­ப­ட­வில்லை. போரி­னால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் வாழ்க்­கைத்­த­ரத்­தின் உயர்ச்சி மட்­டம் ஏன் இன்­ன­மும் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை?

இயற்­கைச் சூழல் பிரச்­சி­னை ­கள் வந்த போதும், அதை மக்­க­ளுக்கு தெரி­விக்­கா­மல் மூடி மறைக்க முற்­பட்­டமை போன்ற சகல பிரச்­ச­னை­க­ளும் இன்று விசு­வ­ரூ­பம் எடுத்து நிற்­கின் றன.

ஆக, வடக்கு மாகாண சபை தனியே பிரே­ர­ணை­ களை நிறை­வேற்­றி­ய­தற்குப் பா­லும், விழாக்­களைக் கொண் டா­டி­ய­தற்கு அப்­பா­லும், நிதி­க­ளைத் திருப்பி அனுப்பி வைத்­த­தற்கு அப்­பா­லும், நிதியை விர­யம் செய்­த­தற்கு அப்­பா­லும் ஊழ­லுக்கு அப்­பா­லும் சாதித்­தது என்ன? விடை ஒன்­று­மே­யில்லை என்­று­தான் அமை­யப்­போ­கி­றது.

வினைத்­தி­ற­னற்ற நிர்­வா­கம் ஆக, வடக்கு மாகாண சபை தனது ஆட்சி அதி­கார வரம்பு முறை­க­ளுக்கு உட்­பட்டு இது­வரை சாதித்­த­தை­விடச் சாதிக்­கா­த­வையே இமா­ல­ய­மா­கத் தெரி­கி­றது. இந்த வகை­யில் உற்று நோக்­கி­னால், அது இவ்­வ­ளவு கால­மும் வினைத்­தி­ற­னற்று இயங்கி வந்­தமை புல­னா­ கி­றது.

இத்­தகு வினைத்­தி­ற­னற்ற நிலைக்கு மாகாண சபை­யின் உறுப்­பி­னர்­கள், அமைச்­சர்­க­ளுக்­கப்­பால் முத­ல­மைச்­ச­ரின் வகி­பங்கு அதி­க­மா­கவே அமை­யும் என்­பதை விரும்­பியோ விரும்­பா­மலோ ஏற்­றுக்­கொண்­டே­தான் ஆக வேண்­டும்.

இதற்கப்­பால் முதல்­வர் தொடர்­பான சமீ­பத்­தைய பிரச்­சி­னை­க­ளும், முன்­னரே வினைத்­தி­ற­னாக உள்­வீட்­டுக்­குள் தீர்க்­கப்­ப­டக் கூடிய ஒன்றை சந்­திக்குக் காவிச்­சென்று மக்­களை அதி­ருப்­திக்கு உள்­ளாக்­கி­ய­தற்கு அப்­பால் எமது தமிழ்த் தேசிய ஒற்­று­மை­யை­யும் கேள்­விக்­குள்­ளாகி, தெற்­குக்­கும் பன்­னாட்­டுத் தரப்­புக்­கும் தீனி­யிட வைத்­துள்­ளது.

எனவே, இவ்­வாறு வினைத் தி­ற­னற்ற வடக்கு மாகா­ண­சபை இயங்க வேண்­டி­யது அவ­சி­யம்­தானா? என மக்­கள் சின­ம­டை­வ­தற்­கும் வாய்ப்­புண்டு. எனவே சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ரும், முத­ல­மைச்­சர் உட்­பட, இனி­யா­வது வட­மா­காண சபையை மக்­க­ளுக்­கான சபை­யாக மாற்றி அபி­வி­ருத்­தி­யு­ட­னி­ணைந்த உரிமை வென்­றெ­டுப்­புக்­கான சபை­யாக உரு­வாக்க முய வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­ய­மா­கும்.

http://uthayandaily.com/story/8497.html

தமிழரசுக்கட்சி கயவர்கள் இருக்கும் வரை எதையும் உருப்படியாக செய்யவிடமாட்டார்கள்!

மாபெரும் திட்டங்கள் இல்லையென்றாலும் வட மாகாணசபை பல நூறு திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்டுயுள்ளது! இவை காமாலைக் கண்  உள்ளவர்களுக்கு தெரியாது. அல்லது தெரியப் போவதில்லை! தம்மை அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் ஒருசில அறிவிலிகளுக்கும் இவை தெரியப் போவதில்லை! அவர்கள் தொடர்ந்தும் ஏதாவது ஒன்றையாவது சொல்லமுடியுமா என்று கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

மேலும், வட மாகாணசபையின் செயற்திறன் இன்னும் பலமடங்கு அதிகரிக்க வேண்டும் என்பது உண்மையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.