Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைதூக்குகிறது புலிகள் இயக்கம் மைத்திரியின் ஆட்சி அதற்கு சிறந்த வாய்ப்பு என்கிறார் விமல்

Featured Replies

தலைதூக்குகிறது புலிகள் இயக்கம்

மைத்திரியின் ஆட்சி அதற்கு சிறந்த வாய்ப்பு என்கிறார் விமல்

 
 
தலைதூக்குகிறது புலிகள் இயக்கம்
 

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்­டும் தலை தூக்­கு­வ­தற்­குச் சாத­க­மான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்­திரி ஆட்சி. இப்­போது அந்த யுகம் தோன்­றி­விட்­டது.

புலி­கள் மெல்ல மெல்ல தலை­தூக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர். புதிய அர­ச­மைப்­பின் ஊடாக கூட்­டாட்சி கொடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன் இந்த அரசு கவிழ்க்­கப்­ப­ட­வேண்டும்.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது நாட்டில் உள்ள தொழிலார்கள்,வர்த்தகர்கள்,சிறுபான்மை இன மக்கள் மற்றும் ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிக்கு வாக்களித்தோர் என எல்லோரும் இன்று குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர்.இந்த நாடு புதிய வழியில் பயணிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

எமது ஆட்சியில் பல விடயங்களைச் செய்தோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பலமான அடித்தளத்தை இட்டோம். பன்னாட்டுக் கடன் சுமை குறைந்தது.ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டது.பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி பன்னாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தோம்.

பன்னாட்டு அழுத்தங்கள் இருந்தபோதும்கூட அவற்றையும் தாண்டி நாம் இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம். அதைவிடவும் விரிவான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தியாகமிக்க முன்னுதாரணமிக்க-உணர்வுமிக்க தலைமைத்துவத்தின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த அரசு பயணிக்கின்றது.புதிய அரசமைப்பின் ஊடாக கூட்டாட்சி கொடுக்கப்படுவதற்கு முன்-எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் இந்த அரசு கவிழ்க்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் போனதைத் திரும்பப் பெற முடியாமல் போய்விடும். அரசின் மோசமான பயணத்தை நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

புலிகளுக்குத் தேவையாக இருப்பது மீண்டும் தலை தூக்குவதற்குச் சாதகமான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்திரி ஆட்சி என்று அப்போது நாம் கூறியபோது மக்கள் நம்பவில்லை. பன்னாட்டுச் சதி என்று கூறியபோது அதைக் கேலியுடன் பார்த்தனர்.நாம் அப்போது கூறியவை எல்லாம் இப்போது உண்மையாகிக்கொண்டு போகின்றன-என்றார்.

http://uthayandaily.com/story/8531.html

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே சிங்கள மக்களுக்கு புலிகள் அழிக்கப்பட்டு போரில் வெற்றி பெற்றுவிட்டோம்.. சொறீலங்கா மாதாவை விடுவித்துவிட்டோம் என்று அறிக்கை கொடுத்தீர்கள்.

அப்ப சிங்கள மக்கள் மாதனமுத்தாவின் பேரன்களா... மீண்டும் அழிந்த புலிகள் தலையெடுக்கிறார்கள் என்பதை நம்ப.

ஆக.. உங்களைப் பொறுத்த வரை சிங்கள மக்களின் முட்டாள் தனத்தையும்.. புலிகளையும் வைச்சு மட்டும் தான் வங்குரோத்து அரசியல் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறீர்கள்.

உங்கட பாசையில் சொன்னால்.. புலிகளை அழிச்சது தப்பாப் போச்சில்ல. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.