Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஐ எதிர்ப்பதாலேயே என்னை விரட்டச் சதி!

Featured Replies

13ஐ எதிர்ப்பதாலேயே என்னை விரட்டச் சதி!

 
 
13ஐ எதிர்ப்பதாலேயே என்னை விரட்டச் சதி!
 

ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும். எமது தனித்துவம் பேணப்பட வேண்டும் என்றால் வெறும் 13ஆவது திருத்தச் சட்டத்துடனான தீர்வை நாங்கள் முற்று முழுதாக எதிர்க்க வேண்டும். இதையே அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் ராஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பலநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சவால்களில் ஈடுபடவும் முன்வந்துள்ளார்கள்.

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சா் க.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் ஆறுமுகநாவலா் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எமது நிலையில் இருந்துதான் பிரச்சினையை அணுகவேண்டுமே தவிர கொழும்பின் பார்வையில் இருந்தல்ல. ஒற்றையாட்சியில் 13ஆவது திருத்தச் சட்டத் தீர்வானது என்றென்றைக்குமே தமிழ் மக்களைத் தமதுஅடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://uthayandaily.com/story/8744.html

  • தொடங்கியவர்

கொழும்புப் பார்வை தீர்வுக்கு உதவாது

p10-94cc7f6047fd067a4e5ca293b8fc439dc888dab8.jpg

 

ஒற்றையாட்சிக்குள் தீர்வென்பது தமிழ் மக்களை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும்; முதலமைச்சர் சி.வி. எச்சரிக்கை  

(நமது நிருபர்) 

அத்திவாரத்தை கெட்டியாக கட்டாவிடின் முழுக்கட்டடமே ஒருநாள் தகர்ந்துவிழும் 

ஒற்றையாட்சி என்றவுடன் நாம் கோரிய தேசியம், தாயகம், சுயநிர்ணயம், தன் னாட்சி என்பன இருந்த இடம்தெரியாமல் மறைந்துவிடும். 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கூட வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெறாது. ஆகவே நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்  னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரன் தெரிவித்துள்ளார்.  

தேசியம், சுய­நிர்­ணயம், தன்­னாட்சி, தாயகம், வடக்கு, கிழக்கு இணைப்பு என்று அடிப்­ப­டை­களைக் கூறி­விட்டு ஒற்­றை­யாட்­சியின் கீழ் ‘13 ஆவது திருத்த சட்ட முழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்தல்' என்­பதை ஏற்­றுக்­கொள்­வது என்­பது எத்­த­கைய விப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். நாங்­கள்தான் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். எமது நிலை­யி­லி­ருந்தான் பிரச்­சி­னையை அணு­க­வேண்­டுமே தவிர கொழும்பின் பார்­வை­யி­லி­ருந்து அணு­க­மு­டி­யாது. ஒற்­றை­யாட்­சியில் 13 ஆவது திருத்த சட்டத் தீர்­வா­னது என்­றைக்­குமே தமிழ் மக்­களை தமது அடை­யாளம் தெரி­யாமல் ஆக்­கி­விடும். ஒற்­றை­யாட்சி எம்மை என்­றைக்­குமே அடி­மை­க­ளாக்­கி­விடும் என்றும் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  

இதனை நான் வலி­யு­றுத்­து­வதால் என்னை ஓரங்­கட்டி அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டி­விட பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. சிலர் சதிகள் சறுக்­கி­யதும் சவால்­களில் ஈடு­பட முன்­வந்­துள்­ளார்கள். என்றும் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் கூறினார்.

யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரியில் ஆறு­மு­க­நா­வலர் சிலை திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது

நாவலர் தம­து­கொள்­கை­களில் விட்டுக் கொடுக்­கா­த­ஒ­ரு­நி­லையைப் பின்­பற்­றி­வந்­தமை பலரால் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. அண்­மையில் ஒருவர் என்­னிடம் கூறினார் ஏன் நீங்கள் தமிழ் மக்­களின் உரி­மைகள் சம்­பந்­த­மாக நாவலர் இருந்­த­துபோல் விடாப்­பி­டி­யாக நிற்­கின்­றீர்கள்? சம்­பந்தர் போல் விட்டுக் கொடுக்­க­லாமே என்று. அதற்­குநான் சம்­பந்தர் ஐயா விட்டுக் கொடுக்­கின்­றாரோ இல்­லையோ நான் அறியேன். ஆனால் அடிப்­படை அத்­தி­வா­ரத்தை நாங்கள் கெட்­டி­யாகக் கட்­டா­விட்டால் முழுக் கட்­ட­ட­முமே ஒருநாள் தகர்ந்து விழுந்­து­விடும். பிழை­யான அத்­தி­வா­ரத்தில் சரி­யான கட்­டடம் காலா­கா­லத்தில் நிறுவப் படலாம் என்று எண்­ணு­வ­து­ம­ட­மை­என்றேன்.

கொஞ்சம் கொஞ்­ச­மாக பிறகு கட்­டலாம் என்­பது கூட தகுந்த அத்­தி­வாரம் இட்ட பின்னர் தான் பொருந்தும். இத­னால்தான் சைவ­ச­மய அனுஷ்­டா­னங்­க­ளிலும் அவற்றின் நெறி­மு­றை­க­ளிலும் ஒரு இறுக்கம் நாவ­லரால் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. அன்பு நிலை­வேறு அனு­ப­வ­நி­லை­வேறு. அடிப்­ப­டை­க­ளை­விட்டுக் கொடுக்­காது அன்­பு­நி­லையில் வாழலாம் என்­பதை எமக்­கு­ணர்த்­தி­யவர் நாவலர்.

தேசீயம்,சுய­நிர்­ணயம்,தாயகம்,தன்­னாட்சி,வடக்­கு­கி­ழக்கு இணைப்­பு­என்­று­அ­டிப்­ப­டை­களைக் கூறி­விட்­டு­ஒற்­றை­யாட்­சியின் கீழ்13ஆவ­து­தி­ருத்­தச்­சட்­ட­மு­ழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்தல் என்­ப­தை­ஏற்றுக் கொள்­வ­தென்­ப­து­எத்­த­கை­ய­வி­ப­ரீ­தங்­களை ஏற்­ப­டுத்தும் என்று நாங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

ஒற்­றை­யாட்சி என்­ற­வுடன் நாம் கோரி­ய­தே­சியம்,தாயகம்,சுய­நிர்­ணயம்,தன்­னாட்­சி­என்­பன இருந்த இடந் தெரி­யாமல் மறைந்­து­வி­டு­வன. 13ஆவது திருத்­தச்­சட்ட முழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்­தலின் கீழ் வடக்கு கிழக்கு இணைப்பு கூட இடம்­பெ­றாது. ஆக­வே­நாங்கள் கேட்­பதில் எதை­யு­மே­த­ராது ஒரு­தீர்வைப் பெற­எத்­த­னிப்­பதே எம­து­கொ­ழும்புப் பார்வை. எமது இனப்­பி­ரச்­ச­னையைத் தீர்க்க கொழும்பின் யன்னல்,கொழும்பின் பார்­வை­யா­வன ஒரு­போதும் உதவா என்­ப­தேஎன் கருத்து. அர­சியல் பிரச்­ச­னை­யா­ன­து­எங்­க­ளுக்­கு­ஏற்­பட்­ட­ஒன்று. நாங்கள் தான் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். எம­து­நி­லையில் இருந்­துதான் பிரச்­ச­னை­யை­அ­ணு­க­வேண்­டுமே ஒளி­ய­கொ­ழும்பின் பார்­வையில் இருந்­தல்ல. ஒற்­றை­யாட்­சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்­வா­னது என்­றென்­றைக்­குமே தமிழ் மக்­களைத் தமது அடை­யாளம் தெரி­யாமல் ஆக்­கி­விடும்.ஒற்­றை­யாட்­சி­எம்மை என்­றென்­றைக்­குமே அடி­மைகள் ஆக்­கி­விடும்.எமது தனித்­துவம் பேணப்­ப­ட­வேண்­டு­மென்­றால்­வெறும் 13ஆவது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்­று­மு­ழு­து­மாக எதிர்க்­க­வேண்டும். இதை­யே­தி­ரு­வா­ளர்கள். அமிர்­த­லிங்கம்,சிவ­சி­தம்­பரம் மற்றும் சம்­பந்தன் ஐயா­ஆ­கியோர் 28.10.1987ஆம் திக­திய கடி­தத்தால் ரஜீவ் காந்­திக்கு வலி­யு­றுத்­தி­னார்கள்.அவர்கள் வலி­யு­றுத்­தி­யதை நான் இன்று வலி­யு­றுத்­து­வதால் என்னை ஓரம் கட்டி அர­சி­யலில் இருந்து விரட்­டி­வி­ட­பல நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. சிலர் சதிகள் சறுக்­கி­யதும் சவால்­களில் ஈடு­ப­ட­முன்­வந்­துள்­ளார்கள். எமது இனம் பற்­றி­சிந்­திப்­பது நாவ­லரின் இறுக்கச் சிந்­த­னை­க­ளுக்கு ஒப்­பா­னது என்றால் இன்று நாவ­லரின் சிந்­த­னை­களைப் பின்­பற்­ற­வேண்­டி­ய­ஒரு கடப்பாடுஎமக்கு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்.

அவ்வாறானஅடிப்படையில் பற்றுறுதி கொண்ட ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் ஆங்கிலக் கல்வியைக்கற்ற,தமிழைக் கற்பித்த,தமிழ் விவிலிய நூலை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாகஇருந்தபேர்சிவல் பாதிரியார் அதிபராக இருந்த இதே கல்லூரியில் அமைத்து திரைநீக்கம் செய்வது சமயங்களின் எல்லையைக் கடந்து தமிழுக்கும் அதன் செழுமைக்கும் வழங்கப்படுகின்ற ஒரு அங்கீகாரம் என்றவகையில் இன்றைய நிகழ்வுகாலம் கடந்தும் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநிகழ்வாக அமையும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-01#page-1

சம்பந்தன் 87 இல் வலியுறுத்தியதையே நான் இப்போது வலியுறுத்துகிறேன்-வடக்கு முதலமைச்சர்!

சம்பந்தன் 87 இல் வலியுறுத்தியதையே நான் இப்போது வலியுறுத்துகிறேன்-வடக்கு முதலமைச்சர்!

 

எமது தனித்துவம் பேணப்பட வேண்டுமென்றால் வெறும் 13வது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்று முழுதுமாக எதிர்க்க வேண்டும். இதையே திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் 28.10.1987ந் திகதிய கடிதத்தால் ரஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாவலர் சிலையினைத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழுவடிவம் வருமாறு,

கல்லூரி அதிபர் அவர்களே, அன்பான ஆசிரியர்களே, மாணவ மணிகளே, மற்றும் சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!

இன்றைய தினம் நாவலர் நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன் யாழ். மத்திய கல்லூரியில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

1822ம் ஆண்டு மார்கழித் திங்கள் 18ம் நாள் கந்தர் சிவகாமி குடும்பத்தினருக்கு கடைசி மகனாகப் பிறந்த ஆறுமுகநாவலர் அவர்கள் சிறு வயதிலேயே மூதுரை முதலிய நீதி நூல்களையும் நிகண்டு முதலிய கருவி நூல்களையும் கற்றுத்தேறி கல்வியிலுந் தமிழ்மொழி பாண்டித்தியத்திலும் சிறந்து விளங்கினார். இவரது அதீத திறமையை அறிந்து கொண்ட இவரின் சகோதரர்கள் இவரை சரவணமுத்துப் புலவர், சேனாதிராஜாப்புலவர் ஆகிய வித்துவான்களிடத்தில் தமிழ்க் கல்வியைக் கற்குமாறு அனுப்பினார்கள்.

கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்து கற்றுவந்த வேளையில் அவரின் கூரிய புத்தித்திறமைக்கு உபாத்தியாயர்கள் சொல்லிக் கொடுத்த பாடல்களும் நன்னூற் சூத்திரமும் திருப்தியை உண்டாக்கவில்லை.

இவரின் கல்வித்தாகத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவருடைய மைத்துனர் விஸ்வநாதமுதலியார் மயில்வாகனர் என்பவர், அக்காலத்தில் பெரிய பதவியில் செல்வாக்குடையவராக விளங்கியமையால், ஆறுமுகநாவலரை கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், திருவாதவூரர்புராணம் முதலிய புராணங்கள் படிக்கப்படும் கோவில்களுக்கு அழைத்துச் சென்று அங்கே புராணப் படிப்புக்களைச் செவிமடுத்து அறிவு மேலோங்கச் செய்தார்.

எனினும் இவ்வாறான புராணப்படிப்புகளில் இலக்கணப் பிழையாக அர்த்தம் சொல்லியவர்களுடனும் தவறாக அர்த்தம் சொல்லியவர்களோடும் அவர் பொருதிக் கொண்டார். அவரின் தமிழ் ஆற்றலைக் கண்ணுற்ற அவரின் சகோதரர்கள் பீற்றர் பேர்சிவல் என்னும் பாதிரியாருடைய ஆங்கிலப் பள்ளிக்கூடத்திற்கு ஆங்கிலம் கற்குமாறு அனுப்பினார்கள். அதே பாடசாலையில் தான் இன்று ஆறுமுகநாவலர் அவர்களுக்கு சிலை அமைத்து திரை நீக்கம் செய்து வைத்துள்ளோம். அதாவது யாழ் மத்திய கல்லூரியிலேயே ஆறுமுகநாவலர் அவர்கள் தமது ஆங்கிலக் கல்வியை தொடங்கினார்.

ஆங்கிலப் பாடசாலையில் அவரின் மொழித் திறமையைக் கண்ணுற்ற பேர்சிவல் பாதிரியார் அவர்கள் அவரை அதே பாடசாலையில் கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கவும் மேல் வகுப்புகளுக்கு தமிழ் கற்பிக்கவும் ஒழுங்கு செய்தார். பாதிரியாரின் வேண்டுகோளுக்கு இணங்க வேதனம் எதுவும் பெறாது அவர் சில காலம் கற்பித்தார். ஆறுமுகநாவலர் அவர்களின் மொழித்திறமையின் காரணமாக தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் ஆங்கிலத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கும் சுத்த செந்தமிழில் பேசுவதற்கும் இவருக்குச் சமமாக ஒருவரும் இல்லை என்று யாழ்ப்பாணம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. இதனை அறிந்த பேர்சிவல் பாதிரியார் வேதநூலாக விளங்குகின்ற பைபிளை தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு ஆறுமுகநாவலரைப் பணித்தார்.

இவ்வாறு ஆறுமுகநாவலர் அவர்களால் 14 வருடங்கள் தொடர்ச்சியாக முயன்று எழுதப்பட்ட பைபிள் நூலின் தமிழாக்கம் காலக் கிரமத்தில் வெளிவந்தது. அதே காலத்தில் இந்தியாவிலும் இன்னோர் மொழிபெயர்ப்பு உருவாக்கம் பெற்றது. இவ் இரு நூல்களில் எந்த நூல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதற்காக இந்தியாவில் வசித்த ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் பாண்டித்தியம் பெற்ற மகாலிங்க ஐயரிடம் இவ் இரு நூல்களும் கையளிக்கப்பட்டன. அக் காலத்தில் ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பில் கூடுதலாக யாழ்ப்பாணத்தில் பேசப்படுகின்ற தமிழ்மொழி மேலோங்கியிருந்த காரணத்தினால் அது இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு ஏற்புடையதாகாது என்ற ஒரு கருத்து பரவியிருந்த போதும் மகாலிங்க ஐயர் இரு நூல்களையும் கவனமாக ஆராய்ந்து ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பே சிறந்தது என்ற ஒரு முடிவிற்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட 50 வருட காலம் ஆறுமுகநாவலரின் மொழிபெயர்ப்பே பைபிளின் முதலாவது தமிழ் மொழிபெயர்ப்பாக இருந்து வந்தது.

அக் காலத்தில் கிறீஸ்தவ மதத்தின் சமய நூலாக கருதப்படுகின்ற பைபிளை மொழிபெயர்ப்புச் செய்வதற்கு ஆறுமுகநாவலரும் அந்த மொழிபெயர்ப்பை ஆராய்வதற்காக மகாலிங்க ஐயரும் அமர்த்தப்பட்டிருந்தமை அன்றிருந்த கிறீஸ்தவ சகோதரர்களின் சமய காழ்ப்புணர்வற்ற தன்மையை எடுத்துக்காட்டின. ஆறுமுகநாவலர் அவர்கள் பிறசமயங்களை தூற்றுகின்ற தன்மை அற்றவராக இருந்த போதும் சைவசமய அனுட்டானங்களிலும் அதன் நெறிமுறைகளை இறுகக் கடைப்பிடிப்பதிலும் மிகவும் கராராக இருந்தார்.

சைவ மரபில் மாகேஸ்வர பூஜையில் மாகேஸ்வரர் அல்லாதவர்கள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அடிப்படை வாதத்தைக் கொண்டவராக ஆறுமுகநாவலர் இருந்த போதும் வறியவர்கள், குருடர், வசதி இல்லாதவர்கள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு உணவளிப்பதிலும் உதவிகள் புரிவதிலும் பின்நின்றவர் அல்ல. ஆனால் உணவு அருந்தும் போது எல்லோருடனும் இணைந்து சாப்பிடுதலாகாது என்ற கொள்கையில் இருந்தார். ஆகவேதான் தனிமையாக உணவு உண்ணும் பழக்கம் உடையவராக அவர் வாழ்ந்தார்.

ஆறுமுகநாவலரின் காலத்தில் ஏற்பட்ட கொடுமையான பஞ்சம் காரணமாக நாவலர் அவர்கள் கஞ்சித்தொட்டி தர்மத்தை புரிவதற்கு முன்வந்தார். அக் காலத்தில் இருந்த காலனித்துவ ஆட்சியாளர்கள் இங்கிருக்கின்ற செல்வங்களை ஏற்றுமதி செய்வதில் அக்கறை கொண்டார்களே ஒழிய மக்களின் பஞ்சத்தை போக்குவதற்கு ஏற்ற பொறிமுறைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. அக் காலத்தில் கஞ்சித் தொட்டி தர்மத்தின் மூலம் பத்தாயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கஞ்சித்தொட்டித் தானம் செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற பெருமையைக் கொண்டிருந்தார் நாவலர் பெருமான் அவர்கள்.

ஆறுமுகநாவலர் அவர்கள் வாழ்ந்த காலத்தில் புகைப்படக் கருவிகளோ அல்லது ஒளிப்படச் சாதனங்களோ அற்ற நிலையில் ஆறுமுகநாவலர் அவர்களின் உருவத் தோற்றம் பற்றி சில ஐயப்பாடுகள் ஏற்பட்டன. அதாவது இன்று நாம் திரைநீக்கம் செய்து வைத்த உருவச் சிலையில் காணப்பட்டது போன்று கழுத்திலும் தலையிலும் உருத்திராட்ச மாலை அணிந்து தீட்சைக் குறிகளுடன் கையில் புத்தகத்தை ஏந்தியபடி இருக்கின்ற இத் தோற்றமானது கேள்விக்குட்படுத்தப்பட்ட போதும் ஆறுமுகநாவலரின் மூத்த சகோதரனின் மகனாகிய கைலாசபிள்ளையால் எழுதப்பட்ட ஆறுமுகநாவலர் சரித்திரம் எனும் நூலில் வரையப்பட்ட ஓவியம் இந்த வடிவத்தை ஒத்ததாக அமைந்திருந்ததால் இது சரியெனக் கொள்ளப்பட்டது.

நாவலர் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். நாவலர் காலத்திற்குமுன் எம்மவர் கடிதம் எழுதியது கூடச் செய்யுளிலேயே ஆகும். இன்றைய காதல் கடிதங்கள் கவிதையில் இருப்பதற்கு அந்த மரபுதான் காரணமோ நான் அறியேன்!

நாவலர் தமது கொள்கைகளில் விட்டுக் கொடுக்காத ஒரு நிலையைப் பின்பற்றி வந்தமை பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒருவர் என்னிடம் கூறினார் “ஏன் நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் சம்பந்தமாக நாவலர் இருந்தது போல் விடாப்பிடியாக நிற்கின்றீர்கள்? சம்பந்தர் போல் விட்டுக் கொடுக்கலாமே” என்று. அதற்கு நான் “சம்பந்தர் ஐயா விட்டுக் கொடுக்கின்றாரோ இல்லையோ நான் அறியேன். ஆனால் அடிப்படை அத்திவாரத்தை நாங்கள் கெட்டியாகக் கட்டாவிட்டால் முழுக் கட்டடமுமே ஒருநாள் தகர்ந்து விழுந்து விடும். பிழையான அத்திவாரத்தில் சரியான கட்டடம் காலாகாலத்தில் நிறுவப்படலாம் என்று எண்ணுவது மடமை” என்றேன். கொஞ்சம் கொஞ்சமாக பிறகு கட்டலாம் என்பது கூட தகுந்த அத்திவாரம் இட்ட பின்னர் தான் பொருந்தும். இதனால்த்தான் சைவ சமய அனுட்டானங்களிலும் அவற்றின் நெறிமுறைகளிலும் ஒரு இறுக்கம் நாவலரால் கடைப்பிடிக்கப்பட்டது. அன்புநிலை வேறு அனுபவ நிலை வேறு. அடிப்படைகளை விட்டுக் கொடுக்காது அன்பு நிலையில் வாழலாம் என்பதை எமக்குணர்த்தியவர் நாவலர்.

தேசியம், சுயநிர்ணயம், தாயகம், தன்னாட்சி, வடக்கு கிழக்கு இணைப்பு என்று அடிப்படைகளைக் கூறிவிட்டு ஒற்றையாட்சியின் கீழ் “13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல்” என்பதை ஏற்றுக் கொள்வதென்பது எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்று நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒற்றையாட்சி என்றவுடன் நாம் கோரிய தேசியம், தாயகம், சுயநிர்ணயம், தன்னாட்சி என்பன இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடுவன. 13வது திருத்தச்சட்ட முழுமையான நடைமுறைப்படுத்தலின் கீழ் வடக்கு கிழக்கு இணைப்பு கூட இடம்பெறாது. ஆகவே நாங்கள் கேட்பதில் எதையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப் பார்வை. எமது இனப்பிரச்சனையைத் தீர்க்க கொழும்பின் யன்னல், கொழும்பின் பார்வையாவன ஒரு போதும் உதவா என்பதே என் கருத்து. அரசியல் பிரச்சனையானது எங்களுக்கு ஏற்பட்ட ஒன்று. நாங்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள். எமது நிலையில் இருந்துதான் பிரச்சனையை அணுக வேண்டுமே ஒளிய கொழும்பின் பார்வையில் இருந்தல்ல. ஒற்றையாட்சியில் 13வது திருத்தச் சட்டத் தீர்வானது என்றென்றைக்குமே தமிழ் மக்களைத் தமது அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். ஒற்றையாட்சி எம்மை என்றென்றைக்குமே அடிமைகள் ஆக்கிவிடும். எமது தனித்துவம் பேணப்பட வேண்டுமென்றால் வெறும் 13வது திருத்தச் சட்டத் தீர்வை நாங்கள் முற்று முழுதுமாக எதிர்க்க வேண்டும். இதையே திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தன் ஐயா ஆகியோர் 28.10.1987ந் திகதிய கடிதத்தால் ரஜீவ் காந்திக்கு வலியுறுத்தினார்கள். அவர்கள் வலியுறுத்தியதை நான் இன்று வலியுறுத்துவதால் என்னை ஓரம் கட்டி அரசியலில் இருந்து விரட்டிவிட பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிலர் சதிகள் சறுக்கியதும் சவால்களில் ஈடுபட முன்வந்துள்ளார்கள். எமது இனம் பற்றி சிந்திப்பது நாவலரின் இறுக்கச் சிந்தனைகளுக்கு ஒப்பானது என்றால் இன்று நாவலரின் சிந்தனைகளைப் பின்பற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எமக்கு ஏற்பட்டுள்ளது என்றே அர்த்தம்.

அவ்வாறான அடிப்படையில் பற்றுறுதிகொண்ட ஆறுமுகநாவலர் அவர்களின் திருவுருவச் சிலையை அவர் ஆங்கிலக் கல்வியைக் கற்ற, தமிழைக் கற்பித்த, தமிழ் விவிலிய நூலை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக இருந்த பேர்சிவல் பாதிரியார் அதிபராக இருந்த இதே கல்லூரியில் அமைத்து திரைநீக்கம் செய்வது சமயங்களின் எல்லையைக் கடந்து தமிழுக்கும் அதன் செழுமைக்கும் வழங்கப்படுகின்ற ஒரு அங்கீகாரம் என்ற வகையில் இன்றைய நிகழ்வு காலம் கடந்தும் சரித்திரத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வாக அமையும் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது பழைய சிறப்புக்களையும் கல்வியின் முன்னேற்றத்தையும் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என அதிபரையும் ஆசிரிய சமூகத்தையும் வேண்டி எனதருமை மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

http://thuliyam.com/?p=72397

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடைகளை களைந்துவிட்டுதான் கதிரையில் இருக்க முடியும் என்றால் ..........
அவர்கள் அதற்கும் தயங்கப்போவதில்லை.

இப்போதான் நான் முதன் முதலாக ஆடை இன்றி இருக்கவில்லை 
ஒரு வயது பாபாவாக இருக்கும் போதும் இருந்து இருக்கிறேன் 
என்று தத்துவம் பேசிக்கொண்டு இருக்க கூடியவர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.