Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனவர்களுக்கு அரசே பொறுப்பு கூறவேண்டும்

Featured Replies

காணாமல்போனவர்களுக்கு அரசே பொறுப்பு கூறவேண்டும்

p5-2-10d3b74bb339eb99e286e4e877b7a68faa1f3eb7.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)
மட்டக்களப்பில் இரு தமிழ் இளைஞர்கள் கைதாகி காணாமல்போன சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நேற்று உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது. 

பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோருடன் கூடிய  மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது. இந் நிலையில் இந்த காணாமல் போதலுக்கு பொறுப்பேற்று அரசாங்கம் காணாமல் போனோரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இருவர் தொடர்பிலும் தலா 10 இலட்சம் ரூபாவை நட்ட ஈடாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. 

2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் தமிழ் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸாரால் கூறப்பட்டது. இந்தநிலையில், அவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், எனவே, அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் கோரி, மட்டக்களப்பை சேர்ந்த செல்வராஜா புஸ்பராணி மற்றும் அன்னாமலை செல்வராஜா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், மனுதாரர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

இதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என நீதியரசர்கள் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக, அப்போதைய மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ,எஸ்.விக்ரமரத்ன, தனது சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு 50,000 ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-04#page-1

8 hours ago, நவீனன் said:

இதன்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தால் 10 இலட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும் என நீதியரசர்கள் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக, அப்போதைய மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ,எஸ்.விக்ரமரத்ன, தனது சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு 50,000 ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழரின் விலைமதிப்பற்ற ஒரு உயிரை பறித்த சிங்கள அரச நீதித்துறை இயந்திரத்தின் ஓர் அங்கமான போலீசின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்கப்படும் இந்த நட்ட ஈட்டுத்தொகை தமிழ் மக்களை ஏமாற்றும் முயற்சி!

காணாமல் ஆக்கப்பட்ட ஒருவருக்கு குறைந்தது 10 கோடி (100 மில்லியன்) ரூபா நட்ட ஈடும் 5 ஏக்கர் காணியும் வழங்குவதே நல்லிணக்கத்துக்கான ஒரு பாதையை ஏற்படுத்தும்.

மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ்/இராணுவ கொலைகாரர்கள் பதவியில் இருந்து விலக்கப்படுவதுடன் சிறைகளில் அடைக்கப்பட வேண்டியவர்கள். இதன் மூலமே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்க முடிவதுடன் நல்லிணக்கத்துக்கான ஒரு பாதையை ஏற்படுத்தும்.

எனவே இந்த தீர்ப்பு நல்லிணக்கத்துக்கு வீழ்ந்த பாரிய பின்னடைவு. தமிழர் சிங்கள அரசின் நீதித்துறை இயந்திரத்தில் நம்பிக்கை வைக்கமுடியாது.

மிக அண்மையில் சர்வதேச நிபுணர்களும் சிங்கள அரச நீதித்துறை மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமந்தியிருந்தனர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.