Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோதனை மிக்க தமிழர்களது எதிர்காலம்

Featured Replies

சோதனை மிக்க தமிழர்களது எதிர்காலம்

 
சோதனை மிக்க தமிழர்களது எதிர்காலம்
 

வடக்கு அரசிய லரங்கில் இடம்­பெ­று­கின்ற சம்­ப­வங்­கள் தமி­ழர்­க­ளின் ஒற்­று­மைக்கு வேட்டு வைப்­ப­ன­வா­கவே காணப்­ப­டு­கின்­றன.

அதேவேளை தமிழ் மக்­கள், வாழ்க்கையே பிரச்சினைதான் என்­ப­து­போன்று சிரமத்தோடு தமது வாழ்­நா­ளைக் கடத்தி வரு­கின்­ற­னர். அவர்­கள் எதிர்­கொள்­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும்­மென்ற அறி­குறிகூடத் தென்­ப­ட­வில்லை.

அர­சி­ட­மும் இவர்­க­ளுக்­கான மாற்­றுத் திட்­டம் எது­வும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. தமிழ்த் தலை­வர்­கள் என்­ன­தான் உரத்துப் பேசினாலும் அர­சைப் பொறுத்­தவ­ரை­யில் செவி­டன் காதில் ஓதிய சங்­கின் நிலை­தான் காணப்­ப­டு­கின்­றது.

இத­னால் தமிழ்த் தலை­மை­க­ளால் ஒன்­றுமே செய்ய முடி­யா­த­தொரு நிலை­தான் தோன்­றி­யுள்­ளது. இந்த நிலை­யில்தான், வடக்கு மாகா­ண­ச­பை­யில் விரும்­பத்­த­காத சம்­ப­வங்­கள் இடம்­பெற்று முடிந்­து­விட்­டன.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரனை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே இது இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­மைப்­புக்­கும் எதி­ரா­ன­வர்­கள் இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்கின்றனர்.

விக்­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ரவு தெரி­விப்பதாகக் காட்­டித் தமது நோக்­கத்தை நிறைவு செய்து கொண்­ட­னர்.

மக்களைக் குழப்பும் முயற்சியில் ஒரு சில ஊடகங்கள்

வடக்­கில் இடம்­பெற்ற சம்­ப­வங்­கள் தமி­ழர் வாழ்­வில் மாற்­ற­மு­டி­யாத கரும்­புள்­ளி­களை இட்­டுச் சென்று விட்­டன. குடா­நாட்­டி­லி­ருந்து வெளி­வ­ரு­கின்ற சில ஊட­கங்­கள் மக்­க­ளின் மனங்­க­ளில் குழப்­ப­மான சிந்­த­னை­க­ளைத் தோற்­று­விப்­ப­தில் முனைப்­பு­டன் செயற்­பட்­ட­தை­யும் காண­மு­டிந்­தது. அதி­லும் ஊட­க­மொன்று தனி­ந­ப­ர் துதி­பாடு­வ­தில் தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ளது. கண்­மூ­டித்­த­ன­மான முறை­யில் ஒரு­வ­ரைப் புகழ்­வது அவ­ரைச் சிந்­திக்­க­வி­டாது தடுத்­து­வி­டு­மென்­பதை இந்த ஊட­கம் புரிந்து கொள்­ளா­தது வேதனை தரு­கின்­றது.

வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தன் நோக்­கம் தொடர்­பாக மக்­க­ளில் அநே­க­மா­ன­வர்­க­ளுக்­கு எது வும் தெரி­ய­வில்லை என்­ப­து­தான் உண்மை. விக்­னேஸ்­வ­ ரனை அவ­ரது பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தற்­குச் சிலர் சதி­செய்­கின்­றார்­கள் என்ற தக­வலைப் பலர் வசதியாக நம்பினார்கள். நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மா­னத்­தைக் கொண்டு வந்­த­வர்­க­ளும் தமது நோக்­கம் தொடர்­பாக மக்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வில்லை.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திலும் குழப்ப நிலையே

மேலும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை மாகா­ண­ச­பை­யில் பேர­வைத் தலை­வ­ரின் அனுமதி­யு­டன் விவா­தித்து அதை நிறை­வேற்­றி­னாலே போதும், முத­ல­மைச்­சர் பதவி விலக வேண்­டி­ய­து­தான்.

ஆனாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளு­ந­ரிடம் கொண்டு சென்று பேர­வைத் தலைரே அதைச் சமர்ப்பித்து தான் எதிர்­மா­றான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. தமி­ழ் அர­சுக்கட்­சித் தலைமை இதில் விவே­க­மாக நடந்து கொள்­ள­வில்லை என்­பதை ஏற்­றுக் கொள்­ளத்­தான் வேண்­டும்.

அதே­வேளை சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மக்­கள் பலம்­தான் எனது பலம்; மக்­கள் எனது பக்­கமே நிற்­கி­றார்­கள் நான் இனி­மேல் எதற்­குமே அஞ்­ச­மாட்­டேன் என்­றெல்­லாம் சினி­மாப் பாணி­யி­லான வச­னங்­க­ளைப் பேசி­ய­தை­யும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஒரு­போரை வென்ற அர­ச­னா­கச் சிங்கள மக்களால் கரு­தப்­பட்­ட­வர் முன்­னாள் அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச. புலி­களைத் தோற்கடித்தவர் என்­ப­தால் அவ­ருக்குச் சிங்­கள மக்­க­ளின் ஏகோ­பித்த ஆத­ரவு காணப்­பட்­டது.

இத­னால் தமது இரண்­டா­வது பத­விக் காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ப­ தா­கவே அர­ச­மைப்­பில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, மூன்­றா­வது தட­வை­யா­க­வும் அர­ச­ த­லை­வர் தேர்­த­லில் போட்­டி­யிட்­டார். ஆனால் அதில் தோல்­வி­தான் அவ­ருக்­குக் கிடைத்­தது. சிறு­பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­களே அவ­ரைத் தோற்­க­டித்­த­தா­கக் கூறப்­பட்­டா­லும். பெரு­பான்­மை­யின மக்­க­ளின் வாக்­கு­க­ளும் எதிர்­பார்த்த அள­வுக்­கு அவருக்குக் கிடைக்­க­வில்லை என்­பதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்டும்.

மகிந்தவுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி குறித்து வடக்கு முதலமைச்சர் சிந்தித்தல் அவசியம்

மகிந்­த­வுக்கு ஏற்­பட்­ட அரசியல் வீழ்ச்சியை வடக்கு முத­ல­மைச்­சர் ஒரு கணம் சிந்­தித்­துப் பார்த்­தால் நல்­லது. ஏதோ­வொரு வேகத்­தில் மக்­கள் கோசம் போடு­வார்­கள்; வேசம் கலைந்த பின்­னர் கலைந்து சென்­று­வி­டு­வார்கள். கோசத்தை அப்­போது காணவே முடி­யாது.

தமி­ழர்­க­ளின் ஒற்­று­மையே அவர்­க­ளுக்­கான பலம். இது சிதைந்து போய்­விட்­டால் எல்­லாமே தோல்­வி­யில்தான் முடி­யும். ஆகவே தம்­மைக் கார­ணம் காட்­டித் தமி­ழர்­கள் பிள­வு­ப­டு­வ­தைத் தடுப்­ப­தில் முத­ல­மைச்­சர்­ தீவி­ர­மாக ஈடு­பட வேண்­டும்.

குறிப்­பாக அவ­ருக்­குத் துதி­பா­டு­வ­தாக நினைத்­துக் கொண்டு தமி­ ழி­னத்­தைக் கூறு­போ­டு­ கின்றவர்களுடனான உறவை அவர் துண்டித் துக் கொள்ள வேண்­டும். அந்த ஊட­கங்­க­ளின் இன­வி­ரோ­தச் செயற்­பா­டு­கள் அப்­போது முடி­வுக்கு வந்து விடும்.

கடந்த காலங்­க­ளில் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பல தவ­று­க­ளைச் செய்­தி­ருந்­தார். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­புக் காகப் பரப்­பு­ரை­யில் ஈடு­ப­டாமை, தமிழ் மக்­கள் பேர­வை­யில் தம்மை இணைத்­துக் கொண்­டமை, அமைச்­சர்­கள் மீது மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளால் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்டபோது அமைச்­சர் ஒரு­வ­ருக்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்­டமை, தாமே நிய­மித்த ஆணைக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­களை உதா­சீ­னம் செய்­து ­விட்டுத் தமது இஷ்­டம்­போன்று நான்கு அமைச்­சர்­க­ளையும் பதவி நீக்­கம் செய்­வ­தற்கு முனைந்­தமை, தாம் சார்ந்த கட்­சிக்கு விசு­வா­சம் இல்­லாது நடந்து கொண்­டமை போன்ற பல குற்றச் சாட்டுக்களுக்கு முதலமைச்சர் உள்ளாகி யிருந்தார்.

இவற்­றைத் தவிர அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட் டுக்­கள் பல இருப்­ப­தும் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. ஆகவே மக்­கள் கண்­மூ­டித்­த­ன­மான வகை­யில் முத­ல­மைச் சரை ஆத­ரிப்­பதை மறு­ப­ரீ­ சீ­லனை செய்­து­கொள்ள வேண்­டும். நடு நிலை­மை­யு­ டன் சிந்­தித்­துச் செய­லாற்ற வேண்­டும்.

இதில் அவர்­கள் தவ­று­வி­டு­வார்­க­ளா­யின், தமி­ழர்­கள் பிள­வு­பட்டு நலிவுறுவதை எவ­ரா­லும் தடுத்து நிறுத்த முடி­யாது. அவர்­க­ளின் எதிர்­கா­லமே இருள் சூழ்ந்த சூனி­யத்தை நோக்கிச் சென்­று­வி­டும்.

http://uthayandaily.com/story/9389.html

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேசுவரன் அவர்களின் தலையில் நச்சென்று குட்டி, சம்பந்தன் அவர்களின் தலையிலும் குட்டுவதுபோல் அவர் தலையை லேசாகத்தடவி, தன் நடுநிலைதவறி, சம்பந்தர் விசுவாசத்தை மிக அற்புதமாக உதயன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. :cool: 

விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவுகொடுத்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற உதயன் பத்திரிகை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுவதுபோல் தெரிகிறது. :shocked:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.