Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

இங்கிலாந்து - தென்னாபிரிக்கா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
 

image_571787d247.jpg

இங்கிலாந்து, தென்னாபிரிக்காவுக்கு இடையிலான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி, இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகின்றது.  

இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, தரவரிசையில், நான்காமிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் சந்திக்கின்றது.  

இத்தொடரை, இங்கிலாந்து வெள்ளையடித்தால், தரவரிசையில், இரண்டாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. தவிர, இத்தொடரை வென்றால் அல்லது தொடரைச் சமப்படுத்தினாலும், தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பைக் கொண்டுள்ளது. மறுபக்கம், இங்கிலாந்தை, தென்னாபிரிக்கா வெள்ளையடித்தாலும், தரவரிசையில், இரண்டாமிடத்திலேயே தென்னாபிரிக்கா நீடிக்கும். இங்கிலாந்தால் வெள்ளையடிக்கப்பட்டால், தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு தென்னாபிரிக்கா செல்லும்.  

டெஸ்ட் போட்டிகளுக்கான, இங்கிலாந்து அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அலெஸ்டயர் குக் விலகியதன் பின்னர், டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் தலைவராகப் பதவியேற்றுள்ள ஜோ றூட்டுக்கு இதுவே முதல் தொடர் என்ற நிலையில், றூட்-இன் தலைமைத்துவப் பாணி அதிகம் கவனம் பெறும். இதுதவிர, தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதன் பின்னர், சாதாரண வீரராக, குக் எவ்வாறு செயற்படுவார் என்றும் நோக்கப்படுகிறது.  

லோர்ட்ஸில், இன்று ஆரம்பமாகும் போட்டியில், மொய்ன் அலி, லியான் டோஸன் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு களமிறங்கும் பட்சத்தில், லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியொன்றில், கடந்த 25 ஆண்டுகளில், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்கும் முதற்தடவையாக அமையவுள்ளது. 

மறுபக்கம், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில், அண்மையான நாட்களில் தவிர்த்து வருகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் பப் டு பிளெஸி, தனது மகளின் கடினமான பிரசவம் காரணமாக தென்னாபிரிக்காவிலேயே தங்கியிருக்கின்ற நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு டீன் எல்கர், தலைமை தாங்கவுள்ளார். அந்தவகையில், துடுப்பாட்ட வரிசையில், ஹஷிம் அம்லா தவிர, இளம் வீரர்களே களமிறங்கவுள்ளனர். ஆக, இங்கிலாந்து காலநிலையில், துடுப்பாட்ட வரிசை எவ்வாறு செயற்படுகின்றது என்பதைப் பொறுத்தே, தென்னாபிரிக்க அணியின் வெற்றிவாய்ப்புகள் காணப்படுகின்றன.     

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்து-தென்னாபிரிக்கா-டெஸ்ட்-தொடர்-இன்று-ஆரம்பம்/44-200021

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: கேப்டனாக சாதிப்பாரா ஜோ ரூட்?

 

ஜோ ரூட் | படம்: ஏ.எஃப்.பி
ஜோ ரூட் | படம்: ஏ.எஃப்.பி
 
 

இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத் தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டார் குக், இந்திய தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அப்பொறுப்பில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்ட னாக முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் நியமிக்கப்பட்டார்.

ஜோ ரூட் கேப்டனாக நியமிக்கப் பட்ட பிறகு இங்கிலாந்து அணி முதல் முறையாக இன்று டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. 26 வயதான ஜோ ரூட், பேட்டிங்கில் சாதித்ததைப் போலவே கேப்டன் பொறுப்பிலும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து ரசிகர்கள் உள்ளனர்.

“பேடிங்கில் வெளிப்படுத்தும் நேர்மறை எண்ணங்களை, கேப்டன் பொறுப்பிலும் ஜோ ரூட் வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்” என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் வெற்றிகரமான அணியாக விளங்கும் இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் அந்த அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இருந்து அணியை மீட்டு வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பொறுப்பு ஜோ ரூட்டுக்கு உள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், அலஸ்டார் குக் பேட்ஸ்மேனாக இங்கிலாந்து அணியில் தொடர்ந்து நீடிக்கிறார். அவரது அனுபவம் ரூட்டுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், மொயின் அலி ஆகியோர் பலம் சேர்ப்பார்கள்.

அதே நேரத்தில் டிவில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் இல்லா மல் டீன் எல்கரின் தலைமையில் தென் ஆப்ரிக்க அணி, இந்த டெஸ்ட் தொடரை சந்திக்கிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான அவர்கள் இருவரும் இல்லாதது அந்த அணியை பெரிதும் பாதிக்கும் என்று கருதப்படு கிறது.

http://tamil.thehindu.com/sports/தென்-ஆப்ரிக்காவுக்கு-எதிரான-முதல்-டெஸ்ட்-கேப்டனாக-சாதிப்பாரா-ஜோ-ரூட்/article9751284.ece?homepage=true

  • தொடங்கியவர்

கேப்டனாக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் சாதனை

கேப்டனாக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சாதனைப் படைத்துள்ளார்.

கேப்டனாக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் சாதனை
 
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ஜோ ரூட். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த குக் ராஜினாமா செய்ததன் காரணமாக ஜோ ரூட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குக் 3 ரன்னிலும், ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், அதன்பின் வந்த பேலன்ஸ் 20 ரன்னிலும், பேர்ஸ்டோவ் 10 ரன்னிலும் வெளியேறினார்கள்.

201707062238247607_daczu4gc._L_styvpf.gi

இதனால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் எடுப்பதற்குள் 4 நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்கள். பென் ஸ்டோக்ஸ் 108 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் குவித்தது.

அடுத்து ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 150 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இதன் மூலம் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தற்போதைய சிறந்த வீரர்களான விராட் கோலி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆகியோரும் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/06223819/1095013/Joe-root-century-in-debut-captain-match.vpf

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 458 ரன்கள் குவிப்பு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்துள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 458 ரன்கள் குவிப்பு
 
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

201707071823285333_5-moeen-ali-s._L_styv
87 ரன் சேர்த்த மொயீன் அலி

ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் கேப்டனாக முதன்முறையாக அறிமுகமானார். இவரின் அபார சதத்தால் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 87 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 184 ரன்களுடனும், மொயீன் அலி 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பென் ஸ்டோக்ஸ் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

201707071823285333_5-Joe-Root1-s._L_styv
190 ரன்கள் குவித்த ஜோ ரூட்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் 190 ரன்னிலும், மொயீன் அலி 87 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 47 பந்தில் 57 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 105.3 ஓவரில் 458 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

201707071823285333_5-Morkel-s._L_styvpf.
நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய மோர்னே மோர்கல்

தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்னே மோர்கல் 25.3 ஓவரில் 115 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/07182322/1095183/Lords-Test-Joe-Root-190-helped-england-458-runs-1st.vpf

  • தொடங்கியவர்

நடத்தை விதிமீறலில் சிக்கிய ரபாடாவுக்கு விளையாட தடை

 

ஐ.சி.சி.யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட தென்னாப்ரிக்கா வீரர் ரபாடாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடத்தை விதிமீறலில் சிக்கிய ரபாடாவுக்கு விளையாட தடை
 
 
லண்டன்:
 
இங்கிலாந்து சென்றுள்ள தென்னாப்ரிக்க அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 190 ரன்களும், பென் ஸ்டோக் 56 ரன்களும், மோயின் அலி 87 ரன்களும், பிராட் 57 ரன்களும் சேர்த்து முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 458 ரன்கள் குவித்தது. 
 
இந்த போட்டியில், சிறப்பாக பந்து வீசிய தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். இப்போட்டியின் முதல் இன்னிங்சின் 54-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டில் உறசி கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. இதன்மூலம் ஸ்லோக்ஸ் அவுடாகி வெளியேறினார். 
 
இந்த சமயத்தில், ரபாடா, ஸ்டோக்ஸை பார்த்து தவறான வார்த்தைகளை உபயோகபடுத்தியுள்ளார். இது ஸ்டெம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. அவரின் இந்த செயல் ஐ.சி.சி.யின் நடத்தை விதிமீறலாகும். அவரின் இந்த செயலுக்காக அவருக்கு இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்டில் விளையாட நடுவர் குழுவினர் தடை விதித்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை.
 
இந்த தடையின் மூலம் ரபாடா, ஐ.சி.சி.யின் நடத்தை வீதிமீறலுக்காக விளையாட தடை விதிக்கப்படும் இரண்டாவது வீரராகிறார். 2016-ம் ஆண்டும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் இந்த நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது.
201707081049013676_kagiso._L_styvpf.gif
இதற்கு முன்னதாக இலங்கையின் டிக்வெல்லா மற்றும் ரபாடா இடையேயான பிரச்சனையால், டிக்வெல்லாவிற்கு 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/08104901/1095242/Kagiso-Rabada-suspended-for-second-Test-against-England.vpf

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்
 
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட் (190), பென் ஸ்டோக்ஸ் (56), மொயீன் அலி (87),  பிராட் (57 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

201707082041539958_8-de-kock001-s._L_sty
37 பந்தில் 51 ரன்கள் குவித்த டி காக்

பின்னர் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் டீன் எல்கரின் அரைசதத்தால் (54), தென்ஆப்பிரிக்க அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. பவுமா 48 ரன்களுடனும், ரபாடா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

201707082041539958_8-philander-s._L_styv
52 ரன்கள் சேர்த்த பிளாண்டர்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய பவுமா அரைசதம் அடித்து, 59 ரன்களில் வெளியேறினார். ரபாடா 27 ரன்கள் சேர்த்தார். 8-வது வீரராக களம் இறங்கிய டி காக் 37 பந்தில் 51 ரன்னும், பிளாண்டர் 52 ரன்னும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் மொயீன் அலி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் 97 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/08204153/1095353/Lords-Test-south-africa-361-runs-all-out-1st-inning.vpf

  • தொடங்கியவர்

ரபாடாவுக்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: கிரேம் ஸ்மித் கடும் சாடல்

 

 
ரபாடா. | படம்.| ஏ.பி.
ரபாடா. | படம்.| ஏ.பி.
 
 

இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதாக ரபாடா மீது புகார் எழ அவர் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

ஏற்கெனவே இலங்கைக்கு எதிராக அவர் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக புள்ளிகள் சேர, அன்று பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய ரபாடா ‘ஃபக் ஆஃப்’ என்று வசைபாடியதால் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது ஐசிசி.

இந்தத் தடை உத்தரவு முட்டாள்தனமானது என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் சாடியுள்ளார்.

“இந்த விஷயத்தை ஐசிசி இன்னமும் நன்றாகக் கையாண்டிருக்கலாம், அவர் வெறுப்பில் அப்படிக் கூறினாரே தவிர ஸ்டோக்ஸை நோக்கிக் கூறியதாகத் தெரியவில்லை, மேலும் ஸ்டம்ப் மைக்கிலும் ரபாடா கூறியது சரியாகப் பதிவாகவில்லை, ஏற்கெனவே உள்ள எதிர்மறைப் புள்ளிகளுடன் மைதானத்தில் அந்தக்கணத்தின் சூடில் தன்னை நோக்கியே அவர் வெறுப்படைந்து உதிர்த்த ஒரு எதிர்பாராத சொல்லுக்காக இன்னொரு எதிர்மறைப்புள்ளியைச் சேர்த்து தடை விதித்தது முட்டாள் தனமானது” என்று கடுமையாக சாடினார் ஸ்மித்.

இதற்கிடையே, நேற்று மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 119 ரன்கள் எடுத்து மொத்தம் 216 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக திகழ்கிறது.

ஆட்ட முடிவில் அலிஸ்டைர் குக் 59 ரன்களுடனும், கேரி பாலன்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஜெனிங்ஸ் 33 ரன்களில் மோர்கெலிடம் வீழ்ந்தார்.

முன்னதாக இங்கிலாந்தின் 458 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 361 ரன்கள் எடுத்தது. தெம்பா பவுமா சிறப்பாக ஆடி 59 ரன்கள் எடுத்து மொயின் அலியிடம் வீழ்ந்தார், கேப்டன் எல்கர் 54 ரன்களை எடுக்க, குவிண்டன் டி காக் அதிரடி முறையில் 37 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் பிலாண்டர் 52 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, டாஸன், பிராட், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ரபாடாவுக்கு-விதிக்கப்பட்ட-தடை-முட்டாள்தனமானது-கிரேம்-ஸ்மித்-கடும்-சாடல்/article9756240.ece

  • தொடங்கியவர்

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 233 ரன்னில் ஆல்அவுட்: தெ.ஆ. வெற்றிக்கு 331 ரன்கள் இலக்கு

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

 
2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 233 ரன்னில் ஆல்அவுட்: தெ.ஆ. வெற்றிக்கு 331 ரன்கள் இலக்கு
 
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 97 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. குக் 59 ரன்னுடனும், பேலன்ஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். இதனால் குக் மேலும் 10 ரன்கள் எடுத்து 69 ரன்னிலும், பேலன்ஸ் மேலும் 12 ரன்கள் எடுத்து 34 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த முதல் இன்னிங்சில் 190 ரன்கள் குவித்த ரூட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (1), மொயீன் அலி (7), டவ்சன் (0), பிராட் (0) அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 182 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

201707091930581844_7-Joe-Root-s._L_styvp
மகாராஜ் பந்தில் போல்டாகிய ஜோ ரூட்

9-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட, வுட் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வுட் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்து இங்கிலாந்தை அணியை 200 ரன்கள் தாண்டச் செய்தார்.

201707091930581844_7-dawson-s._L_styvpf.
ரபாடா வீசிய புல்டாஸ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டவ்சன்

கடைசி விக்கெட்டாக பேர்ஸ்டோவ் அவுட்டாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பேர்ஸ்டோவ் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா தலா மூன்று விக்கெட்டுக்களும், மகாராஜ் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினர்.

201707091930581844_7-maharaj-s._L_styvpf
2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய மகாராஜ் 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 97 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், 2-வது இன்னிங்சையும் சேர்த்து 330 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

4-வது நாளான இன்று இன்னும் 50 ஓவர்கள் மீதமுள்ளது. நாளை கடைசி நாளும் உள்ளது. தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் லார்ட்ஸ் மைதானம் ஐந்தாவது நாள் பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/09193056/1095467/Lords-Test-England-all-out-233-runs-target-331-runs.vpf

  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: மொயீன் அலி சுழலில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அசத்தல் வெற்றி

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லார்ட்ஸ் டெஸ்ட்: மொயீன் அலி சுழலில் சுருண்டது தெ.ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அசத்தல் வெற்றி
 
லண்டன்:

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்கில் 458 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி 361 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 97 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. குக் 59 ரன்னுடனும், பேலன்ஸ் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201707092231053384_uybxjve5._L_styvpf.gi

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினார்கள். இதனால் குக் மேலும் 10 ரன்கள் எடுத்து 69 ரன்னிலும், பேலன்ஸ் மேலும் 12 ரன்கள் எடுத்து 34 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த முதல் இன்னிங்சில் 190 ரன்கள் குவித்த ரூட் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (1), மொயீன் அலி (7), டவ்சன் (0), பிராட் (0) அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி 182 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

201707092231053384_b08dk9ar._L_styvpf.gi

9-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் வுட் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாட, வுட் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். வுட் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க, பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்து இங்கிலாந்தை அணியை 200 ரன்கள் தாண்டச் செய்தார்.

கடைசி விக்கெட்டாக பேர்ஸ்டோவ் அவுட்டாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பேர்ஸ்டோவ் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மோர்கல், ரபாடா தலா மூன்று விக்கெட்டுக்களும், மகாராஜ் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 97 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், 2-வது இன்னிங்சையும் சேர்த்து 330 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 331 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

5-ம் நாள் ஆட்டம் மீதமுள்ளதால் தென் ஆப்பிரிக்கா சமாளித்து வெற்றி பெறும் என்று கணித்த நிலையில், இங்கிலாந்து பவுலர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 10 ஓவர்கள் முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை தென் ஆப்ரிக்கா இழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.

குறிப்பாக இங்கிலாந்தின் மொயீன் அலியின் சுழற்பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையைக் கட்டினர். முன்னணி பேட்ஸ்மேனான அம்லா, டி காக் ஆகியோர் தலா 11, 18 ரன்களில் வெளியேறினர். 37 ஓவர்களில் 119 ரன்களை எடுத்து தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்விவை தழுவியது.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி 6 விக்கெட்டுகளையும், டாவ்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/09223104/1095485/england-won-by-211-runs-in-lords-test-against-south.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.