Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் ஒருமித்த நாடு; பௌத்தத்திற்கான முதலிடம் நீக்கம் எனக் கூறி கூட்டு எதிர்க்கட்சியினர் போர்க்கொடி;சபையில் பாரிய சர்ச்சை

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான அறிக்­கையில் ஒருமித்த நாடு; பௌத்தத்திற்கான முதலிடம் நீக்கம்

 

எனக் கூறி கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் போர்க்­கொடி;சபையில் பாரிய சர்ச்சை

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்­ட­பத்தில் அண்­மையில் நடை­பெற்ற மாநாட்டில் அர­சி­ய­ல­மைப்பு குறித்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் ஐக்­கிய இலங்கை என்ற பதம் மாற்­றப்­பட்டு ஒரு­மித்த நாடு என்­றுள்­ளது. பௌத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் முத­லி­டத்­தினை நீக்­கு­வ­தற்­கான யோச­னையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது என்று ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. ஆவ­ண­மொன்றை   கையில் வைத்­த­வாறு    வெளியிட்ட கருத்­துக்­க­ளை­ய­டுத்து சபையில் கடும் சர்ச்சை உரு­வா­னது.  

அர­சாங்­கத்தின் சார்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ர­டாவும் ஜே.வி.பியின் தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­ந­யக்க எம்.பி ஆகியோர் பரஸ்­பர கருத்­துக்­களை வௌியிட்­ட­வா­றி­ருந்­த­மை­யினால் சபையில் அமை­தி­யின்மை நில­வி­யது. சபைக்கு தலை­மை­தாங்­கிக்­கொண்­டி­ருந்த குழுக்­களின் பிர­தித்­த­லைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. பல தட­வை­களில் தினப்­ப­ணி­களில் குறிப்­பிட்ட விட­யத்­தினை விடவும் மாற்று விட­ய­மொன்­றையே பேசு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றீர்கள். அவ்­வா­றான விவா­த­மொன்றை முன்­னெ­டுக்க முடி­யாது என்று சுட்­டிக்­காட்­டி­ய­போதும் சபை கட்­டுக்குள் வராத நிலையில் பிர­தி­ச­பா­நா­யகர் திலங்க சும­தி­பால உட­ன­டி­யாக அக்­கி­ர­சா­னத்தின் பொறுப்பை ஏற்­றுக்­கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கடற்­தொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்த சட்­ட­மூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்­டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவா­வ­தத்தில் கலந்து கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்த்­தன,

மகா சங்­கத்­தினர் என்ன கூறி­னாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் பணிகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­படும் என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன கூறி­யுள்ளார். ஐக்­கிய இலங்கை என்ற நிலைக்கோ நாட்டில் தற்­பொ­ழுது உள்ள நிலை­மை­க­ளுக்கோ புதிய யாப்பின் ஊடாக பாதிப்பு ஏற்­ப­டாது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

ஆனால் கடந்த மாதம் 28ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செய­ல­கத்தால் நடத்­தப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு குறித்த மாநாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள யோச­னைகள் அடங்­கிய அறிக்­கை­யொன்று வௌியி­டப்­பட்­டது.

அந்த அறிக்­கையில் ஐக்­கிய இலங்கை என்ற பதம் நீக்­கப்­பட்டு அதற்குப் பதி­லாக ஒரு­மித்த நாடு என்றே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஒன்­ப­தா­வது சரத்தில் பௌத்த மதத்­துக்கு முத­லிடம் வழங்­கப்­பட வேண்டும் என்ற சரத்­துக்கு பதி­லாக நான்கு மாற்று யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­கா­ர­ண­மா­கவே மகா சங்­கத்­தினர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆட்­சே­பனை தெரி­வித்­துள்­ளனர்.

அவ்­வா­றி­ருக்­கையில் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன மகா சங்­கத்­தி­ன­ரையும், நாட்­டையும் தவ­றாக வழி­ந­டத்தும் வகையில் கருத்­து­களைக் கூறி வரு­கிறார். இங்கு வௌியி­டப்­பட்ட அறிக்கை பொது ஆவ­ண­மாகும். இதில் மறைப்­ப­தற்கு எதுவும் இல்லை. பிர­தமர் தலை­மையில் நடந்த மாநாட்­டிலே இந்த அறிக்கை குறித்து ஆரா­யப்­பட்­டது. இதனை மறுக்க முடி­யாது. அந்த அறிக்கை என்­னி­டத்தில் உள்­ளது. இதில் ஒழிப்­ப­தற்கு எதுவும் இல்லை. பிர­த­மரும் இங்கு இருக்­கின்றார் என்று காட்­ட­மான தொனியில் கூறினார்.

அநு­ர­கு­மார திசா­நா­யக்க எம்.பி

இதனையடுத்து கருத்து தெரிவித்த ஜே.வி.பி.யின் தலைவரும் எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க, புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் இது­வரை எந்த இணக்­கமும் எட்­டப்­ப­ட­வில்லை. வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­காமல் வேறு எந்த இடத்­திலும் வெளியிட அனு­ம­தி­யில்லை. அறிக்கை புர்த்­தி­யா­காத நிலையில் இவ்­வா­றா­ன­தொரு அறிக்­கையை வௌியிட யார் அனு­மதி வழங்­கி­யது.  

இத்­த­கை­ய­தொரு அறிக்­கையை வௌியில் வௌியி­டு­வது பார­தூ­ர­மா­னது. வழி­ந­டத்தல் குழு­விற்கு முன்­வைக்­கப்­பட்ட யோச­னைகள் தொடர்பில் இறுதி இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அவை தொடர்பில் தொடர்ந்தும் ஆரா­யப்­ப­டு­கி­றது. இந்த நிலையில் அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான செய­ல­கத்தின் ஊடாக 28ஆம் திகதி அறிக்­கை­யொன்று வௌியி­டப்­பட்ட செயற்­பா­டா­னது முற்­றிலும் தவ­றா­ன­தாகும். இது தொடர்பில் உரிய பதி­ல­ளிக்க வேண்டும் என்றார்.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க

வழி­ந­டத்தல் குழுவில் ஆரா­யப்­படும் விட­யங்கள் அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு முன்­வைக்­கப்­படும். எமக்கு பல்­வேறு யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு அவை குறித்து தொடர்ந்து ஆரா­யப்­ப­டு­கி­றது. அவற்றை நாம் வௌியி­ட­வில்லை. பௌத்த மதத்­துக்­கு­ரிய முன்­னு­ரி­மையை மாற்­று­வ­தற்கு ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியோ அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியோ தயா­ரில்லை. இது குறித்து மகா சங்­கத்­தி­ன­ருக்கும் அறி­வித்­தி­ருக்­கிறோம். பௌத்த மதத்­துக்கு தொடர்ந்தும் முத­லிடம் வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நானும் ஜனா­தி­ப­தியும் இருக்­கிறோம். அத்­துடன் பௌத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை மாற்­று­மாறும் யாரும் கோரவும் இல்லை.

நிலை­யியற் கட்­ட­ளையின் பிர­காரம் வழி­ந­டத்தல் குழு­வினால் மட்­டுமே அறிக்கை வௌியிட முடியும். இத­னூ­டாக இது­வரை இரண்டு அறிக்­கைகள் மாத்­தி­ரமே வெ ளியி­டப்­பட்­டுள்­ளன. அவற்றை நான் சபையில் சமர்ப்­பிக்­கிறேன். இது­த­விர வழி­ந­டத்தல் குழு­வினால் வேறு எந்த அறிக்­கையும் வௌியி­டப்­ப­ட­வில்லை. நாம் வௌியிட்ட இரு அறிக்கை தவிர வேறு ஏதும் அறிக்­கைகள் வௌியி­டப்­பட்­டி­ருந்தால் அது குறித்து ஆராயத் தயா­ராக இருக்­கிறோம் என்றார்.

சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யல்ல

பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற மாநாட்டில் தென்­னா­பி­ரிக்க யாப்பை தயா­ரித்த முன்னாள் பிரதி பிர­தம நீதி­ய­ரசர் தனது அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொண்டார். புதிய யாப்பு திருத்தம் குறித்தும் இங்கு ஆரா­யப்­பட்­டது. பிர­த­ம­ருடன் நானும் இதில் கலந்து கொண்டேன். தினேஷ் குண­வர்த்­தன கூறு­வது போன்று எந்­த­வொரு அறிக்­கையும் இங்கு வௌியி­டப்­ப­ட­வில்லை. இவர் தவ­றான அறிக்­கை­யொன்­றையே வௌியிட்டு குழப்பம் ஏற்­ப­டுத்­தி­யுள்ளார் என்றார்.

குழுக்­களின் பிரதி தலை­வரின் கருத்து

இச்­ச­ம­யத்தில் தினேஷ் குண­வர்த்­த­ன­வுக்கு ஒதுக்­கப்­பட்ட நேரம் நிறை­வ­டைந்து விட்­டது என சபைக்கு தலை­தாங்­கிக்­கொண்­டி­ருந்த குழுக்­களின் பிர­தி­த­லைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி குறிப்­பிட்­ட­தோடு இன்­றைய(நேற்று) ஒழுங்­குப்­பத்­தி­ரத்தின் பிர­காரம் வேறு­வி­ட­ய­மல்­லவா விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. தயவு செய்து ஆச­னத்தில் அம­ருங்கள். உங்­க­ளுக்­கான நேரம் நிறை­வ­டைந்து விட்­டது என குறிப்­பிட்டார்

கூட்டு எதிர்­கட்சி போர்க்­கொடி

இத­னை­ய­டுத்து தினேஷ்­கு­ண­வர்த்­தன எம்.பிக்கு ஆத­ர­வாக கூட்டு எதிர்­கட்­சியின் எம்.பிக்கள் கோசங்­களை எழுப்ப ஆரம்­பித்­தனர். சபைக்கு தலை­மை­தாங்­கிய குழுக்­களின் பிர­தி­த­லை­வரின் கருத்­துக்­களை செவி­ம­டுக்­காது கோச­மெ­ழுப்­பி­னார்கள். அவர்­களை ஆச­னங்­களில் அம­ரு­மாறு பணிப்­பு­ரை­களை விடுத்த வண்­ண­மி­ருந்தார் குழுக்­களின் பிர­தி­த­லைவர் செல்வம் எம்.பி.இச்­ச­ம­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபை­யி­லி­ருந்து வௌியேறிச் சென்­றி­ருந்தார்.

பிர­தி­ச­பா­நா­ய­கரின் வருகை

சபையில் அமை­தி­யின்மை ஏற்­பட்ட நிலையில் உட­ன­டி­யாக பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால உட­ன­டி­யாக அக்­கி­ரா­ச­னத்தின் பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்டார். அத­னைத்­தொ­டர்ந்து என்ன விடயம்? சபை முதல்­வரே கூறுங்கள் என்றார்

சபை­மு­தல்வர் அமைச்சர் கிரி­யெல்ல

பிர­தமர் பதி­ல­ளித்­து­விட்டார் இவர்கள் சபையை குழப்­பு­கின்­றார்கள் என்றார்

தினேஷ் குண­வர்த்­தன எம்.பி

நான் ராஜி­தவின் கருத்­தையே கூறு­கின்றேன். அரசியலமைப்பு ஒற்­றை­யாட்சி கொண்­ட­தாக இருக்கும் என அவர் அமைச்­ச­ரவை அறி­விப்பில் கூறி­யுள்ளார். இது இர­க­சிய ஆவணம் இல்லை. அன்றைய மாநாட்டில் பிர­தமர் சென்ற பின்னர் தான் பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது. அப்­படி இருக்கும் போது மகா­நா­யக்க சங்­கத்­தினர் கவ­லைப்­பட தேவை­யில்லை என கூறு­வது தவ­றா­னது என்றார்.

கோப்­புடன் சபைக்கு வந்தார் பிர­தமர்

இச்­ச­ம­யத்தில் கோப்­புடன் சபைக்கு வந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நான் இந்த விடயம் சம்­பந்­த­மாக ஆராய்தேன். புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செய­ல­கத்தின் செய­லா­ள­ரி­டத்தில் சென்று அன்றைய மாநாட்டில் கைய­ளிக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை பெற்று வந்­துள்ளேன். இந்­தக்­கோப்பில் அவையே காணப்­ப­டு­கின்­றன. அதில் உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் உள்ள. அவற்றை விட செயற்­பா­டுகள் குறித்த விட­யங்கள் உள்­ளன. அவற்றை விட வேறு எவையும் வழங்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு வழங்­கப்­பட்­டி­ருந்தால் என்­னி­டத்தில் தாருங்கள் நான் பார்க்­கின்றேன் என்று கூறி­விட்டுச் சபையில் இருந்து வௌியே­றினார்.

சபைக்கு வந்தார் மகிந்த

இச்­ச­ம­யத்தில் நேரம் பிற்கல் 2.35ஆக இருக்கும் போது முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மகிந்த ராஜ­பக்ஷ தனது ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் சபைக்குள் வந்தார்.

இச்­ச­ம­யத்தில் விவா­தத்தில் உரை­யாற்­று­வ­தற்­காக இரா­ஜங்க அமைச்­சரின் பெயர் பிரதி சபா­ந­ய­கரால் அழைக்­கப்­பட்­டது. இருப்­பினும் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி பிரச்­சி­னையை கைவி­டு­வ­தாக இல்லை. தொடர்ச்­சி­யாக கேள்­வி­யெ­ழுப்­பி­ய­வாறே இருந்தார். இதன்­போது மகிந்த ராஜ­பக்ஷ ஆளும் தரப்பில் ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து நின்ற இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், பிரதி சபா­நா­யகர் உள்­ளிட்­ட­வர்­களை மாறி­மா­றி­பார்த்­த­வா­றி­ருந்தார்.

மீண்டும் தினேஷ் எம்.பி

பிர­தமர் உள்­ளிட்­ட­வர்கள் குழப்­ப­ம­டைய தேவை­யில்லை. நான் ராஜி­தவின் கருத்தை மாத்­திரம் கூறினேன் பௌத்த மதம் தொடர்பில் மாற்றம் வர­வுள்­ளது. ஏன் மறு­கின்­றீர்கள்.பொய் கூறு­கின்­றீர்கள். நீங்கள் அறிக்­கையை இர­க­சி­ய­மாக தயா­ரித்து விட்­டீர்கள் என்று கூறினார். இதனால் சபையில் மீண்டும் அமைதியின்மை எழுந்தன.

சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல

என்னிடம் அந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் உள்ளது. சைட்டம் பிரேரணையும் இவரே முன்வைத்தார் உபகுழு அறிக்கை மாத்திரமே பகிரப்பட்டுள்ளது. அதற்கு மாறாக ஏதாவது உண்டெனில் ஒப்படையுங்கள் என்று கோரினார்.

இராஜங்க அமைச்சர் விஜகலா மகேஸ்வரன்

தினேஷ் குணவர்தனவுக்கு எந்நேரமும் பிரச்சனை. எனக்கு பேச இடமளியுங்கள். நாங்கள் எவ்வளவு துயரத்துடன் வந்துள்ளோம். எனக்கு பேச இடமளியுங்கள். தினேஷ் குணவர்தன எப்போதும் இனவாதத்தை தூண்டுகின்றார். வௌியிலும் உள்ளும் இனவாதத்தினையே எழுப்புகின்றார். பொய்யாக நாடகமாடுகின்றார் என்றார்

பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால

நீங்கள் தமிழில் உரையாற்றுங்கள் சபை நடவடிக்கைகள் மீண்டும் தொடரும் என்று இராஜங்க அமைச்சரைப்பார்த்து கூறினார்.

எனினும் சிலமிடங்கள் சபையில் அமைதியின்மை நீடித்திருந்ததையடுத்து மீண்டும் சபை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. இச்சமயத்தில் வழிநடத்தல் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்குழுவின் பிரதிநிதிகள் அங்கிருந்து அவசரஅவசரமாக வௌியேறிச்சென்றிருந்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.