Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயக் கூட்டம் தொடர்பில் பொய் உரைக்கிறார் முதல்வர் தவராசா பகிரங்கக் குற்றச்சாட்டு

Featured Replies

விவசாயக் கூட்டம் தொடர்பில் பொய் உரைக்கிறார் முதல்வர்

தவ­ராசா பகிரங்கக் குற்றச்சாட்டு

 
 
விவசாயக் கூட்டம் தொடர்பில் பொய் உரைக்கிறார் முதல்வர்
  •  

விவ­சாய அமைச்­சு­டன் தொடர்­பு­டைய அதி­கா­ரி­க­ளுக்­கான கூட்­ட­மொன்றை முத­ல­மைச்­சர் ஆரம்­பித்து வைத்­த­போ­தி­லும் அந்தக் கூட்­டத்தை முதல்­வ­ரின் தந்­தி­ரோ­பாய மதி­யு­ரை­ஞர் ஒரு­வரே கூட்­டத்தை நடத்­தி­னார்.

அவ்­வாறு கூட்­டத்தை நடத்த முடி­யாது என்று வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சி.தவ­ராசா குற்­றம்­சாட்­டி ­னார்.
வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை நோக்கி சபை­யின் எதிர்க்­கட்­சித்­த­லை­வர் வினாக்­க­ளைத் தொடுத்­தார்.

அதில் வடக்கு விவ­சாய அமைச்­சு­டன் தொடர்­பு­டைய அதி­கா­ரி­க­ளுக்­குக் கடந்த மாதம் 26 ஆம் திகதி நடை­பெற்ற கூட்­டம் தொடர்­பா­கக் கேள்வி எழுப்­பி­னார். குறித்த வினா­வுக்கு முத­ல­மைச்­சர் தனது பதிலை வழங்­கி­யி­ருந்­த­போ­தி­லும் அந்­தப் பதி­லில் எவ்­வித உண்­மைத்­தன்­மை­யும் இல்லை என்று தெரி­வித்­த­தோடு அந்தக் கூட்­டத்தை முத­ல­ மைச்­ச­ரின் தந்­தி­ரோ­பாய மதி­யு­ரை­ஞரே நடத்­தி­னார். அதற்­கான ஆதா­ரங்­கள் என்­னி­டம் இருக்­கின்­றன என்று குறிப்­பிட்­டார்.

அதற்கு முதல்­வர்,“ குறித்த கூட்­டத்தை நான் ஆரம்­பித்து வைத்து கூட்­டம் முடி­யும் வரை அங்கு இருந்­தேன். நான் கூட்­டத்தை முடித்த பின்­னர் யாரா­வது சிலர் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­க­லாம். அத­னைக் கூட்­டம் என்று நினைத்­தால் அதற்கு நான் பொறுப்­பாக முடி­யாது” என்­றார்.

இதற்கு பதி­ல­ளித்த சபை­யின் எதிர்க்­கட்­சித்­த­லை­வர், “முத­ல­மைச்­சர் கூட்­டத்தை ஆரம்­பித்து வைத்த சிறிது நேரத்­தி­லேயே அங்­கி­ருந்து வெளி­யே­றி­விட்­டார். அதன் பின்­னர் முதல்­வ­ரின் மதி­யு­ரை­ஞரே கூட்­டத்­தைத் தலைமை தாங்கி நடத்­தி­யுள்­ளார். இதற்­கான ஆதா­ரம் இருக்­கின்­றது” என்று தெரி­வித்­தார்.

தமிழர் தரபில் உடையருக்கு இருக்கும் மதிப்பு உடையாருடைய பொல்லுக்கும் இருக்கும் என நாசூக்காக சயந்தன் கருத்தைப் பதிவு செய்தார். மாகாண அமைச்­சுக்­க­ளின் விசா­ர­ணை­கள் தொடர்­பில் தவ­ராசா கேள்­வி­யெ­ழுப்­பி­னார்.

வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளின் ஊழல் விசா­ர­ணை­க­ளுக்­கான செலவு 3 லட்­சத்து 21 ஆயி­ரம் ரூபா என்று தலை­மைச் செய­லா­ள­ரின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக முத­ல­மைச்­சர் சீ.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண அமைச்­சர்­க­ள் மீதான ஊழல் குற்­றச்­சாட்டுக்களை விசா­ரணை செய்­ய­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட விசா­ர­ணைக் குழு­வுக்­குக் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­பட்­ட­னவா? என்று எதிர்க்­கட்சி தலை­வர் சி.தவ­ராசா முத­ல­மைச்­ச­ரி­டம் மீண்­டும் கேள்வி எழுப்­பி­னார்.

“விசா­ர­ணைக் குழு உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்­னும் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால் 3 இலட்­சத்து 21 ஆயி­ரம் ரூபா செல­வா­கி­யுள்­ள­தா­கத் தலை­மைச் செய­லா­ளர் அறிக்­கை­யில் குறிப்­பி ட்­டுள்­ளார். இது குறித்து தலை­மைச் செய­லா­ளர் உரிய பதி­ல­ளிப்­பார்” என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

அதற்­கி­டை­யில் குறுக்­கிட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர் சயந்­தன் தலை­மைச் செய­லா­ளர் சபை­யில் பதி­ல­ளிக்க முடி­யாது. முத­ல­ மைச்­சரே இதற்­கான பதிலை வழங்க வேண்­டும் என்­றார். இதற்கு உரிய முறை­யில் கேள்­வி­க­ளைக் கேட்­டால் பதி­ல­ளிப்­பேன் என்­றார் முத­ல­மைச்­சர்.

http://uthayandaily.com/story/9919.html

ஊழல்வாதி சத்தியமூர்த்திக்கு செஞ்சொற்றுக் கடன் தீர்க்கும் தவராசா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.