Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச

Featured Replies

கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச

 
கோட்டாபய விரைவில் கைது? மகாநாயக்கர்களிடம் சரணடைந்த ராஜபக்ச

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை விரைவில் கைது செய்து சிறையில் அடைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே இன்று தெரிவித்திருக்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க யுத்தத்தை வழிநடத்திய ஒரே காரணத்திற்காக தன்னை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் சர்வதேசம் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் காலை அவசரமாக சிங்கள பௌத்த மக்களின் தலைமைப் பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப் பீட மகாநாயக்கர்களை சந்தித்தார்.

தன்னை கைது செய்வதற்கு அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருவதாக தனக்கு கிடைத்த தகவலை அடுத்தே இதுகுறித்து மகாநாயக்க தேரர்களிடம் அறிவிக்கவும், கவலை தெரிவிக்கவும் இன்று அவர் கண்டிக்கு விரைந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கோட்டாபய ராஜபக்ச “எனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து மகாநாயக்கர்களுக்கு தெரிவிக்க வேண்டும்தானே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, என்னை இன்னும் ஒருமாதத்தில் கைது செய்வதாக கூறியுள்ளார். இதுவா நீதி? மஹிந்த அமரவீர வழக்கு விசாரணை செய்பவரா? தீர்ப்பு வழங்குபவரா? அப்படியானால் அதில் என்ன நீதி இருக்கிறது? ராஜபக்சக்கள் என்பது இந்த நாட்டின் திருடர்கள் அல்லை. உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டை காப்பாற்றியவர்கள். மஹிந்த அமரவீர இதை செய்தவரா? 80 வருடங்களாக இந்த நாட்டில் அரசியல் செய்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அரசியலில் சம்பாதித்தவர்கள் நாங்கள் அல்லர். மோசடியாளர்கள் என்ற முத்திரையைக் குத்தி எம்மை பழிவாங்குகிறார்கள். கோட்டாபயவை வரமுடியாமல் சிறைபிடிப்பதாக மஹிந்த அமரவீர கூறியுள்ளார். மிகவும் கவலையடைகிறேன். இந்த அறிவிப்பு குறித்து மகாநாயக்கரை சந்தித்து எனது கவலையை வெளியிட்டேன்” என்றார்.

இதேவேளை ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாத்திரம் யுத்தத்தை முன்னெடுக்கவில்லை என தெரிவித்திருக்கும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாய ராஜபக்ச, யுத்தத்தை முன்னெடுக்க அனைத்து ஜனாதிபதிகளும் போரின்போது இடம்பெற்ற குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஒரே காரணத்திற்காகவே இராணுவத்தின் மீதும் கடந்த ஆட்சியாளர்கள் மீதும் போர்க் குற்றங்கள் சுமத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் கோட்டபய, இதற்குப் பின்னால் பாரிய அரசியல் சதித் திட்டங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

 “யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர், இராணுவத் தளபதிகள் இருவர், கடறபடை அதிகாரிகள் 7 பேர், விமானப் படை அதிகாரிகள் இருவர், புலனாய்வுப் பிரிவு பிரதானி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும், யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்தவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சி.ஐ.டி, எவ்.சி.ஐ.டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். நாங்களா இந்த நாட்டின் திருடர்கள்? இராணுவமோ கடற்படையோ படையில் சிறந்தவர்களே தளபதிகளாக நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதுகுறித்து ஜனாதிபதி அறிவாரா என்று தெரியாது. சிலரது தேவைகளுக்காக இந்த நடவடிக்கை என்னெடுக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்காக இடம்பெறுகிறது. சட்டமூலமொன்றை கொண்டுவர முயன்ற போதிலும், மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் பின்னர் பிற்போடப்பட்டது. மீண்டும் அதனை கொண்டுவருவார்களா என சிந்திக்கின்றோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நபர்களுக்கு எதிராகவே இதனை செய்கின்றனர். எனவே விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தமையே நான் செய்த ஒரேயொரு ஊழலாகும். அதற்காக சிறையில் என்னை தள்ள வேண்டுமென்றால் தள்ளட்டும். அப்பாவி மக்களைக் கொல்வதற்காக யாரும் 30 வருடகால யுத்தத்தை நடத்தவில்லை. கடந்த 5 வருடங்களாக மட்டும் யுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. ஆட்சிக்குவந்த அனைத்து ஜனாதிபதிகளுமே யுத்தத்தை நடத்தியிருந்தனர். அப்படியென்றால் இறுதி யுத்தத்தை முன்னெடுத்த இராணுவம் மட்டுமா குற்றத்தை இழைத்துள்ளது? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். இறுதி யுத்தத்தை நடத்திய இராணுவம் மட்டுமே குற்றம் இழைத்துள்ளது. யாருடைய தேவைக்காக இது சொல்லப்படுகிறது” எனத் தெரிவித்தார்

 

 

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/gotabaya-will-arrest-

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இராணுவமோ கடற்படையோ படையில் சிறந்தவர்களே தளபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.

முள்ளிவாய்க்கால் எனும் ஒரு குறுகிய சிறு நிலப்பரப்புக்குள் சிக்கிப்போயுள்ள ஆண்களின் இரத்தமெல்லாம் நந்திக்கடலில் கலக்கட்டும். பெண்களெல்லாம் படையினருக்கு இரையாகட்டும்என்ற சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கட்டளையையடுத்து (போர் வெற்றிச்செருக்கு வார்த்தைகளையடுத்து) இரத்தம், கொலைகள், மரணங்கள் என்று பார்த்துப்பார்த்து மனித உணர்வுகள் மரத்துப்போயிருந்த (மனித உணர்வுகளை இழந்து போயிருந்த) படையினர் இரத்தக்காட்டேரிகள் போன்று செயற்பட்டனர்.)

  • தொடங்கியவர்

"ஒரு மாதத்தில் கைதாவேன்" ; கோத்தபாய ராஜபக்ஷ

Published by Gnanaprabu on 2017-07-08 09:55:02

 

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த குற்றத்துக்காக என்னை கைதுசெய்வதற்கென அரசாங்கத்தினால் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இன்னும் ஒருமாத காலத்தில் நான் கைது செய்யப்படுவேன் என்று  முன்னாள் பாதுகாப்பு அமைச்சின்  செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நேற்று  வெ ள்ளிக்கிழமை அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை  சந்தித்து ஆசிபெற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

நான் பொதுவாக பெளத்த மதத்தலைவர்கள் யாருடனும் அரசியல் கருத்துக்களை பரிமாற்ற மாட்டேன். எனினும் பீடாதிபதி என்னிடம் சில அரசியல் காரணிகள் குறித்து தனது கவலையை தெரிவித்தார். இப்போது பாரளுமன்றத்தில் அமைச்சர்களின் வாகனங்கள் தொடர்பில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயினும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்றும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் இவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ நடவடிக்கைகள் எடுப்பது வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என்பதை தெரிவித்தார். அதேபோல் எனக்கு எதிராக  இடம்பெற்றும் சதிகள் எனக்கு நடக்கும் அநியாயங்கள் குறித்து நான் இவர்களுடன் கலந்துரையாடினேன். 

என்னை ஒருமாத காலத்தில் கைதுசெய்யப்போவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் மஹிந்த அமரவீர ஒருசில கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஆகவே இவர்களின் தேவைக்காக சட்டம் இயற்றப்படுகின்றது. இவர்கள் வழக்கு தாக்கல் செய்வதும் இவர்களே தீர்ப்பும் வழங்குவதும் என்றால் சுயாதீன சட்டம் என்ற ஒன்று இப்போது இல்லையென்றே கருத வேண்டியுள்ளது. 

ராஜபக் ஷக்கள் என்பவர்கள் இந்த நாட்டில் கொள்ளையடித்த நபர்கள் அல்ல. இந்த நாட்டை காப்பாற்றிய நபர்கள். நான் அரசியல் செய்த நபர் அல்ல. ஒரு அதிகாரியாக இந்த நாட்டில் சேவை செய்த நபர். என்னை சிறை பிடிக்க வேண்டும் என அவர் கூறும் அளவிற்கு அவர் இந்த நாட்டிற்காக என்ன சாதித்துள்ளார். 

இந்த நாட்டிற்காக சேவை செய்து இந்த நாட்டின் உயரிய பாதுகாப்பு  அமைச்சின் செயலாளர் பதவியை நான் பெற்றிருந்தேன் என்றால் இந்த நாட்டில் நான் சேவையை சரியாக செய்துள்ளேன் என்றே அர்த்தமாகும். ஆகவே அரசியல் தேவைக்காக எம்மை பழிவாங்கி வருகின்றனர். நான் ஒரு குற்றம் செய்துள்ளேன். விடுதலைப்புலிகளை கொன்று இந்த நாட்டை சுத்தம் செய்தமையே நான் செய்த மோசடியாகும். அதற்காக என்னை சிறையில் தள்ள வேண்டும் என்றால் அதை செய்யட்டும். 

இந்த யுத்தம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் செய்த ஒன்றல்ல. நாட்டில் சகல ஜனாதிபதியின் கீழும் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தத்தை முடித்த இராணுவம் மாத்திரமா குற்றம் செய்துள்ளது. இவற்றை சிந்தித்து பார்க்க வேண்டும். யுத்தத்தை முடித்த நாம் மட்டுமே குற்றம் செய்துள்ளோம். அதனால் தான் எம்மை தண்டிக்க முயற்சித்து வருகின்றனர் என்ற எனது கவலையை தெரிவிக்கவே நான் இங்கு வந்தேன். 

நான் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பேன் என மக்கள் எதிர்பார்க்கும் காரணத்தினால் தான் இவர்கள் என்னை சிறையில் அடைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. அதேபோல் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது  இவர்களுக்கு தெரியவில்லை. புதிய அரசியல் அமைப்பு கொண்டுவருவதிலும் நாட்டை குழப்புவதிலும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவருவதில் எமக்கு உடன்பாடு இல்லை. நாம் முழுமையாக இதை எதிர்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/21636

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.