Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதிர்காம புனித பூமியில் புதிய இருமாடி அன்னதான மண்டபம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு.!

Featured Replies

கதிர்காம புனித பூமியில் புதிய இருமாடி அன்னதான மண்டபம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு.!

 

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அன்னதான   மண்டபம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

திருவிழா காலங்களில் கதிர்காமத்துக்கு வருகைதரும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த 100 ஆண்டுகள் பழமையான மண்டபத்துக்குப் பதிலாக ஒரே தடவையில் 1000 அடியார்களுக்கு உணவளிக்கக்கூடிய வசதிகளுடன் புதிய இருமாடி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய  நம்பிக்கை பொறுப்பாளர் சபையினதும் கொடைவள்ளல்களினதும் நன்கொடையால் 18 கோடி ரூபா செலவில் இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கதிர்காமம் புனித பூமிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி   வரலாற்று  பெருமைமிகு  கிரிவிகாரையில்  வழிபாடு  செய்து, பின்னர் அன்னதான மண்டபத்தின்  பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, திறந்து வைத்தார்.

http://www.virakesari.lk/article/21681

  • தொடங்கியவர்

வரலாற்றுத் தனித்துவமான ஆலத்திற்கு தானசாலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி

 

 

(க.கமலநாதன்)

வரலாற்றுத் தனித்துவமான கதிர்காம ஆலயத்திற்காக அன்னதானசாலையை திறந்து வைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தருமங்கள் செய்வோருக்கு இறைவன் ஆசி நிச்சயம் கிட்டும் எனவும் குறிப்பிட்டார்.

Image result for டி.எம்.சுவாமிநாதன் virakesari

அமைச்சர் சுவாமிநாதன், ரஜேந்திரன் தியாராஜா, ஜி.சதாசிவம், ரகுசிவராம், ஏ.மாணிக்கவாசகர், எஸ்.சண்முகநாதன் ஆகியோரின் பங்களிப்பில் ஸ்ரீ தெய்வானை அறக்கட்டளையினால் நிர்மானிக்கப்பட்ட கதிர்காமம் அன்னதான மண்டபத்தினை திறந்து வைக்கும் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் உரையாற்றுமை; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/21687

  • தொடங்கியவர்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறப்பு
 Comments - 0

image_98dda61f5a.jpgகதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட, அன்னதான   மண்டபம்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று (09) திறந்து வைக்கப்பட்டது.

 

திருவிழா காலங்களில், கதிர்காமத்துக்கு வருகைதரும் அடியார்களுக்கு,  அன்னதானம் வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த, 100 ஆண்டுகள் பழமையான மண்டபத்துக்குப் பதிலாக, ஒரே தடவையில் ஆயிரம் அடியார்களுக்கு உணவளிக்கக்கூடிய வசதிகளுடன், புதிய இருமாடி மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய  நம்பிக்கை பொறுப்பாளர் சபையினதும் கொடைவள்ளல்களினதும் நன்கொடையால், 180 மில்லியன் ரூபாய் செலவில், இந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இன்று  முற்பகல், கதிர்காமம் புனித பூமிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,   வரலாற்று  பெருமைமிக்க  கிரிவிகாரையில்  வழிபாடுகளை முடித்துக்கொண்ட பின்னர், அன்னதான மண்டபத்தின்  பெயர் பலகையை, திரைநீக்கம் செய்து, திறந்து வைத்தார்.

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய  நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவரான  அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன்,  அமைச்சர்களான நிமல் சிறிபால  டி  சில்வா,  டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்டோர், இந்நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்தனர்.

image_bb738233cc.jpg

  •  

http://www.tamilmirror.lk/செய்திகள்/புதிதாக-நிர்மாணிக்கப்பட்ட-அன்னதான-மண்டபம்-திறப்பு/175-200209

3 hours ago, நவீனன் said:

கதிர்காமம் ஸ்ரீ தெய்வானை அம்மன் ஆலய  நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவரான  அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன்,

இதை எதற்கு கற்களைக் கொண்டு கட்டினார் சுவாமிநாதன்!

சுவாமிநாதன் இதை நவீன முறையிலமைந்த பொருத்துவீட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைத்திருக்கலாமே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.