Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்திய டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

காலே டெஸ்ட்: இலங்கையை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

 

காலே டெஸ்டில் இலங்கையை 2-வது இன்னிங்சில் 245 ரன்னில் சுருட்டி 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.

 
காலே டெஸ்ட்: இலங்கையை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இந்திய அணியில் முதன்முறையாக ஹர்திக் பாண்டியா அறிமுகமானார்.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தவான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 190 ரன்களும், புஜாரா 153 ரன்களும் குவித்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும், ரகானே 57 ரன்னும், அஸ்வின் 47 ரன்னும், அறிமுக வீரரான ஹர்திக் பாண்டியா 50 ரன்னும் எடுக்க இந்தியா முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நுவன் பிரதீப், குமாரா ஆகியோர் முறையே 6, 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 291 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ருவான் பெரேரா அவுட்டாகாமல் 92 ரன்னும், மேத்யூஸ் 83 ரன்னும் அடித்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், மொகமது ஷமி இரண்டு விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

309 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த தவான், புஜாரா முறையே 14, 15 ரன்களில் ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அளித்த அபிநவ் முகுந்த், கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அபிநவ் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 76 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

201707291726396630_1_4-dickwella-s._L_st
அரைசதம் அடித்த டிக்வெல்லா

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்கை டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 349 ரன்கள் முன்னிலைப் பெற்று, இலங்கை அணியின் வெற்றிக்கு 550 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

201707291726396630_2_4-karunaratne-s._L_
97 ரன்கள் குவித்த கருணாரத்னே

இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உபுல் தரங்காவை 10 ரன்னில் வெளியேற்றினார் மொகமது ஷமி. அடுத்து வந்த குணதிலகாவை 2 ரன்னில் பெவிலியன் அனுப்பினார் உமேஷ் யாதவ். இதனால் இலங்கை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை விரைவாக இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவுடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்றது. 4-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேத்யூஸை 2 ரன்னில் ஜடேஜா வெளியேற்றினார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் கருணாரத்னே சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா விளையாடினார்கள்.

டிக்வெல்லா 67 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். டிக்வெல்லா அவுட்டானதும் இந்தியா வெற்றியை நெருங்கியது. கருணாரத்னே 97 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

201707291726396630_3_4-jadeja-s._L_styvp
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

கருணாரத்னே அவுட்டாகும்போது இலங்கையின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்னாக இருந்தது. மேலும் 5 ரன்கள் எடுப்பதற்குள் இலங்கை அடுத்த இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருக்கும்போது அந்த அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தில்ருவான் பெரேரா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

காயம் ஏற்பட்ட குணரத்னே, ஹெராத் ஆகியோர் பேட்டிங் செய்ய வராததால் இலங்கை 245 ரன்களில் ஆல்அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் 190 ரன்கள் குவித்த தவான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 3-ந்தேதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/29172639/1099311/Galle-Teest-India-beats-sri-lanka-by-304-runs-dhawan.vpf

  • Replies 54
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சந்திமல் விளையாடுகிறார் :  2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

sri-lanka-cricket.jpg

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், 16 பேர் கொண்ட வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முதலாவது போட்டியில் சுகயீனம் காரணமாக விளையாட முடியாமல் இருந்த இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் இந்திய அணிக்கெதிரான 2 ஆவது போட்டிக்கு தலைமை தாங்குகிறார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,

டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, குஷல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணதிலக்க, லகிரு குமார, விஷ்வ பொர்னாண்டோ, நுவான் பிரதீப், ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, மிலிந்த புஸ்பகுமார, லக்ஷன் சந்தகன், லகிரு திரிமன்னே ஆகியோர் இக் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.virakesari.lk/article/22612

  • தொடங்கியவர்

நாளை 2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் அதிரடியாக விளையாடுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
நாளை 2-வது டெஸ்ட்: இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?
 
கொழும்பு:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (3-ந் தேதி) தொடங்குகிறது.

முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கையை சந்திக்கிறது.

காலே டெஸ்டில் தொடக்க வீரர்கள் தவான், அபினவ் முகுந்த் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள். தவான் முதல் இன்னிங்சில் 190 ரன்னும், முகுந்த் 2-வது இன்னிங்சில் 84 ரன்னும் எடுத்து இருந்தனர். கே.எல்.ராகுல் உடல் தகுதி பெற்றுவிட்டார்.

இதனால் நாளைய டெஸ்டில் தொடக்க வீரர்கள் வரிசையில் மாற்றம் இருக்குமா? அல்லது அதே அணி நீடிக்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அபினவ் முகுந்த் நீக்கப்படுவார். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

இதேபோல கேப்டன் விராட் கோலி, புஜாரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தனர்.

புஜாராவுக்கு நாளைய போட்டி 50-வது டெஸ்ட் ஆகும். அவர் 4 ஆயிரம் ரன்னை எடுக்கிறார். இது தவிர ரகானே, ஹார்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

201708021238487665_1_sham._L_styvpf.jpg

பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, முகமது ‌ஷமி சிறப்பான நிலையில் உள்ளனர். பலவீனமான இலங்கையை வீழ்த்தி முன்னிலை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத இலங்கை கேப்டன் சன்டிமால் நாளைய போட்டியில் இடம் பெறுகிறார். இதேபோல திரிமானேயும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இருவரது வருகையால் அந்த அணி பேட்டிங்கில் பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உபுல் தரங்கா, கருணா ரதனே, குணதில்கா, ஹெராத், பெர்னாண்டோ போன்ற சிறந்த வீரர்களும் அணியில் உள்ளனர். முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இலங்கை வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.

201708021238487665_2_rrqlxn2l._L_styvpf.

இரு அணிகளும் நாளை மோதும் போட்டி 40-வது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 39 போட்டியில் இந்தியா 17-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றுள்ளன. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், அபினவ் முகுந்த், புஜாரா, ரகானே, ஹர்த்திக் பாண்டியா, விருத்திமான் சகா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், ராகுல், ரோகித் சர்மா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா.

இலங்கை: சன்டிமால் (கேப்டன்), உபுல் தரங்கா, கருணா ரதனே, குணதில்கா, கவுசல் மெண்டீஸ், மேத்யூஸ், டிக்வெலா, தில்ருவன் பெரைரா, ஹெராத், பிரதீப், குஷால் பெரைரா, குணரதனே, திரிமானே, தனஞ்செயன் டிசில்வா, லகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ, நுவீன் பிரதீப், புஷ்பக் குமாரா, சண்டகன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/02123844/1099998/India-vs-Srilanka-2nd-test-tomorrow.vpf

  • தொடங்கியவர்

இந்திய அணி நாணயச்சுழற்சியில் வெற்றி ; துடுப்பெடுத்தாட முடிவு

 

 

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

india-srilanka-crickrt.jpg

 

http://www.virakesari.lk/article/22667

  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்ட்: முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 238/3

 

 
 

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது.

 
 
 
 
கொழும்பு டெஸ்ட்: முதல் நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 238/3
 
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் உள்ள சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளருடன் இலங்கை களம் இறங்கியது.

தொடக்க வீரர்களாக தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். இதனால் முதல் 10 ஓவரில் இந்தியா 56 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை தில்ருவான் பெரேரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டம் இழந்தார். தவான் 37 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 35 ரன்கள் சேர்த்தார்.

201708031447371118_1_1-dhawan-s._L_styvp
35 ரன்கள் சேர்த்த தவான் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 6 முறை அரைசதம் அடித்துள்ளார்.

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 52 ரன்னுடனும், புஜாரா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201708031447371118_2_1-dilruwan-s._L_sty
தவான் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் தில்ருவான் பெரேரா

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இந்தியாவின் ஸ்கோர் 109 ரன்னாக இருக்கும்போது ராகுல் 57 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி அவுட்டாகும்போது இந்தியா 133 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து 4-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 112 பந்துகளில 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

201708031447371118_3_1-pujara-s._L_styvp
89 ரன்களுடன் களத்தில் இருக்கும் புஜாரா

இந்தியா முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 89 ரன்களுடனும், ரகானே 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/03144731/1100248/Colombo-Test-1st-Day-Tea-break-india-238-for-3.vpf

 
(90 ov)344/3
 
  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்ட்: ரஹானே, புஜாரா சதம் விளாசல்!

 
 

இந்தியா - இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது. இந்திய தரப்பில் புஜாரா மற்றும் ரஹானே சதம் விளாசினர்.

புஜாரா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்புவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அதிக ரன்கள் எடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர். இதில் தவான், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்தார். ஆனால், 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த போது அவர் பெரேராவின் பந்தில் எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல், 82 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 

ரஹானே

 

பின்னர் இறங்கிய புஜாரா, அவர் ஸ்டைலில் விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கினார். சீரான இடைவெளியில் பவுண்ட்ரிகள் ஸ்கோர் செய்து வந்த புஜாரா, 165 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய கேப்டன் விராட் கோலி 13 ரன்கள் மட்டுமே எடுக்க, ரஹானே புஜாராவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவரும் சதத்தைக் கடந்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் புஜாரா 128 ரன்களும், ரஹானே 103 ரன்களும் எடுத்து தொடர்ந்து களத்தில் உள்ளனர். இந்தியா, ஆட்ட முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. மூன்று  டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/97878-colombo-test-rahane-pujara-hits-centuries.html

  • தொடங்கியவர்
இந்தியா
6.png&h=42&w=42
442/5 (120 ov)
Lunch
  • தொடங்கியவர்
இந்தியா
553/7 (150 ov)
Tea
  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: பந்துவீச்சிலும் இந்தியா ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்: பந்துவீச்சிலும் இந்தியா ஆதிக்கம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தைப் போன்று பந்துவீச்சிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது.

இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறுத்த, பதிலளித்தாடும் இலங்கை ஆட்டநேர முடிவில் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இரண்டாம் நாளான இன்று 3 விக்கெட் இழப்புக்கு 344 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

செட்டேஷ்வர் புஜாரா 133 ஓட்டங்களுடனும், அஜின்கியா ரஹானே 132 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின், விருத்மன் ஷா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அரைச்சதமடித்தனர்.

ரவீந்திர ஜடேஜா 70 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்த போது, ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அறிவித்தார்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நேற்றைய தினம் உபாதைக்குள்ளான நுவன் பிரதீப் இன்று களமிறங்கவில்லை.

பதிலளித்தாடும் இலங்கை அணி இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது.

உபுல் தரங்க ஓட்டமின்றி ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அந்த 2 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார்.

குசல் மென்டிஸ் 16 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருக்க, இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

http://newsfirst.lk/tamil/2017/08/இலங்கைக்கு-எதிரான-இரண்ட-4/

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இலங்கை 183 ரன்னுக்கு ஆல் அவுட்

 

 
opl

கோப்புப் படம்

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

கொழும்பு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி அஸ்வினிடம் தரங்கா, கருணரத்ன ஆகியோரை இழந்து ஆட்ட முடிவில் 50 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், சந்திமால் 8 ரன்களுடனும் இன்று (சனிக்கிழமை) ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதில் சந்திமால் 10 ரன்னிலும் குஷால் மெண்டிஸ் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க. அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் இலங்கை அணியின் ரன் சேர்க்கை ஆட்டம் கண்டது.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வில்லா மட்டும் தாக்குப்பிடித்து 51 ரன்கள் சேர்த்து ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் இலங்கையின் விக்கெட்டுகள் சரிய, இலங்கை 183 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவின் ரவிசந்திரன் அஸ்வின் 69 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://tamil.thehindu.com/sports/article19433485.ece?homepage=true

  • தொடங்கியவர்
622/9d
Live
 
183 & 155/1 (39.4 ov) (f/o)
  • தொடங்கியவர்

லஷ்மண்- டிராவிட்டால் ஆஸி.க்கு ஏற்பட்ட நிலைமை கொழும்பு டெஸ்டில் இந்தியாவிற்கு ஏற்படுமா?

 

இலங்கை அணியின் கருணாரத்னே - மெண்டிஸ் ஜோடி 2-வது இன்னிங்சில் விளையாடுவதை பார்க்கும்போது லஷ்மண் - டிராவிட் ஆட்டத்தை ஞாபகப்படுத்துகிறது.

லஷ்மண்- டிராவிட்டால் ஆஸி.க்கு ஏற்பட்ட நிலைமை கொழும்பு டெஸ்டில் இந்தியாவிற்கு ஏற்படுமா?
 
கொல்கத்தாவில் 2001-ல் நடைபெற்ற டெஸ்டில் பாலோ-ஆன் ஆன இந்தியா, அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

2001-ம் ஆண்டு மார்ச் மாதம் 11-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரை நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் வாக் பேட்டிங் தேர்வு செய்தார். ஹெய்டன் (97), ஜஸ்டின் லாங்கர் (58), ஸ்டீவ் வாக் (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 171 ரன்களில் சுருண்டது. லஷ்மண் மட்டும் அதிகபட்சமாக 59 ரன்கள் சேர்த்தார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா 274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஸ்டீவ் வாக் பாலோ-ஆன் தேர்வு செய்தார். அதன்படி இந்தியா 2-வது இன்னிங்சை தொடர்ந்தது.

தொடக்க வீரர்கள் ரமேஷ் (30), தாஸ் (39), தெண்டுல்கர் (10), கங்குலி (48) அவுட்டான பின்னர் லஷ்மண் உடன் டிராவிட் ஜோடி சேர்ந்தார். டிராவிட் களம் இறங்கும் முன் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் சேர்த்திருந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லஷ்மண் - டிராவிட் ஆஸ்தரேலியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 9 பேர் பந்து வீசியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

லஷ்மண் 281 ரன்னும், டிராவிட் 180 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 376 ரன்கள் குவித்தது. 178 ஓவர்கள் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

ஆஸ்திரேலியாவை விட 383 ரன்கள் அதிகம் பெற்றது. 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 212 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

201708051658201348_1_3-mendis-s._L_styvp

பாலோ-ஆன் தேர்வு செய்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் மிகுந்த வருத்தம் அடைந்தார். அத்துடன் இந்தியாவில் விளையாடும்போது பாலோ-ஆன் தேர்வு செய்யமாட்டேன் என்று தெரிவித்தார்.

அதே நிலைமை தற்போது கொழும்பு டெஸ்டில் இந்தியாவிற்கு ஏற்படுமோ என்ற நிலை உருவாகும்போல் தெரிகிறது.

கொழும்பு டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 183 ரன்னில் சுருண்டது. இந்தியாவை விட இலங்கை அணி 439 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது.

201708051658201348_2_3-karunaratne1-s._L

இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக உபுல் தரங்கா, கருணாரத்னே ஆகியோர் களம் இறங்கினார்கள். தரங்கா 2 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை 7 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சிறப்பாக இருந்த போதிலும் அதை திறமையாக எதிர்கொண்டனர்.

இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் சதம் அடித்தார்.


ஒரு வழியாக இலங்கையின் ஸ்கோர் 198 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது கருணாரத்னே 83 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.

தற்போது இலங்கை இந்தியாவை விட 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை உள்ளது.

கருணாரத்னே, சண்டிமல், மேத்யூஸ் இணைந்து அதிக ஸ்கோர் அடித்தார், 2001-ல் கொல்கத்தாவில் பாலோ-ஆன் கொடுத்து ஏமாற்றம் அடைந்த ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தியாவிற்கு ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/05165819/1100690/INDvSL-Colombo-Test-will-remember-2001-kokata-Test.vpf

  • தொடங்கியவர்
622/9d
Live
183 & 292/4 (86.3 ov) (f/o)
  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: 2-0 என தொடரை வென்றது

 

 
galle_test

 

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளெர் செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.

இதனால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 439 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.

துவக்க வீரர் திமுத் கருணாரத்னே 141 ரன்களும், குஷால் மெண்டீஸ் 110 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. 

http://www.dinamani.com/sports/sports-news/2017/aug/06/india-won-by-an-innings-and-53-runs-at-colombo-test-and-clinch-the-series-2-0-2750775.html

  • தொடங்கியவர்

இலங்கை வீரரை மிரட்டும் வகையில் ‘த்ரோ’ செய்த ஜடேஜாவிற்கு 3-வது டெஸ்டில் விளையாட தடை

 

இலங்கைக்கு எதிரான 2-வது இன்னிங்சில் விக்கெட் விழாத விரக்தியில் கருணாரத்னேவை நோக்கி பந்தை ‘த்ரோ’ செய்த ஜடேஜாவிற்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை வீரரை மிரட்டும் வகையில் ‘த்ரோ’ செய்த ஜடேஜாவிற்கு 3-வது டெஸ்டில் விளையாட தடை
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றுடன் முடிவடைந்த கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஜடேஜா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உறுதுணையாக இருந்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் கிடைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 183 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் ஆனதால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் விக்கெட் 7 ரன்னில் வீழ்ந்தது. 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார்கள். அதிக அளவில் பந்து பவுன்சர், டர்ன் ஆகிய போதிலும் ஜடேஜா மற்றும் அஸ்வினால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் இருவரும் விரக்தியடைந்தனர்.

201708061827536941_1_3-Indian-Team-s._L_

58-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் ஒரு பந்தை தடுத்தாடினார் கருணாரத்னே. அப்போது பந்து ஜடேஜா நோக்கி வந்தது. பந்தை பிடித்த ஜடேஜா மின்னல் வேகத்தில் கருணாரத்னே நோக்கி எறிந்தார். கருணாரத்னே சற்று விலகியதால் பந்து சகாவை நோக்கி சென்றது. சகா கையை பலமாக தாக்கிவிட்டு பந்து பறந்தது.

ஐ.சி.சி. விதிப்படி ஒரு வீரர் மற்ற வீரர்களை பயமுறுத்தும் வகையிலோ, மிரட்டும் வகையிலோ கிரிக்கெட் சம்பந்தமாக பொருட்களை தூக்கி வீசக்கூடாது. அப்படி வீசினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்படும்.  மைதான நடுவர்கள் இந்த சம்பவம் குறித்து போட்டி நடுவரிடம் தெரிவித்தனர்.

201708061827536941_2_6-jadeja-s._L_styvp

கொழும்பு டெஸ்ட் முடிந்ததும், இந்த போட்டிக்கான நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது ஜடேஜா தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதனால் அவருக்கு தடைக்கான 3 புள்ளிகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தூரில் நடைபெற்ற போட்டியில் பந்து வீசிய பின்னர் அபாயம் எனக் கருதப்படும் பிட்ச் பகுதியில் நடந்ததால் தடைக்கான 3 புள்ளிகள் பெற்றார். தற்போது மிரட்டும் வகையில் பந்தை வீசியதால் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளார்.

24 மாதங்களுக்குள் 6 புள்ளிகள் பெற்றால் போட்டியில் தடைவிதிக்க விதிமுறை உள்ளது. தற்போது ஜடேஜா 6 புள்ளிகள் பெற்றுள்ளதால் பலேகலேயில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/06182752/1100862/Jadeja-suspended-for-Pallekele-Test.vpf

  • தொடங்கியவர்

ரங்கன ஹேரத் விளையாட மாட்டார் !

Published by Priyatharshan on 2017-08-08 12:29:20

 

இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் விளையாடமாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

rangana-herath.jpg

கண்டி பல்லேகலயில் இடம்பெறவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான  3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவிக்கையில், 

 

இரு இலங்கை வீரர்கள் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு இணைக்கப்பட்டுள்ளதகவும் ஒருவர் ரங்கன ஹேரத்திற்கு பதிலாகவும் மற்றையவர் ஏற்கனவே உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள நுவான் பிரதீப்பிற்கு பதிலாகவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

 

இந்திய அணிக்கெதிரான தொடரில் இலங்கை அணியை பொருத்தவரையில் ஹேரத் 3 ஆவது நபராக உபாதைக்குள்ளனவர்கள் வரிசையில் உள்ளார். இதற்கு முன்னர் நுவான் பிரதீப் மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.

3 டெஸ்ட் போட்டிகளிலும் குறைந்தது 200 ஓவர்கள் பந்து வீசியுள்ளதால் ஹேரத்தின் உடல்நிலையில் பாதிப்பேற்படா வண்ணம் அவரை அணியில் இருந்து வெளியில் அழைத்துள்ளோம். 

இதேவேளை, கண்டிக்கு பயணம் மேற்கொண்டு விளையாடுவதைவிட கொழும்பில் இருந்து சிகிச்சை பெறுவது மேல் என ஹேரத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் தவறவிடும் பழக்கமற்றவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 வெற்றிபெற்று தொடரை வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22866

  • தொடங்கியவர்

இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட்டிற்கு இந்திய அணியில் புதிய வீரர்

Axiar-Patel-696x451.jpg Image courtesy - BCCI
sl-v-ind-2017-live-score-728.jpg

சுற்றுலா இந்திய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவ்வணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடன் கொழும்பில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில் 2ஆவது இன்னிங்ஸிற்காக இலங்கை துடுப்பெடுத்தாடிய போது போட்டியின் 58 ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் தான் வீசிய பந்துக்கு களத்தடுப்பில் ஈடுபட்ட ஜடேஜா, தனது கோட்டுக்குள் இருந்து வெளியேறாமல் இருந்த இலங்கை துடுப்பாட்ட வீரரின் திசையை நோக்கி பந்தை திரும்ப வீசினார். அந்தப் பந்து மலிந்த புஷ்பகுமாரவைத் தாக்குவது நூலிழையில் தப்பியது.

ஜடேஜா பந்தை ஆபத்தான முறையில் எறிந்ததாக கள நடுவர்கள் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து .சி.சி போட்டி மத்தியஸ்தர் ரிச்சி ரிச்சட்சன் முன்வைத்த முறைப்பாட்டின்படி தன் மீதான குற்றச்சாட்டை ஜடேஜா ஏற்றதை அடுத்து அவருக்கு ஒரு போட்டித்தடையும், போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீத அபாரதமும் விதிக்கப்பட்டது.  

இதனால், கடந்த 2 ஆண்டுகளில் 6 தரமதிப்பிழப்பு புள்ளிகளை பெற்ற அவருக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஜடேஜாவுக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேலை 15 பேர் கொண்ட இந்திய அணிக்குள் இணைத்துக்கொள்ள அந்நாட்டு தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி இலங்கை அணியுடனான அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த சைனமன் பந்துவீச்சாளரான குல்திப் யாதவ் அல்லது அக்சார் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

தென்னாபிரிக்காவில் நிறைவடைந்த தென்னாபிரிக்க ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய 23 வயதான இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல், ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் தெரிவுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.  இதன்போது ஓப் ஸ்பின் பந்துவீச்சாளரான ஜயந்த் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரில் ஒருவரை ஜடேஜாவுக்குப் பதிலாக அணிக்குள் இணைத்துக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அணியில் குல்தீப் யாதவ் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதால், அணி முகாமைத்துவத்தின் வேண்டுகோளின்படி குறித்த வீரர்களில் ஒருவரை மாத்திரம் அணியுடன் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி பந்து வீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் ஜடேஜாவைப் போன்று விளையாடுகின்ற அக்சார் பட்டேலை இந்திய அணியுடன் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அக்சாரை இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் இணைத்துக்கொள்ளவே இந்திய முகாமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் என அதிகமாக நம்பப்படுகின்றது.

இதுவரை 23 உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள அக்சார், ஒரு சதம் மற்றும் 10 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 79 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி 48.45 என்ற சராசரியைக் கொண்டுள்ளார். அத்துடன், இந்திய அணிக்காக 30 ஒருநாள் போட்டிகளில் 35 விக்கெட்டுக்களையும் (30.20 சராசரி) 7 T20 போட்டிகளில் 7 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

இவ்வாறான சிறந்த பதிவுகளைக் கொண்டுள்ள அவர் குறித்த டெஸ்ட் போட்டியின்மூலம், இந்திய டெஸ்ட் அணிக்காக முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் ; இலங்கை குழாம் அறிவிப்பு

 

 

இந்திய அணிக்கெதிராக 3 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்ட்டுள்ளது.

sri-lanka.jpg

இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ள அதேவேளை, சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திற்கு இப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி விபரம் வருமாறு,

டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனஞ்சய, லகிரு திரிமன்னே, லகிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, துஷ்மந்த சாமிர, லகிரு கமகே, டில்ருவான் பெரேரா, மிலிந்த புஷ்பகுமார, லக்ஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

http://www.virakesari.lk/article/23029

  • தொடங்கியவர்
கௌரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இலங்கை
India vs Sri Lanka 3rd test Preview

கௌரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் இலங்கை

sl-v-ind-2017-live-score-728.jpg

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள இலங்கை அணி தொடர் முழுவதிலும் தோல்வி அடையும் நெருக்கடியை தவிர்க்கும் ஒரு கௌரவப் போராட்டத்திற்காக மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது.

இலங்கை அணியை சகல துறைகளிலும் துவம்சம் செய்திருக்கும் இந்திய அணி அந்த ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள கடைசி டெஸ்டிலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை (12) ஆரம்பமாகவிருக்கும் இலங்கைஇந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி, தொடர் தீர்மானிக்கப்பட்ட நிலையிலும் அதிக எதிர்பார்ப்புகள் கொண்ட போட்டியாக மாறியுள்ளது.  

இந்த தொடரில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளையும் ஒப்பிடுகையில் இந்திய அணி துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டு துறைகளிலும் இலங்கையை விடவும் பல மடங்கு முன்னிலை வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்திய அணி மூன்று இன்னிங்ஸ்களில் விளையாடி 1440 ஓட்டங்களை பெற்றிருக்கிறது. அதாவது விக்கெட் ஒன்றுக்கு சராசரியாக 65.45 ஓட்டங்களை பெற்றது.  

எனினும், இலங்கை அணி நான்கு இன்னிங்ஸ்களில் மொத்தம் 1,105 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி பார்த்தால் அந்த அணி விக்கெட் ஒன்றுக்கு சராசரியாக 27.67 ஓட்டங்களையே குவித்தது.

பந்து வீச்சிலும் இதே நிலை தான். விருந்தாளிகளான இந்தியா 1931 பந்துகளை வீசி இலங்கை அணியின் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியது. அதாவது இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் 40.27 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதம் வீழ்த்த தவறவில்லை.

மறுபக்கம் இலங்கை பந்து வீச்சாளர்கள் 2065 பந்துகளை எறிந்து 22 விக்கெட்டுகளையே வீழ்த்தியது. அதாவது இந்தியா துடுப்பெடுத்தாடிய மூன்று இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸில் மாத்திரமே அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கையால் சுருட்ட முடிந்தது. இதற்கு இடையில் இலங்கை 93.86 பந்துகளுக்கு ஒரு விக்கெட் வீதமே வீழ்த்தியது.

இந்த தரவுகள் இரு அணிகளுக்கும் இடையில் காணப்படும் அதிக இடைவெளியை காட்டுகிறது.

இலங்கையின் மீளாத காயம்

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமான தோல்விகளை சந்தித்து சொந்த மண்ணில் தொடரையும் இழந்து நிர்க்கதியான நிலையிலேயே இலங்கை அணி பல்லேகல டெஸ்டில் களமிறங்குகிறது. இலங்கை அணியின் நான்கு வீரர்கள் காயங்களால் வெளியேறி இருப்பதும் அணிக்கு பெரும் பலவீனமாகும்.

அணியின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திற்கு முதுகுவலி பிரச்சினையால் கடைசி டெஸ்டில் ஓய்வு வழங்கப்படுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் கொழும்பு டெஸ்டில் 17.4 ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். சகலதுறை வீரர் அசேல குணரத்ன ஏற்கனவே தொடரின் ஆரம்பத்திலேயே அணியில் இருந்து வெளியேறிவிட்டார். மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலும் தனது முதுகுப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதையால் தொடரில் விளையாட முடியாமல் இருக்கின்றார்.

இலங்கை அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வீரர்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியே புதிய போட்டி உத்திகளுடன் களமிறங்கவேண்டி ஏற்பட்டுள்ளது.  

இதன்படி வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மன்த ஷமீர மற்றும் லஹிரு கமகே புதிதாக 15 பேர் குழாமில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட சமீர அணிக்கு அழைக்கப்பட்டிருப்பது இலங்கை மூன்றாவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சு மீது அதிக நாட்டம் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.  

இலங்கை அணி இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் நிலையிலேயே டெஸ்ட் போட்டி அனுபவம் இல்லாத கமகே மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை குழாமில் ஏற்கனவே லஹிரு குமார மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

மறுபக்கம் ரங்கன ஹேரத் இல்லாத நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சில் யார், முன்னின்று செயற்படப்போகிறார்கள் என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது. டில்ருவன் பெரேரா மற்றும் மலின்த புஷ்பகுமாரவுடன், புதிர் பந்துகளை வீசும் சைனமன் பந்துவீச்சாளர் லக்ஷான் சன்தகனும் இலங்கை குழாமில் சுழற்பந்து வீச்சாளராக உள்ளனர். SSC போட்டியில் தனது கன்னி ஆட்டத்தில் ஆடிய புஷ்பகுமார குறிப்பிடும்படியாக ஆடவில்லை.  

இந்நிலையில் இலங்கை பதினொருவர் குழாமில் இடம்பெறப்போகும் சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து ஆடுகளத்தை பொறுத்தே மாற்றங்கள் கொண்டுவர வாய்ப்புகள் அதிகம்.

கடந்த ஜூனில் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் தனது ஒப்பந்தத்தின் பாதியில் விலகியதில் இருந்து இலங்கை அணி  சிக்கலை சந்தித்து வருகின்றது.   

இதனை அடுத்து நடந்த ஜிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்ததால் அணியின் மனநிலை மேலும் பலவீனம் அடைந்தது. இப்போதைய நிலையில் இலங்கை அணிக்கு ஒரு திருப்புமுனையான வெற்றியே தேவைப்படுகிறது. அந்த வெற்றியை பல்லேகல டெஸ்டில் பெற அணித்தலைவர் சந்திமால் எதிர்பார்க்கிறார்.

உண்மையில் இதுபோன்ற அணி ஒன்றை (இந்தியா) எம்மால் ஒரு போட்டியில் வெல்ல முடியுமாக இருந்தால் அணியில் மனநிலையை உயர்த்த முடியுமாக இருக்கும். அவர்கள் உலகின் முதல்நிலை அணியாகும் என்கிறார் சந்திமால்.   

எனினும் நாளைய போட்டியில் நீண்ட நாட்களின் பின்னர் லஹிரு திரிமான்ன மத்திய தர வரிசைக்காக அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது போன்றே விஷ்வ பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார ஆகியோர் பந்து வீச்சு துறைக்காக அணியில் இணைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல (வி.கா), லஹிரு திரிமான்ன, டில்ருவன் பெரேரா, மலின்த புஷ்பகுமார, லஹிரு குமா, விஷ்வ பெர்னாண்டோ   

பாதகங்களில் சில சாதகங்கள்

இலங்கை அணி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரிவர சோபிக்காதபோதும் அணியின் ஆங்காங்கே பதிவான திறமைகளை கச்சிதமாக பயன்படுத்தினால் கடைசி டெஸ்டில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க போதுமாக இருக்கும். குறிப்பாக SSC தோல்வியை தவிர்க்க இரண்டாது இன்னிங்ஸில் இலங்கை அணி எந்த நெருக்கடியும் இல்லாமல் ஓட்டங்களை குவித்த பாணி ஒரு சாதகமான அம்சமாகும்.

இந்த டெஸ்ட் தொடரில் தனித்து விளங்கிய துடுப்பாட்ட வீரராக ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்னவை குறிப்பிடலாம். காலி டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் 97 ஓட்டங்களை பெற்ற அவர் இரண்டாவது டெஸ்டிலும் நெருக்கடியான நேரத்தில் 141 ஓட்டங்களை குவித்தார்.

இந்த தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர்கள் வரிசையில் 265 ஓட்டங்களுடன் கருணாரத்ன இரண்டாவது இடத்தில் காணப்படுகிறார். அவரது ஓட்ட சராசரி கூட 66.25 என ஆரோக்கியமாகவே உள்ளது. அதிக நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக அடுவதே கருணாரத்னவின் சிறப்பம்சம். எனவே, கடைசி டெஸ்டில் கருணாரத்ன தனது தேவையை உணர்ந்து ஆடுவார் என்பதே இலங்கை அணியின் எதிர்பார்ப்பு.

அதேபோன்று, இளம் வீரர் குசல் மெண்டிஸ் கொழும்பு டெஸ்டில் எது பற்றியும் கவலைப்படாமல் பந்துகளை விளாசி பெற்ற சதம் அவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதன்போது அவரது துடுப்பாட்டத்தில் ரிவர்ஸ் ஸ்விப் போன்ற துணிச்சலாக அடித்தாடும் பாணியையும் காண முடிந்தது. பல்லேகலயிலும் இதே பாணியை கடைபிடித்தால் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமாக இருக்கும்.  

நடந்து முடிந்த இரண்டு டெஸ்டுகளிலும் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மேலோட்டமாக பார்த்தால் சோபிக்கவில்லை என்றபோதும் அவரது துடுப்பாட்டத்தில் சில சாதகமான பண்புகளை பார்க்க முடிகிறது.   

காலி டெஸ்டில் 83 ஓட்டங்கள் பெற்ற மெதிவ்ஸ், கொழும்பில் ஜடேஜாவின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசியது அவரது துப்பாட்ட திறமை இன்னும் மழுங்கவில்லை என்பதை காட்டுகிறது. மறுமுனையில் சரியான உதவி கிடைத்தால் மெதிவ்சிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அந்த சாகச இன்னிங்ஸை தொடர்ந்தும் பார்க்க முடியுமாக இருக்கும்.

இலங்கை அணி ரங்கன ஹேரத்தை மையமாகக் கொண்டு சுழற்பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தியபோது இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அதற்கு தம்மை தயார்படுத்தி ஆடியதை பார்க்க முடிந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சில் இந்தியா சற்று தடுமாற்றம் கண்டது. காலி டெஸ்டில் நுவன் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் கொழும்பு டெஸ்டில் அதிகம் பந்துவீசியே இருக்காத திமுத் கருணாரத்ன கூட மிதவேகப்பந்து வீசி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியின் இந்த பலவீனத்தை இலங்கை சரியாக பயன்படுத்திக் கொண்டால் விக்கெட்டுகளை சாய்க்க முடியும்.

விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வல்ல இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 48 பந்துகளில் பெற்ற 51 ஓட்டங்களுமே அதிகம். அப்போது இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்களுக்கு திக்வெல்ல அபாரமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தார். திக்வெல்ல முதல் டெஸ்டிலும் இவ்வாறு ஆடி 67 ஓட்டங்களை பெற்றிருந்தார். திக்வல்லவின் அட்ட பாணியை கொண்டு இலங்கை அணி அதிகம் கற்றுக்கொள்ள முடியும்.

மேலும் சாதிக்க எதிர்பார்க்கும் இந்தியா

SSC டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸால் வென்றபோது அவ்வணி கடந்த 10 போட்டிகளில் 8 ஆவது வெற்றியை பெற்றது. அதேபோன்று டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக எட்டாவது வெற்றியை பெற்றது. அது போன்றே இலங்கை மண்ணில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை பெறுவதும் முதல் முறையாக இருந்தது.

எனவே, முழுமை பெற்ற ஓர் அணியை கொண்டிருக்கும் இந்தியா தனது சாதனை பட்டியலை நீட்டிக் கொள்ளும் நோக்கிலேயே வரும் சனிக்கிழமை மூன்றாவது டெஸ்டில் களமிறங்கும்.

இந்த வரிசையில் இந்திய அணி பல்லேகல டெஸ்டை வெற்றி பெற்றால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெளிநாட்டு மண்ணில் 3-0 என முழுமையாக வெல்லும் முதல் சந்தர்ப்பமாக அது இருக்கும். இதற்கு முன்னர் இந்திய அணி மூன்று தடவைகள் முழுமையாக தொடரில் வென்றுள்ளது. எனினும் அவை அனைத்தும் சொந்த மண்ணில் நிகழ்த்திய சாதனைகளாகும்.

இதுவே, இலங்கை அணி தனது சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இதுவரை ஒரு தடவையே தோற்றுள்ளது. அது நிகழ்ந்து தற்போது 13 ஆண்டுகள் எட்டிவிட்டன. அப்போது பலம்மிக்க அணியாக இருந்த அவுஸ்திரேலியாவிடமே இலங்கை இந்த மோசமான நிலையை எட்டியது.  

இந்த நிலையில் பல்லேகல டெஸ்டில் இந்திய அணி சில மாற்றங்களுடனே களமிறங்க எதிர்பார்த்துள்ளது. குறிப்பாக .சி.சி ஒழுக்காற்று விதியை மீறியதால் இடைநீக்கத்திற்கு உள்ளாகி இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவிந்திர ஜடேஜா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார்.   

அதற்குப் பதில் இந்தியாவின் 15 பேர் குழாமில் டெஸ்ட் அனுபவம் அற்ற சுழற்பந்து வீச்சாளர் அக்ஷார் படேல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜடேஜாவின் இடத்திற்கு இவருடன் மற்றைய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் போட்டி போடுகிறார்.  

இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சோபித்து வரும் நிலையில் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படுவதற்கு அப்பால் குறிப்பிட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை தலைவர் விராத் கோலிக்கு இல்லை. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் சிதேஷ்வர் புஜாரா இரண்டு சதங்களுடன் அதிகபட்சமாக 301 ஓட்டங்களை பெற்றிருக்கிறார். இதன் ஓட்ட சராசரி 100 எட்டுவது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கப்படும் இந்திய குழாம்

விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், சிதேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், விரிதிமான் சாஹா (வி.கா), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முஹமட் ஷமி, இஷான்த் ஷர்மா உமேஷ் யாதவ்

பரீட்சயம் இல்லாத பல்லேகல மைதானம்

கண்டியில் இருக்கும் பல்லேகல சர்வதேச மைதானம் ஒப்பீட்டளவில் புதிய மைதானம் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் அதிக பரீட்சயம் இல்லாத ஆடுகளமாகும். 2010 ஆம் ஆண்டிலேயே இலங்கை இந்த மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தியா இங்கு இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.

இதுவரை இங்கு நடைபெற்ற ஐந்து டெஸ்ட்களில் இலங்கை 2016 ஆம் ஆண்டு நடந்த அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் வென்றது. எனினும் 2015ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் தோற்றது. ஏனைய மூன்று போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தன.

குசல் மெண்டிசுக்கு இந்த மைதானம் முக்கியமானதாகும். கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் தனி ஒருவராக 176 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை கரைசேர்த்தார். அவரது சதமே அவுஸ்ரேலியோவுக்கு எதிராக சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்க காரணமானது.  

பல்லேகலயில் முதல் இன்னிங்ஸின் ஓட்ட சராசரி 198 ஆகும். கடைசியாக இங்கு முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட ஓட்டங்கள் 117, 278 மற்றும் 226 ஆகும்.

இங்கு 47 வீதமான ஓட்டங்கள் பௌண்டரிகள் மூலமே பெறப்பட்டிருக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த மைதானத்தில் துடுப்பாட்ட வீரர்கள் 100 பந்துகளுக்கு 50.9 ஓட்டங்கள் வீதமும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக 44.9 ஓட்டங்கள் வீதமும் பெற்றுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில், இந்த மைதானத்தில் தமக்கு பரீட்சயம் இல்லாத நிலையில், வெளி மண்ணில் சாதனை வெற்றி பெறும் நோக்குடன் இந்திய அணியும், கௌரவத்தைக் காப்பதற்கான வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை அணியும் இந்த எதிர்பார்ப்பு மிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சனிக்கிழமை களம் காணவுள்ளன.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானம்

 

 

இலங்கைக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில்வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

india-sri-lanka-cricket.jpg

 

 

http://www.virakesari.lk/article/23072

  • தொடங்கியவர்
151/0 (30.5 ov)
  • தொடங்கியவர்

இலங்கை டெஸ்ட்! ராகுல் புதிய சாதனை

 

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரைசதமடித்த இந்திய வீரர் ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். 

கே.எல்.ராகுல்

 


பல்லகலே மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். ரவீந்திர ஜடேஜாவுக்குத் தடை விதிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக ’சைனா-மேன்’ குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்கவீரர்களாக தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தவான் ஒருமுனையில் அதிரடி காட்ட, மறுமுனையில் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.

தவான் 45 பந்துகளில் அரைசதமடித்தார். அவரைத் தொடர்ந்து அரை சதமடித்த கே.எல்.ராகுல், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7வது அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிகமுறை அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தச் சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 5 வீரர்கள் படைத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸின் எட்வீக்ஸ், சந்தர்பால், ஜிம்பாப்வேயின் ஆன்டிஃபிளவர், இலங்கையின் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகியோரின் சாதனைகளை ராகுல் சமன் செய்தார். அதேபோல், பல்லகலே மைதானத்தில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையையும் தவான் - கே.எல்.ராகுல் ஜோடி படைத்தது. 

http://www.vikatan.com/news/sports/98893-kl-rahul-equals-the-world-record-for-most-successive-50+scores-in-test-cricket.html

  • தொடங்கியவர்
231/3 (52 ov)
  • தொடங்கியவர்

தவண், ராகுல் கூட்டணிக்குப் பிறகு 141 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்பு: இந்தியா 329/6

 

 
dhawan

ஷிகர் தவண் சதம், ராகுல் 7வது தொடர் அரைசத சாதனை.   -  படம். | ஏ.எஃப்.பி.

பல்லகிலேயில் இன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான மூன்றாவது, இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் விருத்திமான் சஹா 13 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணியில் ஜடேஜா ஆட முடியாததையடுத்து குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார், மற்றபடி அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

டாஸ் வென்றதையடுத்து, முதல் விக்கெட்டுக்காக சத நாயகன் ஷிகர் தவண் (119 ரன்கள், 123 பந்துகள் 17 பவுண்டரிகள்), லோகேஷ் ராகுல் (85) ஆகியோர் இணைந்து 188 ரன்களைச் சேர்த்த பிறகு இந்திய அணி அடுத்த 51 ஓவர்களில் 141 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்துள்ளது.

ராகுல் சாதனை:

ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது தொடர்ச்சியான 7-வது அரைசதத்தை எடுத்து சாதனைப் பட்டியலில் இணைந்தார்.

எவர்ட்டன் வீக்ஸ், ஆண்டி பிளவர், சந்தர்பால், குமார் சங்கக்காரா, கிறிஸ் ராஜர்ஸ் ஆகியோருடன் தொடர் அரைசதப் பட்டியலில் இணைந்தார்.

பிட்சில் ஒன்றுமில்லை, ஆனாலும் முதல் விக்கெட்டுக்குப் பிறகு இலங்கை பவுலர்கள் நல்ல அளவில் வீசினர். இலங்கை அணிக்கு பீல்டிங் கை கொடுக்கவில்லை. மீண்டும் கேட்ச்கள் கோட்டை விடப்பட்டன. தவணுக்கு 2 கேட்ச்களும், ராகுலுக்கு ஒரு கேட்சும் தரைதட்டின. இதனால் ராகுல் தனது 7-வது தொடர் அரைசதத்தை எடுத்து சாதனை புரிந்தார். 135 பந்துகளில் 8 அழகான பவுண்டரிகளுடன் அவர் 85 ரன்கள் எடுத்து மலிந்தா புஷ்பகுமாராவின் இடது கை சுழற்பந்து வீச்சுக்கு மிட் ஆனில் கேட்ச் கொடுத்தார். பந்தி பிளைட் செய்தால் இறங்கி வந்து மிட் ஆனில் தூக்கும் பழக்கம் உள்ளவர் ராகுல், எனவே அவரது பலத்திலேயே அவரை வீழ்த்தியது இலங்கை.

ஷிகர் தவன், ராகுல் இணைந்து 39 ஓவர்களில் 188 ரன்கள் என்ற ஆரோக்கியமான ரன் விகிதத்தில் ரன்களை குவித்தனர், ஷிகர் தவணுக்கு வேகப்பந்து வீச்சாளர்களான பெர்னாண்டோ, குமாரா ஆகியோர் ஆஃப் ஸ்டம்பில் நிறைய வாரி வழங்கினர். அதனை பயன்படுத்திய தவண், ஸ்பின்னர்களுக்கு அருமையாக கால்களைப் பயன்படுத்தினார்.

குமாரா 3 ஓவர்களில் 26 ரன்களைக் கொடுத்த பிறகு பந்து வீச்சிலிருந்து அகற்றப்பட்டார். புஜாராவை கடந்த போட்டியில் வீழ்த்திய கருணரத்னே தனது வேகமின்மையினால் ராகுலை சற்றே படுத்தினார், மட்டை விளிம்பைச் சில முறை பீட் செய்தார். ஒருமுறை வேகம் இல்லாததால் ராகுல் அடித்த ஷாட் வானில் எழும்ப மிட் ஆனில் குமாராவினால் கேட்ச் எடுக்க முடியவில்லை. குமாரா மீண்டும் பந்து வீச வந்த போது கூட ஒன்று புல் லெந்தில் வீசினார் இல்லையேல் ஷார்ட் பிட்ச், ராகுலும், தவணும் பவுண்டரிகளாக அடித்தனர். 20-வது ஓவரில் இருவருமே அரைசதம் எட்டினர்.

ஷிகர் தவண் 107 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதம் எடுத்த்து பிறகு மேலும் 2 பவுண்டரிகளுடன் 123 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து புஷ்பகுமாரா பந்தை ஸ்வீப் செய்ய முயன்று ஸ்கொயர் லெக்கில் சந்திமாலின் நல்ல கேட்சுக்கு வெளியேறினார். ஒரே நாளில் 329 ரன்கள் குவித்த பிட்சில் புஷ்பகுமாரா அருமையாக வீசி 18 ஓவர்களில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மற்றொரு இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சண்டகன் ரன்களைக் கொடுத்தாலும் புஜாரா, கோலி ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

புஜாரா இன்னொரு சதம் கண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் எடுக்கும் சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் 8 ரன்களில் சண்டகனின் ஷார்ட் பிட்ச் பந்தை பலவீனமான ஒரு கட்ஷாட்டை ஆடி மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.

தேநீர் இடைவேளை வரை விராட் கோலிக்கும் ரஹானேவுக்கும் இலங்கை அணி சோதனைகளைக் கொடுத்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோ லேசான ரிவர்ஸ் ஸ்விங் அறிகுறியுடன் கோலியைப் படுத்தினார், இரண்டு ஓவர் பிட்ச் பந்துகளை பவுண்டரி அடித்த கோலி மற்ற பந்துகளை விட்டார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கோலியை டிரைவ் ஆடு என்று உசுப்பேற்றினார், ஆனால் கோலி மசியவில்லை.

புஷ்பகுமாரா தடுமாறிக் கொண்டிருந்த ரஹானேயை வீழ்த்தினார், ரஹானே 17 ரன்களில் ஆஃப் ஸ்டம்பில் இறங்கிய புஷ்பகுமாராவின் நேர் பந்தை கோணல் மட்டையுடன் ஆடப்போக பந்து திரும்பும் என்ற அவரது எதிர்பார்ப்பும் பொய்க்க பவுல்டு ஆனார் ரஹானே.

விராட் கோலி 84 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் மிகவும் அறுவையான ஒரு இன்னிங்சை ஆடி சண்டகன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே நல்ல அளவில் விழுந்த பந்தை உடலுக்குத் தள்ளி மட்டையை நீட்டி ஆட முயன்றதால் எட்ஜ் ஆகி கருணரத்னேயிடம் கேட்ச் ஆனது.

அஸ்வின் 31 ரன்கள் எடுத்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெர்னாண்டோவின் குறுக்காகச் சென்ற பந்தை நோண்டி அவுட் ஆனார். ஆட்ட முடிவில் சஹா 13 ரன்களுடனும் (இவரிடமும் தடுமாற்றத்துக்குக் குறைவில்லை), பாண்டியா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 188 ரன்கள் இல்லையெனில் இந்திய அணி இன்று சவாலைச் சந்தித்திருக்கும், ஒரு ஆதிக்க முறையில் இந்திய அணியினர் தவன், ராகுலுக்குப் பிறகு ஆடவில்லை, சராசரியை உயர்த்திக் கொள்ளும் போக்குதான் தென்பட்டது, இதனால் அடிக்க வேண்டிய பந்தையும் கூட அடிக்கவில்லை, இதனால்தான் ரஹானே, கோலி இன்னிங்ஸ் தடுமாற்றத்துடன் முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/article19480973.ece?homepage=true

  • தொடங்கியவர்
487 (122.3 ov)

ஹர்திக் பாண்டியா அபாரம்: 86 பந்துகளில் சதம் விளாசல்

 

 
pandya

86 பந்துகளில் முதல் சதம் கண்ட பாண்டியா சிக்ஸ் அடிக்கும் காட்சி.   -  படம். | ஏ.எஃப்.பி.

பல்லகிலேயில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 86 பந்துகளில் சதம் கண்டார். இந்திய அணி உணவு இடைவேளையின் போது 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்துள்ளது.

உணவு இடைவேளையின் போது பாண்டியா 93 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 66 ரன்களை சேர்த்தனர், இதில் உமேஷ் 3 ரன்களை மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டியா தனது அரைசதத்தை 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 61 பந்துகளில் எடுக்க அடுத்த 25 பந்துகளில் ஆவேசம்பூண்டார், மேலும் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி அடுத்த 50 ரன்களை 25 பந்துகளில் விளாசி தனது முதல் டெஸ்ட் சதத்தை ஒருநாள் போட்டி பாணியில் நிறைவு செய்தார்.

329 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என்று தொடங்கிய இந்திய அணி உணவு இடைவேளையின் போது 487 ரன்களை விளாசியது, அதாவது 158 ரன்களை உணவு இடைவேளைக்குள் அடித்து நொறுக்கினர். ஆனால் 9 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டம் அரைமணி நேரம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 ரன்னில் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய பாண்டியா உணவு இடைவேளைக்கு முன்னால் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். கால்லேயில் உணவு-தேநீர் இடைவேளையில் தவண் 100 ரன்களுக்கும் மேல் அடிக்க தற்போது இதே தொடரில் பாண்டியா ஒரே செஷனில் சதம் விளாசியுள்ளார்.

பாண்டியாவின் மட்டை சுழற்றலுக்குச் சிக்கிய இலங்கை பவுலர் இடது கை ஸ்பின்னர் புஷ்பகுமாரா, இவரது ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசினார் பாண்டியா. இதில் 2 பவுண்டரிகள் 3 அடுத்தடுத்த நேர் சிக்சர்கள். இந்த இலங்கைப் பந்து வீச்சை இப்படித்தான் ஆட வேண்டும் என்று காட்டினார் பாண்டியா.

http://tamil.thehindu.com/sports/article19485453.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.