Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி மறுப்பாரானால் இன்னொரு தலைமை அது காலத்தின் தேவை என்கிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்

Featured Replies

விக்கி மறுப்­பா­ரா­னால் இன்­னொரு தலைமை

அது காலத்­தின் தேவை என்­கி­றார் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன்

 
 
விக்கி மறுப்­பா­ரா­னால் இன்­னொரு தலைமை
 

தற்­போ­தைய சூழ­லில் சரி­யான பாதை­யில் செல்­வ­தற்­கான தலை­மையை முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரிப்­பா­ராக இருந்­தால், இன்­னு­மொரு தலைமை அல்­லது கூட்­டுத்­த­லை­மை­கள் உரு­வா­கக் கூடும். மாற்­றுத் தலைமை காலத்­தி­னு­டைய தேவை. தலைமை என்­பது ஒரு­வரை நம்பி இருப்­பது அல்ல.

மாற்­றுத் தலை­மையை வழங்­கக் கூடி­ய­வர்­கள் – அந்­தச் சக்தி உள்­ள­வர்­கள் மக்­களை அர­வ­ணைத்து, அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கையா­ளக்­கூ­டி­ய­வர்­கள் தலை­மைத்­து­வத்­துக்கு வர முடி­யும். இவை மக்­க­ளின் கையில் இருக்­கக்­கூ­டிய விட­யம். தனி­ந­பர் தீர்­மா­னிக்­கின்ற விட­ய­மாக இருக்­காது.

இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் தலை­வர் க.சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.
மட்­டக்­க­ளப்­புக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன், சம­கால அர­சி­யல் தொடர்­பில் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன் உட­ன­டி­யாக மாற்­றுத் தலைமை அவ­சி­ய­மில்லை என்ற கருத்­தில் உள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் தவ­று­கள் விட்­டி­ருந்­தால் அவ­ரு­டன் பேச முடி­யும் என்ற நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருக்­கின்­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த தேர்­தல் அறிக்­கை­யி­லி­ருந்து அத­னு­டைய தலைமை விலகி நடக்­கி­றது என்ற கருத்­தை­யும் முன்­வைத்­தி­ருந்­தார். வடக்கு- கிழக்கு இணைப்பு, கூட்­டாட்சி, தமிழ் மக்­க­ளுக்­கான சுயாட்சி என்­பன தேர்­தல் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள முக்­கிய விட­யங்­கள். தற்­போது இவை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத விட­ய­மா­கத் தமிழ் அர­சுக் கட்சி கைவிட்­டுள்­ளது. ஆனால் நான் அந்த விய­டங்­க­ளில் உறு­தி­யாக இருக்­கின்­றேன் என்­றும் முத­ல­மைச்­சர் கூறி­யுள்­ளார்.

வடக்கு மாகா­ண­ச­பை­யி­னால் தீர்­வுத் திட்­டம் வெளி­யி­டப்­பட்­டது. அந்­தத் தீர்­வுத் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யி­லும், ஏற்­க­னவே முன்­வைத்த தேர்­தல் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லும் செயற்­ப­டு­வ­தா­னால் மாற்­றுத் தலைமை அவ­சி­யம்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தற்­போது மாற்­றுத் தலைமை தேவை­யில்லை எனக் கூறி­யது அவ­ரது சொந்­தக் கருத்து. ஆனா­லும், வடக்கு மாகாண சபை­யின் தீர்­வுத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அவ­ருக்கு மாற்­றுத் தலைமை தேவை.

மாகாண சபை முத­ல­மைச்­ச­ரா­கத் தன்­னைக் கொண்டு வந்­த­தில் சம்­பந்­தன் மிகப்­பெ­ரிய பங்கு வகித்­துள்­ளார். ஆகவே நான் அவ­ருக்கு விரோ­த­மாக நடக்­கக் கூடாது என்று முத­ல­மைச்­சர் விக்­கி­னேஸ்­வ­ரன் நினைத்­தி­ருக்­க­லாம். இது சம்­பந்­தன் தொடர்­பான விட­ய­மல்ல. அர­சி­யல் தீர்வு சம்­பந்­தப்­பட்ட விட­யம். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்வை எவ்­வாறு முன்­னெ­டுத்­துச் செல்­வது, எவ்­வாறு மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான விட­யம்.

தமிழ் மக்­க­ளுக்­குக் கொடுத்த வாக்­கு­று­தி­கள் சக­ல­தும் தமிழ் அர­சுக் கட்­சி­யால் கைவி­டப்­பட்­டுள்­ளன. எதிர்­கா­லத்­தில் எவ்­வா­றான அர­சி­யல் தேவை என்­பதை மக்­கள் தீர்­மா­னிப்­பார்­கள்.

வடக்கு மாகா­ண­சபை, தமிழ் மக்­கள் பேரவை இரண்­டி­ன­தும் தீர்­வுத் திட்­டம், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னது தேர்­தல் அறிக்கை, இவை மூன்­றி­லு­மி­ருந்து முற்று முழு­தாக வில­கிய தீர்­வுத் திட்­ட­தால் எந்­தப் பய­னும் இல்லை. இந்த மூன்று திட்­டங்­க­ளி­லு­மி­ருந்­தும் தமிழ் அர­சுக் கட்சி தடம் மாறிச் செல்­கி­றது என்­பது உண்மை – என்­றார்.

http://uthayandaily.com/story/11407.html

  • தொடங்கியவர்

சி.வி.ஏற்காவிடினும் ஏதோவொரு வகையில் மாற்று தலைமையை உருவாக்குவதை தவிர்க்க முடியாது

p30-698917e95d7b88dd28320b9c4a8b90435840ee30.jpg

 

மட்டக்களப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார்
(செங்கலடி நிருபர்)

தமிழ் மக்களுக்கான மாற்று அரசியல் தலைமையை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஏற்காவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் மாற்றுத் தலைமை உருவாகுவதைத் தவிர்க்க முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சி.வி. ஏற்காவிடினும்  மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த சுரேஸ் பிரரேமச்சந்திரன் சம கால அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் -

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையா என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பொறத்தவரை உடனடியாக மாற்றுத் தலைமை அவசியமில்லை தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தவறுகள் விட்டிருந்தால் அவருடன் பேச முடியும் என கருத்து வௌியிட்டிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து அதனுடைய தலைமை விலத்தி நடக்கிறது என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார். வடகிழக்கு இணைப்பு, சமஷ்டி அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கான சுயாட்சி என்பன தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களாகும்.தற்போது இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாக தமிழ்ரசுக் கட்சி கைவிட்டுள்ளது. ஆனால் நான் அந்த வியடங்களில் உறுதியாக இருக்கின்றேன் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணசபையினால் ஒரு தீர்வுத் திட்டமொன்று வௌியிடப்பட்டுள்ளது அந்த தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது அந்த தீர்வுத் திட்டத்தையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு அந்த தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதானால் ஏற்கனவே முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் செயற்படுவதானால் ஒரு மாற்றுத் தலைமை என்பது முக்கியம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் தற்போது மாற்றுத் தலைமை தேவையில்லை எனக் கூறியது அவரது சொந்தக் கருத்தாக இருந்தாலும்கூட. வட, மாகாணசபை கொண்டுவந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதானால் நிச்சயமாக ஒரு மாற்றுத் தலைமை தேவை.

ஒருபுறம் தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாகாணசபையில் தாம் வைத்த புதிய அரசியல் தீர்வுத் திட்டம் ஏற்றுக்ககொள்ளப்பட வேண்டும் என முதலமைச்சருடைய கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கின்றன. இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளாது இருக்கின்ற சூழ்நிலையில் புதிய தலைமை அல்லது மாற்றுத் தலைமை அவசியம் என்பது உண்மை.

தன்னை ஒரு மாகாண சபை முதலமைச்சராக கொண்டுவந்ததில் சம்பந்தன் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார். ஆகவே நான் அவருக்கு விரோதமாக நடக்கக் கூடாது என முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நினைத்திருக்கலாம். ஆனால் இது சம்பந்தன் தொடர்பாக விடயமாகவிடயமல்ல அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான விடயமாகும்.

அதனை தற்போது தமிழசுக் கட்சி சரியாக மேற்கொள்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே எல்லோரும் கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான தலைமையை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிராகரிப்பாராக இருந்தால் இன்னுமொரு தலைமையை அல்லது கூட்டுத்தலைமைகள் உருவாகக் கூடும். மாற்றுத் தலைமை காலத்தினுடைய தேவை. மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவையாக இருந்தால் நிச்சயமாக உருவாகும்.

தலைமை என்பது ஒருவரை நம்பி இருப்பது அல்ல. மாற்றுத் தலைமையை வழங்கக்கூடியவர்கள் அந்த சக்தி உள்ளவர்கள் மக்களை அரவணைத்து அவர்களின் பிரச்சினைகளைக் கையாளக்கூடியவர்கள் தலைமைத்துவத்துக்கு வர முடியும். இவை மக்களின் கையில் இருக்ககூடிய விடயம் ஒரு தனிநபர் தீர்மானிக்கின்ற விடயமாக இருக்காது.

வடகிகழக்கு தற்போது இணைக்க முடியாது, ஒற்றை ஆட்சி என்பதை மாற்ற முடியாது, பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பன சம்பந்தனும் சுமந்திரனும் கூறுகின்ற கருத்துக்களாகும் இவற்றை தமிழ் தரப்பில் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் விஞ்ஞபனத்தில் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் இவை அல்ல.

அவர்கள் அரசியலில் இருப்பார்களா? ஒதுங்கிப் போவார்களா? போகமாட்டார்களா? ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவார்களா? இணையமாட்டார்களா? என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் சகலதும் இவர்களால் கைவிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் எவ்வாறான அரசியல் தேவை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

வடக்கு மாகாணசபை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது, தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டுள்ளது இவை மூன்றிலுமிருந்து முற்றுமுழுதாக புரள்ந்து போகப்படுமானால் அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை.

இந்த மூன்று திட்டங்களிலுமிருந்தும் தமிழரசுக் கட்சி தடம் மாறிச் செல்கிறது என்பது உண்மை அதனை வடக்கு முதலமைச்சர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர்: என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுள்ள  நிலைமையில்....  ஒரே தெரிவு, 
முதல்வர் விக்னேஸ்வரன்,
தனிக்  கட்சி  ஆரம்பித்து,
அடுத்த பொறுப்பை... இளைய தலைமுறையை சார்ந்தவர்களிடம், கையளிக்க வேண்டும்,
என்பதே என் ஆசை.
காரணம்... முதல்வரின்  வயது, இன்னும்.. எத்தனை வருடங்கள் உழைக்கத்  தயாராக இருக்கும் என்பதே....

சம்பந்தன், சுமந்திரன்  போன்ற...  கள்ள நாடகம் போடும்  ஆட்களை, 
இனியும், அரசியல் களத்தில் விட்டு வைத்திருந்தால், 
"பழைய புண்ணை,  நோண்டி... முகர்ந்து பார்க்கும்,"
பிச்சைக்காரனின்,  நிலைமைக்கு,  எம்மை கொண்டு வந்து  விடுவார்கள்.

முதல்வர்  விக்கினேஸ்வரன்  தேக ஆரோக்கியத்துடன்... 
இருக்கும் இந்த நாட்களிலேயே.... உடனடியாக, புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது தான்.
இதனை அவர் செய்யத் தவறினால், அவரும்... தமிழ் மக்களுக்கு, துரோகம் இழைத்த... மனிதராகி  விடுவார்.  tw_warning:

Edited by தமிழ் சிறி

தான் தலைமை தங்க முடியாது அந்த தகுதி தனக்கு இல்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு விளங்கியது பெரிய முன்னேற்றம்.

இதைப் போலவே சித்தார்தனும், செல்வநாதனும், மற்ற கோடரிக்காம்புகளும் விளங்கிக்கொண்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.