Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன?

Featured Replies

கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன?

 

போர்த்­துக்கேயரால் துவம்சம் செய்­யப்­பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்­தே­யுள்ள முற்­ற­வெளி மைதானம் முழு­வதும் சோலை­களும் மரங்­களும் விருட்­சங்­களும் விரவிக் கிடந்­தன. இவற்றை தமது இருப்­ப­கங்­க­ளா­கக்­கொண்­டுதான் ஆயிரக்கணக்­கான மான்கள், மந்­திகள், பற­வை கள், பட்­சிகள் வாசம் செய்­தன. கோட்டை வாச­லி­லி­ருந்து நடந்து செல்லும் பக்­தர்­க­ளுக்கு பந்தல் அமைத்­தது போல் காணப்­படும் விருட்­சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்­றைகள், புதர்கள் என மண்­டிக்­கி­டந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சர­ணா­லயம் போல் காணப்­பட்­டது. 

மான்­களும் மந்­தி­களும் ஓடித் திரிந்து, பற­வை­களும் பல்­லு­ யிர்­களும் கூடு­கட்டி குடும்பம் நடத் ­திய கோணேசர் ஆல­யத்தில் இன்று மான்கள் துள்­ளி­வி­ளை­யா­டு­வதைக் காண­ மு­டி­ய­வில்லை. மந்­திகள் தாவி விளையா­டிய மரங்­களைக் காண முடி­ய­வில்லை. விருட்சங்கள் வேரோடு பிடுங்­கி­யெ­றி­யப்­பட்டு விட்­டன. ஆயிரக் கணக்­கான மான்கள் தாவித்­தி­ரிந்த ஆலய வளா­கத்­துக்குள் இருந்த மான்கள் இன்று அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக உண­வுக்கும் குடிக்க நீருக்கும் அலைந்து திரியும் அவலக் காட்சி காருண்யமிக்க மக்­களை கண்­க­லங்க வைக்­கின்­றன. கோணேசர் ஆல­யத்தின் திர­விய இருப்­பு­க்களை விட, பொக்­கி­ஷங்­க­ளை­விட, பெரி­தாக போற்­றப்­பட்ட, மான் கூட்­டங்கள் அழிந்து போய் உலாவி திரி­கின்ற கொஞ்ச உயிர்­களும் அழிந்து போய்­விடும் ஆபத்­தான நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது எனப் பேசப்­படும் அள­வுக்கு கோணேசர் ஆல­யத்தின் சொத்­துக்கள் என நூற்­றாண்டுக் கணக்­காக காக்­கப்­பட்டு வந்த மான்கள் இன்று, ஆலய வள­வை ­விட்டு வெளியே வந்து, வீதி­வ­ழி­யேயும் மரக்­கறி கடை­க­ளிலும் கடற்­க­ரை­க­ளிலும் அலைந்து திரி­கின்­றன.

ஓல­மிட்டு ஓடி­வரும் வாக­னங்­க­ளுக்குள் அடி­பட்டு மரிக்­கின்­றன. கண்ட கண்ட உண­வு­களை பசியின் கொடு­மையால் உட்­கொண்டு பரி­த­வித்து இறந்து போகின்­றன. எங்­கி­ருந்தோ வரு­கின்ற உல்­லா­சப்­ப­ய­ணி­களின் கண்­க­ளுக்கு விருந்­தாகி அவர்­க­ளிடும் நவீன உண­வு­களை உட்­கொண்டு உயிர்மாய்ந்து போகின்­றன. நாய்கள் மான் குட்­டி­களை வேட்­டை­யா­டு­கின்­றன. வாக­ன­தா­ரிகள் வரும் வீச்சில் அடித்­து­விட்டுப் போகி­றார்கள். இந்த அவல நிலை­களால் ஆலய வளா­கத்­துக்குள் ஆயிரம் ஆயி­ர­மாக இருந்த மான்கள் இன்று 165 என்ற எண்­ணிக்கை கொண்டு இன்னும் சில காலத்தில் இருந்த இடம், இனம் தெரி­ யாத அவலம் ஏற்­பட்­டு­ விடும் எனப் பயங்­கொள் ளும் அள­வுக்கு அவை அழிந்து விட்­டன.

கோணேசர் ஆலயம் நூற்­றாண்­டு­க்க­ணக்­கான பழைமை கொண்ட ஆலயம். தேரோடும் வீதிகள் எட்­டுத்­தி­சை­களும் எட்டிச் சொல்லும் கோபு­ரங்கள், திர­விய இருப்­புக்கள், பொக்­கிஷ அறைகள், அழ­க­ழ­கான மண்­ட­பங்கள், வெள்­ளிச்­சு­ரங்கம், பொன், விலை உயர்ந்த கற்கள், இரத்­தி­னங்கள், கடல்­படு திர­வி­யங்கள் ஒன்­பது வீதிகள் ஆயிரம் இரத்­தினத் தூண்­களும் நூறு பொற்­றூண்­களும் ஆறு மண்­ட­பங்­களும் நான்கு கோபு­ர­ வா­சல்கள் சிக­ரங்கள் சாள­ரங்கள் வாசல்கள் உள்ள இவ்­வா­ல­யத்­தைத்தான் 1624 ஆம் ஆண்டு போர்த்­துக்­கீசர் இடித்து தரை மட்­ட­மாக்கி அங்­குள்ள திர­வி­யங்­க­ளையும் பொக்­கி­ஷங்­க­ளையும் சூறை­யா­டி­னார்கள் என்­பது வர­லாற்­றுப்­ப­தி­வுகள்.

போர்த்­துக்கேயரால் துவம்சம் செய்­யப்­பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்­தே­யுள்ள முற்­ற­ வெளி மைதானம் முழு­வதும் சோலை­களும் மரங்­களும் விருட்­சங்­களும் விரவிக் கிடந்­தன. இவற்றை தமது இருப்­ப­கங்­க­ளா­கக்­கொண்­டுதான் ஆயிரக்கணக்­கான மான்கள், மந்­திகள், பற­வைகள், பட்­சிகள் வாசம் செய்­தன.

கோட்டை வாச­லி­லி­ருந்து நடந்து செல்லும் பக்தர் ­க­ளுக்கு பந்தல் அமைத்­தது போல் காணப்­படும் விருட்­சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங் கள், கொடிகள், செடிகள், பற்­றைகள், புதர்கள் என மண்­டிக்­கி­டந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சர­ணா­லயம் போல் காணப்­பட்­டது.

ஆங்­கி­லேயர் தமது பாது­காப்புக் கருதி முற்­ற­வெ­ளிக்கு முன்­னா­லுள்ள பழைய கச்­சேரிக் கட்­ட­டத்­தி­லி­ருந்து கச்­சேரி நிர்­வா­கத்தை கோட்­டைக்குள் மாற்­றி ­னார்கள். இதன் கார­ண­மாக பொது­மக்­களும் பக்­தர்­களும் சென்­று­ வரும் நிர்­வாக மற்றும் ஆல­யப் ­ப­கு­தி­யாக கோட்டை காணப்­பட்­டது.

ஆல­யத்­துக்கு ஏறிச்­ செல்லும் குன்றின் மருங்­கெங் கும் இலந்தை மரங்கள், இல­வ­மரம், வேப்­ப­மரம், காட்­டு­மர இனங்கள் ஏரா­ள­மாகக் காணப்­பட்­டன. இவற்றை தமது அர­ணாகக் கொண்­டுதான் மானும் மந்­தியும், பற­வை­களும் பட்­சி­களும் வாசம் செய்த கோணேசர் ஆல­யத்தின் பகுதி, கோட்டை கச்­சேரி விஸ்­த­ரிப்பு என்ற போர்­வை­யிலும் அபி­வி­ருத்­தி­யென்ற போர்­வை­யிலும் அங்­குள்ள இயற்­கைக்­கா­டுகள் அழிக்­கப்­பட்­டன. மரங்கள் தறிக்­கப்­பட்­டன. 1983 ஆம் ஆண்­டுக்குப் பின் பக்­தர்கள் செல்ல முடி­ யாத சூன்ய பிர­தே­ச­மாக கோணேசர் ஆலயம் ஆக்­கப்­ பட்­டி­ருந்­தது. இவற்றின் எடு­பா­டுகள் கார­ண­மா­கவே, அங்­குள்ள மான்கள் உணவு தேடியும் நீர் நிலை­களை நாடியும் கோட்­டையை விட்டு வெளி­யே­றின. மந்­திகள் கூட்டம் கூட்­ட­மாக நகர திசை நோக்கி தாவத்தொடங்­கின. உண­வின்றி, குடிநீர் இன்றி அலைந்து திரிந்த மான்­களை சிலர் இர­க­சி­ய­மாக வேட்­டை­யா­டினர். பல பய­ணிகள் விபத்­தாக்கி வாரிச்­ சென்­றனர்.

தனது இனத்தைப் பெருக்க முடி­யாது ஈன்ற குட்­டி­க­ளோடு தெருக்­கோ­டியில் அலைந்து திரிந்த மான்­குட்­டி­களை தெரு­நாய்கள் வேட்­டை­யா­டின. வாக­ன­தா­ரிகள் ஈவி­ரக்­க­மின்றி விபத்­தாக்­கினர். இன்று அந்த ஆலயச் சொத்­துக்கள் முற்­றாக அழிந்து விடும் நிலையில் ஆயிரம் மான்­க­ளுக்கு மேலுள்ள அந்த அழ­கான உயிர்கள் 165 அளவில் குறைந்து இன்னும் சில நாட்­களில் அதுவும் இல்லா நிலை ஏற்­பட்­டு­ வி­டு­மென அபாயச் செய்­திகள் சொல்­லப்­ப­டு­கின்­றன.

மான் இனம் ஒற்றை மற்றும் பன்மைக் குடும்­பத்தைச் சேர்ந்­தவை. இவற் றில் பல இனங்கள் இருந்தபோதிலும் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படை குளம்­பிகள் வரி­சையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இவை இலை­யுண்ணி விலங்கு. மான், ஆடு, மாடுகள் போல் உண்ட உணவை இரு நிலை­களில் அசை­போடும்.

மானினம் உலகில் அவுஸ்­தி­ரே­லியா, அண்­டாட்­டிக்கா கண்­டங்கள் தவிர ஏனைய கண்­டங்­களில் வாழ்­கின்­றன. மான்­களில் புள்­ளி மான், சரு­கு மான், சாம்பார் மான், கவ­ரிமான் என நிறைய இனங்­க­ளுண்டு. கன­டா­விலும் சைபீ­ரியா முத­லிய வட­ப­கு­தி­களில் வாழும் மூசு அல்­லது எல்க் எனும் மான்தான் உலகில் மிகப் பெரிய மானினம்.

மான்­களில் பொது­வாக ஆண்­மான்கள் மட்­டுமே அழ­கான கொம்­பு­களை கொண்­டி­ருக்கும். இது கலை­யெ­னப்­படும் பெண்மான் பிடி என அழைக்­கப்­படும். இவை ஈனும் குட்­டி­க­ளுக்கு மான்­மறி என்று பெயர். இந்­தி­யாவில் பல­ ம­லைப் ­ப­கு­தி­களில் ஏரா­ள­மான வகை­வ­கை­யான மானி­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. இது அழிந்­து­வரும் இன­மாக காணப்­ப­டு­வதால் இவற்றை வேட்­டை­யா­டு­வதை இந்­தியா, இலங்கை போன்ற நாடுகள் தடை­செய்­துள்­ளன.  

இவ்­வகை மானி­னங்­களில் கோணேசர் ஆல­யத்­துக்குள் புள்ளி மான்­களே அதி­க­மாக காணப்­பட்­டன. 1950 ஆம் ஆண்­டுக்கு முன் போர்த்­துக்­கேயர் கோட்­டையை ஆக்­கி­ர­மித்த காலத்­திலும் ஆங்­கி­லே யர் ஆட்சி செய்த காலத்­திலும் சரு­கு ­மான்­களும் இருந்­த­தாக பல தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 1951 ஆம் ஆண்டு கோணேசர் ஆல­யத்தை புன­ர­மைப்பு செய்த காலத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான மான்கள் கலை, பிணை­யென இருந்­த­தாக ஆங்­கில தள­ப­தி­களின் பதி­வே­டு­க­ளி­லி­ருந்து அறி­யக்­ கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 1983 ஆம் ஆண்­டுக்கு முன்பும் 800 க்கு மேற்­பட்ட மான்கள் ஆலய வள­வுக்குள் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த நிலையில் 1983 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலை­மைகள் இவ்­வி­னத்தின் பேர­ழி­வுக்கு கார­ண­மா­கி­யுள்­ளன. ஆலய மான்கள் அழிந்து போன­மைக்­கான கார­ணங்கள் பற்றி மிரு­க­வியல் ரீதி­யா­கவும், சூழல் மய­மா­கவும் கார­ணங்கள் சொல்­லப்­ப­டாதபோதும் அவற்­றுக்­கான கார­ணங்கள் பின்­வரும் முறையில் முறை­ யிட்டு காட்­டப்­ப­டு­கி­றது.

1) காடுகள் அழிக்­கப்­பட்­டமை,

2) நீர்­நி­லைகள் இல்­லாமை,

3) உணவு பற்றா நிலை

4) உல்­லா­சப்­ப­ய­ணி­களின் பொறுப்­பற்ற தன்மை

5) ஆலய நிர்­வா­கத்தின் கவ­லை­யீ­னங்கள்

ஏலவே குறிப்­பிட்­டது போல் கோணேஷர் ஆல­யத்தின் சுற்றுச்சூழல் பகுதி காடுகள், மண்­டிய ஒரு அழ­கான இட­மாகக் காணப்­பட்­டது.

கோட்­டைக்குள் நுழைந்து, கச்­சே­ரிக்கும் ஆலயத்­ துக்கும் செல்லும் பாதை பிரி­யு­மி­டத்­தி­லி­ருந்து இரா­வ ணன் வெட்­டுப்­ப­கு­தி­ வரை இரு­ம­ருங்கும் மரங்கள், செடிகள், கொடிகள், குன்­றுகள், குழிகள் நிறைந்த அழ­கான இயற்கை வனப்­பு­மிக்க பிர­தே­ச­மாகக் காணப்­பட்­டது. அபி­வி­ருத்­தி­யென்ற போர்­வை­யிலும், படைத்­தள விரி­வாக்கம், கச்­சேரி நிர்­வாக கட்­ட­டத்­தொ­குதி மற்றும் விடுதி அமைப்பு என்ற பின்­ன­ணியில் ஏக்கர் கணக்­கான காடுகள் அழிக்­கப்­பட்­ட­துடன் வன­அ­ழகு தரும் மரங்கள் தறிக்­கப்­பட்டு பற்­றைக்­கா­டுகள் இல்­லாமல் ஆக்­கப்­பட்­டுள்­ளன.

ஆல­யத்தின் கிழக்கு, வடக்கு, மேற்கு கடலால் சூழப்­பட்ட போதும் மேற்கு நிலை­யி­லி­ருந்து வடக் குத் திசை நோக்­கிய பகு­திகள் வனம் சூழ்ந்த குன்­றி­லி­ருந்து கடல் நோக்­கிய தரை­ சாய்ந்த பகு­திகள் முழு­வதும் மரங்­களும் செடி கொடி­களும் நிறைந்த பகு­தி­யாக இருந்­து­ வந்­துள்­ளது. பேரா­சி­ரியர் பத்­ம­நா­தனின் கருத்­துப்­படி ஆலய முன்­ப­கு­தி­யென அடை­யா­ள­மி­டப்­பட்­டி­ருக்கும் முற்ற வெளிப்­ப­குதி மக்­ஹெய்சர் அரங்கு சூழ்ந்த பிர­தேசம் சந்­தனம், அகில், கொன்றை, குருந்தை, தேக்கு என விலை­ம­திப்­பற்ற மரங்கள் நிறைந்த சோலை­யாக இருந்­துள்­ளது. மக்­ஹெய்சர் அரங்­குக்­கென அவை அழிக்­கப்­பட்­டுள்­ளன.

1980 ஆம் ஆண்­டு­ வரை கோணேசர் ஆலய பாதை மருங்­கெங்கும் இலந்தை மரங்கள், கொன்றை மரங்கள் அடர்ந்­தி­ருந்த பகு­தி­யாக இருந்­துள்­ள­துடன் பரு­வ­கா­லங்­களில் இலந்தைப் பழம் ஆய, ஏரா­ள­மா­ன­வர்கள் வந்து போவதும் தாவி­யோடும் மந்­தி­க­ளோடு போட்டி போட்டுக்கொண்டு இலந்தைப் பழம் பறிப்­பதும் ஆலய உற்­சவ காலங்­களில் அடி­ய­வர்கள் விருட்­சங்கள் மற்றும் மரங்­களின் நிழல்­களில் நிழ­லா­று­வதும் வழக்­க­மாக இருந்­துள்­ளது. இவை இன்று அடை­யாளம் தெரி­யா­த­வண்ணம் அழிக்­கப்­பட்­டு­ விட்­டன. நீர்­ நி­லைகள் இல்­லா­ததன் கார­ண­மாக குடி­நீரைத் தேடி மான்கள் ஆலய வளா­கத்தை விட்டு வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. மான்கள் நீர் பரு­கு­வ­தற்­கென ஆலய வளா­கத்­துக்குள் முன்­னைய காலங்­களில் தொட்­டிகள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. தற்­பொ­ழுது அவை­யெல்லாம் நிர் மூலமாக்கப்பட்டுள்ளன. அவை குடிப்­ப­தற்கு குளங் ­களோ நீர்­நி­லை­களோ இல்லை.

இரா­ணுவப் பயிற்சி இடத்­துக்­க­ருகில் தொட்­டி­யொன்று கட்­டப்­பட்­டுள்­ளது, விஹா­ரைக்கு முன்­தொட்­டி­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதில் நீர் இருப்­ப­தில்லை, தொட்­டி­க­ளி­லுள்ள நீர் மாற்­றப்­ப­டு­வ­து­மில்லை, ஆலய நிர்­வா­கமும் இது பற்றி அதிக கவனம் செலுத்­து­வ­தில்லை. உல்­லாசப் பய­ணி­களை வர­வேற்க காட்­டப்­படும் ஆர்வம் ஆலய ஜீவராசி­களை பாது­காக்க காட்­டப்­ப­டு­வ­தில்லை. இதன்­கா­ர­ண­மாக ஆல­யத்­துக்கு வெளி­யே­வரும் மான்கள் குடிநீர் தேடி­யோ­டி­வந்து கட­லுக்குள் கலக்க விடப்­படும் கழிவு நீரைக் குடிக்­கி­றது. மரக்­கறி மற்றும் மீன் சந்­தை­யி­லுள்ள கழிவு நீரை அருந்த வேண்­டிய பாவ­நி­லைக்கு தள்­ளப்­ப­டு­கி­றது. இதன்­கா­ர­ண­மாக மான்கள் குடிநீர் பிரச்­சி­னையால் மர­ணிக்கும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. உணவு தேடி மான்கள் நகரப் பகு­தி­யெங்கும் சுற்­றி­ய­லை­கின்­றன. முற்­ற­வெளி, கடற்­கரை, மீன் ­கடை, மரக்­க­றிக்­கடை, உணவுக் கடைகள், பல சரக்­குக்­க­டைகள் என ஏகப்­பட்ட இடங்­க­ளுக்கு அவை நடந்து செல்­கின்­றன. சில பரோ­ப­கா­ரிகள், பய­ணிகள், வெளியூர் பய­ணிகள், உண­வு­களை வழங்­கு­கி­றார்கள்.

மரக்­கறிக் கடைக்­காரர் மரக்­க­றி­களை, எஞ்­சி­ய­வற்றை ஜீவ­கா­ருண்யம் கருதி ஊட்­டு­கின்­றார்கள். இதே­வேளை பய­ணிகள் தாம் உண்ணும் உண­வு­களை மான்­க­ளுக்கு கொடுக்­கின்­றார்கள். அவ்­வாறு வழங்­கும்­போது பொலித்தீன் மற்றும் அட்­டை­களில் அடைக்­கப்­பட்ட உண­வுகள் மான்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டு­கி­றது. ஊட்­டப்­ப­டு­கி­றது.

மான்கள் நவீன ருசி­யுடன் கூடிய உணவை உண்டு பழக்­கப்­பட்டுப் போன­நி­லையில் அவ்­வு­ண­வு­களைத் தேடி கடற்­கரை மற்றும் வீதிகள், கடை­களை நோக்கி ஓடு­கின்­றன. உணவு சுற்­றப்­பட்ட பொலித்தீன் அட்­டைகள் அனைத்­தையும் பசி­ கா­ர­ண­மாக உண்­ணு­கின்­றன. இதனால் மர­ணிக்க வேண்­டிய அபா­யத்­துக்கு ஆளா­கின்­றன. கடற்­க­ரையில் பாது­காப்­பற்ற குப்பைக் கூடை­களைத் தேடிச் செல்லும் மான்கள் கூடை­க­ளி­லுள்ள பொலித்தீன், நவீன அட்­டைகள், உறைகள் அடங்­கி­ய­வற்றை மிச்ச சொச்ச உண­வுடன் உண்­ணு­கின்­றன. இதனால் இலை, குழைகள் உண்டு வாழ வேண்­டிய மான்கள் நவீன உண­வு­க­ளுக்கு பழக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி அவற்றின் தாக்­கத்தால் மர­ணிப்­ப­வையும் இந்­த­ மானின் அழி­வுக்கு முக்­கிய ஒரு கார­ண­மாக காணப்­ப­டு­கி­றது.

இலை குழை­யில்லா நிலை கார­ண­மா­கவே இக்­கதி ஏற்­ப­டு­கி­றது என்­பது மானி­டர்­க­ளா­கிய எங்­க­ளுக்கு தெரி­வ­தில்லை, அண்­மையில் யுவன்­புர என்ற இளைஞர் களி­யாட்ட விழா என்ற போர்­வையில் முற்­ற­வெ­ளி­யி­லுள்ள பற்­றைக்­கா­டுகள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. சுதந்­திர தின நிகழ்­வுகள் என கட­லோர வளங்கள் இயற்கை தள அமைப்பு நிர்­மூலம் ஆக்­கப்­பட்டு கோணேஷர் ஆல­யத்தை அண்­டிய பகுதி பாலை­வ­ன­மாக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­கோ­ண­ம­லையில் இயற்கை வனப்பை ரசிக்க­ வரும் வெளியூர் மற்றும் உல்­லாசப் பய­ணிகள் பொறுப்­பற்ற தன்­மையில் நடந்து கொள்­வது மாத்­தி­ர­மன்றி மாமிசம் மச்சம் கலந்த உண­வு­களை ஊட்­டு­கி­றார்கள். கொட்­டி­விட்டுச் செல்­கி­றார்கள். நகர சபை நிர்­வாகம் இதற்­கு­ரிய ஏற்­பா­டு­களைச் செய்­வ­தில்லை, குப்பை கூளங்கள் உரிய காலத்தில் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை, வியா­பா­ரிகள் பொலித்­தீனில் உண­வு­களை விநி­யோ­கிப்­ப­தனால் அவை வீதி­யெங்கும் கடற்­க­ரை­யோ­ர­மெங்கும் பறந்து திரி­கின்­றன. இவற்றை பசி­தாங்­காது உண்ணும் நிலையில் மானினம் மர­ணிக்­கின்­றன.

மானி­னத்தின் இனப்­பெ­ருக்­கத்­துக்­கான சூழல், வச­திகள் இயற்கை மூல­கங்கள் இல்­லாத நிலையில் கலை, பிணை என்ற பாலியல் வகு­தி­களின் பெருக்கம் குறைந்து போய்­விட்­ட­தாக குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. அவ்­வாறு இருந்த போதிலும் பெரு­கி­வரும் குட்­டி­களை அழைத்­துக்­கொண்டு பிணை மான் உண­வுக்­காக தெருத்­தெ­ரு­வாக அலை­யும்­போது அதன் குட்­டிகள் தெரு­நாய்­களின் கொடூர தாக்­கு­தல்­க­ளுக்கு ஆளாகி அழிந்து போய்­வி­டு­வதைக் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இவை மட்­டு­மன்றி மான்கள் தெருக்­களில் உலா­வரும் போது ஏற்­படும் வாகன விபத்­துக்­களால் கணி­ச­மான எண்­ணிக்­கை­யு­டைய மான்கள் மர­ணித்துப் போய்­விட்­டன என சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கோணேஷர் ஆல­யத்தின் அந்த உயிர்வாழ் சொத்­ துக்கள் பேணப்­பட வேண்டும். இதன் அழிவுகள் தடுக்­கப்­பட வேண்டும். கோட்டை வாச­லுக்கு அரு­கி­லுள்ள சங்க மித்­த­ப­குதி ஒரு காலத்தில் மான்கள் உலாவித் திரியும் இயற்­கை­யான சர­ணா­ல­ய­மாக காட்சி தந்தது. மான்கள் உண்ணும் செடிகள், கொடிகள், பற்றைகள், மரங்கள் இருந்த இடம் உல்லாச கடற் கரையென்ற திட்டத்தின் கீழ் அழிக்கப்படுகிறது. ஏலவே இப்பகுதி மான்களின் சரணாலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்திலும் பிரஸ் தாபிக்கப்பட்டுள்ளதை கேள்வியுற்றுள்ளோம். அதே பகுதிதான் தற்பொழுது உல்லாச பிரதேச அபிவி ருத்திக்காக தேர்ந்தெடுக் கப்பட்டிருப்பதாக பேசப் படு கிறது. இங்கு அமைக்கப்படவுள்ள பார்க் அவசிய மானதா என்பதை நகர சபை, நகர அபிவிருத்தி அதி கார சபை, கோணேஷர் ஆலய நிர்வாகம், கடலோர பாதுகாப்பு திணைக்களம் ஆராய வேண்டிய தேவை யுள்ளது.

எத்தனையோ ஆயிரம் மீற்றர் நீந்து கடல் பரப் பைக் கொண்ட திருகோணமலையில், நீந்து நீர்த்த டாகமொன்று எத்தனையோ மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 70 வருட பழைமை வாய்ந்த மக்ஹெய்சர் விளையாட்டு அரங்கு புனரமைப்பு என்ற திட்டத்தின் கீழ் மயானமாக்கப்பட்டிருக்கிறது. இவற்றைக் கருத்திற்கொண்டு வாய் பேசமுடியாத உயிரினம் வாழ, கோணேசர் ஆலயத்தின் முதுஷ மென நூற்றாண்டுக் கணக்காகப் பாதுகாக்கப்பட் டுவந்த மான்கள் வாழ அவை உயிர்பிழைக்க ஏன் ஒரு சரணாலயம் அமைக்கக் கூடாது என்ற எண் ணம் அரசுக்கோ, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கோ கோணேஷர் நிர்வாகத்துக்கோ தோன்றவில்லையென் பது கவலை தருகின்ற விடயம். கல்வி, கலைவிழா, கானிவேல், இளைஞர் மாநாடு என வாரி வழங்கும் அரசும் சமூகத்தவர்களும் இதுபற்றி சிறிது சிந்தித்துப் பார்ப்பீர்களாக.

திருமலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-7

  • கருத்துக்கள உறவுகள்

கென்சவேசனில் பட்டப்படிப்பு எல்லாம் வழங்கினம்... மான்களை பாதுகாப்பதற்கு வழிமுறை தெரியல்லையா..?!

மான் உலாவும் பகுதிகளை உள்ளடக்கி.. அவற்றின் பாதுகாப்பையும் உணவையும் உறவிடத்தையும் மையமாக வைத்து ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைப்பதும்.. அங்கு மனிதர்கள் உள்நுழைய தடை செய்வதோடு.. கழிவுகளை கொட்டவும் தடை விதிக்க வேண்டும். 

இது ஒன்றும் பெரிய அசாத்திய வேலை கிடையாது. முடிந்தால்.. அதிகாரமும் நிதியும் உள்ளவர்கள்.. ஒரு செயற்திட்டத்தை வகுத்து.. இதனை ஒரு மாதத்துக்குள் அமுலாக்கலாம். :rolleyes:

நெடுந்தீவில் குதிரைகளை காக்க என்று ஒரு குழுவை ஐங்கரநேசன் தலைமையில் வடக்கு முதல்வர் உடனடியாக ஆரம்பிச்சது போல.. கிழக்கில் உள்ளவர்கள் செயற்படனும்.

ஆனால்.. அங்கு இப்போ பேரீச்சம் மரம் நாட்டுவதிலும்.. சைவக் கோவில்களில்.. பள்ளியும் விகாரையும் கட்டுவதில் தான் பலரும் குறியாக இருக்கிறார்கள்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க கடல்கன்னிகளை காப்பாற்றுவது எப்படி என்று யோசிக்கிறோம்.. tw_astonished: நீங்கள் வேறை.. tw_blush:

Fotolia_52331039_Subscription_Monthly_M.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.