Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளியோம்

Featured Replies

இரா­ணு­வத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த ஒருபோதும் இடமளியோம்

Heding-01-37499a881775509fe8ad941816077fcf61030f02.jpg

 

ஆர்.யசி

புலிகளை விடுதலை செய்யமாட்டோம்  : நீதியமைச்சர் விஜயதாச  ராஜபக் ஷ கூறுகிறார்

இலங்­கையில் யுத்தக் குற் றம் ஒரு­போதும் இடம்­பெ­ற வில்லை, யுத்தக் குற்­றச் சாட்டு என்ற பெயரில் எமது இரா­ணு­வத்தை தண்டிக்க எவ­ரே னும் வரு­வார்­க­ளாயின் அதற் கும் எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாம் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் உள்ள புலி­களை ஒரு­போதும் விடு­தலை செய்­யப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.  

இலங்­கையில் மோச­மான சித்­தி­ர­வ­தை கள் இடம்­பெ­று­வ­தா­கவும், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது­செய்­யப்­பட்­ட­வர்­களை விடு­தலை செய்ய வேண்டும் எனவும், போர் குற்­றச்­சாட்டில் இரா­ணு­வத்தை விசா­ரிக்க வேண்டும் என்ற பிர­தான விட­யங்­களை ஐ.நா வின் விசேட நிபுணர் பென் எமர்சன் தெரி­வித்­துள்ள நிலையில் அதனை மறுக்கும் வகையில் விஜ­ய­தாச இந்த கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளார். இது தொடர்பில் அவர் கூறி­யுள்­ள­தா­னது,  

இலங்கை பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­படும் பெரும்­பா­லான கைதி­களை சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கு­வ­தாக கூறும் கார­ணி­களை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாம் மிகவும் ஒழுக்­க­மான சட்ட கொள்­கையை கொண்­டுள்ளோம். எம்மால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மோச­மான வகையில் செயற்­பட முடி­யாது. உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற அறிக்­கை­களை கொண்டும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்­களைக் கொண்டும் கூறப்­படும் விட­யங்கள் தொடர்பில் ஒரு அர­சாங்­கத்தின் மீதும் அதன் சட்ட தன்­மைகள் மீதும் குற்றம் சுமத்த கூடாது. இன்று மேற்­கத்­திய நாடு­களின் பலர் ஆதா­ர­மற்ற கருத்­துக்­களை வைத்தே அறிக்­கைகள் தாயா­ரித்து வரு­கின்­றனர்.

அதேபோல் 2008 விடு­த­லைப்­பு­லி­களை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்­துள்­ள­தாக கூறும் குற்­றச்­சாட்டும் பொய்­யான ஒன்­றாகும். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இரா­ணு­வத்­தினால் கைது செய்­யப்­பட்ட மற்றும் சர­ண­டைந்த புலி­களில் 12 ஆயிரம் பேர் முன்­னைய அர­சாங்­கத்­தினால் புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். கடும் குற்­றங்­களில் கைது­செய்­யப்­பட்ட 71புலி பயங்­க­ர­வா­திகள் மட்­டுமே இன்று தடுப்பில் உள்­ளனர். இவர்கள் யுத்த காலத்தில் மிகவும் மோச­மான செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட நபர்­க­ளாவர். பேருந்­து­களில் குண்டு வைத்­த­வர்கள், முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்­கா­மரை கொலை செய்த நபர்கள் என பல­த­ரப்­பட்­டடோர் இதில் உள்­ளனர். இவர்­களை எந்தக் காரணம் கொண்டும் விடு­தலை செய்ய முடி­யாது.

யுத்தக் குற்றம் ஒன்று நாட்டில் இடம்­பெ­ற­வில்லை. இங்கு இடம்­பெற்­றது மனி­தா­பி­மான நட­வ­டிக்­கை­யாகும். அன்று எமது இரா­ணுவம் உறு­தி­யாக முன்­னே­றிய கார­ணத்­தினால் தான் இன்று வரையில் மாத்­திரம் அல்­லாது நாடு பூரா­கவும் மூவின மக்­களும் அமை­தி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் வாழக்­கூ­டிய சூழ்­நிலை உரு­வாக்­கி­யுள்­ளது. எந்­த­வொரு யுத்­தமும் அமை­தி­யான முறையில் நடை­பெ­றாது. ஆனால் எமது இரா­ணுவம் ஒரு­போதும் இரா­ணுவ குற்­றத்தை மேற்­கொள்­ள­வில்லை. அதேபோல் எம்­மீது குற்றம் சுமத்தும் நபர்கள் முதலில் அவர்கள் செய்த மற்றும் செய்­து­கொண்டு இருக்கும் யுத்த குற்­றங்கள் தொடர்பில் முதலில் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும். அதன் பின்னர் ஏனைய நாடு­களின் நிலை­மை­களை பார்க்­கலாம். யுத்த குற்­றச்­சாட்டு என்ற பெயரில் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க எவ­ரேனும் வரு­வார்­க­ளாயின் அதற்கு எமது அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. நாம் எமது இரா­ணு­வத்தை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் நிறுத்த ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

 அதேபோல் நாட்டில் மனி­தா­பி­மான நகர்­வுகள் தொடர்பில் நாம் அர­சாங்கம் என்ற வகையில் பல­மாக முன்­செல்ல வேண்டிய தேவை உள்ளது. அவை தொடர்பில் நாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வாக்குறுதி வழங்கியுள்ளோம். அதற்காக இராணுவத்தை தண்டிக்கவும் யுத்த குற்றம் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அழுத்தம் கொடுக்குமாயின் அதை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. யாருக்கும் அடிபணிந்து செயற்பட நாம் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-07-16#page-1

  • தொடங்கியவர்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள 71 புலிகளும் “பயங்கரவாதிகள்” அவர்களை விடுவிக்க முடியாது – விஜயதாச ராஜபக்ஷ:-

J

vijayadasa.jpg
இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் 71 பேரை எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாதென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துள்ள நீதியமைச்சர், “கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம் எனத் தரிவித்துள்ளார்.

குறிப்பாக இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட, மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகள் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் கடும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 71 பேர் மட்டுமே இன்னும் தடுப்பில் உள்ளனர். பாரிய குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்கள், கொலைகள் புரிந்தவர்கள், மற்றும் பலதரப்பட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்களே தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் “ பயங்கரவாதிகள்” அதனால் இவர்களை விடுவிக்க முடியாது என

இவர்களை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது. அவர்கள் பயங்கரவாதிகள்” எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/33161

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நீங்களே சர்வதேச சமூகத்திற்கு காட்டிக்கொடுப்பதற்கு நன்றி. சிங்களவர்களோடு நல்லிணக்கம் என்பது சாத்தியமே இல்லை என்பதை எங்கட தமிழ் எஜமான விசுவாச சுயபோக சுகபோக அரசியல் விசிலடிச்சானுகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் நன்றி.  tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.