Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பென் எம்மர்சனுக்கு விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிட யார் அனுமதி வழங்கியது – ஜனாதிபதி கேள்வி

Featured Replies

பென் எம்மர்சனுக்கு விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பார்வையிட யார் அனுமதி வழங்கியது – ஜனாதிபதி கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை, ஐ.நா அதிகாரி பார்வையிட யார் அனுமதி வழங்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை சிறையில் பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/33311

  • தொடங்கியவர்

சிறைச்­சா­லை­க­ளுக்கு செல்ல பென் எமர்சனுக்கு யார் அனு­மதி அளித்­தது ; ஜனாதிபதி கேள்வி

ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்சன் சிறைச்­சா­லை­க­ளுக்கு  விஜயம் செய்­வ­தற்கு யார் அனு­மதி அளித்­தது என்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன கேள்வி எழுப்­பி­யுள்ளார்.  

Maithripala-Sirisenaa1.jpg

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத் தில் நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது.  இந்­தக்­கூட்­டத்­தி­லேயே ஜனா­தி­பதி இந்தக் கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்றார். 

 

 பென் எமர்சன் சிறைச்­சா­லை­க­ளுக்கு விஜயம் செய்து கைதி­களை சந்­தித்­துள்ளார். எந்த அடிப்­ப­டையில் இவர் சிறைச்­சா­லை­க­ளுக்கு விஜயம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. யார் இதற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யது. நீதி அமைச்சா, சிறைச்­சாலை  அமைச்சா, அல்­லது  வெளி­வி­வ­கார அமைச்சா இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யது யார் என்று ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பி­யுள்ளார். 

 

 இதற்கு  இந்த மூன்று துறை­களைச் சேர்ந்த அமைச்­சர்­களும் இவ்­வி­டயம் குறித்து தமக்கு எதுவும் தெரி­யாது என்று கூறி­யுள்­ளனர்.  இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முன்­னைய அர­சாங்க காலத்தில்  மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­பாடு கார­ண­மாக ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யா­ளர்கள்  புரிந்­து­ணர்வின் அடிப்படையில்  இவ்வாறு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக  இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

http://www.virakesari.lk/article/22048

விடுதலைப்புலிப். பயங்கரவாதிகளை சிறையில் பார்வையிடுவதற்கு யார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கு அனுமதியளித்தது என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்கள் மீது சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் சிறிலங்காவின் நீதித் துறையின் சுதந்திரம் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும், பென் எமர்சனுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதையடுத்து, சிறிலங்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துமிருந்தார்.

இந்நிலையிலேயே, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திப்பதற்கு, ஐ.நா அறிக்கையாளருக்கு அனுமதி கொடுத்தது யார் என்று சிறலங்கா அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சே, இதற்கான அனுமதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

http://thuliyam.com/?p=73852

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்ட்சி அரசு எனும் பெயரில் பேய் தான் அரசுபுரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.