Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கர்நாடகாவில் ஒரு கூவத்தூர்: குஜராத் அரசியலில் பரபரப்பு!

Featured Replies

கர்நாடகாவில் ஒரு கூவத்தூர்: குஜராத் அரசியலில் பரபரப்பு!

 
 

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கர்நாடகா அழைத்து வரப்பட்டு,  ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

karnataka resort

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், குஜராத்திலிருந்து ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவாக 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அக்கட்சியிலிருந்து பல சட்டமன்ற  உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சிலர் ஆளும் கட்சியான பா.ஜ.க வில் இணைந்துள்ளனர்.

congress MLA

அந்தக் கட்சியிலிருந்து மேலும் பலர் இதே முடிவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ-க்கள் அவசர அவசரமாக நேற்று இரவு குஜராத்தில் இருந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இன்று காலை கர்நாடகா வந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி குஜராத்தில் உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள்ளாக எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகத் தெரிகிறது.

 

எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஆகஸ்ட் 8-ம் தேதிதான் குஜராத் திரும்புவார்கள் எனக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதேபோன்று ஒரு சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம்தான் குஜராத் அரசியலிலும் நடைபெற்று வருகிறது

http://www.vikatan.com/news/politics/97232-congress-mla’s-from-gujrat-are-locked-in-karnataka-resort.html

  • தொடங்கியவர்

பெங்களூரு அருகே பிடதி ஈகல்டன் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் காங். எம்எல்ஏ.க்களுக்கு ராஜ மரியாதை

 

பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு விடுதியில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியின் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

gujbang1

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நேற்று உயர்தர‌ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

gujbang

பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு விடுதியில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியின் நுழைவுவாயில் அடைக்கப்பட்டு மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

gujbang1

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கியுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நேற்று உயர்தர‌ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெங்களூருவை அடுத்துள்ள பிடதி ஈகல்டன் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள 44 குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. இங் குள்ள சொகுசு அறைகளில் தனித்தனியாக‌ தங்க வைக்கப் பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தனித் தனியாக உதவியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பலமாக கவனிக்கும் வகையில் நீச்சல் குளம், ஸ்பா, மசாஜ் சென்டர், கோல்ப் விளையாட்டு, திரைப்படம் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப் பட்டுள்ளது.

இது தவிர குஜராத் எம்எல்ஏக் களுக்கு தேவையான சைவ, அசைவ உணவுகள், இனிப்புகள், பழ வகைகள் பஃபே முறையில் விருந்து வைக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் வெல்ல வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை யும் நடந்தது. வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி வரை பெங்களூருவில் இருக்கும் குஜராத் எம் எல் ஏக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் க‌ர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், அவரது சகோதரரும் எம்பியுமான‌ டி.கே. ரமேஷ் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனிடையே குஜராத் எம்எல்ஏக்களை மைசூரு, குடகு, சிக்மகளூர் உள்ளிட்ட இடங் களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல வும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு வில் வழங்கப்படும் ராஜ மரியாதை யின் காரணமாக, குஜராத் எம்எல்ஏக் கள் பாஜகவுக்கு தாவாமல் இருப் பார்கள் என டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு?

மொத்தம் 182 எம்எல்ஏக்களை கொண்ட குஜராத் சட்டபேரவையில் ஆளும் பாஜகவுக்கு 121 எம்எல்ஏக் கள் உள்ளனர். எதிர்க்கட்சியான‌ காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்களும், இதர கட்சிகளுக்கு 3 பேரும் இருந்தனர். இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து காங்கிரஸின் பலம் 51-ஆக குறைந்தது. இதில் இன்னும் 10 பேர் வரை பாஜக பக்கம் போய்விடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாநிலங்களை உறுப்பினர் வெற்றிபெற 47 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதன்படி பாஜக‌ வுக்கு 2 பேரும், காங்கிரஸுக்கு ஒருவரும் தேர்வாகும் நிலை இருந்தது. இந்நிலையில் பாஜக 3-வதாக பல்வந்த்சிங் ராஜ்புத்தை வேட்பாளராக நிறுத்தியதை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக் களை கவரும் முயற்சியில் இறங்கி யுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற 47 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில் 44 பேர் பெங்களூரு அழைத்துவரப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களையும் விரைவில் குஜராத்தில் இருந்து பெங்களூரு அழைத்துவர காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக் களை பாஜக இழுக்க முயற்சித்ததை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு அவர்கள் பத்திரமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். பிடதியில் உள்ள‌ சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தப்பி செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த டி.கே. சிவக்குமார் கர்நாடக காங்கி ரஸின் முக்கிய தலைவர். கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் முதல்வர் தரம் சிங் ஆட்சியை கவிழ்க்க மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயற்சித் தார். அப்போது டி.கே. சிவக்குமார் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்து கட்சி தாவலை தடுத்தார்.

இதேபோல கடந்த பாஜக ஆட்சியின் போது ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக் கள் பாஜகவுக்கு இழுக்கப்பட்டனர். இதை தடுக்க டி.கே. சிவக் குமார் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு, மூணார் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, கட்சி தாவல் தடுக்கப் பட்டது. இத்தகைய நெருக்கடியான சூழலில் டி.கே. சிவக்குமார் சிறப்பாக செயல்பட்ட அனுபவம் இருப்ப‌தாலே காங்கிரஸ் மேலிடம் குஜராத் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பணியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்கியதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.

அமித் ஷாவின் ‘ஆபரேஷன் தாமரை’க்கு என்ன காரணம்?

குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆகஸ்ட் 8-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் களமிறக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கியுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனும் கோஷத்தை எழுப்பி வருகிறார். அதன் தொடக்கமாக குஜராத்தில் இருந்து ஒரு காங்கிரஸ் உறுப்பினர் கூட தேர்வு செய்யப்படக் கூடாது. அதிலும் சோனியா காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற கூடாது என்று பாஜக விரும்புகிறது. அதற்காக ‘ஆபரேஷன் தாமரை' திட்டத்தை அமித் ஷா தொடங்கி, காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். குஜராத்தில் காங்கிரஸை தோற்கடிப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டையும் பரிசையும் பெற அமித் ஷா முடிவெடுத்திருக்கிறார் எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/india/article19389628.ece?homepage=true

  • தொடங்கியவர்

குஜராத்தின் கூவத்தூராக மாறிய பெங்களூரு உல்லாச விடுதி

 
அகமத் படேல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅகமத் படேல்

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் ஒரு முக்கிய திருப்பமாக, சசிகலாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியபோது, முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால், சசிகலா நாற்காலியை பிடிக்க தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்டில் தங்கவைத்தார்.

பிறகு நடந்த மாற்றங்களால், சசிகலா முதலமைச்சராவதில் சிக்கல் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது தமிழகத்தின் வரலாறு.

சசிகலா நடராஜன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சரித்திரங்கள் மீண்டும் திரும்புவது இயல்பு என்றாலும், மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒருமுறை `பத்திரமாக` தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நிகழ்விடம் வேறு. தமிழகமல்ல, குஜராத். காட்சிகள் மாறினாலும் நோக்கம் ஒன்றே. அது முதலமைச்சருக்கான வாக்கெடுப்பு, இது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்.

அமித்ஷா, ஸ்மிருதி இரானியும் களத்தில்

மாநிலங்களைவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள 3 இடங்களில் இரண்டு இடங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசியத் தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணியும் போட்டியிடுகின்றனர்.

மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சங்கர் சிங் வகேலா, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கொறடா பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட 5 எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது மாநிலங்களவை தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதன்பிறகு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மூன்றாவது வேட்பாளராக அகமது பட்டேலை எதிர்த்து பல்வந்த் சிங் ராஜ்புத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 3 காலியிடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியது.

அமித் ஷாபடத்தின் காப்புரிமைREUTERS

தற்போது குஜராத் சட்டமன்றத்தில் 57 ஆக இருந்த காங்கிரஸின் பலம் 51 ஆக குறைந்துவிட்டது. மேலும் சிலர் வெளியேறி காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலுக்கு தேவையான வாக்குகள் கிடைக்காமல் சிக்கல் ஏற்படும் என்பதால் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு ரிசார்ட்டில் 'பாதுகாப்பாக' தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோஹில், பாரதியஜனதா கட்சியின் ஆட்சியில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதாகவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவே குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவுக்கு வந்துள்ளனர் என்றும், கட்டாயத்தின் பேரில் யாரும் அழைத்துவரப்படவில்லை என்று கூறினார்.

'சொகுசாக இருக்கவேண்டுமானால், வெளிநாடுகளுக்கு சென்றிருப்போம். எம்.எல்.ஏக்களை தங்கள் தரப்புக்கு இழுக்க பாரதிய ஜனதா கட்சி குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளது. எஞ்சியுள்ள 51 எம்.எல்.ஏக்களில் யாரும் பதவி விலகவில்லை என்பதால், அகமத் படேல் வெற்றிபெறுவது உறுதி' என்று கோஹில் தெரிவித்தார்.

வகேலா கட்சியைவிட்டு விலகிய பிறகு, இன்று முதல்முறையாக 42 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை ஊடகங்களின் முன் நிறுத்தி அணிவகுப்பும் நடத்தப்பட்டது. காங்கிரஸின் ஆறு உறுப்பினர்கள் விலகியபிறகு குஜராத் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 182இல் இருந்து 176 ஆக குறைந்துவிட்டது.

குற்றச்சாட்டுகளும், எதிர்குற்றச்சாட்டுகளும்

குஜராத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிகப்பட்டிருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல், ரிசார்டில் தங்கியிருக்கின்றனர் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டுகிறது.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோஹில், எங்கள் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பல அமைச்சர்கள் தான் செல்லவில்லை என்று எதிர் குற்றச்சாட்டு வைக்கிறார்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாட்டுக்கு பலன் ஏற்பட்டது. அகமத் படேல் தந்து பகுதிக்கு சென்று புகைப்படத்தை டிவிட் செய்து, `இன்று குஜராத்தில் பல வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டதாக` பதிவிட்டிருக்கிறார்.

அகமத் படேலின் டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionஅகமத் படேலின் டிவிட்டர் பதிவு

'மாநில அரசு நிர்வாகம் மந்தமாக இயங்குகிறது. அரசு ஆக்கப்பூர்வமாக துரிதமாக செயல்பட்டிருந்தால், சேதங்களை தவிர்த்திருக்கலாம்' என்று மற்றொரு டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருக்கிறார் அகமத் படேல்.

அகமத் படேலின் டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைTWITTER Image captionஅகமத் படேலின் டிவிட்டர் பதிவு

தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார், 'மாநிலத்தில் பலவிதமான அழுத்தங்களை எதிர்கொண்ட பிறகு எம்.எல்.ஏக்கள் இப்போதுதான் ஓய்வெடுக்கிறார்கள்.''

'இவர்களில் சிலர் ஆலயங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்போம். ஆனால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் வகேலாவின் குற்றசாட்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதால், அவர்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள்.'என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஷங்கர் சிங் வகேலாபடத்தின் காப்புரிமைPTI Image captionஷங்கர் சிங் வகேலா

வகேலாவின் குற்றச்சாட்டுக்களை அரசியல் நிபுணர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

"வகேலாவும், ஆறு எம்.எல்.ஏக்களும் விலகிய பிறகு ஏற்பட்ட அச்சத்தால், காங்கிரஸ் எஞ்சியவர்களை பெங்களூருவில் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஊடகங்களின் முன் அவர்களின் அணிவகுப்பையும் நடத்திக்காட்டிவிட்டது. ஆனால், தேர்தலில் யாரும் அணி மாறி வாக்களிக்கமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாது" என்று அகமதாபாதை சேர்ந்த அரசியல் விமர்சகர் தீமந்த் புரோஹித் பிபிசியிடம் தெரிவித்தார்.

"வகேலா காங்கிரஸை விட்டு விலகியபிறகு, அணி மாறி வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன. காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத் படேல், மாநிலங்களவை தேர்தலில் தோற்றுவிட்டால், அது கட்சிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்."

எம்.எல்.ஏக்கள் பாதுகாக்கப்படுவது கூவத்தூர் ரிசார்டாக இருந்தாலும் சரி, பெங்களூரு ஈகிள்டன் ரிசார்ட்டாக இருந்தாலும் சரி, அரசியல் சூறாவளியில் சிக்குவது கட்சிகளின் சதுரங்க காய் நகர்த்தல்களே. தமிழகமோ, குஜராத்தோ சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை ஒன்றே.

http://www.bbc.com/tamil/india-40779597

  • தொடங்கியவர்

கூவத்தூர் பாணியில் குஜராத் எம்.எல்.ஏ க்கள்! கர்நாடக ரிசார்ட்டில் ஐ.டி ரெய்டு

 

குஜராத் மாநில காங்கிரஸ்  எம்.எல்.ஏ-க்கள், பா.ஜ கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் விதமாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். 

Karnataka resort

குஜராத் மாநிலத்தில், வரும் 8-ம் தேதி, மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ்  எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மீதம் இருக்கும்  எம்.எல்.ஏ-க்களிலும் சிலர் கட்சி தாவலாம் என்று பேசப்பட்டது.  இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தலுக்குதான் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தச் சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

 இந்நிலையில், இன்று காலை முதல் குஜராத் எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோன்று, கர்நாடக மாநில எரிசக்தித்துறை அமைச்சர் டி.கே சிவகுமார்  வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம், கர்நாடக மற்றும் குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

http://www.vikatan.com/news/politics/97665-income-tax-raid-in-gujarat-mlas-lodged-karnataka-resort.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.