Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவி நிரபராதியாகிவிட முடியாது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்

Featured Replies

ரவி நிரபராதியாகிவிட முடியாது

p8-60b821098cc108cb1f802ab90ca8d5dc3dec57c3.jpg

 

விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல்

(ஆர்.யசி)

அமைச்சுப் பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­த­வுடன் ரவி கரு­ணா­நா­யக்க நிர­ப­ரா­தி­யாகி விட முடி­யாது. அவர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னெ­டுக்க வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

மத்­திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காக்­கின்­றார். ஆகவே இவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புகள், இந்த ஊழலில் வேறு நபர்கள் கொண்­டுள்ள தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்­பிட்டார்.  

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­ததன் பின்னர் மீண்டும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் சகல தரப்பினரும் கருத்­துக்­களை முன்­வைக்க ஆரம்­பித்­துள்­ளனர். இதில் ரவி கரு­ணா­நா­ய­காவை நியா­யப்­ப­டுத்தும் அரச தரப்பு இந்த செயற்­பாடு நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அடை­யாளம் எனவும், மஹிந்த தரப்­பினர் இதனை தமது வெற்­றி­யா­கவும் கூறிக்­கொண்­டுள்­ளனர்.  

குற்றம் புரிந்த நப­ருக்கு வேறு அடை­யாளம் கொடுப்­பதால் குற்­றத்தில் இருந்து அவர் விடு­ப­டுவார் என்று அர்த்­தப்­ப­டாது.

ஆகவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நிதி அமைச்சில் இருந்த போது மேற்­கொண்ட ஊழல் மோச­டி­க­ளுக்­காக அவரை வெளி­வி­வ­கார அமைச்­சிற்கு மாற்­று­வதனாலோ அல்­லது அமைச்சு பத­வியில் இருந்து நீக்­கு­வதாலோ அவர் நிர­ப­ராதி என்று ஒரு­போதும் அர்த்­தப்­ப­டாது. அவரை அமைச்சுப் பத­வியில் இருந்து நீக்­கி­யமை ஊழல் மோச­டிக்­காக அவ­ருக்கு கொடுத்த தண்­டனை என்ற கருத்தை முன்­வைக்க அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்­திய வங்கி ஊழல் வெளி­வந்த போதே அமைச்சர் ரவி கரு­ணா­நா­ய­க­விற்கு எதி­ராக பல்­வேறு குற்­றங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான குற்­றங்கள் சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவர் தொடர்ந்தும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தார். ஆறு மாத காலத்­திற்­காக வாடகை வீடு எடுத்­த­மையும் அதற்­கான 14.5 இலட்சம் ன் ரூபா மாதாந்­த­மாக செலுத்­தி­ய­மையும் இந்த காலத்தில் இடம்­பெற்­றது. இவர்கள் மத்­தியில் கறுப்பு பணமே பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது.இவர்கள் பரி­மாற்­றி­கொண்ட எந்த வர்த்தகம் தொடர்­பிலும் சரி­யான உடன்­ப­டிக்­கைகள் இல்லை. ஆகவே இந்த விட­யத்தில் மிகப்­பெ­ரிய ஊழல் நடந்­துள்­ளது.

இந்­நி­லையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை உதா­ரா­ண­மாக கொண்டு ஏனைய அமைச்­சர்கள் செயற்­பட வேண்டும் என அர­சாங்கம் புக­ழாரம் சூட்­டு­கின்­றது. ஆனால் ரவி கரு­ணா­நா­ய­கவை எவரும் உதா­ர­ண­மாக கருத வேண்டாம். பாட­சாலை மாண­வர்கள் அவரை உதா­ர­ண­மாக நினைக்க வேண்டாம்.

மக்­களின் சொத்­துக்­களை கொள்­ளை­ய­டித்து, அரச சொத்­துக்­களை சூறை­யாடி இந்த ஊழல்கள் வெளிச்­சத்­துக்கு வந்­த­வுடன் தப்­பிக்க வேறு வழி­யில்­லாது தனது பத­வியில் இருந்து வில­கிய நபரை எவ்­வாறு நியா­யப்­ப­டுத்த முடியும். ஆகவே ரவி கரு­ணா­நா­யக்க தொடர்பில் உட­ன­டி­யாக ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்டும்.

அதேபோல் ரவி கரு­ணா­நா­யக்க விட­யத்தில் வெளி­வந்­துள்ள உண்­மை­களின் பின்­னணி மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளது. மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காக்­கின்­றார். ஆகவே இவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புகள், இந்த விட­யத்தில் வேறு நபர்கள் கொண்­டுள்ள தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று கொள்­ளை­யர்­க­ளுக்கு பதி­லாக யாரை நிய­மிப்­பது என்­பதில் அர­சாங்கம் சிக்­கலில் உள்­ளது. கள்ளர் கூட்­ட­ணியை ஒழித்­து­விட்டு மாற்­றாக மீண்டும் கள்­ளர்­களை கொண்­டு­வ­ரவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது.

அமைச்சர் திலக் மாரப்­பன இதற்கு நல்ல உதா­ர­ண­மாவார். அதேபோல் முன்­னைய ஆட்­சியில் மஹிந்த ராஜபக் ஷ குடும்ப ஊழ­லிலும் உண்­மை­களை மூடி மறைக்கும் நட­வ­டிக்­கை­களே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே பிர­தான இரண்டு கட்­சி­களும் முழு­மை­யாக ஊழல் மோச­டி­களை அடிப்­ப­டை­யாக வைத்தே ஆட்சி செய்து வருகின்றன. அதேபோல் கொள்ளையர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் தியாகிகளாக மாற்றப்படுகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகள் தியாகிகளாக மாறப்பாக்கின்றனர். இந்த நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். மக்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொண்டு மாற்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த மாற்றத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணி ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-12#page-1

  • தொடங்கியவர்

இன்னமும் ரவி குற்றவாளியல்ல அரசாங்கம் தூய்மைப்பட்டுள்ளது

Harsh-de-Silva2-0adeb45215818ec6ca4a292901b47cf44fef5164.jpg

 

ஐ.தே.க.தெரிவிப்பு;நீதி அமைச்சு மீதும் விசனம்

(ந.ஜெகதீஸ்)

முன்னாள் வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சட்­டத்தின் முன் இன்னமும் குற்­ற­வா­ளி­யாக அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. அவர் தமது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­த­மை­யினால் நல்­லாட்சி அர­சாங்கம் மேலும் தூய்­மைப்­பட்­டுள்­ள­து என்று ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்துள்ளது. 

இலஞ்ச ஊழல்­க­ளுடன் தொடர்­பு­டைய 87 சம்பவங்களின் விசா­ரணை நிறை­வு­பெற்­றி­ருந்தும் அவை நிலு­வையில் இருக்­கின்­றன. அதனை விரைவில் நிறைவு செய்­வ­தற்­கான

 பொறுப்பு நீதி­ய­மைச்சருக்கும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் உண்டு என்று தேசிய கொள்கை மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் பிர­தி­ய­மைச்சர் ஹர்ச டி சில்வா தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் எழுந்த சர்ச்­சை­யினால் வெளிவி­வ­கார அமைச்­ச­ராக பதவி வகித்த ரவி­க­ரு­ணா­நா­ய­க்க தமது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­நாமா செய்­தமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.  

அவர் ஐக்­கிய தேசிய கட்­சியின் சிரேஸ்ட அரி­சி­யல்­வா­தி­யாக இருந்த நிலையில் இவ்­வாறு இரா­ஜி­னாமா செய்­த­மை­யி­னா­லேயே அது தற்­போது சிறப்­புக்­கு­ரி­ய­தொன்­றாக மாறி­யி­ருக்­கின்­றது.

மத்­திய வங்­கியின் பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விலோ அல்­லது நீதி­மன்­றத்­தி­னூ­டா­கவோ இன்னும் வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க குற்­ற­வா­ளி­யாக அடை­யாளம் காட்­டப்­ப­ட­வில்லை. இருப்­பினும் மத்­திய வங்­கியின் பிணை­முறி தொடர்பில் எழுந்த விமர்­ச­னங்­களின் கார­ண­மா­கவே தாமா­கவே அவர் இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு முன்­வந்­தி­ருந்தார்.

இது ஏனை­ய­வர்­க­ளுக்கு சிறந்த முன் உதா­ர­ண­மாகும். ஏனெனில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­திலும் மத்­திய வங்­கியின் ஊழியர் சேம­லாப நிதி­யத்­தொ­கையில் ஊழல்­மோ­ச­டிகள் இடம்­பெற்­றமை அம்­ப­ல­மா­னது. இது அப்­போ­தைய மத்­திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­ல் மூலமாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. குறித்த விடயம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கா­ர­வினால் முறைப்­பாடு செய்­யப்­பட்டு அது தொடர்பில் ஒப்­பு­விக்­கப்­பட்டும் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளும் அவர்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ள­வில்லை. அத­னுடன் சம்­மந்­தப்­பட்ட எவரும் அப்­போது தமது பொறுப்­புக்­க­ளி­லி­ருந்து இரா­ஜி­னா­மா செய்­த­தா­கவும் வர­லாறு இல்லை.

அத்­துடன் நீதித்­துறை கட்­ட­மைப்பும் கடந்த காலத்தில் சுயா­தீ­னமாக செயற்­ப­ட­வில்லை. கடந்த காலத்தில் நீதித்­து­றை­யா­னது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தேவைப்­பா­டு­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­பட்­டது. முன்னாள் ரக்பி அணித்­த­லைவர் வஷிம் தாஜூ­தினின் மரணம் விபத்து என்­றனர். ஒரு­நா­ளைக்­குள்­ளேயே பீல்ட்­மார்சல் சரத்­பொன்­சே­காவை சிறையில் தள்­ளு­வ­தற்கு நீதி­மன்றம் செயற்­பட்­டது.

பின்னர் நல்­லாட்­சி­யி­லேயே வஷிம் தாஜூதீன் கொலை செய்­யப்­பட்டார் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யது. பிர­தேச சபைத்­த­லைவர் ஒருவர் 100 பெண்­களை துஷ்­பி­ர­யோகம் செய்து குற்­ற­வா­ளி­யா­கிய போதும் அவர் குறித்த பத­வியை இரா­ஜி­னாமா செய்­ய­வில்லை. ஆகவே தற்­போது ரவி கரு­ணா­நா­யக்க பதவி வில­கி­ய­மை­யா­னது ஓர் சம்­பி­ர­தாய பூர்­வ­மா­ன­தாகும். இதனால் மேலும் நல்­லாட்சி அர­சாங்கம் தூய்­மைப்­பட்­டுள்­ளது. ஊழல்­களை ஒரு­போதும் அரசாங்கம் அனு­ம­திக்­காது என்­ப­த­னையே தமது நிலைப்­பா­டு­க­ளாக தொடர்ந்தும் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வலி­யு­றுத்­து­கின்­றனர்.

இதே­வேளை தற்­போது குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் விசாரணைகள் நிறைவுப்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய 87 சம்பவங்கள் தற்போதும் நிலுவையில் உள்ளன. அவற்றை உடனடியாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை நீதியமைச்சரும் சட்டமா அதிபர் திணைக்களமும் மேற்கொள்ளவேண்டும்.

முன்னரை போல் அல்லாமல் தற்போது நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படுகின்றது. ஆகவே காலந்தாழ்த்தப்பட்ட வழக்குகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-12#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.