Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முட்டி மோதும் முதல்வரும் தமிழரசுக் கட்சியினரும்

Featured Replies

முட்டி மோதும் முதல்வரும் தமிழரசுக் கட்சியினரும்

 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆளு­கைக்குட்­பட்ட, வடக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில் அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்கள் 16 பேரையும் கடந்த புதன்­கி­ழமை கொழும்­புக்கு அழைத்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அவ­சர கூட்­ட­மொன்றை நடாத்­தி­யி­ருப்­பது வடக்கின் அர­சியல் களத்தை எல்­லோ­ரையும் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது.

வட­மா­காண சபை நிலை­மைகள் குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (06.08.2017) முத­ல­மைச்சர் வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றதைத் தொடர்ந்தே கொழும்பு சந்­திப்­புக்­கான அழைப்பை ஏற்றுக் கொண்டு வட­மா­காண சபையில் அங்கம் பெறும் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் கொழும்பு சென்­றி­ருந்­தனர்.

ஏலவே வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கும், எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று (23.07.2017) கொழும்­பி­லுள்ள ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் இல்­லத்தில் நடை­பெற்­ற­வேளை வட­மா­காண சபையில் காணப்­படும் நிலை­மைகள் தொடர்பில் இணக்கம் காணப்­பட்­ட­துடன், ஊழல் மோச­டிகள் குறித்து தெரி­வுக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­பட்டு, விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்றும் வட­மா­காண சபை அமைச்­ச­ரவை மாற்றம் தொடர்­பான எந்­த­வொரு செயற்­பா­டு­க­ளையும் தற்­போ­தைக்கு முன் நகர்த்­து­வ­தில்­லை­யெ­னவும் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டதன் பின்பே, சம்­பந்­த­னுக்கும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டை­யி­லான யாழ். சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

குறிப்­பிட்டு சொல்­வ­தானால் 2015 ஆண்­டுக்குப் பின்­னுள்ள காலப்­ப­குதி முழு­வ­து­மான கலண்டர் மாதங்­களில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான நேர்த்­தி­யான சந்­திப்­புக்கள், சந்­தோச­மான உரை­யா­டல்கள் இடம்­பெற்­ற­தாக குறிப்­பிட்டுச் சொல்லக் கூடி­ய­ள­வுக்கு இருக்­க­வில்­லை­யென்­பதே உண்மை. அதிலும் குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­சார மேடை­களில் வட­மா­காண முத­ல­மைச்சர் கலந்து கொள்­வதை கூடி­ய­ளவு தவிர்த்துக் கொண்­டமை மற்றும் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் வெற்­றிக்கு உறு­துணை புரி­யாமை போன்ற பனிப்போர் நிலை­மை­களின் பின் மிக நீண்ட காலத்­துக்குப் பின் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு கொழும்பில் இடம்­பெற்­றி­ருந்­தது.

இக்­கொ­ழும்பு சந்­திப்புக் குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் கருத்துத் தெரி­விக்­கையில், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­ட­னான சந்­திப்­பா­னது நட்பு ரீதி­யாக நடை­பெற்­றி­ருந்­தது. இச்­சந்­திப்­பின்­போது, வட­மா­காண சபையில் அண்மைக் காலத்தில் ஏற்­பட்­டி­ருந்த நிலை­மைகள் தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்தோம். வட­மா­காண சபையில் இடம்­பெற்ற விட­யங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் சந்­தித்து கலந்­து­ரை­யாடி முடி­வினை எடுப்­ப­தென்ற முடி­வுக்கு வந்­துள்ளோம் என சம்­பந்தன் தெரி­வித்­தி­ருந்தார்.

இச்­சந்­திப்பு குறித்து, வட­மா­காண சபை முத­ல­மைச்சர் விடுத்­துள்ள அறிக்­கையில் வடக்கு மாகாண அமைச்­சர்­களின் இலஞ்ச ஊழல், அதி­கார துஷ்­பி­ர­யோகம் ஆகி­யன தொடர்­பாக இடம்­பெற்ற குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அவர்­களின் அறிக்­கையின் பிர­காரம் குறித்த அமைச்­சர்­களை பதவி வில­கும்­படி சபையில் அறி­வித்­ததைத் தொடர்ந்து, எழுந்த சர்ச்­சைகள், வாதப் பிர­தி­வா­தங்கள், கண்­ட­னங்கள், விமர்­ச­னங்கள் தொடர்­பிலும் விளக்கம் அளிக்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

இக்­கொ­ழும்பு சந்­திப்பின் இன்­னொரு பிர­தி­யீ­டா­கவே சம்­பந்தன் வடக்கு முதலமைச்சர் மற்றும் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்பு யாழ்ப்­பா­ணத்தில் கடந்த (06.08.2017) ஞாயிறு இடம்­பெற்­றி­ருந்­தது.

இச்­சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா, ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், பு.ௌாட் இயக்­கத்­த­லைவர் த.சித்­தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் கலந்து கொண்­டனர். இச்­சந்­திப்பின் போது கார­சா­ர­மான பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

மிக நீண்­ட­கா­ல­மாக பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையே இருந்து வந்­துள்ள முறுகல் நிலை கொட்டித் தீர்க்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.

இச்­சந்­திப்பின் போது ஈபி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரின் நட­வ­டிக்­கை­க­ளையும், எடுத்த செயற்­பா­டு­க­ளையும் நியா­யப்­ப­டுத்தி தனது வலி­மை­யான கருத்­து­களை முன்­வைத்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

உதா­ர­ண­மாக விக்­னேஸ்­வரன் அவர்கள் கிடைக்­கப்­பெற்ற குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டை­யி­லேயே அமைச்­சர்கள் மீதான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வைத்தார். விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பிர­கா­ரமே, நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். ஏனைய அமைச்­சர்கள் குறித்து நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்க முயற்­சித்த போது கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­ட­னான சந்­திப்பைத் தொடர்ந்து அவ்­வி­சா­ரணை நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது சுகா­தார அமைச்­சுப்­ப­த­வியை பாது­காக்க முற்­ப­டு­கி­றது. இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பி­னர்­களே அமைச்­சர்கள் குறித்த முறைப்­பா­டு­களை வழங்­கி­யதன் பின்னே விசா­ர­ணைக்­கு­ழுவை அமைத்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கிறார். இதன்­வி­ளைவே அவர் மீதான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை.

தற்­போது கூட, சுழற்சி முறை­யி­லான ஆசனம் பு.ௌாட் அமைப்­புக்கே வழங்­கப்­பட வேண்டும். என கோரிக்கை விடப்­பட்டுக் கொண்­டி­ருக்­கப்­படும் நிலையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் உறுப்­பினர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். என­வேதான் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் வட­மா­காண ஆட்­சி­மு­றையில் மேலா­திக்க நிலையைக் கொண்­டு­வர நினைக்­கி­றார்கள். ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­களை புறந்­தள்ளப் பார்க்­கி­றார்கள் என்ற கார­சா­ர­மான குற்­றச்­சாட்­டுக்­களை சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் மேற்­படி கூட்­டத்தில் முன்­வைத்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது­போ­லவே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தமது இயக்­கத்தின் தீர்­மா­னத்தில் எவ்­வி­த­மான மாற்­ற­மு­மில்லை. கட்சி அனு­ம­தி­யின்றி முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் கையொப்பம் இட்­டுள்­ளமைக்காக டெனீஸ்வரனிடம் விளக்கம் கோரி­யுள்ளோம். அவ்­வி­ளக்கம் கிடைக்­கப்­பெறும் பட்­சத்தில் விளக்­கத்தின் அடிப்­ப­டையில் எடுக்க வேண்­டிய ஒழுக்­காற்று நட­வ­டிக்­கையோ அல்­லது உரிய நட­வ­டிக்­கை­யையோ எடுக்க காத்­தி­ருக்­கி­றோ­மென தெரி­வித்­துள்ளார்.

இதற்கு இடையில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா தனது கருத்தை முன்­வைத்த போது அனந்தி சசி­த­ர­னுக்கு அமைச்­சுப்­ப­தவி வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவரை தமி­ழ­ரசுக் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்ளோம். ஆகவே அவரின் அமைச்சுப் பத­வியை தமி­ழ­ரசுக் கட்­சிக்­கான அமைச்சர் பத­வி­யாக ஏற்றுக் கொள்ள முடி­யாது என்ற தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண சபையின் போக்கில் பாரிய தளம்பல் நிலையும் சம­நிலை தன்­மை­யற்ற நிலை­களும் காணப்­ப­டு­கின்­ற­தென்­பதை தெளி­வாக புரிந்து கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

 இங்கு கட்­சிக்­கி­டையில் பதவி மற்றும் அதி­காரம் தொடர்பில் பார­தூ­ர­மான வாதப்­பி­ரதி வாதங்­களும் முரண்­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றமை என்­பது கவலை தரும் விட­யமாகும்.

வட கிழக்கு மாகாண சபை­யாக 1989 ஆம் ஆண்டு பரி­ண­மித்த வட­கி­ழக்கு மாகாண சபை, உல­கத்தின் கவ­னத்தை ஈர்த்­தது மாத்­தி­ர­மன்றி, இம்­மா­காண சபை உரு­வாக்­கத்தின் மூலம் சுயாட்­சிக்­கான அடி­யி­டுகை இடப்­பட்­டுள்­ளது என்ற அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவே தமிழ் மக்கள் நம்­பி­னார்கள்.

1989 வட– கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் நடத்­தப்­பட்­ட­போது வட மாகா­ணத்­தி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் ஒரு இயக்­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் கிழக்­கி­லி­ருந்து பல கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­க­ளா­கவும் இருந்­துள்­ளனர். 1990, ஆம் ஆண்டு தொட்டு 2008 ஆம் ஆண்டு வரை மாகாண சபை இயக்­கப்­ப­டாமல் ஆளுநர் ஆட்­சி­யி­லி­ருந்த காலத்­தில்தான் 2006 ஆம் ஆண்டு உச்ச நீதி­மன்ற தீர்ப்­பின்­படி வட கிழக்கு மாகாணம் திட்­ட­மிட்ட முறையில் பிரிக்­கப்­பட்­டது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே கிழக்­குக்­கான தேர்­தலை இலங்கை அர­சாங்கம் அவ­சரம் அவ­ச­ர­மாக நடத்­தி­விட்டு வடக்கு மாகாண சபைத் தேர்­தலை நடத்­தாமல் சுமார் 5 வரு­டங்கள் இழுத்­த­டித்­தது.

வட­மா­காண சபைத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டு­மென தேசிய ரீதி­யிலும் உல­க­ள­விலும் பல அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட்ட நிலை­யி­லேயே தவிர்க்க முடி­யாமல் இலங்கை அர­சாங்கம் 2013 ஆம் ஆண்டு வட­மா­காண சபைக்­கான தேர்­தலை நடத்­தி­யது. அவ்­வாறு நடத்­தப்­பட்­ட­போது வட­மா­காண சபை­யா­னது இன்­னொ­ருவர் கையில் போய்­வி­டக்­கூ­டாது என்­ப­திலும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ராக கொண்­டு­வ­ரப்­பட வேண்­டி­யவர் ஆளு­மையும் ஆற்­றலும் அனு­ப­வமும் உள்­ள­வ­ராக இருக்க வேண்­டு­மென்­ப­திலும் அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது.

மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் வட­மா­காண சபை தேர்தல் நடத்­தப்­பட்ட வேளை தமிழ்த் தரப்­பினர் குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டிய ஒரு கால கட்­டத்­தி­லேயே வட­மா­காண சபையை கைப்­பற்ற வேண்­டு­மென்ற அதிக பிர­யத்­த­னங்கள் எடுக்­கப்­பட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தமிழ் மக்­களின் முழு­தான ஆணையை பெற வேண்­டு­மாக இருந்தால் வட மாகாண சபை கூட்­ட­மைப்பின் கைவசம் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன் வைத்­ததன் பேரில் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்­துமே கூட்­ட­மைப்பின் தலை­வரின் தலை­மையின் கீழ் நின்று உழைத்­ததன் உயர்ந்த வெற்­றி­யா­கவே வடக்கு மாகாண சபையில் கூட்­ட­மைப்பு பாரிய உல­கத்தின் கவ­னத்தை ஈர்க்­கக்­கூ­டிய வெற்­றியைக் கண்­டது.

அவ்­வே­ளை­க­ளி­லெல்லாம் எதிர்க்­கட்சித் தலை­வரின் கையைப் பலப்­ப­டுத்த வேண்டும். அவரின் ஆணையை கேட்டு ஒழுகி நடப்­பதன் மூலமே ஒரு உத்­த­ம­மான இலக்கை நோக்கி நகர்ந்து செல்ல வேண்­டு­மென்ற கூரிய இலட்­சி­யத்­துடன் துணை நின்­ற­வர்கள் இன்று சின்­னா­பின்­னப்­பட்டுப் போய் நிற்­ப­தற்கு கார­ண­மென்ன. இதன் பின்­ன­ணியில் எந்த சக்தி செயற்­பட்டு வரு­கின்­றது என்­பது மர்­ம­மா­கவே இருக்­கி­றது.

வெண்ணெய் திரண்டு வரு­கின்ற நேரத்தில் தாழி உடைந்த கதையைப் போல சாணக்­கியம் மிக்க அர­சியல் நகர்­வாக கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் அர­சியல் நகர்வும் அர­சியல் தீர்வு விவ­கா­ரமும் முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­கின்ற நிலையில், எல்­லா­வற்­றையும் போட்­ட­டிக்கும் நிலையில் வட­மா­காண நிலை­மைகள் ஆகிக் கொண்­டி­ருப்­ப­து கவ­லைக்கு மேல் கவ­லை­யூட்­டு­கின்ற விவ­கா­ர­ணமா­கவே காணப்­ப­டு­கி­றது.

அண்­மையில் முத­ல­மைச்­சரின் யாழ்ப்­பாண வாசஸ்­த­லத்தில் பங்­காளிக் கட்­சிகள் கூடி எடுத்துக் கொண்ட மூன்று தீர்­மா­னங்கள் வட­மா­காண உள்­ளக நிலை­மை­களை தெளி­வா­கவே படம் பிடித்துக் காட்­டு­கின்­றது. முத­லா­வது தீர்­மா­ன­மாக அமைச்­சர்கள் மாற்­றப்­பட்டால் அது குறித்த அமைச்சர் எந்­த­வொரு குற்­றச்­சாட்­டையும் இழைத்­த­தாக அர்த்தம் செய்து கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. இரண்­டா­வது தீர்­மா­ன­மாக அமைச்­ச­ரவை நிய­ம­னங்­களைப் பொறுத்­த­மட்டில் அங்­கத்­துவ கட்­சி­களின் ஆலோ­ச­னை­க­ளையும் கருத்தில் எடுத்து அவை மேற்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்றும் மூன்­றா­வ­தாக முத­ல­மைச்சர் தனக்­கி­ருக்கும் சட்ட ரீதி­யான தற்­து­ணிவு அதி­கா­ரங்­களை பிர­யோ­கித்து அமைச்­ச­ரவை மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவோ திருத்தி அமைப்­ப­தற்கோ முற்­படக் கூடாது இதற்கு பங்­காளிக் கட்­சி­களின் ஆலோ­ச­னையைப் பெற வேண்­டு­மென்று தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத் தீர்­மா­னங்­களின் மூலத்­தன்­மையைப் பார்ப்­போ­மானால் அமைச்­சர்கள் மாற்­றப்­பட்டால் குறித்த அமைச்சர் குற்றம் புரிந்­த­வ­ராக அர்த்­தப்­ப­டுத்­தக்­கூ­டாது என்ற விட­ய­மாகும். அமைச்­சர்கள் தவறு இழைக்­கி­றார்கள், ஊழல் புரி­கின்­றார்கள், இலஞ்சம் பெறு­கி­றார்கள் என்ற விவ­காரம் திடீ­ரென முளைக்கும் ஒரு விவ­கா­ர­மல்ல மீகா­ம­னாக விளங்கும் முத­ல­மைச்சர் தனித்தும் ஒரு­மித்தும் விடப்படும் தவறுகளுக்கு பொறுப்பாளியென்பது 13 ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாகவே வியாக்கியானப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய யாப்பில் குறிப்பிட்டிருப்பது போல் மன்னன் தவறு இழைப்பதில்லையென்பது போல் தன்னையொரு புனித ஆத்மாவாக கருதிக் கொண்டு நடக்க முற்படுவாராயின் அது முரண்பாடுகளையும் முட்டி மோதல்களையும் கொண்டுவருமென்பதற்கு தற்பொழுதுள்ள வடமாகாண சபை நிலைமைகள் சான்று பகருகின்றன.

பங்காளிக் கட்சிகளின் ஆலோசனையையும் குறிப்பாக தன்னைப் பிரேரித்த கட்சியின் தலைமைப் பீடத்தின் ஆலோசனையைப் பெறாமலே முதலமைச்சர் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இதில் உண்மையிருக்கலாம். அல்லது தவறு இருக்கலாம். கூட்டு மயமான ஆட்சியென்ற வகையில் பங்காளிக் கட்சிகளை கனதிபண்ண வேண்டிய பொறுப்பு முதலமைச்சரை சார்ந்தது என்பதற்கு மாற்று வகைக் கருத்து இருக்க முடியாது.

இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலையை அறிவுபூர்வமாகவும் சாணக்கியத்தன்மையுடனும் ஆராய்ந்து முடிவு காணும் திறன் எதிர்க்கட்சித் தலைவரான கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு உண்டு என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது. வடமாகாண சபையில் அங்கம் பெறும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை அவசர கூட்டத்துக்கு தலைவர் சம்பந்தன் அழைத்திருப்பது குழம்பியும் கலங்கியும் போயிருக்கும் வடமாகாண நிலைமைகளில் நல்லதொரு அமைதியையும் சமத்தன்மையையும் கொண்டு வருமென்று எல்லோருமே நம்பும் ஒரு விடயமாகவே இருக்கும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.