Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் நடக்கும் சிறு விடயங்களை தெற்கில் பெரிதாக்குகின்றனர் – சஜித்

Featured Replies

வடக்­கில் நடக்­கும் சிறு விட­யங்­களை தெற்கில் பெரிதாக்குகின்றனர் – சஜித்

வடக்­கில் நடக்­கும் சிறு விட­யங்­களை தெற்கில் பெரிதாக்குகின்றனர் – சஜித்
 

வடக்­கில் இடம்­பெற்ற சில சிறிய குற்­றச் செயல்­களை வைத்து வடக்கு மாகா­ணத்­தில் மீண்­டும் மோச­மான சூழ்­நிலை உரு­வாகி விட்­டது என்று தெற்­கில் சிலர் பொய் உரைக்­கின்­ற­னர்.

இவ்­வாறு அமைச்­சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்­தார்.

தேசிய பயி­லு­நர் தொழிற்­ப­யிற்சி அதி­கார சபை­யின் மேசன் கற்கை நெறியை நிறைவு செய்­த­வர்­க­ளுக்­கான தொழில் உப­க­ர­ணங்­கள் வழங்­கும் நிகழ்வு திரு­ம­றைக் கலா மன்­றத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது-;

நாட்­டில் சமா­தா­ன­மும், சாந்­தி­யும் ஏற்­பட்­டுள்­ள­மையை ஒரு சில அர­சி­யல்­வா­தி­க­ளால் பொறுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை. தற்­போது ஏற்­பட்­டுள்ள சமா­தான மற்­றும் நல்­லி­ணக்­கத்தை பார்த்துப் பொறாமை அடைந்­துள்­ள­னர்.

வடக்­கில் இடம்­பெற்ற சில சிறிய குற்­றச் செயல்­களை வைத்து வடக்கு மாகா­ணத்­தில் மீண்­டும் மோச­மான சூழ்­நிலை உரு­வாகி விட்­டது என்று தெற்­கில் பொய் உரைக்­கின்­ற­னர்.

வடக்­கில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற சில சிறிய குற்­றச்­செ­யல்­க­ளுக்கு மத்­தி­யி­லும் நான் எனது வாக­னத்­தில் இரண்டு பாது­காப்பு அதி­கா­ரி­க­ளு­ட­னும் எனது சார­தி­யு­ட­னும் மட்­டும் இங்கு தெற்­கி­லி­ருந்து வாக­னத்­தில் வந்­துள்­ளேன்.

வடக்­கில் முன்­னைய காலத்­தைப் போல எவ்­வித அச்ச நில­மை­யும் இல்லை. வடக்­கையும் தெற்­கை­யும் இணைய விடக்­கூ­டாது என்ற முயற்­சி­யி­லேயே சில அர­சி­யல்­வா­தி­கள் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்­டுள்­ள­னர்.

மேசன் பயிற்­சியை நிறைவு செய்த 400 க்கும் மேற்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு மேசன் தொழி­லுக்­கான உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­பட்­டன. இந்தத் திட்­டம் அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­ச­ரின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே நடை­பெ­று­கின்­றது.

2 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான சீருடை மற்­றும் 5 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான மேசன் உப­க­ர­ணங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. பயிற்­சி­யின்­போது மாதாந்­தம் ஒரு­வ­ருக்கு 10 ஆயி­ரம் ரூபாய் வரை­யில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

நான்கு மாதப் பயிற்சி நெறியை நிறைவு செய்து சான்­றி­தழ் க­ளு­டன் வெளி­யே­றி­யுள்ள நீங்­கள் தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள உப­க­ர­ணங்­கள் மற்­றும் பெற்­றுக்­கொண்ட பயிற்சி நெறி­கள் என்­ப­வற்­றைப் பயன்­ப­டுத்தி உங்­கள் வாழ்­வில் மாதாந்­தம் 60 ஆயி­ரம் ரூபாய் வரை­யில் சம்­பா­திக்கக் கூடிய வல்­ல­
மையைப் பெற்­றுள்­ளீர்­கள்.

கடந்த வரு­டம் இங்­குள்­ள­வர்­க­ளுக்கு அதி­க­ள­வான வீடு­கள் தேவை என இங்­குள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கோரி­யி­ருந்­தார்­கள். இந்த வரு­டம் வீடு­கள் அதி­க­மாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனது அமைச்­சின் ஊடாக 2 ஆயி­ரத்து 551 வீடு­க­ளும் 49 கிராம மட்­டத்­தி­லான வீட்­டுத்­திட்­டங்­க­ளும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இது வெறும் ஆரம்­பமே இதன் தொடர்ச்­சி­யாக தேவை­யான உத­வி­கள் வழங்­கப்­ப­டும்.
நாம் இங்கு 49 கிராம மட்­டத்­தி­லான வீட்­டுத்­திட்­டத்தை நடை­மு­றைப் படுத்­தி­யுள்­ளோம்.

இந்த திட்­டங்­க­ளின் ஒவ்­வொரு திறப்பு விழா­வுக்­கும் யாழ்ப்­பா­ணத்­துக்கு 49 தட­வை­கள் வரு­வேன். இங்கு வந்து அந்த அனைத்து திட்­டங்­க­ளது திறப்பு விழா­வில் பங்­கு­பற்­று­வேன்.

அனு­ராத புரம் மாவட்­டத்துக்கு 37 ஆவது தட­வை­யாக இன்று வீட்­டுத்­திட்டத் திறப்பு விழா­வுக்குச் செல்­ல­வுள்­ளேன். நாம் எதிர்­வ­ரும் 2020 ஆம் ஆண்­டுக்­குள் வடக்கு மக்­க­ளின் வீட்­டுத் தேவை­களை நிறை­வேற்ற 2 ஆயி­ரத்து 500 வீட்­டுத்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி அடுத்து வரும் தேர்­த­லுக்கு வடக்கு மக்­கள் மத்­தி­யில் முகம் கொடுக்­கக்­கூ­டிய நிலையை ஏற்­ப­டுத்­து­வோம் –- என்­றார்.

“வெளி­மா­வட்­டத்­தி­லி­ருந்து கட­மை­யாற்­றும் அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு வீட்­டுத்­திட்­டங்­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும். வடக்கு மக்­க­ளின் தேவை கருதி தொடர்ச்­சி­யாக அரசு வீட்­டுத்­திட்­டங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்ய வேண்­டும்.

தற்­போது முன்­னெ­டுத்து வரும் வீட­மைப்பு அமைச்­சின் ஊடான வீட்­டுத்­திட்­டங்­கள் மூலம் மக்­கள் நன்­மை­ய­டைந்­துள்­ள­னர். இந்தத் திட்­டம் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று போரால் பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளின் தேவை­கள் நிறை­வேற்­றப் பட வேண்­டும்.” – என்று நிகழ்­வில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

நிகழ்­வில் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன், வடக்கு மாகாண ஆளு­ந­ரின் செய­லர் இளங்­கோ­வன் உட்­ப­டப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

அதேவேளை, நிகழ்வுக்கு வந்த அனைவரும் உடற்சோத னையின் பின்னரே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டது.

http://newuthayan.com/story/18927.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.