Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்

Featured Replies

இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் ஒன்றையாவது வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என அம்புரோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் கடும் சவாலாக விளங்கும்: அம்புரோஸ்
 
வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவு டெஸ்ட் ஆக நடக்கிறது. இங்கிலாந்தில் நடைபெறும் முதல் பகல்- இரவு டெஸ்ட் இதுவாகும்.


இங்கிலாந்து அணி சமீபத்தில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியிருந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஒன்றிலாவது வெற்றிபெறும். அல்லது இங்கிலாந்துக்கு கடும் சவாலாக விளங்கும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அம்புரோஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அம்புரோஸ் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலாவது வெற்றி பெறும் அல்லது இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலாக விளங்கும் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால், யதார்த்தமான நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்படி விளையாடுவார்களா? என்பதை என்னால் உறுதியாக கூற இயலாது’’ என்றார்.

அம்புரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். வால்ஷ் உடன் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அபாரமான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ் அணி 2014-ம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியிருந்தது. அதன்பின் தொடர்ந்து 6 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/15184033/1102508/I-am-hoping-West-Indies-can-at-least-win-one-Test.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் இன்று தொடங்குகிறது

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.

 
 
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் இன்று தொடங்குகிறது
 
 
பர்மிங்காம்:
 
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
 
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
 
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இது பகலிரவு டெஸ்ட் என்பது கவனத்துக்குரிய அம்சமாகும். மின்னொளியில் நடக்க இருப்பதால் பிரத்யேக இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படும்.
 
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மொத்தம் 4 பகலிரவு போட்டிகள் நடந்துள்ளது. ஆனால், இங்கிலாந்து அணி மின்னொளியின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் மேற்கிந்திய தீவுகளுக்கு ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்டில் ஆடிய அனுபவம் உண்டு.
 
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவை 3–1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/17044538/1102743/first-daynight-test-between-england-and-westindies.vpf

  • தொடங்கியவர்
315/3 (84.1 ov)
  • தொடங்கியவர்

பகலிரவு டெஸ்ட்டில் ஒளியேற்றிய குக், ரூட் சதங்கள்: இங்கிலாந்து அணி 348/3

 

 
cook

இரட்டைச் சதக் கூட்டணி அமைத்த ரூட், குக்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்தின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது, மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் பிங்க் நிறப்பந்தில் ஆடி இங்கிலாந்தின் அலிஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோர் சதங்களடித்து ஒளியேற்ற இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 348 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் நாள் ஆட்ட முடிவில் அலிஸ்டர் குக் 153 ரன்களுடனும், மலான் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜோ ரூட் (136), அலிஸ்டர் குக் (153 நாட் அவுட்) இணைந்து 3வது விக்கெட்டுக்காக சாதனை 248 ரன்களைக் குவித்தனர் இந்த மைதானத்தில் இதுவே 3வது விக்கெட்டுக்கான சிறந்த கூட்டணி ரன்களாகும். முன்னதாக அறிமுக வீரர் மார்க் ஸ்டோன்மேன் மற்றும் டாம் வெஸ்ட்லி தலா 8 ரன்களில் வெளியேறினர்.

இதில் ஸ்டோன்மேனுக்கு கிமார் ரோச் வீசிய பந்து அருமையானது, எவ்வளவு பெரிய பேட்ஸ்மெனாக இருந்தாலும் குச்சிதான். மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆகி லேசாக அவுட் ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. வெஸ்ட்லி கமின்ஸின் உள்ளே வந்த பந்தை கால்காப்பில் வாங்கி களநடுவர் மறுக்க ரிவியூவில் வெளியேறினார்.

அதன் பிறகு ஜோ ரூட் இருக்கும் பார்முக்கு மே.இ.தீவுகளின் தாக்கமற்ற பந்துவீச்சு என்ன செய்ய முடியும்? ஜோ ரூட் 13வது டெஸ்ட் சதத்தையும் குக் 31-வது டெஸ்ட் சதத்தையும் எடுத்தனர். இது மே.இ.தீவுகளுக்கு எதிராக ரூட்டின் 2-வது சதமாகும், 139 பந்துகளில் சதம் கண்டார். 189 பந்துகளில் 136 ரன்களை 22 பவுண்டரிகளுடன் எடுத்த ஜோ ரூட், கிமார் ரோச் பந்து ஒன்றை கோட்டை விட மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து பவுல்டு ஆனார்.

குக் தனது 153 ரன்களில் இதுவரை 23 பவுண்டரிகளை அடித்துள்ளார். பிறகு தனது 10வது 150+ ஸ்கோரை எட்டினார். லென் ஹட்டன், வாலி ஹேமண்ட், கெவின் பீட்டர்சன் சாதனைகளை இதன் மூல சமன் செய்தார்.

டேவிட் மலான் 2 ரன்களில் இருந்தபோது கார்லோஸ் பிராத்வெய்ட் பந்தில் கேட்ச் கொடுத்தார் ஆனால் ஸ்லிப்பில் தவற விடப்பட்டது. மே.இ.தீவுகள் புதிய பந்தை எடுப்பதற்கு பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா-வின் உத்தரவு தேவைப்பட்டது, ஆனால் அந்த 8 ஓவர்களில் விக்கெட் விழவில்லை.

மொத்தத்தில் மே.இ.தீவுகளில் நல்ல ஆற்றலுடன் வீசியது கிமார் ரோச் மட்டுமே, மற்றவர்களால் பேட்ஸ்மென்களுக்குத்தான் வாழ்வு.

http://tamil.thehindu.com/sports/article19515560.ece?homepage=true

  • தொடங்கியவர்

பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவிப்பு

 

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலைஸ்டர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவித்தது.

பர்மிங்காம் பகலிரவு டெஸ்ட்: குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவிப்பு
 
 
 
பர்மிங்காம்:
 
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலைஸ்டர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 514 ரன்கள் குவித்தது.
 
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து கேப்டன் ரூட் சதம் அடித்து ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது. குக் 153 ரன்களுடனும், மலன் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இரண்டாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த மலன் 65 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய குக் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 ரன்களில் ரோஸ்டன் சேஸ் பந்தில் எல்.பி.டபுல்யூ. ஆனார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சில் சேஸ் 4 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் விழ்த்தினர்.
201708190510018266_1_chase._L_styvpf.jpg
தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரேங் பிரத்வெயிட், ஆண்டர்சன் பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. கைல் ஹோப் 25 ரன்களுடனும், கைரன் பவல் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 
201708190510018266_2_anderson._L_styvpf.
 
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/19050959/1103121/england-scored-514-in-first-innings-of-day-night-test.vpf

  • தொடங்கியவர்
514/8d
145/8 (41 ov)
  • தொடங்கியவர்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி

 

இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 270 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
 
லண்டன்:
 
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. 
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 514 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 
 
தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தது. இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. கைல் ஹோப் 25 ரன்களுடனும், கைரன் பவல் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
201708200258183871_1_england-test-1._L_s
இன்று, தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினர், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஜெர்மைன் பிளாக்வுட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றது.
 
பாலோ-ஆன் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கிரேக் பிரத்வெயிட் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர். இந்த முறையும் இங்கிலாந்து அணியிரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் இரண்டாம் இன்னிங்சில் 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால், இந்த பகலிரவு டெஸ்ட் போட்டி மூன்று நாள்களில் நிறைவடைந்தது.
201708200258183871_2_england-test-stokes
இங்கிலாந்து அணி 270 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி 25-ம் தேதி தொடங்குகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/20025815/1103334/england-won-day-night-test-by-an-innings-and-270-runs.vpf

  • தொடங்கியவர்

இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவிற்கு இடமில்லை

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை.

இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு: ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவிற்கு இடமில்லை
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியுள்ளது.

தம்புல்லாவில் 2.30 மணிக்கு தொடங்க இருக்கும் முதல் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இலங்கைக்கு எதிராக தொடர்ந்து நான்காவது முறையாக விராட் கோலி டாஸ் வென்றுள்ளார்.

டாஸ் வென்ற விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரகானே, மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

201708201417326086_1_TeamIndia1-s._L_sty

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரோகித் சர்மா, 2. தவான், 3. விராட் கோலி, 4. லோகேஷ் ராகுல், 5. டோனி, 6. கேதர் ஜாதவ், 7. ஹர்திக் பாண்டியா, 8. அக்சார் பட்டேல், 9. புவனேஸ்வர் குமார், 10. பும்ப்ரா, 11. சாஹல்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டிக்வெல்லா, 2. குணதிலகா, 3. குசால் மெண்டிஸ், 4. உபுல் தரங்கா, 5. மேத்யூஸ், 6. கபுகேதரா, 7. ஹசரங்கா, 8. பெரேரா, 9. சண்டகன், 10. பெர்னாண்டோ, 11. மலிங்கா.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/20141731/1103384/INDvSL-Dambulla-ODI-India-won-toss-select-fielding.vpf

  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்

லீட்ஸ் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் சரிந்தது.

 
 
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லே மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செ்யதது.

அதன்படி இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோருர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

201708251809395481_1_roach-s._L_styvpf.j
ஸ்டோன்மேனை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரோச்

அணியின் ஸ்கோர் 19 ரன்னாக இருக்கும்போது குக் 11 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வெஸ்லே 3 ரன்னிலும் மற்றொரு தொடக்க வீரர் ஸ்டோன்மேன் 19 ரன்னிலும் ரோச் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஜோ ரூட் உடன் மாலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி வருகிறது.

201708251809395481_2_roach001-s._L_styvp
வெஸ்லே விக்கெட்டிற்கு நடுவரிடம் முறையிடும் ரோச்

மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 24 ரன்னுடனும், மாலன் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/25180933/1104395/ENGvWI-2nd-Test-Headingley-england-struggle-3-for.vpf

  • தொடங்கியவர்

தொடர்ந்து 12-வது அரைசதம் அடித்து உலக சாதனையை சமன் செய்தார், ஜோ ரூட்

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார்.

 
 
 
 
தொடர்ந்து 12-வது அரைசதம் அடித்து உலக சாதனையை சமன் செய்தார், ஜோ ரூட்
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோ ரூட்.
ஹெட்டிங்லே :

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் (11 ரன்) உள்பட 4 முன்னணி வீரர்கள் ஸ்கோர் 71 ரன்களை எட்டுவதற்குள் நடையை கட்டினர். இதன் பின்னர் ஜோ ரூட்டும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் அணியை வீழ்ச்சியின் பிடியில் இருந்து ஓரளவு மீட்டனர். ஜோ ரூட் 59 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் தொடர்ச்சியாக 12 டெஸ்டுகளில் ஏதாவது ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து இருக்கிறார்.

இதன் மூலம் தொடர்ந்து 12 டெஸ்டுகளில் அரைசதம் அடித்த டிவில்லியர்சின் (தென்ஆப்பிரிக்கா) உலக சாதனையை சமன் செய்தார். மறுமுனையில் 6-வது சதத்தை நிறைவு செய்த பென் ஸ்டோக்ஸ் 100 ரன்களில் கேட்ச் ஆனார்.

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச், கேப்ரியல் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/26090611/1104447/Joe-Root-has-matched-AB-de-Villiers-record-of-fifties.vpf

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு பதிலடி: பிராத்வைட், ஷாய் ஹோப் அசத்தல் சதம்

 

ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பிராத்வைட், ஷாய் ஹோப் சதமடித்து அசத்தியுள்ளனர்.

 
இங்கிலாந்துக்கு பதிலடி: பிராத்வைட், ஷாய் ஹோப் அசத்தல் சதம்
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 258 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (100) சதமும், ஜோ ரூட் (59) அரைசதமும் அடித்தனர்.

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வைட் 13 ரன்னுடனும், பிஷூ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201708262128128905_1_10shaihope1-s._L_st
சதம் அடித்த பிராத்வைட், அருகில் ஷாய் ஹோப்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிஷூ நேற்றைய ரன்னுடன் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் ஹோப் 2 ரன்னில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் கைப்பற்றினார்.

ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது. 4-வது விக்கெட்டுக்கு பிராத் வைட் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது.

201708262128128905_2_10shaihope-s._L_sty
சதம் அடித்த ஷாய் ஹோப்

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். இருவரின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 74 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 115 ரன்னுடனும், ஷாய் ஹோப் 104 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/26212810/1104610/Headingley-ENGvWI-Brathwait-shai-Hope-century.vpf

  • தொடங்கியவர்

ஹெட்லிங்லே டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 427 ரன்கள் குவிப்பு; இங்கிலாந்தை விட 169 ரன்கள் முன்னிலை

ஹெட்லிங்லேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 427 ரன்கள் குவித்துள்ளது.

ஹெட்லிங்லே டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் 427 ரன்கள் குவிப்பு; இங்கிலாந்தை விட 169 ரன்கள் முன்னிலை
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 258 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பிராத் வைட், ஷாய் ஹோப் ஆகியோரின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்திருந்தது. ஷாய் ஹோப் 147 ரன்னுடனும், பிளாக்வுட் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பிராத் வைட் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

201708271809485295_1_8blackwood-s._L_sty
49 ரன்கள் எடுத்த பிளாக்வுட்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். முதல் பந்தில் ஷாய் ஹோப் 147 ரன்னிலும், அடுத்த பந்தில் டவ்ரிச் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுடன் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201708271809485295_2_8Holder-s._L_styvpf
43 ரன்கள் சேர்த்த ஹோல்டர்

அடுத்து வந்த கேப்டன் ஹோல்டர், பிளாக்வுட் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிளாக்வுட் 49 ரன்னும், ஹோல்டர் 43 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். இருவரிடன் ஆட்டத்தாலும் வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோர் 400 ரன்னைத் தாண்டியது. 10 ரன்கள் எடுத்த நிலையில் கேப்ரியல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.


இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 169 பின்தங்கிய நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை கட்டுப்படுத்தியதுபோல் 2-வது இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் கட்டுப்படுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/27180947/1104731/Headingley-Test-ENGvWI-west-Indies-427-all-out-anderson.vpf

வெஸ்ட் இண்டீஸ் வீரரை தகாத வார்த்தையில் திட்டிய பென் ஸ்டோக்ஸ்-க்கு நடுவர் கண்டனம்

வெஸ்ட் இண்டீஸ் வீரரை தகாத வார்த்தையில் திட்டிய பென் ஸ்டோக்ஸ்-க்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.

 
வெஸ்ட் இண்டீஸ் வீரரை தகாத வார்த்தையில் திட்டிய பென் ஸ்டோக்ஸ்-க்கு நடுவர் கண்டனம்
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத் வைட், ஷாய் ஹோப் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இது இங்கிலாந்து வீரர்களை வெறுப்படையச் செய்தது.

வெஸ்ட் இண்டீசை எளிதாக வீழ்த்தி விடலாம் என நினைத்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. 101-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தை ஷாய் ஹோப் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடும் கோபமடைந்த பென் ஸ்டோக்ஸ் ஷாய் ஹோப்பை தகாத வார்த்தைகளால் திட்டினார். இது ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் மேட்ச் அதிகாரிகளுக்கு தெளிவாக கேட்டது.

201708271705457154_1_3benstokes002-s._L_

இதனால் பென் ஸ்டோக்ஸ் செயலுக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் இரண்டு புள்ளிகள் பெற்றிருந்தார். தற்போது இந்த புள்ளியுடன் மூன்று புள்ளிகள் பெற்றுள்ளார்.

இன்னும் ஒரு புள்ளி பெற்றால் ஒரு டெஸ்டில் விளையாடுவதற்கு தடை கிடைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பென் ஸ்டோக்ஸ் கவனமாக செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/27170544/1104715/Stokes-reprimanded-one-demerit-point-away-from-ban.vpf

  • தொடங்கியவர்
 
258 & 490/8d
 
427 & 4/0 (5.1 ov, target 322)
  • தொடங்கியவர்

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 490 ரன்களுக்கு டிக்ளேர்: மே.இ.தீவுகள் வெற்றி இலக்கு 322 ரன்கள்

moeen%20ali

மொயீன் அலி.   -  படம். | ஏ.எப்.பி.

லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான நேற்று இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 490 ரன்கள் குவிக்க, மே.இ.தீவுகளுக்கு வெற்றி இலக்கு 322 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் தன் 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் இன்னிங்சில் 169 ரன்கள் என்ற பெரிய முன்னிலை பெற்ற மே.இ.தீவுகள் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்திடம் பிடியை நழுவ விட்டது. மொயீன் அலி 84 ரன்களையும், கிறிஸ் வோக்ஸ் 61 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 490 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்யும் அளவுக்கு வந்தது.

ஆனால் இருமுறை வோக்ஸ், மொயின் அலி அவுட் ஆகியிருக்க வேண்டிய தருணத்தில் களநடுவரின் நோ--பால் தீர்ப்புகள் மே.இ.தீவுகளுக்கு பின்னடைவை ஏறப்டுத்தியது. இருமுறையும் நோ-பால்கள் சந்தேகத்திற்கிடமாகவே அமைந்தன. அதாவது நோ-பால் கொடுத்திருக்க வேண்டாம் என்றே தெரிந்தது. இதனால் மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்காக 117 ரன்களைச் சேர்க்க முடிந்தது. முன்னதாக கேப்டன் ஜோ ரூட் 111 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 72 ரன்களை விளாசினார்.

பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மலான் எதிரெதிர் பாணி அரைசதங்களை அடித்தனர், பென்ஸ்டோக்ஸ், பென் ‘ஸ்ட்ரோக்ஸ்’ ஆக, டேவிட் மலான் நிதானன் ஆனார். இருவரும் இணைந்து 91 ரன்களைச் சேர்த்தனர், அதன் பிறகு ராஸ்டன் சேஸ் 22 பந்துகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகளுக்கு வழி திறந்தது. ஜானி பேர்ஸ்டோ மிகவும் திமிர்த்தனமான ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுல்டு ஆனார். இப்போது இங்கிலாந்து 158 ரன்களையே முன்னிலை பெற்றிருந்தது, கடைசியில் மொயின் அலி 93 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 84 ரன்களில் பிஷூ பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுக்கும் போது முன்னிலை 300 ரன்கள் பக்கம் வந்தது. கிறிஸ் வோக்ஸ் 104 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுக்க ஒருவரும் சதம் எடுக்காமல் இங்கிலாந்து அணி தனது அதிகபட்ச ரன்களான 490-ஐ எட்டியது.

மே.இ.தீவுகளின் தொடக்க வீரர்களில் முதல் இன்னிங்ஸ் சத நாயகன் பிராத்வெய்ட் 4 ரன்களுடனும் பொவெல் 1 ரன்னுடனும் 6 ஓவர்களை இழப்பில்லாமல் நகர்த்தி முடித்தனர். இந்த இலக்கை இந்த மைதானத்தில் துரத்துவது அவ்வளவு எளிதல்ல.

தேநீர் இடைவேளையின் போதுகூட இங்கிலாந்து 200 ரன்கள் பக்கம்தான் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் கிரெய்க் பிராத்வெய்ட்டின் ஒரு படுமோசமான ஓவரில் அனைத்தும் மாறிப்போனது, மே.இ.தீவுகள் தனது மோசமான ஆட்டத்துக்குத் திரும்பியது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஷனன் கேப்ரியல் 2 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்தார்.

போதாக்குறைக்கு இந்திய நடுவர் எஸ்.ரவி வேறு மே.இ.தீவுகளுக்கு எமனானார். மொயின் அலி 32 ரன்களில் இருந்த போது பிஷூ பந்தில் அவர் விக்கெட் கீப்பர் டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்தார், அது நோபால் என்று கூறினார் எஸ்.ரவி, ஆனால் அது நோ-பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லாதது என்று ரீப்ளேயில் தெரிந்தது. ஏகப்பட்ட நோ-பால்களை தவற விட்ட நடுவர்கள் திடீரென விழிப்புற்று நோ-பால் இல்லாததை நோ-பால் என்று தீர்ப்பளித்தனர். கேப்ரியல் பந்தில் வோக்ஸ் பவுல்டு ஆனதும் நோ-பால் ஆனது, ஆனால் இதுவும் நோ-பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லாததுதான்.

மே.இ.தீவுகளின் பீல்டிங்கும் இங்கிலாந்தின் வலுவான நிலைக்குப் பொறுப்பாகும், கேட்ச்களை விட்டுக் கொண்டேயிருந்தனர். ரூட், மலான், என்று அனைவருக்குமே ஏதாவது ஒரு கேட்சைக் கோட்டை விட்ட வண்ணமே இருந்தனர்.

மீண்டும் வெற்றி வாய்ப்பை மே.இ.தீவுகள் தவறவிட்டதாகவே தெரிகிறது, ஆனாலும் கிரிக்கெட் ஆட்டம் என்பது நிச்சயமின்மைகளின் ஆட்டம் எனவே ஒரு அரிய வெற்றி தகைந்தாலும் தகையலாம், ஆனால் மிக மிக கடினம் என்றே தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/article19579823.ece?homepage=true

  • தொடங்கியவர்

கேட்ச்களைப் பிடித்திருந்தால் மே.இ.தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கும்!

 

 
roach

கேட்சை விட்டதால் கதறும் கிமார் ரோச்.   -  படம். | ஏ.பி.

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் படுமோசமான பீல்டிங்கினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை மிகவும் கடினமாக்கிக் கொண்டது என்றால் அது மிகையான கூற்றல்ல.

இந்த டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணியினர் சுமார் 7-8 கேட்களை கோட்டை விட்டதால் மட்டும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 238 ரன்களை விட்டுக் கொடுத்தது, இதனால் வெற்றி இலக்கு 322 ரன்களாக அதிகரித்தது. இதன் விளைவாக, இன்று 5-ம் நாள் ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் தோற்றுப்போகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியில் படுமோசமான ‘ஆல்ரவுண்ட்’ ஆட்டத்துக்குப் பிறகு முற்றிலும் வேறு ஒரு மே.இ.தீவுகள் அணியாக எழுச்சி பெற்று இந்த டெஸ்டில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்குச் சுருட்டி, பிறகு இரு சதங்களுடன் 427 ரன்களைக் குவித்து அருமையான வெற்றி வாய்ப்பைப் பெற்று கடைசியில் மோசமான பீல்டிங், இந்திய நடுவர் எஸ்.ரவியின் மிகவும் கொடூரமான பழைய பாணி அம்பயரிங் ஆகியவற்றினால் தோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மே.இ.தீவுகள்.

முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் சதம் எடுத்தார், இல்லையெனில் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் அம்பேல் ஆகியிருக்கும், ஆனால் ஸ்டோக்ஸ் சதம் எடுக்க யார் காரணம், மே.இ.தீவுகள் பீல்டர்களே. ஸ்டோக்ஸுக்கு 2 கேட்ச்களைக் கோட்டை விட்டனர்.

169 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கி விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோ ரூட்டுக்கு கேட்சை விட்டனர், முதல் இன்னிங்சிலும் ரூட்டுக்கு கேட்சை விட்டனர். டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் ஒரு நடப்பு கால சிறந்த வீரருக்கு கேட்சை விட்டால் என்ன ஆகும் என்பதை அவர் நிரூபித்தார். அவரை அவுட் ஆக்கிய கேட்சும் நம்பிக்கையுடன் பிடிக்கப்பட்ட கேட்ச் அல்ல, இரண்டாவது முயற்சியில் பிடிக்கப்பட்ட கேட்சே.

சரி ரூட் அவுட் ஆகி விட்டார், இனி இங்கிலாந்து அவ்வளவுதான் என்று நினைத்த போது டேவிட் மலானுக்கு உடனடியாக கேட்சை விட்டனர். முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க வேண்டியதற்கு டவ்ரிச் டைவ் அடித்து முயற்சி செய்து கடைசியில் கைவிட, போவெலும் பிடிக்க முடியாமல் போனது, இதனால் மலான் ஒரு அறுவையான அரைசதம் எடுத்தார், இவரது இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டிக்கு எதிர் விளம்பரமாகும் காரணம் இவர் ஆட்டத்தில் லாவகம் எதுவும் இல்லை. அழகான கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க விரும்புவோர் டேவிட் மலான் பேட்டிங்கை பார்க்காமல் இருப்பதே நல்லது. கேட்சை விட்டதால் ஒரு அறுவை அரைசதம் எடுத்து இங்கிலாந்தை நிலைநிறுத்தினார்.

திடீரென ஹோல்டர் கேப்டன்சி திறமையுடன் பேசுகிறாரே என்று பார்த்தால் தேவேந்திர பிஷூவை கொண்டு வரவேயில்லை, அவர் கூறினார், இடது கை பேட்ஸ்மென்களை அச்சுறுத்தும் ஸ்பாட் இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸை பயன்படுத்துவோம் என்றார், ஏன் அதே ஸ்பாட்டில் லெக் ஸ்பின்னர் பிஷூ பயன்படமாட்டாரா? அதே ஸ்பாட்டில் பிஷூவின் பந்துகள் எழும்பி உள்ளே வரும்போது இன்னும் கூடுதல் அபாயமாக இருந்திருக்கும், ஆனால் தோனி போல் பேசுகிறாரே ஹோல்டர் என்று பார்த்தால் கடைசியில் தோனி போலவே கேப்டன்சி செய்தார், பிஷூவை கொண்டு வராமலேயே இருந்தார் பிறகு 2-வது புதிய பந்தை நேரடியாக எடுக்காமல் தாமதப்படுத்தியதிலும் தோனி ஜாடை ஹோல்டரிடம் காணப்பட்டது. கடைசியில் புதிய பந்தை எடுத்த போது பவுலர்கள் விரயம் செய்தனர்.

ஹோல்டரின் கேப்டன்சி ஆங்காங்கே நன்றாக இருக்கிறது, பிறகு ஒரு மணி நேர இடைவெளியில் படுமோசமாக மாறிவிடுகிறது. அவரை வழிநடத்தவும் அங்கு ஆளில்லை. இங்கிலாந்தில் இந்தியா படுமோசமாகத் தோல்வியடைந்த போது தோனி என்னென்ன தவறுகளைச் செய்தாரோ அத்தனையும் செய்கிறார் ஹோல்டர். களவியூகத்தில் ஆக்ரோஷம் இல்லவேயில்லை. எளிதான ரன்களுக்கு வழிவகை செய்தார் ஹோல்டர். அப்படித்தான் பிராத்வெய்ட்டை நேற்று பந்து வீச அழைத்து மோசமான பவுலிங்கினால் இங்கிலாந்துக்குச் சாதகமாகத் திருப்பு முனை ஏற்பட்டது.

பேர்ஸ்டோவுக்கும் கேட்ச் விட்டனர், ஆனால், இதன் காரணமாக கூடுதலாக இங்கிலாந்துக்கு 5 ரன்களே கிடைத்தது. அதன் பிறகுதான் தவறான நோ-பால் விவகாரங்கள் எழுந்தன.

கேட்ச்களை விட்டதனால் இங்கிலாந்துக்கு மே.இ.தீவுகள் கூடுதலாக 238 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெற்றி இலக்கு 322 ரன்களாக அதிகரித்துள்ளது. ஒருவேளை இந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் நேற்று 4-ம் நாளிலேயே மே.இ.தீவுகள் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

http://tamil.thehindu.com/sports/article19579947.ece?homepage=true

  • தொடங்கியவர்

சரித்திரம் படைத்தது மேற்கிந்திய தீவுகள் அணி...! சொந்த மண்ணில் வீழ்ந்தது இங்கிலாந்து

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

03af358d-26d0-4369-ae46-b01788190dc5_233


மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்கிலி மைதானத்தில் 25-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 258 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 427 ரன்களைக் குவித்தது.

c6356548-82bc-4451-b6cf-1bca17e466c6_234

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷேய் ஹோப் 147 ரன்களைக் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 490 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களைக் குவித்து வெற்றிபெற்றது. அதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷேய் ஹோப் 118 ரன்களைக் குவித்தார். அவர் இரண்டு இன்னிங்ஸிலும் நூறு ரன்களைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/sports/100735-windies-beat-england-by-5-wickets-and-level-the-series-1-1.html

  • தொடங்கியவர்

ஹீரோவான ஷேய் ஹோப்; 2-வது இன்னிங்ஸிலும் சதம்: பீனிக்ஸ் பறவை போல் எழுச்சிபெற்ற மே.இ.தீவுகள்

 

west%20indies%202
shai%20hope

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து மே.இ.தீவுகளை வெற்றிக்கு இட்டுச் சென்ற ஷேய் ஹோப்   -  படம். | ஏ.எஃப்.பி.

west%20indies%202
shai%20hope

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து மே.இ.தீவுகளை வெற்றிக்கு இட்டுச் சென்ற ஷேய் ஹோப்   -  படம். | ஏ.எஃப்.பி.

லண்டன்

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 322 ரன்களை மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி மருத்துவம் அளித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து தனது உறுதியையும், அபாரமான உத்தியையும் வெளிப்படுத்திய ஷேய் ஹோப் 2-வது இன்னிங்ஸில் அதைவிடவும் சிறந்த பொறுமையையும் உறுதியையும், உத்தியையும் கடைபிடித்து ஆண்டர்சன், பிராட், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோரது கடும் சோதனைகளைக் கடந்து 211 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்தப் பிட்சில், இங்கிலாந்தின் கடுமையான பந்து வீச்சுக்கு எதிராக 322 ரன்களை 4-வது இன்னிங்ஸில் எடுப்பது நிச்சயம் ஒரு பெரிய சாதனைதான்.

அதுவும் எட்ஜ்பாஸ்டனில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்குள்ளாக படுதோல்வியைச் சந்தித்து மிகவும் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கும், கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான மே.இ.தீவுகள் அணி 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய விதம் உண்மையில் பழைய மே.இ.தீவுகளை நினைவூட்டும் விதமாக அமைந்தது, கிரெய்க் பிராத்வெய்ட் முதல் இன்னிங்சில் சதம் எடுத்ததோடு இந்த வெற்றிகர விரட்டலில் 95 ரன்களை எடுத்து மீண்டும் சதமெடுப்பார் என்று நினைத்த தருணத்தில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார். கடும் விமர்சனங்களுக்கும், கேலிப்பார்வைக்கும் பிறகு இப்படியொரு வெற்றி பெறுவது எவ்வளவு பெரிய அணியினாலும் முடியாதது. இதுதான் டெஸ்ட் போட்டி, இதுதான் வெற்றி, உள்ளூரில் கூப்பிட்டு குழிபிட்சைப் போட்டு அனைவரையும் துவைத்து எடுத்து அதைப்பற்றி வானாளவிய பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்துவத்தை கிரிக்கெட் மீது உண்மையான நேயம் இருந்தால் நிச்சயம் உணர வைக்கும் என்று நம்புவோமாக.

ஷேய் ஹோப் ஹெடிங்லீயில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தவரானார். உயர்வு நவிற்சி இல்லாமல் இந்த வெற்றியை வர்ணிக்க முடியாது. டெஸ்ட் வரலாற்றில் முதல் டெஸ்ட்டில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இப்படிப்பட்டதொரு எழுச்சி இதுவரை நடந்திருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். அதுவும் இந்த டெஸ்ட் போட்டியிலும் ஏகப்பட்ட கேட்ச்களை விட்டு அதிலும் மனம் துவளாமல் எழுச்சி பெறுவதெல்லாம் மே.இ.தீவுகள் கிரிக்கெட் வரலாறு ரத்தத்தில் ஊறியிருந்தால்தான் சாத்தியம்.

தொடக்க விரர் கிரெய்க் பிராத்வெய்ட் இந்த டெஸ்ட் போட்டியில் 229 ரன்களையும் ஷேய் ஹோப் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையுடன் 265 ரன்களையும் எடுத்துள்ளனனர். இவர்களது அபாரமான உறுதி மற்றும் பிடிவாதமான ஆட்டத்தினால் ஹெடிங்லீ மைதானத்தில் 2-வது வெற்றிகரமான விரட்டலை சாதித்தது மே.இ.தீவுகள்.

5/0 என்று இன்று தொடங்கிய மேஇ.தீவுகள் அணியில் ஷேய் ஹோப், பிராத்வெய்ட் இணைந்து மீண்டும் 145 ரன்களைச் சேர்த்தனர், முதல் இன்னிங்ஸில் இருவரும் இணைந்து 246 ரன்களைச் சேர்த்தனர். இன்றைய ஆட்டம் முடிய இன்னும் 4 ஓவர்கள் இருக்கும் தருணத்தில் கிறிஸ் வோக்ஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் பிளிக் செய்து ஷேய் ஹோப் வெற்றி ரன்களை எடுத்தார். 5-வது விக்கெட்டுக்காக ஷேய் ஹோப்புடன் இணைந்த ஜெர்மைன் பிளாக்வுட் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றியை துரிதப்படுத்தியதோடு இருவரும் இணைந்து 74 ரன்களைச் சேர்த்தனர்.

இன்னும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முதல் இங்கிலாந்து பவுலராகும் கனவுடன் வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட் இல்லாமல் முடிந்து போனார்.

317 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடங்கிய மே.இ.தீவுகளுக்குத் தேவையான அதிர்ஷ்டம் கிடைத்தது, அலிஸ்டர் குக் ஸ்லிப்பில் பிராட் பந்தில் பிராத்வெய்ட்டுக்கு கேட்ச் ஒன்றை நழுவ விட்டார். இது இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து விட்ட 4-வது கேட்ச், மொத்தமாக 11 கேட்ச்கள் விடப்பட்டது.

ஆண்டர்சன், பிராட் பந்துகளை ஸ்விங் செய்து அடிக்கடி மட்டையைக் கடந்து செல்லச் செய்தனர், ஆனால் பொவெல், பிராத்வெய்ட் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து எதிர்கொண்டனர். ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்ட பொவெல் கடைசியில் கவனம் சிதறியதால் 23 ரன்களில் பிராட் பந்தை 3-வது ஸ்லிப்பில் ஸ்டோக்சிடம் எட்ஜ் செய்து வெளியேறினார். கைல் ஹோப் துரதிர்ஷ்டவசமாக ரன்னர் முனையில் ரன் அவுட் ஆனார், பிராத்வெய்ட் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்ற பிராடின் கைகளில் பட்டு ரன்னர் முனையின் ஸ்டம்பில் பட, கைல் ஹோப் கிரீசுக்கு வெளியே சிக்கினார்.

அதன் பிறகு ஷேய் ஹோப், பிராத்வெய்ட் இணைந்து 144 ரன்களைச் சேர்த்தனர். 100 ரன்களை இருவரும் சேர்த்த போது ஸ்டூவர்ட் பிராட் கோபத்தில் பிட்சை உதைத்து நடுவர் ரவியின் அறிவுரையைக் கேட்க நேர்ந்தது.

ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதக்கூட்டணியை அமைத்தது மே.இ.தீவுகளுக்கு 4-வது முறையாகும். அதே போல் டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இரட்டைச்சதக் கூட்டணி, ஒரு சதக்கூட்டணி அமைத்த 7-வது ஜோடியாகினர் பிராத்வெய்ட்-ஷேய் ஹோப்.

பிராத்வெய்ட் 95 ரன்களுக்கு இங்கிலாந்தின் பொறுமையைச் சோதித்து கடைசியில் மொயின் அலியின் வைடு பந்தை ஸ்டோக்சிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து மைதானத்தில் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் செய்ய பெவிலியன் திரும்பினார். ராஸ்டன் சேஸ் சில கவலைதரும் தருணங்களிலும் 58 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்து கடைசியில் கிறிஸ் வோகஸ் பந்தில் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், மிட் ஆனில் பதிலி வீரர் மேசன் கிரேன் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

ஜெர்மைன் பிளாக்வுட் இறங்கி ஜேம்ஸ் ஆண்டர்சனை நேராக சிக்ஸ் அடித்து பிறகு ஷேய் ஹோப்பின் சிங்கிளுக்கு ஓடி வந்ததன் மூலம் நாயகன் ஷேய் ஹோப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த சாதனையைப் புரிந்தார்.

ஷேய் ஹோப் 106 ரன்களில் இருந்த போது பிராட் பந்தில் வேகமாக வந்த கேட்ச் வாய்ப்பை குக் நழுவவிட்டார், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போல் ஜெர்மைன் பிளாக்வுட் அப்பர் கட்டில் சிக்ஸ் ஒன்றையும் அடித்தார். ஜெர்மைன் பிளாக்வுட் ஆட்டத்தை கிராண்ட் ஸ்டைல் முடிக்க முயன்றார் முடியவில்லை மொயின் அலி பந்தை மேலேறி அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார். கடையில் வெற்றிக்கான ரன்களை அடித்தார் ஏற்கெனவே ஹீரோவாகிவிட்ட ஷேய் ஹோப். ஆட்ட நாயகனாகவும் ஷேய் ஹோப் தேர்வு செய்யப்பட்டார்.

அருமையான டெஸ்ட் போட்டியின் அருமையான 2 டெஸ்ட் இன்னிங்ஸ்களை கடும் சவாலான சூழலில் ஆடினர் ஷேய் ஹோப் மற்றும் பிராத்வெய்ட். இந்த வெற்றி மே.இ.தீவுகள் கிரிக்கெட்டிற்கு திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

http://tamil.thehindu.com/sports/article19583474.ece?homepage=true

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் 123 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

 

லார்ட்ஸில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸின் அபார பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் 123 ரன்னில் சுருண்டது.

 
லார்ட்ஸ் டெஸ்ட்: பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் 123 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பிராத்வைட், பொவேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிராத்வைட் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கைல் ஹோப் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இரண்டு விக்கெட்டுக்களையும் ஆண்டர்சன் வீழ்த்தினார்.

201709072200534407_1_11blackwood-s._L_st

அதன்பின் வந்த ஷாய் ஹோப் 29 ரன்னிலும், தொடக்க வீரர் பொவேல் 39 ரன்னிலும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுக்களை சீட்டுக்கட்டு போல் மளமளவென சரிந்தது. பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 123 ரன்னில் சுருண்டது.

201709072200534407_2_11anderson-s._L_sty

பென் ஸ்டோக்ஸ் 14.3 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஆண்டர்சன், ரோலண்ட்-ஜோன்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/07220047/1106843/Lords-Test-ben-stokes-fire-west-indies-123-all-out.vpf

  • தொடங்கியவர்
182/9 (50.2 ov)
  • தொடங்கியவர்

இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: 194 ரன்னில் சுருட்டியது

லார்ட்ஸ் டெஸ்டில் ரோச் மற்றும் ஹோல்டர் பந்து வீச்சால் இங்கிலாந்தை 194 ரன்னில் சுருட்டி வெஸ்ட் இண்டீஸ் பதிலடி கொடுத்துள்ளது.

 
இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் பதிலடி: 194 ரன்னில் சுருட்டியது
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸின் அபார பந்து வீச்சால் 123 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 46 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
201709082242408475_1_cri._L_styvpf.jpg
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோச் மற்றும் ஹோல்டர் தங்களது வேகக்கணைகளை தொடுத்தனர். இதற்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரிந்து கொண்டே இருந்தனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 194 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
201709082242408475_2_cri-3._L_styvpf.jpg
பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னும், ஸ்டூவர்ட் பிராட் 38 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோச் 5 விக்கெட்டும், ஹோல்டர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
201709082242408475_3_cri-4._L_styvpf.jpg
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 71 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/08224233/1107039/Lords-Test-ENGvWI-England-all-out-for-194-roach-and.vpf

  • தொடங்கியவர்
123 & 177
194 & 38/1 (8.3 ov, target 107)
Day 3 Session 2: England require another 69 runs with 9 wickets remaining
  • தொடங்கியவர்

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது

 

 

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து 2-1 என தொடரைக் கைப்பற்றியது

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றியது
 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்னில் சுருண்டது. பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 194 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ரோச் 5 விக்கெட்டும், ஹோல்டர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஜேம்ஸ் ஆண்டர்சனின் அபார பந்து வீச்சால் மூன்றாவது நாளான இன்று 177 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 62 ரன்னும், பாவெல் 45 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இங்கிலாந்தை விட வெஸ்ட் இண்டீஸ் 106 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

201709092204142448_1_8anderson-s._L_styv

தொடக்க வீரர்களாக அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குக் ஆட்டம் இழந்தார்.

2-வது விக்கெட்டுக்கு ஸ்டோன்மேன் உடன் வெஸ்லே ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-1 எனக் கைப்பற்றியது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/09220413/1107226/Lords-Test-England-beat-west-indies-by-9-wickets-and.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.