Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!

Featured Replies

கடுமையான வரட்சி : நாடளாவிய ரீதியில் 12 இலட்சம் பாதிப்பு..!

 

 

Image result for கடுமையான வரட்சி

நாட்டில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 19 மாவட்­டங்­களில் ஏற்­பட்­டுள்ள கடு­மை­யான வரட்­சி­யினால் மூன்று இலட்­சத்து  36 ஆயி­ரத்து 487 குடும்­பங்­களில் வாழும் 12 இலட்­சத்து 42 ஆயி­ரத்து 140 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு, கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தாலும் தொடர்ந்தும் வரட்­சி­யான சூழல் நீடிக்­கின்­றது. வரட்சி கார­ண­மாக சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் குடி­நீ­ரின்றி அவ­தி­யு­று­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

நாட்டில் தொடரும் வரட்­சி­யினால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

வட மாகா­ணத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 45 ஆயி­ரத்து 802  குடும்­பங்­களை சேர்ந்த 5 இலட்­சத்து மூவா­யி­ரத்து 183 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.  யாழ்ப்­பாண மாவட்­டத்தில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 28 ஆயி­ரத்தி 652 பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து 15 ஆயி­ரத்து 308 பேரும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 கிழக்கு மாகா­ணத்தில் 46 ஆயி­ரத்து 841 குடும்­பங்­களை சேர்ந்த ஒரு இலட்­சத்து 58 ஆயி­ரத்து 841 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 35 ஆயி­ரத்து 951 பேரும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 65ஆயி­ரத்தி 642 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 57ஆயி­ரத்து 248 பேரும் கடும் பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

 வட மேல் மாகா­ணத்தில் ஒரு இலட்­சத்து 6 ஆயி­ரத்து 163 குடும்­பங்­களை சேர்ந்த 3 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 166 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குறித்த மாகா­ணத்தின் குரு­நா­கல் மாவட்­டத்தில் மாத்­திரம் 2 இலட்­சத்து 703 பேரும், புத்­தளம் மாவட்­டத்தில் ஒரு இலட்­சத்து 64 ஆயி­ரத்து 463 பேரும் கடு­மை­யான பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

இதனை தவிர அம்­பாந்­தோட்டை, இரத்­தி­ன­புரி ,பதுளை மொன­ரா­கலை, கண்டி, கம்­பஹா, மாத்­தளை போன்ற மாவட்­டங்­க­ளிலும் வரட்­சி­யால் மக்கள் பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­யுள்­ளனர்.

வடக்கு, கிழக்கு, வடமேல் மாகா­ணங்­களில் தற்­போது தொடர்ச்­சி­யான மழை­வீழ்ச்சி கிடைத்­தாலும் தொடர்ந்தும் வரட்­சி­யான சூழல் நீடிக்­கின்­றது. வரட்சி கார­ண­மாக சுமார் ஐந்து இலட்­சத்­துக்கும் அதி­க­மானோர் குடி­நீ­ரின்றி அவ­தி­யு­று­கின்­றனர் எனவும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை கடு­மை­யான வரட்­சிக்கு முகங்­கொ­டுத்­தி­ருக்கும் மாவட்­டங்­களை சேர்ந்த மக்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் குடிநீர் உட்­பட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை நிவா­ர­ண­மாக வழங்கி வரு­கின்­றது.  

அத்­துடன் வரட்சி நீடிக்­கின்­ற­மை­யினால் பிர­தான கு­ளங்கள் பலவற்றில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. அத்துடன் பெரும்போகம் மற்றும் சிறு போக பயிர்ச்செய்கையும் முற்றிலும் பாதிப் படைந்துள்ளது. மேலும் சரணாலயங்களில்  விலங்குகளும் பாதிப்பினை எதிர் நோக்கியுள் ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23201

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.