Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கணைகளை சரமாரியாக எதிர்கொண்ட பொலிஸ் பேச்சாளர் : மௌனம் காத்த அமைச்சர்கள்

Featured Replies

ஊடகவியலாளர்களின் கேள்விக்கணைகளை சரமாரியாக எதிர்கொண்ட பொலிஸ் பேச்சாளர் : மௌனம் காத்த அமைச்சர்கள்

 

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகரவிடம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக  கேள்வி கணைகளை தொடுத்தனர்.

பொலிஸ் திணைக்களத்தின் ஊழியர் ஒருவரை  பொலிஸ் மா அதிபர் வசைபாடுவது போன்ற  காணொளி வெளியாகியுள்ளமை தொடர்பிலேயே பொலிஸ்   பேச்சாளரிடம் நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர். 

 

இது  தொடர்பில்  பல வழிகளில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர பதிலளித்தபோதும்   ஊடகவியலாளர்கள்  தொடர்ந்து  கேள்விகளை எழுப்பிய வண்ணமே இருந்தனர். 

பொலிஸ் பேச்சாளரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: பொலிஸ் மா அதிபர் மின்தூக்கி தொழில்பாட்டாளர் ஒருவரை  அச்சுறுத்துவது போன்று காணொளி வெளியாகியுள்ளது.  இது தொடர்பில் பொலிஸாரின் விளக்கம் என்ன?

 

பதில்:  பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பதவிக்கு வந்ததன் பின்னர் முக்கிய  சுற்றுநிருபம் ஒன்றை  விடுத்திருந்தார். அதாவது   காலையில் தேசிய கீதம் பாடுவதும், குறிப்பிட்ட நேரம்  தியானம் செய்வதும் அவசியம் என்பதை வலியுறுத்தும் சுற்றுநிருபமாகும். இதனை கட்டாயம் செய்யவேண்டும். இந்த  பணி  சரியாக இடம்பெறுகின்றதா என்பதை கண்காணிப்பதற்கு  பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளையும் நியமித்திருந்தார். அத்துடன் சில நேரங்களில் பொலிஸ்மா அதிபரே நேரில் வந்து இதனைப் பார்வையிடுவார்.  

 

பொலிஸ் அதிகாரிகளின்  மனநிலையை சரியாக பேணுவதற்கும்  மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதற்கும் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையிலேயே குறித்த தினம்  மின் தூக்கி தொழில்பாட்டாளர் அதனை சரியான பின்பற்றாதன் காரணமாக   இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த ஊழியரை பொலிஸ்மா அதிபர் தாக்கினார் எனக்கூறிவது தவறான தகவலாகும்.  

 

அதேபோன்று மற்றொரு பெண் ஊழியரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாகவும்  சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றது. இவை பொய்யான தவகல்கள் ஆகும்.  எனவே இது தொடர்பில்  பொலிஸ் திணைக்களத்தின் சட்டத்தரணிகள் இணைந்து ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் இந்த விடயம் குறித்து சிவில்  நீதிமன்றத்தில்  நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து  ஆராய்கிறோம். 

 

கேள்வி: இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறதா?

பதில்: எமது பொலிஸ் திணைக்கள மட்டத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. சிவில் நீதிமன்றத்திற்கும் செல்லவிருக்கின்றோம். 

 

கேள்வி: மின்தூக்கி ஊழியரும்  தியானம் செய்யவேண்டுமா?

 

பதில்: ஆம்.  அது கட்டாயம்

 

கேள்வி: ஒரு  ஊழியரை   இவ்வாறு அச்சுறுத்துவது சரியா?

 

பதில்: இங்கு அச்சுறுத்தல் இல்லை.  எது எப்படியிருப்பினும்  இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. 

 

கேள்வி:  இந்த சம்பவம் ஏப்ரல் மாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  ஏன் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை?

 

பதில்:  சம்பந்தப்பட்ட நபர்  இதுவரை எந்தவொரு விசாரணைப் பிரிவிடமும்  முறைப்பாடு செய்யவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கூட முறைப்பாடு செய்யவில்லை. 

 

கேள்வி: திணைக்களங்களைப் பொறுத்தவரையில்  மத நம்பிக்கையற்றவர்களும் இருப்பார்கள். இந்த சூழலில் இவ்வாறு  தியானம் செய்யவேண்டும் என வலியுறுத்தி சுற்றறிக்கை விடுவது சரியா?

 

பதில்: எப்படியிருப்பினும் திணைக்களத்தில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறை தொடர்பில் சுற்றறிக்கை விடுப்பதற்கு  திணைக்களத்தின் தலைவருக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. 

 

கேள்வி: இந்த காணொளி எவ்வாறு வெளியே சென்றது?

 

பதில்:  அது குறித்தும் நாம் ஆராய்கிறோம். குறிப்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் இருந்த காணொளியே சென்றுள்ளது. 

கேள்வி: இவ்வாறு  ஒரு விடயத்தை செய்யுமாறு அரசாங்க ஊழியர்களை கட்டாயப்படுத்துவது சரியா?

 

பதில்: (  ஊடகவியலாளர்கள் அமைச்சர்களான  ராஜித சேனாரட்ன, தயாசிறி ஜயசேகர ஆகியோரிடமும் இந்தக்  கேள்விகளை கேட்கின்றனர்) எந்தத் தரப்பிலிருந்தும் பதில் வரவில்லை. 

 

கேள்வி: அமைச்சர்களிடமிருந்து பொறுப்பான பதில்களை எதிர்பார்க்கின்றோம்?

 

பதில்: (தயாசிறி ஜயசேகர)   இவ்வாறு சுற்றுநிருபம் வெளியிடுவது தவறுபோல்தான் தெரிகிறது.  தியானம் செய்வதை விட  பொலிஸ் அதிகாரிகள் தமது உடல் வலிமையைப் பேணுவதற்கு ஏதாவது செய்யலாம்.  

http://www.virakesari.lk/article/23233

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.