Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவே 20 ஆவது திருத்தம்

Featured Replies

மாகாண சபைத் தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­தவே 20 ஆவது திருத்தம்

 

 

மாகா­ண ­சபைத் தேர்­தல்­களை ஒரே தினத் தில்  நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைக் கொண்­டுள்ள  அர­சி­ய­ல­மைப்பின்  20 ஆவது திருத்­தத்­திற்கு மாகா­ண­ச­பை­களின் அங்­கீ­கா­ரத்­தையும் பெறு­வ­தற்கு அர­சாங்கம்  நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது. மாகா­ண ­ச­பை­களின் கருத்­துக்­களை கேட்­ட­பின்­னரே இது­தொ­டர்பில் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் இணைப்­பேச்­சாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 

மேலும் மாகா­ண ­ச­பைத்­ தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்­கான எந்த முயற்­சி­க­ளை யும் அர­சாங்கம் எடுக்­க­வில்லை. மாறாக  மாகா­ண­ சபைத் தேர்­தல்­களை ஒரே தினத் தில் நடத்­து­வ­தற்கே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. அதற்­கா­கவே 20 ஆவது திருத்த சட் டம் கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அமைச்சர் மேலும்­ கு­றிப்­பி­டு­கையில், 

ஒரு மாகா­ண­ச­பைக்கு தேர்­தலை நடத்­து ­வ­தற்கு  80கோடி ரூபா செல­வா­கி­றது. மேலும் அர­சியல் கட்­சி­களின் நேரம், பொது­மக்­களின் நேரம் என்­பன வீண­டிக்­கப்­ப­டு­கின்­றன. எனவே ஒரே தினத்தில் தேர்­தல்­களை நடத்­து­வதே சிறப்­பாக அமையும்.  

மேலும் 20 ஆவது திருத்த சட்­டத்தை  கொண்­டு­வ­ர­ வேண்டும் என்ற  நிலைப்­பாட்­டி­லேயே நாங்கள் 19 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு அளித்தோம். அதா­வது   உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றம்  பாரா­ளு­மன்றத் தேர்தல் முறை மாற்றம் உள்­ளிட்ட  அனைத்தும் இந்த 20 ஆவது திருத்­தத்தின் ஊடாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். 

கேள்வி: ஆனால்  உங்­களின் இந்த முயற்­சியால் மாகா­ண ­ச­பை­களின் தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­கின்­றதே?

பதில்: இல்லை அது எமது முயற்­சி­யல்ல. மாகா­ண­சபைத் தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­த ­வேண்டும் என்­பதே எமது  நோக்கம்.  இதன்­மூலம்  மாகா­ண­சபைத் தேர்­தல்கள் பிற்­போ­டப்­ப­டு­வ­தாக யாரா­வது உணர்ந்தால் அவர்கள் நீதி­மன்­றத்தை நாடலாம். 

கேள்வி: நீதி­மன்ற விவ­காரம் ஒரு புறம் இருக்­கட்டும். 20 ஆவது திருத்தச் சட்ட முயற்­சி­யினால்  பொது­வா­கவே மாகா­ண­ சபைத் தேர்­தல்கள்  பிற்­ப­டுத்­தப்­ப­டு­கின் ­றன அல்­லவா? 

பதில்: அவ்­வாறு கூற முடி­யாது.  எமது முயற்­சி­யா­னது தேர்­தல்­களை ஒரே தின த்தில் நடத்­து­வதை அடிப்­ப­டை­யாக கொண்­ட­தாகும். மேலும் இந்த 20 ஆவது திருத்த சட்­டத்­திற்கு மாகா­ண­ ச­பை­க­ளி­னதும் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்கு நாங்கள் தீர்­மா­னித்­துள்ளோம். இது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் முன்­வைத்த கோரிக்­கை­க­ளுக்கு சாத­க­மான பதில் கிடைத்­தி­ருக்­கி­றது. எனவே 20 ஆவது திருத்தச் சட்ட விவ­கா­ரத்தில் மாகா­ண­ ச­பை­களின் கருத்­துக்­களும் பெறப்­படும். 

கேள்வி: அப்படியாயின் 20 ஆவது திருத் தச் சட்டத்திற்கு சுதந்திரக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளதா?

பதில்: மாகாண சபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதனை அழுத்தம் திருத்தமாக தெரிவித்து கொள்கின்றோம்.  மாறாக  தேர்தலை பிற்போடும் எண்ணம்  எமக்கில்லை.

http://www.virakesari.lk/article/23235

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.