Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்

Featured Replies

வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்

 

 

வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Local_News.jpg

அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 14 ஆம் திகதி வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் மற்றும் பாதுகாப்பு தடை இல்லாத நிலையில் சமிக்ஞை விளக்கு மட்டும் பொருத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி அதன் உரிமையாளர் அவ்விடத்திலயே பலியாகியுள்ளார் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அவ்விடத்தில் கடந்த 15 ஆம் திகதி நிரந்தர பாதுகாப்புத் தடையையும், பாதுகாப்பு கடவை காப்பாளர் ஒருவரையும் நியமிக்கக் கோரி பொது மக்கள் புகையிரதத்தை வழிமறித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளார்கள்.

தாண்டிக்குளம் புகையிரத கடவை பாதை ஊடாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கு அதிகமான பொது மக்களும், பாடசாலை மாணவர்களும் கடந்து செல்கிறார்கள். ஆனால் இந்த கடவையில் சமிக்ஞை விளக்கைத் தவிர புகையிரத கடவைக் காப்பாளர்களோ அல்லது புகையிரத காப்புத் தடைகளோ இல்லாத காரணத்தால் விபத்துக்கள் நடைபெறுவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. 

பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகள் வட மாகாணத்தில் தொடர்ச்சியாக எரிவதால் சில பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இந்த சமிக்ஞை விளக்குகள் மட்டும் புகையிரத கடவை பொது மக்கள் கடப்பதற்கு உதவியாக அமையும் என எதிர்பார்க்க முடியாது.

யுத்தத்திற்குப் பின்  புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட  நான்கு வருட காலத்தில் 41 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் 35 பேர் பரிதாபகரமாக உயிர் இழந்துள்ளார்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த விபத்துக்கள் பெரும்பாலனவை பாதுகாப்புக் கடவை ஊழியர்கள் இல்லாத கடவைகளில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்திலுள்ள  புகையிரத கடவைகளில் 7500 ரூபாய் ஊதியத்திற்கு பொலிஸ் திணைக்களத்தால் தற்காலிக ஊழியர் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் இந்த ஊதியம் அவர்களின் வாழ்கையை கொண்டு செல்வதற்கு போதாமையால் கடமையிலிருந்து விலகியுள்ளார்கள். இப்படியான காலியான கடவைகளிலேயே  கோர விபத்துக்கள் நடைபெற்று வருகிறமை அவதானிக்கத்தக்கது. 

சில கடவைகளில் சிவப்பு விளக்குகள் தொடர்ந்து எரிவதால் புகையிரதம் வருகிறதா இல்லையா என தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இங்குள்ள பொது மக்கள் இருக்கிறார்கள். ஆகவே சகல புகையிரதக் கடவைகளிலும் சமிக்கை விளக்குகளுக்கு மேலதிகமாக கடவைக் காப்பளர்களையும்,  பாதுகாப்புக்கு தடைகளையும்  பொருத்தும்படியும் தற்போது தற்காலிக அடிப்படையில் கடவைக் காப்பாளர்களாக கடமையாற்றிக்கொண்டிருப்பவர்களைக் கொண்டு இந்த வெற்றிடங்களை நிரப்பி உதவுமாறும்  தங்களை தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23247

  • தொடங்கியவர்

'எனது மகளின் கணவர் என்னை மதிப்பதில்லை' : ரயிலுடன் மோதி தற்கொலைக்கு முயன்ற குடும்பஸ்தர் 

 

 

 

வவுனியா, மன்னார் வீதி புகையிரதக் கடவைக்கு அண்மித்ததாக புகையிரதத்துடன் மோதி தற்கொலை செய்யமுன்ற குடும்பஸ்தர் ஒருவரை அப்பகுதியில் கடமையில் இருந்த புகையிரத கடவைக் காப்பாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

vavuniya-train-sucide.jpg

குறித்த சம்பவம் நேற்று இரவு 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள புகையிரததக் கடவைக்கு அருகிலுள்ள புகையிரதப் பாதையில் வயது முதிர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நீண்ட நேரமாக படுத்திருந்திருந்துள்ளார். 

இதனை அவதானித்த அயலில் வசிப்பவர்கள் அவரை அவ்விடத்தில் இருந்து அகற்ற முயன்ற போது அவர் மறுப்பு தெரிவித்ததுடன், தான் தற்கொலை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா - மன்னார் வீதி புகையிரதக் கடவையில் கடமையில் இருந்த உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்குசென்ற உத்தியோகத்தர் அவரை அங்கிருந்து கட்டாயப்படுத்தி அகற்றி புகையிரதக் கடவைக் காப்பாளரின் அறைக்கு அழைத்து வந்துள்ளார். இதன்போது அங்கு நின்றவர்கள் இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள தமிழ் மொழி மூல அவசர தொலைபேசி இலக்கம் என்பவற்றுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிசார் குறித்த நபரை மீட்டதுடன் அவர் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்தையடுத்தும் மது போதையில் இருந்தமையினாலும் அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை, தனது மகளின் கணவர் தன்னை மதிப்பதில்லையெனத் தெரிவித்தே குறித்த குடும்பஸ்தர் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்ததுடன், வவுனியா, கல்நாட்டியகுளம் பகுதியில் வசித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/23242

 

 

 

 

 

 

இந்தியா தடை செய்த ரயில் சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளன

 

 

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புகையிரத கடவை சமிக்ஞை விளக்குகளே வடக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துவோம் என வடக்கு, கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் சங்கத் தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.

 

Local_News.jpg

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணமடைந்தமையை கண்டித்து அப்பகுதி மக்களால் புகையிரதத்தை மறித்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது மக்கள் பிரதிநிதிகளும், பொலிஸாரும் அங்கு கலந்துகெண்டிருந்தனர்.

இதன்போது பொலிஸார் புகையிரதத் திணைக்களத்திற்கு உரித்தான கடவைக்கு சென்று புகையிரதக் கடவை காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இதனை நாம் கண்டிக்கின்றோம்.

எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த நிலையிலான பொலிஸ் அதிகாரியானாலும் புகையிரத கடவை காப்பாளர்களிடம் பொது மன்னிப்பை கோரவேண்டும்.

வடக்கிற்கான புகையிரத சேவை இடம்பெற்றதன் பின்னர் 41 புகையிரத விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் எங்களது ஊழியர்கள் கடமையில் உள்ள கடவைகளில் எந்த விபத்துக்களும் ஏற்படவில்லை.

இவ் விபத்துக்கள் பொலிஸாரின் கவனயீனத்தாலும்,  புகையிரத திணைக்களம் அவ்விடங்களில் இருந்து தமது ஊழியர்களை வெளியேற்றியமையினாலுமே ஏற்பட்டுள்ளது.

அத்துடன் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவினால் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டமையினாலும் ஏற்பட்ட விபத்துகளுக்கு புகையிரத திணைக்களமும், பொலிஸ் திணைக்களமும் முழுமையான பொறுப்பேற்க வேண்டும். மாறாக பொலிஸார் எம்மை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.

இதுதவிர இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட தானியங்கி சமிக்ஞைகள் இந்தியாவில் பாவனையில் இருந்து அகற்றப்பட்டவை. இந்த சமிக்ஞை விளக்குகள் அந்த நாட்டில் பயன்படுத்த தடை செய்யப்பட்டவை என்பதனை நாம் உறுதிப்படுத்துவோம்.

இந்த சமிக்ஞைகள் தொடர்ந்தும் இயங்குவதனால் மின்சாரசபைக்கு பெரும் நட்டம் ஏற்படுவதுடன் அதில் உள்ள மின்குமிழ்கள் தொடர்ந்து பழுதடைவதால் அதனை இந்தியாவில் இருந்தே கொண்டுவரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆகவே புகையிரதத் திணைக்களம் இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

போக்குவரத்து அமைச்சர் எங்களை பழிவாங்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தினையும் பழிவாங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்தி இந்த நாட்டின் பிரஜைகளான புகையிரத கடவை காப்பாளர்களை மனிதர்களாக மதித்து அவர்களது சேவைக்கான கௌரவத்தினை வழங்கி நிரந்தர நியமனத்தினை வழங்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்.

 

 

http://www.virakesari.lk/article/23246

  • தொடங்கியவர்

பொலிஸார் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் மீது விசாரணை

 

 

வவுனியா பொலிஸாருக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை முன்வைத்த வடக்கு, கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் மீது நேற்றைய தினம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Local_News.jpg

"பொலிஸார் ரயில் திணைக்களத்திற்கு உரித்தான கடவைக்கு சென்று ரயில் கடவை காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இதனை நாம் கண்டிக்கின்றோம். எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதவி பொலிஸ்மா அதிபராக இருந்தாலும் சரி பொலிஸ் அத்தியட்சகராக இருந்தாலும் சரி எந்த அதிகாரியானாலும் ரயில் கடவை காப்பாளர்களிடம் பொதுவான மன்னிப்பை கோர வேண்டும்" என  வடக்கு, கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எ.மகிந்த அவர்களிடம் வினவிய போது,

தாங்கள் அவ்வாறு எதனையும் குறிப்பிடவில்லை எனவும் ரயில்  கடவை காப்பாளர் சங்க தலைவரிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும் பொலிஸார் அவ்வாறு கூறியதற்கான ஆதாரங்கள் எவையும் தன்னிடம் இல்லையென தெரிவித்ததாகவும் கூறினார்.

இவ்வாறு ஆதாரங்கள் இல்லாமல் எவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குறை கூற முடியும் எனவும் இவ் விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23268

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.