Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரைச்சிப் பிரதேச சபையை இரு சபைகளாக மாற்றுங்கள் அமைச்சர் மனோவுக்கு சிறிதரன் எம்.பி. கடிதம்

Featured Replies

கரைச்சிப் பிரதேச சபையை  இரு சபைகளாக மாற்றுங்கள் 

அமைச்சர் மனோவுக்கு சிறிதரன் எம்.பி. கடிதம்

 
கரைச்சிப் பிரதேச சபையை  இரு சபைகளாக மாற்றுங்கள் 
 
 
கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேசசபையை நகரசபையாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், கரைச்சிப் பிரதேச சபையை கரைச்சி,  கண்டாவளை ஆகிய இரு சபைகளாக உருவாக்குவது தொடர்பிலும் கவனமெடுக்குமாறு கோரி அமைச்சர் மனோ கணேசனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
 
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கரைச்சிப் பிரதேச சபையை கிளிநொச்சி நகராட்சி மன்றமாக அபிவிருத்தி செய்வதும், கரைச்சிப் பிரதேசசபை மற்றும் கண்டாவளைப் பிரதேசசபை ஆகிய இரண்டு புதிய பிரதேச சபைகளை உருவாக்குவது குறித்துத் தங்களது தீவிர கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
 
கரைச்சிப் பிரதேசசபை எதிர்கொள்ளும் சவால்களுடன் சேர்த்து புதிதாக உருவாகவுள்ள கிளிநொச்சி நகராட்சி மன்றத்தின் பிரச்சி னைகளையும் ஆராய்வதே இந்த ஆவணத்தின் நோக்கமாகும்.
1980ஆம் ஆண்டுகளின் இறுதியில் மாநகரசபை, நகராட்சி மன்றம் மற்றும் பிரதேசசபை ஆகிய மூன்று நவீன பிரிவுகள் உள்ளூராட்சி சபையில் இலங்கை அரசால் நிறுவப்பட்டன.
 
இந்த நவீன முறைமைக்கு முன்னர் கரைச்சி பிரதேசசபையானது கிளிநொச்சி நகரசபையாக இருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஒரு முழுமையாக்கப்பட்ட நகராட்சி மன்றத் தையும், கரைச்சி மற்றும் கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் கொண்டிருக்கவேண்டிய தேவையுள்ளது.
 
கிளிநொச்சி நகரத்தின் தரத்தை உயர்த்தவும், உள்ளூராட்சி சபையின் அதிகாரங்களை இன்னும் இரண்டு பிரதேச சபைகளிடம் பகிரவும் இவற்றைச் செய்ய வேண்டியுள்ளது.
 
நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளாதார, அரசியல் மற்றும் சட்டரீதியான திட்டங்களே அடிப்படைப் பிரச்சினையாக உள்ளன.
 
கரைச்சிப் பிரதேச சபையானது இரண்டு பிரதேச செயலகங்களை (கரைச்சி, கண்டாவளை) நிர்வாக ரீதியாகக் கொண்டுள்ளது. இதில் 58 கிராம அலுவலர் பிரிவுகளும், 620.66 ச.கி.மீற்றர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதியும் உள்ளடங்குகின்றது.
 
கரைச்சிப் பிரதேச சபையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் பல பொதுச்சேவைகளை வழங்குவதற்கான எந்தவிதமான சாத்தியங்களும் இங்கு காணப்படவில்லை.
 
கரைச்சிப் பிரதேச சபையின் நிர்வாகத்தை நடத்துவதற்குச் சாத்தியமாக அதன் புவியியல் அம்சங்கள் காணப்படாமை தான் இதற்குக் காரணம். உள்ளூராட்சி சபையின் தேசியக்கொள்கையா னது, ஒரு பிரதேச செயலகத்தில் ஒரு பிரதேசசபைதான் செயற்படுத்தப்படவேண்டுமென்று கூறுகின்றது.
 
இருப்பினும், கரைச்சிப் பிரதேச சபையானது இரண்டு பிரதேச செயலகங்களுடன் (கரைச்சி, கண்டாவளை) செயற்படுகின்றது. இதனால், மேற்குறிப்பிட்ட கொள்கை நோக்கத்தின்படி கரைச்சிப் பிரதேச சபையானது இரண்டு பிரதேச சபைகளாக செயற்படுத்தப்பட வேண்டும்.
 
இருந்தும், கரைச்சிப் பிரதேசசபை பல தசாப்தங்களாக ஒரு பிரதேச சபையாகவே செயற்பட்டு வருகின்றது. தேர்தல் தொகுதிகள், சபை உறுப்பினர்கள், அனுமதிக்கப்பட்ட அலுவலக ஆட்களின் தொகைகளில் எந்தவிதமான பாரியளவு மாற்றங்களும் இருக்காது.
 
அத்துடன், கரைச்சிப் பிரதேச சபையானது மூன்று உள்ளூராட்சி அதிகாரங்களாகப் பிரிக்கப்படும்போது மக்கள் அனைவருக்கும் திருப்திகரமான அரச சேவைகளைச் சமமாக வழங்குவதற்கான பல சந்தர்ப்பங்களும் இங்கு காணப்படுகின்றன.
 
ஆகையால், கரைச்சிப் பிரதேச சபையை கிளிநொச்சி நகராட்சி மன்றமாக அபிவிருத்தி செய்வதற்கானதும், இரண்டு புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கானதுமான காரணங்கள் இங்கு தெளிவாகத் தரப்பட்டுள்ளன.
 
ஆகையால், நான் மேற்படி விவரங்களை உங்களது கவனத்துக்காகச் சமர்ப்பிக்கின்றேன்.
 
மேலே முன்வைக்கப்பட்ட தேவைப்பாடுகளுக்காக தாங்கள் முறையான நடவடிக்கையை விரைவில் எடுப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன் – என்றுள்ளது.

http://newuthayan.com/story/20322.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.