Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் விட்டுக்கொடுப்பினாலேயே இலக்கை அடைய முடிந்தது.!

Featured Replies

ரணிலின் விட்­டுக்­கொ­டுப்­பி­னா­லேயே இலக்கை அடைய முடிந்­தது.!

 

 

இறு­தி­யாக இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது­வேட்­பா­ளராக யாரை நிறுத்­து­வது என்ற நெருக்­கடி சூழல் உரு­வா­னது. அத்­த­ரு­ணத்தில் அனை­வ­ருமே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெய­ரையே பரிந்­து­ரைத்­தார்கள். இருப்­பினும் நானே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரை நம்­பிக்­கையின் பேரில் பரிந்­து­ரைத்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

எவ்­வா­றா­யினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அப்­போ­தைய விட்­டுக்­கொ­டுப்பே நாம் எதிர்­கொண்ட கடு­மை­யான இலக்­கினை இல­குவில் அடை­வ­தற்­கான ஆரம்­பப் ­புள்­ளி­யாக அமைந்­தது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நாற்­பது ஆண்­டு­கால அர­சியல் பய­ணத்தின் முக்­கி­ய­மான சந்­தர்ப்­பங்­களை சித்­தி­ரிக்கும் ரணிலின் தொலை­நோக்கு எனும் புகைப்­பட கண்­காட்சி நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ளராக யாரை நிறுத்­து­வது என்­பது தொடர்பில் பெரு­ம­ளவில் சிந்­திக்க வேண்­டி­யேற்­பட்­டது. அவ்­வா­றா­ன­தொரு நெருக்­க­டி­யான சூழ்­நி­லையில் அப்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு பரிந்­து­ரைத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­விடம் நான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு அப்­போது ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி யின் செய­லா­ள­ராக செயற்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொருத்­த­மா­னவர் என்றேன். அதற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க என்­னிடம் அவர் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வ­ரா­ன­வரா என கேள்வி எழுப்­பினார். அதற்கு நான் அவர் எனக்கு அறிந்த வகையில் மிகுந்த நம்­பிக்­கைக்­கு­ரி­யவர் என்றேன். உடனே பிர­தமர் இந்த தீர்­மா­னத்தை நாளை நான் கட்­சியின் முன்­னி­லையில் அறி­விக்­கின்றேன் என்றார்.

மறுநாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக தேர்தல் களத் தில் இறங்­குவார் என எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் அவர் பொது வேட்­பாளராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன களம் இறங்­குவார் என்ற தீர்மானத்தை பகிரங்க மாக அறிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அப்போது அந்த தீர்மானத்தை இலகு வில் ஏற்றுக்கொண்டதும் அவருடைய விட் டுக்கொடுப்பின் விளைவாகவே நாம் எதிர் கொண்ட கடுமையான இலக்கை இலகுவில் எட்ட முடிந்தது. நல்லாட்சியும் இரு கட்சிக ளுடனான புரிந்துணர்வுடன் ஏற்படுத்தப் பட்டது என்றார்.

http://www.virakesari.lk/article/23282

  • தொடங்கியவர்
ரணிலின் தூரநோக்கு ....
 

image_8deeeb0f1e.jpgபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நான்கு தசாப்த கால அரசியல் வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (17) ஆரம்பமாகியது. 

“ரணிலின் தூரநோக்கு” எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கண்காட்சி நாளை முதல் 20 ஆம் திகதி வரை காலை 10.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.

1977 ஆம் ஆண்டில் அப்போதைய இளவயது நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியலில் முக்கியமானதொரு வகிபாகத்தினை வகித்ததுடன், தனது நான்கு தசாப்த கால சவால்மிக்க அரசியல் பயணத்தின் ஊடாக அவர் ஆற்றிய தேசியப் பணியை கௌரவித்தலே இந்தக் கண்காட்சியின் குறிக்கோளாகும்.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெருந்தொகையான அதிதிகள் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றினர்.

image_f4efdc717e.jpgimage_bdcc741548.jpgimage_8384c3b173.jpgimage_0a289b616b.jpgimage_8509acc5cd.jpgimage_09e2854d0b.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ரணிலின்-தூரநோக்கு/46-202464

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.