Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலை பொலிஸ் அதிகாரத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவு

Featured Replies

நாமலை பொலிஸ் அதிகாரத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவு

 
நாமலை பொலிஸ் அதிகாரத்தின் கீழ் விசாரணை செய்ய உத்தரவு
 

நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் சந்தன களங்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்சவை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. அந்தக் கோரிக்கை இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரத்தின் கீழ் நாமலை விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

http://newuthayan.com/story/20546.html

  • தொடங்கியவர்
நாமல் விரைவில் கைது?
 

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய, பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று (18) தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும்,அழைப்பாணை விடுக்குமாறு, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, நீதிமன்றத்திடம் வேண்டுகோள்விடுத்தது.

இந்த கோரிக்கையை பரீசிலித்த போதே, கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில், உப பொலிஸ் அதிகாரி பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் தொகுதி இலக்கம் 7இல் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கே இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு வளாகத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இதன்போது மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை ஒன்றுக்காக புதன்கிழமை (16) ரோஹித ராஜபக்ஷ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு ஆஜராக வந்த சந்தர்ப்பத்திலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறித்த அதிகாரிக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் நாமல் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அதிகாரியும் உடனிருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நாமல்-விரைவில்-கைது/150-202525

  • தொடங்கியவர்

விசாரணை பிரிவு அதிகாரியின் மகளுக்கு நாமல் செய்த வேலை!

நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரி லலித் ஷாந்தவின் மகளின் திருமணத்திற்கு 50 VAT 69 விஸ்கி போத்தல்களை வழங்கினோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக போலி குற்றச்சாட்டு சுமத்தி விளக்கமறியலுக்கு அனுப்ப முயற்சிக்கும் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரியின் மகளுக்கே இவ்வாறு வழங்கினோம் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு 50 போத்தல் தானும் தனது சகோதரர் யோஷிதவும் பரிசாக வழங்கினோம் எனவும் அதனை ஊடகத்தின் முன்னால் வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு களுத்துறையை சேர்ந்த பொலிஸ் உப பரிசோதகர் லலித் ஷாந்தவின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாக நாமல் கூறியுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அந்த திருமண வீட்டிற்கு சென்று VAT 69 விஸ்கியை அருந்திய காணொளி ஒன்றும் தங்களிடம் உள்ளதாகவும், தான் மற்றும் தனது சகோதரர் இதனை ஊடகத்தில் வெளிப்படுத்த தயார் என நாமல் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் விளக்கமறியலுக்கு செல்ல நேரிட்டால், நிதி மோசடி விசாரணை பிரிவின் அதனை அதிகாரிகளினதும் உண்மை தகவல்களை ஊடகத்திடம் வெளிப்படுத்துவதற்கு ஒரு போதும் தயங்கப்போவதில்லை என நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/155698

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.