Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகுகள் குறித்து இந்தியக் குழுவினர் ஆராய்வு

Featured Replies

படகுகள் குறித்து இந்தியக் குழுவினர் ஆராய்வு

 
படகுகள் குறித்து இந்தியக் குழுவினர் ஆராய்வு
 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட படகுகளின் நிலை தொடர்பாக ஆராய்வதற்காக இந்தியக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

இந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட இக் குழு இலங்கைக்கு வருகை தந்து படகுகளை பார்வையிட்டுள்ளது.

இந்திய இழுவைப் படகுகளை இலங்கை அரசாங்கம் விடுவித்திருக்கும் நிலையில், அவற்றை இந்தியாவுக்கு கொண்டு செல்ல கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது.

இதன்படி இந்த குழுவினர் நேற்று யாழ்.மாவட்டத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதிக்கும் திருகோணமாலை மாவட்ட த்திற்கும் சென்று மேற்படி படகுகளை பார்வையிட்டுள்ளனர்.

http://newuthayan.com/story/20634.html

  • தொடங்கியவர்

இந்திய கடற்றொழில் அதிகாரிகள் இலங்கையில்.!

 

 

20952177_10207997945981201_1574940793_o.

இந்திய கடற்றொழில் அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் தலைவர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு இலங்கைக்கு வருகை தந்து 42 இந்திய இழுவை படகுகளை பார்வையிட்டுள்ளது. 

2015.03.06ம் திகதி இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட 42 இந்திய இழுவை படகுகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் விடுவித்திருந்தது. இந்த படகுகள் தற்போது இந்தியாவுக்கு கொண்டு செல்ல கூடிய நிலையில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே மேற்படி 9பேர் கொண்ட குழு இலங்கை வருகை தந்திருந்தது. 

20952230_10207997946141205_225199868_o.j

நேற்று யாழ்.மாவட்டத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைநகர் பகுதிகளுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி பகுதிக்கும் திருகோணமாலை மாவட்டத்திற்கும் சென்று மேற்படி படகுகளை பார்வையிட்டுள்ளது. 

இதேவேளை, கைது செய்யப்பட்ட படகுகளை பார்வையிடுவதற்காக இந்திய கடற்றொழில் அதிகாரிகளுடன் தமிழகத்தின் காரைக்கால், நாகபட்டினம், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த இந்திய கடற்றொழிலளார் சங்கங்களின் தலைவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

20961300_10207997946341210_675905831_o.j

கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக தங்கள் படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையினால் தங்கள் படகுகள் சேதமடைந்திருப்பதுடன், அதனை இந்தியாவுக்கு மீள கொண்டு செல்வதற்கு பெருமளவு பணம் செலவிட நேரிடும் என இந்திய மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளர்.

http://www.virakesari.lk/article/23334

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.